மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த திரண்டு வந்த திரையுலகம் (படங்கள்)

நடிகை மஞ்சுளாவின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. தமிழ் திரையுலகமே ஒட்டுமொத்தமாக அவருக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டுவந்ததே அதற்கு சாட்சியாக அமைந்தது.

காரணம், மஞ்சுளா – விஜயகுமார் தம்பதிகள் திரையுலகில் பழகிய விதம் அப்படி. அவர்களுக்கு அனைவருமே நண்பர்கள்தான். மஞ்சுளா மறைவுச் செய்தி கேட்டதுமே, சமூக வலைத்தளங்களில் மிகுந்த வருத்தத்துடன் அதைத் தெரிவித்த கலைஞர்கள், அவருடன் பழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

1

19 18 17 16 12 13 14 15 11 9 8 7 3 4 5 6 2

கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் சல்மான் மீது கொலைக் குற்றம்!

salman

2002ம் ஆண்டில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீது இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது சல்மான் கானின் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் ஏறியது.

இதில் ஒருவர் பலியானார் 4 பேர் காயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் மரணம் ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டியதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சல்மான் மீதான வழக்கை மறுவிசாரணை செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சல்மான் கான் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

அவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் வழக்கு வேறு ஒரு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சல்மான் கான் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால் சம்மன் அனுப்பும்போது மட்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுஷ்கா மீது கத்திக்குத்து??

anuska

ருத்ரமாதேவி படத்தை சுமார் 120 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் குணசேகர். இந்தியாவில் தயாராகி வரும் முதல் வரலாற்று 3D STEREOSCOPIC படம் இது.

இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணம் ராஜு, சுமன், மகேஷ்பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை அணிந்து நடித்து வருகிறார் அனுஷ்கா.

மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக உடம்பைக் குறைத்து, குதிரை சவாரி, வாள் சண்டை என அனைத்தையும் கற்றுள்ளார்.
சமீபத்தில் மகேஷ்பாபுவும், அனுஷ்காவும் மோதிக்கொள்வது போல சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

அனுஷ்கா குதிரையில் ஏறி தப்பித்துப் போகும்போது மகேஷ்பாபு அவரை நோக்கி கத்தியை வீசுவார். இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மகேஷ்பாபு வீசிய அட்டைக்கத்தி நிஜமாகவே அனுஷ்காவைக் குத்திவிட்டதாம். குத்தியது அட்டைக்கத்தி என்பதால் சிறிய காயம் தானாம்.

உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, தொடர்ந்து அந்தக் காட்சியில் நடித்தாராம் அனுஷ்கா.

கல்லூரியில் நான் பெரிய ரவுடி – சமந்தா!!

Samantha

தெலுங்கில் பிசியாக இருக்கிறார் சமந்தா. தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. “நான் ஈ” படத்தில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.

சினிமாவுக்கு வரும் முன் கல்லூரியில் படித்த போது நடந்த சம்பவங்களை மலரும் நினைவுகளாக சமந்தா வெளியிட்டார். அவர் கூறியதாவது…

கல்லூரியில் படித்த போது நான் அடங்காத பெண். சுட்டித்தனமாக இருப்பேன். பேராசியர்களுக்கு நான் அமைதியான பெண் படிக்கிற பெண். ஆனால் என் தோழிகளுக்கு மட்டுமே எனது உண்மையான சுயரூபம் தெரியும். பேராசிரியர்கள் முன்பு நல்ல பெண் மாதிரி இருப்பேன். அவர்கள் போனதும் வகுப்பில் அட்டகாசம் செய்வேன்.

சகமாணவிகளை கிண்டல், கேலி என கலாய்ப்பேன். ரவுடித்தனங்கள் செய்வேன். பேராசிரியர்கள் வந்ததும் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக இருப்பேன். இதனால் நான் செய்யும் தப்புகள் என் தோழிகள் தலையில் விழும்.

