தமிழ் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய நடத்துனரை தூக்கி எறிந்த அரசாங்கம்!!

பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்ற மறுத்து அடாவடி செய்த பேருந்து நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பேருந்திலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலபிட்டியிலிருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரசப் பேருந்தில், அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது அரசப் பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பேருந்தை விட்டு வெளியேற முடியாது. என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த பேருந்து நடத்துனர், ‘ஆம், இது என்னுடைய பேருந்து நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்’ எனக் கூறும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹட்டன் ​டிப்போவின் முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் நாடாளும்ன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இளம் பெண்ணை தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் கைது!!

வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை மிரட்டி தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.03) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து மிரட்டி தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்தோடு, இதனை அவர் காணொளியாக பதிவு செய்துள்ளதுடன் அதனை வெளியிடுவேன் என மிரட்டி பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் கர்ப்பமான குறித்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பெண் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து, சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையில் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபரீதத்தில் முடிந்த இன்ஸ்டா காதல் : ஆசிரியைக்கு விஷ ஊசி போட்டு துடிக்க துடிக்க கொன்ற காதலன்!!

விஷ ஊசி போட்டு ஆசிரியையை கொலை செய்து ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி எறிந்த இன்ஜினியரிங் மாணவர், 2 காதலிகளுடன் கைது செய்யப்பட்டார்.

சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

அப்பெண்ணை கடந்த 4 நாட்களாக காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன நிலையில் அவர் எங்கு போனார் என்பது தெரியாமல் இருந்தது.

இதையடுத்து விடுதி வார்டன், பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மாயமான இளம்பெண் செல்போனுக்கு, திருச்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அழைத்தது பதிவாகியிருந்தது. மேலும் அப்பெண்ணின் செல்போன் ஏற்காடு மலைப்பாதையுடன் சுவிட்ச் ஆப் ஆனதும் தெரியவந்தது.

இதையடுத்து இளம்பெண்ணுடன் பேசிய திருச்சி வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாயமான பெண்ணை கொலை செய்து ஏற்காடு 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசியதாக தெரிவித்தார்.

இதையடுத்து, பள்ளப்பட்டி மற்றும் ஏற்காடு போலீசார், வாலிபர் குறிப்பிட்ட 20 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் சடலத்தை நேற்று மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அந்த வாலிபரிடம் ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இளம்பெண், திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த முதுகலை பட்டதாரியான லோகநாயகி (எ) அல்பியா (31).

இவருக்கும், பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகரை சேர்ந்த பி.இ நான்காம் ஆண்டு படித்து வரும் அப்துல் ஹபீஸ் (22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 4 ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்காக லோகநாயகி, மதம் மாறி அல்பியா என பெயர் வைத்துக் கொண்டார்.

அல்பியா கடந்த 2023ம் ஆண்டு சேலம் வந்து தனியார் விடுதியில் தங்கியிருந்து ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். அவரது காதலன் அப்துல் ஹபீஸ், அவ்வப்போது விடுமுறை நாட்களில் சேலம் வந்து அல்பியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதனிடையே அப்துல் ஹபீஸ், சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் காவியா சுல்தானா (22) என்பவருடன் பழகியுள்ளார். இதை அறிந்த அல்பியா, காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

தன்னைத் தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால், உன்னையும், உனது குடும்பத்தையும் கொல்லாமல் விட மாட்டேன் என அல்பியா மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் ஹபீஸ் தனது புது காதலி காவியா சுல்தானாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன்பின் அல்பியாவை கொலை செய்ய புது காதலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்கு உடந்தையாக இருக்க தனது முதல் காதலியான மருத்துவ கல்லூரி மாணவி மோனிஷாவிடம் (22) பேசியுள்ளார். மோனிஷாவிடம் தனது உறவினர் பெண்ணின் சகோதரரை அல்பியா திருமணம் செய்து குடும்பம் நடத்தினார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவரை பாட்டிலால் அடித்து கொலை செய்து விட்டார். எனவே அல்பியாவை பழி வாங்க வேண்டும்.

