2ம் இடத்திற்கு முன்னேறிய ரங்கண ஹேரத்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. நேற்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866 புள்ளிகளைப்பெற்று 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலாமிடத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இவர் 898 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.
தொடர்ந்து 3 ஆவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். இவர் 865 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண 8 முறை 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே அணிக்கெதிராக இடம்பெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண ஹேரத் இரு இன்னிங்ஸிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கும்ளேயின் சாதனையை சமன் செய்துள்ளார்.

கணித கேள்­விக்கு பதி­ல­ளிக்க தவ­றி­ய­மைக்­காக 3 வயது மகளை கொலைசெய்த தந்தை!!

தன்னால் வின­வப்­பட்ட கணிதம் தொடர்பான கேள்­வி­க­ளுக்கு சரி­யாக பதி­ல­ளிக்­க­வி ல்லை என்ற கார­ணத்­துக்­காக தனது 3 வயது மகளை தந்­தை­யொ­ருவர் படு­கொலை செய்­தமை தொடர்­பான விப­ரீத வழக்­கு

கொன்று நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அமெ­ரிக்க மிஸி­ஸிப்பி மாநி­லத்­தி­லுள்ள நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

ஜொஷுவா சலோவிச் (25 வயது) என்ற தந்தையே இவ்வாறு தனது மகளான பெய்லி சலோவிச்சை கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்துள்ளார்.

தன்னால் வினவப்பட்ட கணிதக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையிலுள்ள தனது மகள் எதிர்காலத்தில் வாழ்வதற்கு போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலேயே அவரைப் படுகொலை செய்ததாக ஜொஷுவா சலோவிச் கூறினார்.

அவர் தனது மகளைப் படுகொலை செய்வதற்கு மூங்கில் தடி, தொலை பேசி இணைப்பு மற்றும் தனது கரங்களைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

படுகொலை இடம்பெற்ற போது அந்த சிறுமியின் தாயார் வேறொரு அறையில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.

உலகின் பழமையான எமோஜி துருக்கியில் கண்டுபிடிப்பு!!

எமோஜி என்பது போனில் குறுந்தகவல் அனுப்பும் போது சிரிப்பது மற்றும் அழுவது போன்ற அனைத்து மன எண்ணங்களையும் சிறிய ஸ்டிக்கர் மூலம் அனுப்பும் தனி பாஷை.

இதில் முகம் போன்ற வடிவம் இடம்பெற்றிருக்கும். இது முகநூல், டுவிட்டர் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஜுலை 17 ஆம் திகதி உலக எமோஜி தினமாக கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையில் உலகின் முதல் மற்றும் பழமையான எமோஜி சின்னம் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை துருக்கி மற்றும் இத்தாலியச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துருக்கியின் பழமையான நகரமான கார்காமிஸில் கண்டறிந்துள்ளனர்.

மண் கூஜாவின் மீது சிரிப்பது போன்ற ‘எமோஜி’ பொறிக்கப்பட்டிருந்தது. இது கி.மு. 1700ம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதை போன்று பழமையான பானைகள் மற்றும் பொருட்கள் இவ்விடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. உலக எமோஜி தினத்தையொட்டி கடந்த 17ம் திகதி நிறுவனம் புதிய எமோஜிக்களை வெளியிட்டது.

மேலும், கூடுதல் எமோஜிக்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

லண்டன் காதலரை மறைக்கும் உலக வாரிசு!!

சமீப காலமாக மீண்டும் மீடியாக்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார் உலக நாயகனின் வாரிசு. ஆனால் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்க மறுத்து விடுகிறாராம்.

உலக நாயகனின் வாரிசு மீடியாக்கள் எந்த நேரத்தில் பேட்டி கேட்டாலும் கொடுத்து வந்தார். நட்புடன் பழகி வந்தார்.

ஆனால் இடையில் சில தவறான வழிகாட்டுதலால் மீடியாவிடம் இருந்து ஒதுங்க, தமிழில் படங்கள் இல்லாமல் போனது.

இப்போது அப்படியில்லாமல் மீடியாக்களுடன் நெருங்கி வருகிறார். மீடியா கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பவர் லண்டனில் காதலர் ஒருவருடன் சுற்றுவதாக வரும் செய்தியை பற்றி கேட்டால் பதிலளிக்க மறுக்கிறாராம்.
நெருப்பில்லாமல் புகையுமா என்று கேட்டால், ஏன் ஐஸ்கட்டியில் இருந்துகூட புகை வருமே என்கிறாராம்.

