அண்டவெளியிலிருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞைகள் கிடைத்து வருவதாக அமெரிக்காவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
11 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள நட்சத்திரத்தின் திசையில் இருந்து சந்தேகத்துக்கு இடமான சமிக்ஞைகள் கிடைத்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரொஸ் 128(ஜீ.ஜே.447) என்ற இந்த நட்சத்திரம், சூரியனை விட 2800 மடங்கு ஒளி மங்கலானது என்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அதனைச் சுற்றி கிரகங்கள் இருக்கின்றனவா? என்று இன்னும் கண்டறியப்படவில்லை
எனினும் அங்கிருந்து மர்மமான சமிக்ஞைகள் கிடைத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியட்ரோரிகோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர்களால் இந்த சமிக்ஞைகள் கடந்த மே மாதம் பெறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வெளிக்கிரக சமிக்ஞைகளை பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள எரேசிபோ என்ற வானலை தொலைநோக்கி ஊடாக இந்த சமிக்ஞை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது
வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சட்டிங் வசதி உட்பட கோப்புக்களை பரிமாறும் வசதியினையும் வட்ஸ் அப் வழங்கி வருகின்றது.
அண்மையில் மேலும் பல கோப்பு வகைகளை பரிமாறிக்கொள்ளக்கூடிய வசதியினை வழங்கியிருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை குறித்த ஆப்பிளிக்கேஷன் ஊடாக பயனர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
அதாவது இதுவரை காலமும் யூடியூப் வீடியோக்களின் இணைப்புக்களை பரிமாறிக்கொள்ளக்கூடியதாக இருந்த போதிலும் அவ்வீடியோக்களை அப்பிளிக்கேஷன்களுக்கு வெளியே யூடியூப் அப்ளிக்கேஷனில் பார்க்க முடியும்.
ஆனால் புதிய வசதியில் யூடியூப் வீடியோக்களை வட்ஸ் அப் அப்பிளிக்கேஷனுக்கு உள்ளேயே பார்த்து மகிழ முடியும்.
இவ் வசதியானது தற்போது வட்ஸ் அப் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு வருகின்றது. விரைவில் பயனர்களின் பயன்பாட்டு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது.
இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் மரணமடைந்துள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளையை அவரது சகோதரர் அடையாளம் காட்டியுள்ளார். தனது சகோதரியின் பிரம்பை வைத்தே அவரை அடையாளம் கண்டுள்ளார்.
அவர்கள் அந்த பகுதியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக வாழ்ந்து வருவதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
தினமும் அவர் அந்த பேருந்தின் ஊடாகவே பயணங்களை மேற்கொள்வதாகவும் நேற்றைய தினம் இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ரொரன்டோ பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
சீனாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது 16 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடின உழைப்பில் ஈடுப்பட்டதால் இன்று உலக பெண் கோடீஸ்வரிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சீனாவில் பிறந்த Zhou Qunfei(47) என்ற பெண் தொழிலதிபர் தான் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் கடும் சிரமத்திற்கு மத்தியில் பாடசாலைக்கு சென்றுள்ளார். ஆனால், வறுமையின் காரணமாக 16 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
பணி செய்வதை விட அத்துறையில் உள்ள தொழில் சார்ந்த நுட்பங்களை திறமையாக கற்றுக்கொண்டார்.
குறிப்பாக, கடிகாரங்களில் உள்ள லென்சுகளை தயாரிப்பது எப்படி என்ற நுணுக்கத்தை கற்றுக்கொண்டு தனது 23-வது வயதில் கடந்த 1993-ம் ஆண்டு கடிகார லென்சுகளை தயாரிக்கும் ‘Lens Technology’ என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கினார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு 2003-ம் ஆண்டு பிரபல செல்போன் நிறுவனமான மோட்டோரோலா இவரது நிறுவனத்தை தொடர்புக்கொண்டு தனது Razr V3 மொடல் செல்போனுக்கு scratch-proof glass lens தயாரித்து கொடுக்குமாறு ஆர்டர் வழங்கியுள்ளது.
மோட்டோரோலாவை தொடர்ந்து ஹெச்.டி.சி, நோக்கியா மற்றும் சாம்சுங் ஆகிய நிறுவனங்களும் இவருக்கு ஆர்டர்களை அள்ளி வழங்கியது.
இதனை தொடர்ந்து, 2007-ம் ஆண்டு அப்பிள் நிறுவனம் தனது முதல் செல்போனை அறிமுகம் செய்தது. இந்த மொடலுக்கும் ஸ்கிரீன் கிளாஸ் தயாரித்து வழங்கினார்.
இன்றளவும் அப்பிள் செல்போனுக்கு ஸ்கிரீன் கிளாஸ்சுகளை லென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் தான் தயாரித்து வழங்குகிறது.