அவரை கொல்ல நீ உதவி செய்ய வேண்டும் என ஒரு கட்டுக்கதையை கூறி மோனிஷாவை மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்துள்ளார்.

அதன்படி கடந்த 1ம் தேதி அப்துல்ஹபீஸ், மோனிஷா, காவியா சுல்தானா ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் சேலத்துக்கு வந்தனர்.

பின்னர், அங்கிருந்து வாடகைக்கு டிரைவர் இல்லாமல் காரை மட்டும் எடுத்துக்கொண்டு, அல்பியா தங்கி இருக்கும் விடுதிக்குச் சென்று, விடுதியில் இருந்த அல்பியாவை வெளியே வரவழைத்துள்ளனர்.

அவரிடம் தனது காதலிகள் 2 பேரையும், தனது தோழிகள் என அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர், அல்பியாவை காரில் அழைத்துக் கொண்டு ஏற்காடு போவோம் எனக்கூறி சென்றுள்ளார்.

மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே வந்தவுடன் காவியா சுல்தானா, அப்துல் ஹபீஸ் ஆகிய இருவரும் திடீரென அல்பியாவை பிடித்துக் கொண்டனர்.

அப்போது மோனிஷா அல்பியா உடலில் விஷ ஊசியை இருமுறை போட்டுள்ளார். இதனால் அல்பியா இறந்துள்ளார். பின்னர் அல்பியாவின் உடலை 20 அடி பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு மூவரும் காரில் தப்பி சென்றது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ஹபீஸ், காவியா சுல்தானா, மோனிஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பலூனை விழுங்கிய 7 மாதக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் 36 வயது சதீஷ்குமார். இவரது மனைவி 30 வயது சிவகாமி.

இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்றுமுன்தினம் திடீரென மிக கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சியில் கதறி துடித்து குழந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தவர்கள், சந்தேகத்தின் பேரில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தையை பிரேத பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் பலூன் இருந்தது தெரியவந்தது. அதை அகற்றிய மருத்துவர்கள் குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பலுானை விழுங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

5 வயது மகளை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி வயலில் வீசிய தந்தை!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வசித்து வருபவர் 40 வயது மோகித் மிஸ்ரா. இவருடைய மகள் 5 வயது தானி. இவர் பிப்ரவரி 25ம் தேதி தானி காணாமல் போனதாக மோகித் மிஸ்ரா போலீசில் புகார் அளித்திருந்தார்.

புகாரின்பேரில் போலீசார் 4 குழுக்கள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருந்த வயலில் சிறுமியின் உடலின் ஒரு பகுதியை கண்டெடுத்தனர்.

தொடர்ந்து மறுநாள் உடலின் மற்ற பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மோகித் மகளைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதை ஒப்புக் கொண்டார்.

இது குறித்து மோகித் “மோகித்தின் குடும்பத்தினர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராமுவின் குடும்பத்தினருடன் முன்பு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரு்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு அவர்கள் பேசுவதை நிறுத்திவிட்டனர். மோகித் தனது மகள் தானியிடம் ராமுவின் வீட்டிற்கு செல்வதை நிறுத்துமாறு பலமுறை கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் சிறுமி தினமும் அங்கு சென்று விளையாடி வந்துள்ளாள்.

சம்பவ நாளிலும் ராமுவின் வீட்டிலிருந்து தனது மகள் வருவதைக் கண்ட மோகித் ஆத்திரம் அடைந்தார். உடனடியாக சிறுமியை பைக்கில் வைத்து ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவளை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வயலில் வீசியுள்ளார்” என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவனின் கொடுமை தாங்காமல் 2 மகள்களுடன் புகையிரதம் முன் பாய்ந்த மனைவி!!

கணவரின் தொடர் தொல்லைத் தாங்காமல் நர்சிங் முடித்திருந்த மனைவி, தனது 2 மகள்களுடன் ரயில் முன்பு பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷைனி(42). இவருடைய கணவர் லோபி லுகோஸ்(44). இவர்களுக்கு இவானா(10),அலினா(11) என்று இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், லோபி அடிக்கடி தன்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஷைனி பிஎஸ்சி நர்சிங் முடித்துள்ள நிலையில், செவிலியராக பணிபுரிய விரும்பிய நிலையில் அதற்கும் லோபி விடவில்லை.