வவுனியா புதிய பேருந்து நிலையம் இயங்கும் திகதியை அமைச்சர் அறிவிப்பார் : செ.மயூரன்!!

வவுனியா புதிய பேருந்து நிலையம் இயங்கும் திகதி தொடர்பில் எதிர்வரம் 21ஆம் திகதி அமைச்சர் அறிவிப்பார் என வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை இயக்குவது தொடர்பிலான கூட்டம் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைப்பாதாக அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருந்த போதிலும் மாற்று வழியினூடாக அவர் வெளியேறியிருந்தார்.

இந்த நிலையில் இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனிடம் கேட்டபோது,

புதிய பேருந்து நிலையத்தினை ஆரம்பிப்பது தொடர்பாகவும் 60இற்கு 40 என்ற இணைந்த நேர அட்டவணை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், புதிய பேருந்து நிலையததில் இருந்து மாவட்டங்களுக்கு இடையிலானதும், மாகாணங்களுக்கு இடையிலானதுமான பேருந்து சேவைகளை மேற்கொள்வது எனவும் தற்போது நகர மத்தியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவையை செயற்படுத்துவது எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நடைமுறையை ஒரு மாத காலத்திற்கு செயற்படுத்துவது என இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வர்த்தகர் சங்கத்தினர் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் முழுமையாக சென்றால் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவர் என்ற கோரிக்கையை இதன்போது முன்வைத்திருந்தனர். இதன் பிரகாரமும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்காப்பாளர்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர் வவுனியாவில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து எப்போது சேவையை ஆரம்பிப்பது என்பது தொடர்பில் அமைச்சர் டெனீஸ்வரன் தீர்மானத்தினை எடுப்பார்.

இந்த செயற்பாட்டின்போது 60இற்கு 40 என்ற நேர அட்டவணையும் ஒரு மாத காலத்திற்கு பரீட்சாத்தமாக நடைமுறைப்படுத்தப்படும். இது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை.

எனினும் சாத்தியப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இவற்றையும் தாண்டி இந்த பேருந்து நிலையத்தினை திறப்பதில் காணப்படும் இழுபறி நிலைக்கு பின்னால் பெரிய அரசியல் சக்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இல்லையானால் பெரும் தொகையில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளமை தொடர்பில் அரசாங்கம் அக்கறையின்றியுள்ளது.

குறிப்பாக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தொழிற்சங்கங்களை உருவாக்கியுள்ளன.

மேலும், தமது அரசியல் செயற்பாடுகளுக்காக தொழிற்சங்கங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் என வட மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் குறிப்பிட்டுள்ளார்.

 

அண்ணனை கொடூரமாக கொலை செய்த சகோதரர்கள்!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மூன்று சகோதரர்கள் இணைந்து ஒரு சகோதரரை கத்தியால் குத்தியுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று 9.15 மணியளவில் எஹெலியகொட பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

34 வயதுடைய மொஹமட் பசீமி என்ற நபரே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நடந்த அதிசயம்!!

 
மாத்தளையில் முட்டைக்குள் இருந்து இன்னுமொரு முட்டை கிடைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த லொக்குகே சந்திரிக்கா என்ற பெண் கடை ஒன்றில் இந்த முட்டையை கொள்வனவு செய்துள்ளார்.

முட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உடைத்து பார்க்கும் போது சிறிய அளவிலான இன்னுமொரு முட்டை அந்த முட்டைக்குள் காணப்பட்டுள்ளன.

இந்த பெரிய முட்டையில் ஏனைய முட்டைகளை போன்று மஞ்சள் கரு, வெள்ளை கரு என்பன காணப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக சிறிய முழுமையான முட்டை ஒன்றும் காணப்பட்டதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சுவாமி விபுலானந்தரின் 70வது நினைவுதினம் அனுஷ்டிப்பு!!

 
வவுனியா தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள பிரதான கண்டி வீதியிலுள்ள சுவாமி விபுலானந்தரின்; நினைவுச்சிலையடியில் இன்று (19.07.2017) காலை 8.30 மணியளவில் அன்னாரின் 70அவது நினைவு தினம் வவுனியா தமிழ் மாமன்றத்தின் தலைவர் திரு. கிருபானந்தகுமாரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலை இலக்கிய நண்பர்கள்வட்டத் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன், இத்திருவுருவச்சிலையினை நிறுவிய முன்னாள் நகர பிதாவும் தற்போது வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகர உபபிதா சந்திரகுலசிங்கம், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ். ஸ்ரீனிவாசன், நகரவரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவருமான எஸ்.சந்திரகுமார்(கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், நகர கிராமசேவையாளர், சமூக ஆர்வலர் ஆர்.சூரியகுமார், மற்றும் சமூக ஆர்வலர்கள், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

