
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
ஐந்தாவது போட்டியில் கடும் சவால்களுக்கு மத்தியில் 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை தன்வசப்படுத்தியது.
க்ரோஸ் ஐஸ்லெட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 243 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஹமட் ஷெஷாட் 64 ஓட்டங்களையும் மிஸ்பா உல்ஹக் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது.
நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவானார்.





கொலிவுட்டில் ஸ்ரீ சத்யசாய் மூவீஸ் சார்பில் ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் அஜீத் படத்திற்கு கடந்த ஒரு வருடமாக பெயர் சூட்டப்படாமல் இருந்து வந்தது.






வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ-9 வீதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கனகரக வாகன விபத்தில் மரணமடைந்தவர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் பத்மயோகா (வயது 17) என்ற மாணவி தனது வீட்டு கிணற்றில் குதித்து உயிரிழந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.



தன்னைத் தேடி வரும் எல்லா கதைகளையும் ஒப்புக் கொள்வதில்லை நயன்தாரா. கதை நன்றாக இருக்க வேண்டும், தனக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும், ஹீரோ பெரிய ஆளாக இருக்க வேண்டும் – இந்த மூன்று கொள்கைகளையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி சதம் கடந்து கைகொடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.