இதனால் அவர் மிகுந்த மன வேதனையில் இருந்தார். இதனால் ஷைனி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் விவாகரத்துக்காக கோர்ட்டில் விண்ணப்பித்த நிலையிலும் லோபி தன்னுடைய மனைவியை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை.

இதனால் ஷைனி தன்னுடைய இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு வேதனையில் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. எட்டுமுனூர் ரயில்வே நிலையத்திற்கு சென்று ரயில் முன்பாக பாய்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் மூவரையும் தற்கொலைக்கு தூண்டியதாக லோபி மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவியை கொன்று தீவைத்து எரித்த கணவர்!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). பட்டாசுத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் சாத்தூர் அருகே உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மது போதையிலிருந்த பொன்னுச்சாமிக்கும், மனைவி முனீஸ்வரிக்கும் வீடு திரும்பியதும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி உரல் கல்லால் மனைவி முனீஸ்வரியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்து நிலைக்குலைந்த முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன்பின் தனது பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து வந்த பொன்னுச்சாமி, முனீஸ்வரியின் உடலில் ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளார். குடிபோதையில் இருந்த பொன்னுச்சாமி மீதும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முனீஸ்வரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயமடைந்த பொன்னுச்சாமியை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வவுனியா இரட்டை கொலை : பிணை வழங்க உத்தரவு!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த துடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் புதன்கிழமை (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது,

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா ஆஜராகி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு சமர்ப்பித்தார்.

அதை மறுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட வாதிகளால் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றை கவனம் செலுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.

மரணத்தில் இளம் தாயின் செயல் – உயிர் வாழும் இரு பெண்கள்!!

தென்னிலங்கையில் மூளைச்சாவடைந்த பெண்ணால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக உறுப்புக்கள் பொருத்தப்பட்டு, அவர்கள் உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களும் வேறு இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

திஸ்ஸமஹாராம பகுதியை சேர்ந்த 41 வயதான டோனா இக்னேசியா என்ற தாய் மூளைச்சாவடைந்து உயிரிழந்தார்.

கடந்த மாதம் 18 ஆம் திகதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மயக்கமடைந்து, கிரிந்த மருத்துவமனைக்கும், அங்கிருந்து டெபரவெவ அடிப்படை மருத்துவமனைக்கும், பின்னர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.

அவருடைய மூளை ஏற்கனவே இறக்கத் தொடங்கியிருப்பதாகவும், அதனால் அவருடைய உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு வழங்கி காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

அதற்கு பெண்ணின் கணவரான ஷாலுக நிஷான் இணக்கம் தெரிவித்திருந்தார். மூளைச் சாவு ஏற்பட்ட அவரது இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றிய மருத்துவர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கும் போராடும் இருவருக்கு மாற்றியுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணர் ஹிருஷக டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ், சிறப்பு மருத்துவர் சமிந்த கோட்டகே உள்ளிட்ட அறுவை சிகிச்சை குழு இந்த அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தாயும் ஐந்து வயது குழந்தையும் பரிதாபமாக பலி!!

அம்பாந்தோட்டை சூரியவெவ வீரியகம பகுதியில் வசித்து வந்த ஒரு தாயும் அவரது ஐந்து வயது குழந்தையும் மாலை அண்டை வீட்டில் போடப்பட்டிருந்த அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.