வவுனியாவில் தொடரும் கடும் வறட்சியான காலநிலை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

 
வவுனியாவில் தொடரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடந்தகால நெற்செய்கைக் காலப்பகுதியில் இருந்து கடுமையான வறட்சியான காலநிலை நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் தோட்டச் செய்கை நடவடிக்கைகள், சிறுபோக நெற்செய்கை என்பன பாதிப்படைந்துள்ளதுடன் அவை கடுமையான வெப்பம் காரணமாக கருகி காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் நாளாந்த குடும்பச் செலவுகளை போக்குவதற்கு கூட சிரமப்படுகின்றனர்.

விவசாயத்துடன் இணைந்ததாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் தமது கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி அவதிப்படுவதையும், வறட்சி காரணமாக மைதானம் போன்று காட்சியளிக்கும் குளப்பகுதிகளை கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளாக பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது.

வவுனியாவின் பல பகுதிகளில் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும், கிணறுகளில் தண்ணீர் வற்றியும் காணப்படுகின்றது. இவ்வாறாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா சமூகசேவை அலுவலகம் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பத்திற்கு உதவி!!

 
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மூலம் கொக்குவிலைச் சேர்ந்த லண்டன் வாழ் நலன் விரும்பிகளான திரு திருமதி குமார் வத்ஸி குடும்பம் , திரு.செல்வநாதன் குடும்பம் , அமரர் சிவானந்தனின் பேரப் பிள்ளைகள் இணைந்து பல தடவைகள் வாழ்க்கையின் விரக்தி நிலைக்கு சென்று காப்பற்றப்பட்ட திருமதி ம. சுபாசினியின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகள், உலர் உணவுப்பொதிகள், பிள்ளைகளுக்கான பாதணிகள், புத்தகப்பைகள், சீருடைக்கான துணிகள் மற்றும் துவிச்சகக்கர வண்டி என்பன வழங்கி வைத்தனர்.

சுபாசினி தொடர்பான பிரச்சனை அயலவர்கள் மூலம் மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பெண்ணின் பிரச்சனையை முகப்புத்தகம் மூலம் தெரியப்படுத்தியவேளை சமூக ஆர்வலர்கள் மூலம் குறித்த பொருட்கள் மாவட்ட சமூகசேவை அலுவலகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் நாளாந்தம் இவரின் பிள்ளைகள் காலை ஆகாரம் இன்றி பாடசாலை வருவதால் காலை உணவுக்கான ஏற்பாட்டினையும் நாளாந்தம் வழங்க பாடசாலை அதிபர் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (18.07.2017) செவ்வாய்க்கிழமை வவுனியா மூன்றுமுறிப்பு பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வு பாடசாலை அதிபர் கே .பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.

இதில் விசேட விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா பொது வைத்தியசாலை உளவள வைத்தியநிபுணர் வைத்தியகலாநிதி சி.சிவதாஸன் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கான ஆற்றுப்படுத்துகை விழிப்புணர்வு உரையினை நிகழ்த்தினார்.

‘மாணவர்கள் தமது நுண்ணறிவு கல்வியறிவு என்பவற்றை வளர்த்து வரும் அதேவேளை புறச்சூழல்களால் பாதிக்கப்படாது தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் . ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் . மதுபோதை மற்றும் தீய பழக்கங்ளை மாணவர்கள் புறந்தள்ளப்பழகவேண்டும் . எல்லாவற்றுக்கும் தலை அசைப்பதை விட சிலவற்றை மறுக்கப் பழக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

அதிபர் தனது உரையில் சுபாசினியின் குடும்பம் பல சவால்களை சந்தித்து வருவதை நாம் நன்கு அறிவோம் . இவர்களுக்கு இந்த உதவி அவசியமானதுடன் அவசரமானதும் ஆகும். சுபாசினியின் 3 பிள்ளைகளும் கல்வி கற்கக்கூடியவர்கள்.

இவர்களுக்கு காலை உணவு கூட பெரும் போராட்டம். அதிகநாட்கள் தாமதமாகியே பாடசாலை வந்திருக்கிறார்கள் . இந்த நிலையில் மாவட்ட சமூக சேவை அலுவலகர் எஸ்.எஸ்.வாஸன் மேற்கொண்ட இந்த முயற்சிக்கும் இந்த உதவியைச் செய்த லண்டன் வாழ்நலன் விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

நிகழ்வில் நான்காம் ஆண்டு ஆங்கிலமொழி கல்வியில் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 5 திறமையான மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி நூல் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை உப அதிபர்கள் வி.சற்குணராசா திருமதி விஜயராணி நிலாநேசன், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன், செல்வி கலைவாணி, தாதிய உத்தியோகத்தர் சுதாகரன் சமூக நலன் உத்தியொகத்தர் விஜிதரன் சமூக ஆர்வலர் புருசோத்தமன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் வாழ்வாதார உதவிகள்!!