ஆசிரியைகளிடம் திட்டு வாங்குவார்கள். இதனால் வெளியே வந்ததும் என் மேல் கோபமாக இருப்பார்கள். நான் கெஞ்சி சமாதானம் செய்து விடுவேன். சினிமாவுக்கு அடிக்கடி போவேன். காலேஜுக்கு கட் அடித்துவிட்டு படத்துக்கு போய் இருக்கிறேன்.

கல்லூரி சுவர் ஏறி குதித்தும் படத்துக்கு போய் உள்ளேன். ஒரு தடவை சுவர் ஏறும் போது வாட்ச்மேன் பிடித்து பிரின்ஸ்பாலிடம் நிறுத்தி விட்டார். அவர் அமைதியான பெண்ணுன்னு நினைச்சேன். நீயா இப்படி என்று கண்டித்தார். நிறைய அறிவுரை சொன்னார். அன்று முதல் அடாவடித்தனங்களை மூட்டை கட்டி விட்டு அமைதியான பெண்ணாக மாற ஆரம்பித்தேன் என்றார்.

கழுதை மீது வந்த நபர் தற்கொலை தாக்குதல் – கழுதையுடன் நால்வர் பலி!!

donkey

கிழக்கு ஆப்கானிஸ்தான் வர்டான் மாகாணத்தில் கழுதை மீது ஏறிவந்த ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மூன்று நேட்டோ படை வீரர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் காபூலின் தெற்கு பகுதியில் உள்ள வர்டான் மாகாணத்தில் நேட்டோ படை வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, சாலையோரம் கழுதை மீது ஏறி அமர்ந்து வந்த தலிபான் தீவிரவாதி திடீரென்று கழுதையை அதட்டி விரட்டி வேகமாக ஓட வைத்து நேட்டோ வாகனங்கள் மீது மோதியுள்ளார்.

இந்த தாக்குதலில் மூன்று நேட்டோ வீரர்கள் பலியாகினர். மேலும் கழுதையும் அதன்மீது அமர்ந்து வந்த மனித குண்டு தீவிரவாதியும் இச்சம்பவத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் நடைபெற்ற பகுதி தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த முக்கிய பகுதிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் பிரியாணி விருந்து!

Karthi’s-Biriyani

கார்த்தி – ஹன்சிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் பிரியாணி. வெங்கட்பிரபு இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

திரில் கலந்த காமெடியுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இது யுவனுக்கு 100வது படம்.

இந்தப் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக இயக்குநர் வெங்கட்பிரபுவும் அந்தப் பாடலுக்கு ஜதி சொல்லியிருக்கிறார்.

படத்தில் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்டதாம். ஒரு பாடல் மற்றும் கொஞ்ச வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். அந்த வேலைகளையும் முடித்துவிட்டு செப்டம்பர் 6-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம் வெங்கட்பிரபு.

வவுனியாவில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு – பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சூறை..!

robberyவவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல பலசரக்கு மற்றும் மருந்தாக வியாபார நிலையமொன்றில் நேற்று இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் வழமைபோன்று வியாபார நடவடிக்கைகள் முடிவடைந்து கடையினை அடைத்துச்சென்ற நிலையிலேயே இன்று காலை இக்கொள்ளைச் சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கடையினை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்களால்  கடையில் பொருத்தப்பட்டிருந்தபாதுகாப்பு கமெராவும் (CCTV) கொள்ளையர்களால் சேதப்படுத்தப் பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இக்கொள்ளைச் சம்பவத்தினால் பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் சூரையாடப்பட்டிருக்காலாமென தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் அண்மைகாலமாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

(சந்தோஷ்)

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்களுக்கு தான் முதலிடமாம்!!

images

கணவனை ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் இரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனராம். கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது.

கணவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் வேறொரு கள்ளக்காதலுடன் வாழ்க்கை நடத்துவது, இரகசிய வாழ்க்கை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம். அதேசமயம், அமெரிக்க ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். அத்தகையவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது.

பெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர இரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

தானியங்கி ஹெலிகொப்டரை கண்டுபிடித்த சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள்!! (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரத்திலுள்ள ETH எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் தானியங்கி ஹெலிகொப்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு Multi Rotor ஹெலிகொப்டர் என பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது தனித்தனியாக காணப்படும் சிறிய ஹெலிகொப்டர்கள் தாமாகவே ஒன்றை ஒன்று நோக்கி அசைந்து பொருந்தி கொள்கின்றன. இதனையடுத்து இவை அனைத்தும் ஒன்றாகவே சேர்ந்து இயங்குகின்றன. இதனாலேயே Multi Rotor ஹெலிகொப்டர் என அழைக்கப்படுகின்றது.

1 2 3

சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்?

MINOLTA DIGITAL CAMERA

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வருவோம் என நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், தமிழ் சினிமாவின் இன்றைய ஹீரோ அவர் தான்.

சின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள் இப்போது பாடகராகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

இந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். கோடம்பாக்கம் முழுவதும் இப்போது இந்தப் பாட்டைப் பற்றித்தான் பேச்சாகக் கிடக்கிறது. சூட்டோடு சூடாக சில விஷயங்களைச் செய்வதில் கோடம்பாக்கத்துக்காரர்கள் தான் கெட்டியாச்சே. வேறு சில நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடச்சொல்லி சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம்.

ஆனால், இது சரிப்பட்டு வருமா என அவர் யோசிக்கிறாராம். முதல் பாட்டு பாடுறதுக்கு முன்னாடியும் இப்படித்தான் சொன்னீங்க. இப்போ பாட்டு பயங்கர ஹிட். துணிஞ்சி இறங்குங்க என தைரியம் கொடுத்திருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா ஹீரோக்களுக்கும் பாடுகிறார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகிறார்கள். எனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான் – டக்ளஸ்!!

daglous

இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் தனது நீண்டகால கனவு என்றும் அவர் தெரிவித்தார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான காரணம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் டக்ளஸ் இந்தக் கருத்தினைக் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பாத படியாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார். அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்துகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் இன்னும் பலரையும் அக்கட்சி வட-இலங்கை தேர்தலில் களம் இறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-

மலேஷிய மாணவர்கள் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டார்களா?(படங்கள் )

மலேஷியாவின் சுங்கை பூலோவுக்கு அருகில் இருக்கும் தொடக்கப் பள்ளி ஒன்றில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ரமலான் நோன்பு மாதத்தின்போது குளியலறையை ஒட்டிய பகுதியில் சாப்பிடும்படி நிர்பந்திக்கப்பட்டதைக் காட்டுவதாக கூறப்படும் படங்கள் சில இணையதளத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த புகைப்படங்களை தமது முகநூலில் வெளியிட்டவர் அந்த பள்ளியில் படிக்கும் பிள்ளையின் பெற்றோரில் ஒருவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் படங்களில் அந்தப் பள்ளிக்கூடத்தின் குளியலறையை ஒட்டிய உடை மாற்றும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மேசைகளைச் சுற்றிலும் மாணவ மாணவிகள் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.

இவற்றில் கணிசமானவர்கள் மலேஷிய இந்திய வம்சாவளியினரைப் போல தோன்றுகின்றனர். இது ரமதான் மாதம் என்பதால் பள்ளியின் சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டிருப்பதை காட்டும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளியின் சிற்றுண்டிச்சாலை ரமதான் மாதம் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது.

பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டிருப்பதால் பள்ளியின் கழிப்பறை/குளியலறைகளுக்கு அடுத்து உள்ள உடைமாற்றும் இடத்தில் மேஜைகள் போடப்பட்டு அங்கே பள்ளி மாணவர்களை சாப்பிடுமாறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கழிவறைக்கு அருகில் சாப்பிட வைக்கப்பட்டதாக கூறப்படுவது சரியான தகவலல்ல என்கிறார் மலேஷிய அரசின் கல்வித் துணை அமைச்சர் பி.கமலநாதன். அவருக்கு கிடைத்த தகவலின்படி, இந்த பள்ளிக்கூடத்தின் கேண்டீனில் மராமத்து பணிகள் நடப்பதால் அது கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டுவிட்டதாகவும், ரமலான் நோன்புக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பதே தமக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல் என்றும் தெரிவித்தார் கமலநாதன்.