இறந்த குழந்தை தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு சிறு குழந்தைகள் பயன்படுத்தும் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தபோது,

சட்டவிரோத மின் கம்பியில் சிக்கிக் கொண்டதாகவும், தனது மகனைக் காப்பாற்ற சம்பவ இடத்திற்கு ஓடிய தாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் 38 வயது தாயும் அவரது 5 வயது மகனும் ஆவர். குறித்து சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன கணவனை தேடிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காலி, தெமட்டகஹகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி 42 வயதுடைய கணவனை காணவில்லை என அவரது மனைவி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன நபரின் சடலம் தெமட்டகஹகந்த, பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கிணறு அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, ​​காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கான மின்சார கம்பியில் மோதி உயிரிழந்ததாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, கிணற்றில் உடலை வீசி மூடியிருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 38 மற்றும் 46 வயதுடைய தெமட்டகஹகந்த பகுதியைச் சேர்ந்தவர்களாகும். எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டன் விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு!!

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 03 ஆம் திகதி லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்பு , அங்குள்ள தமிழர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் அதிரடியாக நாடு கடத்தல்!!

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் புகலிடம் மறுக்கபட்டவர்களே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை 7300 பேரை நாடு கடத்தியுள்ளதாக முகவர் அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையான காலப்பகுதிகளை ஒப்பிடுகையில் கடந்த வருடத்திலேயே அதிகளவான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்னர்.

இதில் பல தமிழர்களும் அடங்கும். சமகாலத்தில் கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களில் விசிட்டர் விசா மூலம் எதிர்பார்த்ததை விட பல மடங்கான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் நுழைந்ததுடன், அவர்களில் பெரும்பாலானவர்களில் கனடாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய தங்க நிலவரம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அதற்கமைய நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது, இன்றையதினம்(07) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்க விலை நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 860,734ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்கம் ஒரு கிராமின்(24 karat gold 1 grams) விலை 30,370 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 242,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது . 27,840 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின்( 22 karat gold 8 grams) விலையானது 222,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை(21 karat gold 1 grams) 26,580 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று(21 karat gold 8 grams) 212,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்(24 karat gold 8 grams) ஒன்று 232,000 ரூபாவாகும். இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண்(22 karat gold 8 grams) ஒன்றின் விலையானது 214,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை மேற்குறிப்பிட்ட விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!!

தினமும் ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. செவ்வாழை பழங்களில் பல நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்க உதவியாக உள்ளது.

செவ்வாழைப் பழத்தின் பயன்கள், குதிகால் வலியை நீக்குவது முதல் உடலுக்கு ஆற்றலை அளிக்க செவ்வாழை பழம். நம்மில் பலருக்கு தூங்கி எழுந்ததும் கால்களை ஊன்றக்கூட முடியாத அளவிற்கு அதிக வலியை சில நேரங்களில் உணர்ந்திருப்போம்.

இதோடு நீண்ட நேரம் நிற்கவும், நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமத்தைச் சந்திப்போம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே இதற்கு முக்கியமானக் காரணமாக அமைகிறது.

குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ள செவ்வாழை உட்கொள்ளும் போது, நீண்ட நேரம் பசி உணர்வை ஏற்படுத்தாது. அதிக ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதையும் தவிர்க்க முடியும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பவர்கள் எவ்வித தயக்கம் இன்றி செவ்வாழை பழங்களைச் சாப்பிடலாம்.

செவ்வாழை பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகளவில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவியாக இருக்கும்.

செவ்வாழை பழங்களில் குறைந்த கிளைசெமிக் பண்புகளைக் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்களில் ஒன்றாக உள்ளது. இவற்றைத் தினமும் உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்கள் வைத்திருக்கும்.

செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது.

இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது. செவ்வாழை பழங்கள் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தினமும் வாழைப்பழங்களை உட்கொள்ளும் போது சருமத்தில் உள்ள துளைகளைச் சுத்தம் செய்து முகத்தை பளபளப்பாக்குகிறது. செவ்வாழையில் 75 சதவீதத்திற்கு அதிகமாக நீர்ச்சத்துக்கள் உள்ளதால், சருமம் எளிதில் வறண்டு விடுவதையும் தடுக்க உதவுகிறது.

ஈவிரக்கமின்றி குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை : கொழும்பு நீதிமன்றம் அதிரடி!!

 

தத்தெடுத்து வளர்ப்பதற்காக பெறப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் தம்பதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட தம்பதியினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06.03.2025) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.