பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், 17 வயது சமூக ஊடக செல்வாக்கு மிக்க சனா யூசப்பைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இலட்சக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த யூசப், கடந்த திங்களன்று அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
சனா யூசப்பின் டிக்டொக் கணக்கில் 1.1 மில்லியன் பின்தொடர்வாளர்கள் உள்ளனர். அவரது கணக்கில் வெளியிடப்பட்ட கடைசி காணொளி, அவர் தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கொண்டாடும் ஒரு தொகுப்பாகும்.
இந்த நிலையில், கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 22 வயதான இளைஞர், தாம் சனாவை பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அவர் பதிலளிக்க மறுத்ததால், அவரை கொலையைச் செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடயில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் முன்பாக பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகை திருப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை கைது செய்ய கிரிபத்கொட பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணையை முன்னெடுத்துளள்னர்.
நேற்று முன்தினம் காலை இந்தக் கொள்ளை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இளம் பெண் வீதியில் பயணித்த போது நீல நிற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆண்கள் கொள்ளையில் ஈடுபட்டமை அருகிலிருந்த பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் நம்பர் பிளேட் இல்லை என்று அந்தப் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தங்க நகையை திருடிய சந்தேக நபர் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் ஒரு கையில் பச்சை குத்தியிருந்ததாகவும் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் தங்க நகையை திருடி வத்தளை நோக்கி தப்பிச் சென்றனர். சந்தேக நபர்கள் தொடர்பான புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8591606 என்ற எண்ணை அழைக்குமாறு கிரிபத்கொட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், குறிப்பிட்டார்.
முகக்கவசம்
இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம்.
நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.
ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.
மொனராகலையில் தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து நேற்று (04) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொம்பகஹவெல, நுககஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன பெண்ணின் சடலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமானது சியம்பலான்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை என வெளியான விளப்ரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.
அவ்வாரும் தம் பிள்ளைகளுக்கு வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது.
தடுப்பூசி போடாத மணமகள் தேவை
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விளாம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வவுனியா நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியில் கணவனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை சுவர்ணலதாவின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.
வவுனியாவில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெர்ம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார். தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருந்ததாக விசரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியை கர்ப்பமாக இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பில் கணவனை கைது செய்த புளியங்குளம் பொலிஸ், மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விமானம் இன்று (04.06.2025) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் A330-200 ஜூன் 4 ஆம் தேதி காலை 8:15 மணி முதல் 9:30 மணி வரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாணந்துறை வரை வானத்தில் தாழ்வாகப் பறந்தது,
இதேவேளை, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸூடன் இணையும் இந்த விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருந்து A330-200 wide-body என்ற ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்தடைந்தது.
குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி – பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது. எனினும் பலரும் எதிர்பார்த்தளவுக்கு பாரியளவிலான விமானத்தை பார்வையிட முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் – சிற்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது செவ்வாய்க்கிழமை (3) சிறப்பாக நடைபெற்றது.
மாதத்தில் முதல் வரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து அந்தோனியாரின் திருவருளைப் பெற்றுச் செல்வது வழமை.
அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (3) திருவிழா என்பதால் இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து அநீதோனியாரை தரிசித்து சென்றனர்.
பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் முகமாக உணவுப் பொருட்களை தானம் செய்வதையும், நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு தமது வேண்டுதல்கள் எழுதிய கடதாசிகளை மரங்களில் கட்டுவதையும், பிள்ளைப்பேறு வேண்டி தொட்டில்களை கட்டுகின்றனர்.
பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வேண்டியவர்களின் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறியபடியால் இந்த ஆலயமானது பிரசித்தி பெற்றுள்ளது.
இதன் காரணமாக பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி பல்வேறு மதத்தவர்ளும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.
புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.
இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர். இதனால் மாம்பழத்தின் விலை பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4,60,000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.
இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் மாம்பழத்துடன் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்தது.