அனாலும் தற்காலிகமாக குளியலறையை ஒட்டிய இடத்தில் பள்ளிக்கூட மாணவ மாணவிகளை சாப்பிடவைத்தது தவறு என்றும் அவர் கூறினார். இந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக தாம் நேரடியாக அந்த பள்ளிக்கு நாளை செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

-BBC தமிழ்-

4 3 1

 

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சிக்கு 20 ஆசனங்கள்!!

EPDP flag

வடமாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் ஈபிடிபி கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் பொது நூலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களில் தமது கட்சிக்கு 20 ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெறும் பட்சத்தில் அதன் முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் சத்தியாக எமது கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் ஈபிடிபி கட்சி அரசாங்கத்துடன் இணைந்தா அல்லது தனித்தா போட்டியிடும் என்று இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையில் அரசாங்கத்துடன் இணைந்தே தமது கட்சி போட்டியிடவுள்ளது என்ற கருத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு அகதிகள் படகு நடுக்கடலில் கவிழ்ந்தது: பலர் பலி (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகொன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவில் விபத்துக்குள்ளானதில் 100ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு விபத்து குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் நேற்று மாலை அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் சுமார் 200ற்கும் அதிகமான அகதிகள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில் 150 பேர்வரை இலங்கை அகதிகள் என கூறப்பட்டுள்ளது.

படகில் பயணித்த 25ற்கும் மேற்பட்ட குழந்தைகளின் நிலை கவலைக்கிடம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் 30ற்கும் மேற்பட்ட இந்தோனேசிய மீனவர்களது படகுகள் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் நீந்தி கரை வந்து சேர்ந்து வழங்கிய தகவல்களையடுத்தே மூழ்கிய படகு பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்பு பணிகள் தொடங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகு விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தையின் சடலம் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படகில் இருந்த 61 ஈரானியர்களில் சொஹேல் என்ற நபர் மாத்திரம் நீந்தி கரையை எட்டியுள்ளார்.

படகின் மோட்டார் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் படகு கவிழ்ந்ததாக உயிர்தப்பிய நபர் குறிப்பிட்டுள்ளார்.

கடலின் சீற்றம் அதிகரித்தமையினால் இந்நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

படகின் கெப்டன் சிறிய படகொன்றில் ஏறி தப்பித்து விட்டதாக சொஹேரெல் குறிப்பிட்டுள்ளார்.

கடல் அலையின் சீற்றம் அதிகரிக்கக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை..!

wavesதொடரும் தென் மேல் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருசில தினங்களுக்கு இதே காலநிலை நீடிப்பதுடன், தென் கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதனால் கடல் அலையில் வேகம் அதிகமாகக் காணப்படுவதால் மீனவர்கள் மற்றும் கடல்ரோந்து பணியில் ஈடுபடும் கடற்படையினர் அவதானமாகச் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று (23) இரவு 8 மணிக்கு வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

நேற்றைய தினம் மத்திய மாகாணத்திலும் அதிக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக லக்சபான, கென்னியன், காசல்ரீ, மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்து, அவற்றின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டிருப்பதுடன், மகாவலி மற்றும் களனி ஆற்றை அண்டிய பகுதிகளில் வாழ்வோர் நீர் நிலைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மீண்டும் இலங்கையிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா..!

saதென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 180 ஒட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது.

இந்தநிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி நேற்று ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி இலங்கை அணி 49.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதன்போது, சமிந்த எரங்க 7 ஓட்டங்களுடனும் மலிங்க ஓட்டம் எதனையும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.

பின்னர் டக்வத் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணிக்கு 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியால் 21 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதன்படி 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக தினேஸ் சநதிமால் தெரிவானார்.

இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை 2 -0 என முன்னிலையில் உள்ளது.