2013ம் ஆண்டு 3 தொழிற்சாலைகளை தொடங்கிய இவர் 2017-ம் ஆண்டில் 32 தொழிற்சாலைகளை தொடங்கி தற்போது சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார்.
கல்வியறவு இல்லாவிட்டாலும் தனது சொந்த உழைப்பால் உயர்ந்த இப்பெண் தொழிலதிபரின் சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டொலர் ஆகும். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டொலர்.
இதன் மூலம், உலகில் உள்ள பெண் கோடீஸ்வரிகளின் பட்டியலில் குறுகிய காலத்தில் Zhou Qunfei முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாலிபரை காதலித்த காரணத்திற்காக பெற்ற மகளை கிறித்துவ மதத்தை சேர்ந்த தந்தை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள ராம்லே நகரில் Henriette(17) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
கிறித்துவ மதத்தில் அதிகளவில் ஈடுபாடு கொண்ட பெற்றோர் தங்களது மகளை கட்டுப்பாட்டுடன் வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களுடைய மகள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதை பெற்றோர் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே சமயம், சிறிய குற்றம் காரணமாக இஸ்லாமிய வாலிபர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவலும் பெற்றோருக்கு கிடைத்துள்ளது.
‘குடும்பத்தை சீரழிக்கும் வகையில் அந்த வாலிபருடன் இனிமேல் பழக வேண்டாம்’ என தந்தை மகளுக்கு பலமுறை அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், தந்தையின் வார்த்தைகளை ஏற்காத மகள் சிறையில் இருக்கும் தனது காதலனுடன் தொடர்பு வைத்திருந்தது மட்டுமில்லாமல் அவருக்கு தேவையான உதவிகளையும் இளம்பெண் வெளியில் இருந்து செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ‘எனது காதலன் அடுத்த வாரம் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். நான் கிறித்துவ மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறப்போகிறேன்’ என இளம்பெண் மற்றொரு தோழியுடன் கூறியுள்ளார். இந்த தகவல் தந்தைக்கு கிடைத்தவுடன் அவர் கடுங்கோபம் கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் 13-ம் திகதி மகள் வீட்டிற்கு வந்தவுடன் அவருடன் வாக்குவாதத்தில் தந்தை ஈடுபட்டுள்ளார். ஆனால், இஸ்லாமிய வாலிபரை திருமணம் செய்துக்கொள்வதில் எவ்வித மாற்றமும் இல்லை என மகள் கூறியுள்ளார்.
மகளின் வார்த்தைகளை கேட்டு ஆத்திரம் அடைந்த தந்தை சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தில் பல இடங்களில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மகள் துடிதுடித்து உயிரிழந்தார். தந்தையை கைது செய்துள்ள பொலிசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் தாக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.
வடக்கு அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர்கள் 26 வயதான Zoe Buxton மற்றும் Lucy Fretwell.
இவர்களுக்கு FOP எனப்படும் உலகில் 800 நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை நோய் தாக்கி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இருவரும் சிறுவயதில் இருக்கும்போதே கார்விரல் பகுதியில் முழை ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதனை முக்கியத்துவம் அளிக்கும் அளவுக்கு பெரிதல்ல எனவும் நாளடைவில் குணமாகும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.
இது தொடர்பில் பேசிய ஸோ, தமக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை கால்தவறி விழுந்து முழங்கையை உடைத்துக் கொண்டதாகவும், வைத்தியம் பார்த்த பின்னரும் இதுவரை தமக்கு கையை நிர்வர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஸோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8வது வயதில் இதேப்பொன்ற ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு FOP எனப்படும் நோயால் தாக்கப்பட்டுள்ளார்.
தற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஸோ, லூசி சகோதரிகளுக்கு. ஸோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார்.
ஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது லண்டனில் பரிசோதனையில் ஈடுபட்டுவரும் சகோதரிகள் இருவரும், குறித்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் ஐந்து வருடங்களுக்கு முன் இறந்து போன மகளின் இதயத்தைத்தேடி தற்போது வரை பெற்றோர்கள் போராடி வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு மும்பை சேர்ந்த சனம் ஹாசன் என 19 வயது மாணவி தோழிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய போது மர்மமான முறையில் இறந்தார்.
பிரேத பரிசோதனையில், சனம் ஹாசன் உடலில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும் அதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தம் நின்று போனதாகவும் சனம் பாலியல் வன்முறை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சனம் ஹாசனின் பெற்றோர்களான ஜியா ஹாசன், நாகினா ஹாசன் சிபிஐ விசாரணை கோரினர். சிபிஐ நடத்திய பரிசோதனையில் சனம் ஹாசன் உடலிருந்த இதயம் ஒரு ஆணின் இதயம் என கூறப்பட்டது.