ஆற்றில் மிதந்த சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாரியபொல ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த சடலத்தையே அவர் பார்வையிட அவர் நீந்திச் சென்றமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாரியபொல-களுகமுவ வீதியில் வாரியபொல நகருக்கு அருகிலுள்ள விலக்கட்டுபொத ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கிய நபர் அங்கு இருந்த பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறி ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இரு சடங்களும் புத்தளம் கடற்படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உலக மக்கள் தொகை 2300ஆம் ஆண்டில் 10 கோடியாக குறையக்கூடும் அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் 2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 கோடியாக குறையக்கூடும் என்று அமெரிக்காவை சேர்ந்த கணினி அறிவியல் பேராசிரியர் சுபாஷ் காக் தெரிவித்தார்.
டெர்மினேட்டர் பாணி அணு ஆயுதப் போரினால் அல்ல, மாறாக மனிதனின் வேலைகளை ஏஐ-க்கு மாற்றுவதன் மூலம் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் என்றார்.
வேலை வாய்ப்பு இழப்பு குறிப்பிடத்தக்க பிறப்பு விகித சரிவுக்கு வழிவகுக்கும் என்றும், ஐரோப்பா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதையும் சுபாஷ் காக் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை வேலை இல்லாதவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தயங்குவார்கள் என்பதால், பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையும் என்றும், இதனால் உலக மக்கள் தொகைக்கு பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.
கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையின் சுவருக்கு அடியில் கையடக்க தொலைபேசி வைத்தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸார் கடைக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான ஜெரோன் நித்தியானந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.
உடை மாற்றும் அறையில் இருந்தவரை நோக்கி அந்த கையடக்க தொலைபேசி காணப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் யோர்க் பிராந்திய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
களுத்துறை- ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து சுமார் ஐம்பத்தைந்து கிலோகிராம் தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றின் மதிப்பு ஒரு பில்லியன் ரூபாயை நெருங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொழிலதிபர் தங்கமானது, நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருக்கும் இருப்பு என்று கூறியுள்ளார்.
எனினும், அத்தகைய இருப்பு எவ்வாறு என்பது என்பது குறித்த தகவலை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.
நாட்டிற்குள் நுழைந்துள்ள புதிய கோவிட் திரிபு மேலும் பரவாமல் தடுக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடம் கோவிட் பரிசோதனை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் 24 பிராந்தியங்களில் கோவிட் பரவியுள்ளது. இந்நிலையில் இலங்கை சுகாதார பிரிவின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக தொற்று பரவி வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் நிலைமை தொடர்பில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது பதிவாகும் கோவிட் நோயாளிகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் இன்று நாட்டிற்கு வெளிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். நாட்டை முடக்குவதா கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் நோய் பரவுவதை தொடர்ந்து கண்காணித்து வருவதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில், இளைஞர்கள் மத்தியில், மாரடைப்புஅதிகரித்து வருவது தொடர்பில், முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.
25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் 40 வயதுக்குட்பட்டவர்களில் அரிதாக இருந்த மாரடைப்பு, இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.
ஒவ்வொரு மாதமும், 20 மற்றும் 30 வயதுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தாம் சந்திப்பதாக கூறும் அவர், அதில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல், மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் இந்த நிலைமைக்கு, நவீன வாழ்க்கை முறை உள்ளது. குறிப்பாக, மோசமான உணவு, உடல் செயலற்ற தன்மை, நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை என்பன மாரடைப்புக்கான முக்கியம் மூல காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்கள் 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதற்கு ஜிம் தேவையில்லை. நடைபயிற்சி என்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும்.
நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
தூக்கமின்மை ஒரு முக்கிய இருதய ஆபத்து காரணி என்பதை பலர் உணரவில்லை. மோசமான தூக்கம் மன அழுத்த ஹோர்மோன் அளவை (கார்டிசோல் போன்றவை) அதிகரிக்கிறது.
குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் தமனிகளை சேதப்படுத்துகிறது ஆகவே ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேரம் தரமான தூங்குங்கள். இது ஒரு மருத்துவத் தேவையாகும் என்று மருத்துவர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். விதை எண்ணெய்களைத் தவிர்த்து, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை உட்கொள்ளவும்.
உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும். இந்த நிலையில், அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால், அவற்றை புறக்கணிக்காதீர்கள் என்றும் இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.