சனம் ஹாசனின் இதயம் எங்கே என கேள்வி எழுந்த நிலையில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அதில், பெற்றோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவுக்கும் தொடர்பே இல்லை என தெரியவர விவகாரம் பரபரப்பானது.
பின்னர், ஐதராபாத்தில் நடந்த சோதனையில் இது பெண்ணுக்கான இதயம்தான். ஆனால், வயதான பெண்ணின் இதயம் என கூறப்பட்டது.
இதுகுறித்து சனம் ஹாசனின் பெற்றோர் கூறியதாவது, மருத்துவ அறிக்கைகள் மகள் இதயம் இல்லை என்பது உறுதி செய்திருக்கின்றன. இதனால், மகளின் மரணத்தில் செல்வாக்குள்ள நபர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இதற்கு வலுவான காரணம் இருக்கிறது. அப்படியென்றால் என் மகளின் இதயம் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சீனா விண்வெளி, ரெயில்வே மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. தற்போது பலம் பொருந்திய கொழு கொழு நாய்களை உருவாக்கியுள்ளது.
சோதனைக்குழாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாய்கள் மற்ற நாய்களை விட பலமடங்கு எடை கொண்டது.
இவை அதிக பலம் வாய்ந்தவை. மிக வேகமாகப் பாய்ந்து சென்று எதிரிகளை வேட்டையாடும் தன்மை கொண்டவை. இவற்றை பாதுகாப்புக்காகவும் பொலிஸ் துறையிலும் பயன்படுத்தலாம்.
பெய்ஜிங்கில் உள்ள பயோ தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த நாயை உருவாக்கியுள்ளனர். சாதாரண நாயில் உள்ள ‘மயோஸ்டேடின்’ என்ற மரபணுவை நீக்கி புதிய சூப்பர் நாய்களை உருவாக்கினர்.
இதே மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா அதிபயங்கர சக்தி படைத்த நாசகார சூப்பர் மனிதர்களை உருவாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த தொழில் நுட்பத்தில் நாய்களை உருவாக்கிய 2 ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. முதலிடத்தில் தென்கொரியா உள்ளது.
சீனாவை சேர்ந்த லியாங்ஷியூ என்ற விஞ்ஞானி முதன்முறையாக மரபணு நீக்கப்பட்ட நாய்களை உருவாக்கினார். இவை அதிக எடை கொண்டதாகவும், நல்ல வேட்டையாடும் திறனும், அதிவேகமாக ஓடும் திறனுடனும் இருந்தது. ஆனாலும் அந்த நாய்களால் சர்ச்சைகள் ஏற்பட்டன.
வாஷிங்டனில் திருடுபோன சைக்கிளை, திருடனிடம் இருந்து திருடிக் கொண்டு வர உதவிய பேஸ்புக்கிற்கு இளம் பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜென்னி மோர்டோன் – ஹம்ப்ரேஸ் என்ற 30 வயது பெண்ணின் சைக்கிள் திருடுபோனது. சைக்கிளைக் கண்டுபிடிக்க உதவுமாறு அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அவரது நண்பர்கள், பேஸ்புக்கில் இதேபோன்றதொரு சைக்கிள் விற்பனைக்கு என்ற விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து ஜென்னிக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, சைக்கிள் திருடனை, சைச்கிள் வாங்கிக்கொள்வதாகக் கூறி ஓரிடத்திற்கு வரவழைத்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுக்க ஜென்னி திட்டமிட்டார். ஆனால் , அது நடக்கவில்லை. கடைசியாக, தன்னுடய சைக்கிளை, திருடனிடம் இருந்து தானே திருடி வந்ததுள்ளார்.
இறுதியாக வாடிக்கையாளர் போல சைக்கிள் திருடனிடம் பேசி, சைக்கிள் பற்றி சில விஷயங்களைக் கேட்டு, அதனைவாங்கிக் கொள்வதாகக் கூறி ஓரிடத்திற்கு வரவைத்தேன். அப்போது, அவனிடம் இந்த சைக்கிள் பற்றி பல சந்தேகங்களைக் கேட்டேன். முழுதும் பேசிய பிறகு சைக்கிளின் பெடல் உயரமாக இருப்பது போல இருக்கிறது. அதனை ஓட்டிப் பார்க்கலாமா என்று கூறி, என் கையில் இருந்த சிகரெட் பெட்டி, பயனற்ற கீ செயின் போன்றவற்றை அவனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை ஓட்டிப் பார்க்கக் கிளம்பினேன். அவ்வளவுதான் நிறுத்தவேயில்லை
என சிரித்தபடி கூறியுள்ளார் ஜென்னி.
மேலும், சைக்கிளை விற்பனை செய்வதற்காக, அதில் இருந்த சின்ன சின்ன கோளாறுகள் சரி செய்யப்பட்டிருந்ததாகவும், முன்பக்க விளக்கு பொருத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93, 323 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 267 ஆக உயர்வடைந்துள்ளது.
நீர்கொழும்பு மகதுனுபிட்டிய பிரதேசத்தில் 48 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17.07) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரும் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவர் குணமடைந்த பின்னர் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி டொக்டர் ருஹூல் ஹக் கூறினார்.
இதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் இருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 56 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் இரண்டு வார காலமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் டெங்குவிற்காக சிகிச்சை பெற்றுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் என வெளியான தகவல் பொய்யானது என இக்பால் தெரிவித்துள்ளார்.
இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இஸ்லாமிய கலாச்சார உடையான ஹபாயா அணிந்திருந்தமையால் அதை கழட்டிவிட்டு உள்நுழையுமாறு உரிமையாளர் எச்சரிக்க அவர் உணவகத்தை விட்டு வெளியேறும் வேளையிலேயே அசிட் வீசப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதன் காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கட் போட்டித்தொடரில் விளையாடிக்கொண்டிருந்த இக்பால் இடையில் போட்டியை விட்டு விலகி நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த தகவல் பொய்யானது என இக்பால் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாவில் வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடமாகாண சுகாதார அமைச்சரால் தெரிவுசெய்யப்பட்ட குறித்த வீதியானது 500 மீற்றர் வரை 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் , அமைச்சின் செயலாளர்கள், அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மற்றும் நேற்றைய தினம் வவுனியா சமணங்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமானது வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜீ.ரி.லிங்கநாதன், அமைச்சின் செயலாளர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை திவ்யா தத்தா. இவர் இயக்குநர் குஷன் நந்தி இயக்கத்தில் பாபுமொஷாய் பண்டூக்பாஸ் படத்தில் நடித்துவருகிறார்.
த்ரில்லர் படமான இந்தப் படத்தில் சித்ரங்காடா சிங், நவாஷுதின் சித்திக், ரூபா கங்குலி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
திவ்யா தத்தா நடிக்க வேண்டிய காட்சிகள் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் உடல் முழுவதையும் மண்ணிற்குள் புதைத்து தலை மட்டும் மேலே இருக்கும் வகையில் ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
லக்னோவில் உள்ள வயல்வெளியில் கடும் வெயிலில், திவ்யா தத்தா உடல் முழுவதையும் புதைத்துக் கொண்டு தலையை மட்டும் வெளியில் வைத்து மூன்று மணி நேரம் இருந்தாராம்.
இந்தப்படம் ஆகஸ்டு மாதம் வெளியாக இருக்கிறது.
வவுனியா, செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
செட்டிகுளம், முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்னால் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் பாடசாலை முடிவடைந்து தனது ஆசிரியர் விடுதிக்கு திரும்பிச் சென்ற ஆசிரியரை வழிமறித்த நான்கு இளைஞர்கள் அவரை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த ஆசிரியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், தாக்குதலாளிகளை பொலிசார் உடனடியாக கைது செய்யக் கோரியுமே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய், காவல்துறையே குற்றவாளிகளை கைது செய்’ உன எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் தாக்குதல் நடத்திய நபர்கள் மூன்று தினங்களுக்குள் கைது செய்யப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அந்தாட்டிக்காவில் உறைபனியில் முதன் முறையாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி திருமணம் செய்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி டாம் சில்வஸ்டர்-ஜுலி. இவர்கள் தங்கள் திருமணத்தை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.
இதனால் இவர்கள் அந்தாட்டிக்காவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பிரித்தானியா அரசிடம் கோரிக்கை வைத்த அவர்களுக்கு அரசும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவின் ஆய்வுப் பகுதியான ரோதேரா ஆய்வுநிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற இந்த ஜோடி உறைபனியில் திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களது திருமணத்தில் அந்தாட்டிக்கா கண்டத்துக்கு சுற்றுலா சென்ற 20 ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
உலகில் முதன் முறையாக இவர்கள் தான் அந்தாட்டிக்காவில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.
வவுனியா செட்டிக்குளத்தில் நேற்று (17.07.2017) மதியம் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிலில் பயணித்த ஆசிரியரை வழிமறித்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலையில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர் 1.30 மணியளவில் பாடசாலை முடிவடைந்த பின்னர் செட்டிக்குளம் ஆசிரியர் விடுதியினை அண்மித்த சமயத்தில் 1.45 மணியளவில் 25 தொடக்கம் 30 வயதுடைய நான்கு இளைஞர்கள் குறித்த ஆசிரியரை வழிமறித்து இரும்புக்கம்பியால் தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது அவர் பணித்த மோட்டார் சைக்கில் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த ஆசிரியர் தனது சக ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி நடந்தவற்றை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாவைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என வினவியபோது ,
இதற்கு முன்னர் ஒருவர் எனக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் மீதே எனக்கு சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரின் முறைப்பாட்டிலும் இவ்விடத்தையே முறையிட்டேன் என தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.