 
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2017ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரசபை, வவுனியா தமிழ் பிரதேசசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபை, செட்டிகுளம் பிரதேசசபைகளுக்குள் உள்ளடங்கும் கிராமங்களில் மிகவும் அடிப்படை வசதிகுறைந்த கொட்டில்களில் குடியிருக்கும் மக்களுக்கு கூரை சீற் கூரைத்தகரம் மலசலகூடம் அமைத்தலுக்கான உதவிகளை வழங்கினார்.

இன் நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை செயலாளர், வவுனியா வடக்கு பிரதேசசபை செயலாளர், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

விருந்துக்கு சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக பலி!!

ரயில் தண்டவாளத்தில் நடந்த சென்ற இருவர் ரயிலில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு வாதுவ தல்ப்பிட்டிய ரயில் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மூவர் மோதுண்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ரயில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மூவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்

பொலிஸாரின் தகவல்களுக்கமைய தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக சென்ற ரயில் ஒன்றில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வதற்கு அரசாங்கம் அண்மையில் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தை வென்ற மனிதன் : 40 நிமிடங்களின் பின் உயிர் பிழைத்த அதிசயம்!!

மாரடைப்பு காரணமாக நாடித் துடிப்பு நின்று போன ஒருவர் சுமார் 40 நிமிடங்களின் பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்ன் என்பவரே இவ்வாறு மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

தனது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 911 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டிற்கு இரண்டு பொலிஸார் வந்துள்ளனர்.

இந்நிலையில், சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) முறைப்படி ஜான் ஆக்பர்னின் இதயத்தை இயக்க வைக்கும் முயற்சியில் குறித்த இரு பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.

சுமார், 42 நிமிடங்கள் வரை மீண்டும் அவருடைய நாடித்துடிப்பு வரும் வரை இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாடித்துடிப்பு வந்த பின்னர் ஆக்பர்ன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், அவர், விரைவில் குணமடைவதற்காக ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்பில் உள்ள காயங்களை தவிர, தான் முழுமையான குணமடைந்து விட்டது போல உணர்வதாக ஜான் ஆக்பர்ன் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்ற குழந்தையை ஏற்க மறுத்த தாய் : இலங்கையில் நடந்த விநோதம்!!

நுவரெலியாவில் பெற்ற குழந்தையை இளம் தாய் ஒருவர் ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையை பிரசவித்த பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியாதென 18 வயதுடைய தாய் ஒருவர் நிராகரித்துள்ளார்.

இதன்காரணமாக வைத்தியசாலை அதிகாரிகள் சிரமத்திற்கு முகங்கொடுத்ததாக நுவரெலிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிந்துல பொலிஸ் பிரிவிற்கு சொந்தமான தோட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

திருமணமான ஆணொருவருடன் ஏற்படுத்திற் கொண்ட தகாத உறவு முறையால் இந்த அவல நிலைக்கு குறித்த யுவதி முகங்கொடுத்துள்ளார்.

பெண் கர்ப்பமடைந்தவுடன் அவரை விட்டுச் செல்ல குறித்த ஆண் ஆரம்பித்துள்ளதாக இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அந்த நபர் தன்னை கைவிட்டு செல்ல ஆயத்தமாகுவதாக குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவ்வாறான முறைப்பாடு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தமக்கு கிடைத்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வயது முழுமையடைந்த இருவரின் விருப்பத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

விசா வழங்குவது குறித்து குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டிருக்கும் செய்தி!!

இலங்கைக்கு வர விரும்பும் ஒருசில வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீசா மறுக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், எந்த நாட்டவருக்கும் அவ்வாறு வீசா மறுக்கப்படவில்லை என்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிரியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இங்கு வருபவர்களின் வீசா விண்ணப்பங்கள் விசேட பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீசா வழங்கப்படுவதாக வெளிவந்திருக்கும் வதந்திகளில் உண்மை இல்லை.

எந்த நாட்டவரும் இலங்கை வீசாவுக்கு விண்ணப்பம் செய்தால் அவர்களுக்கு 30 நாட்களுக்கான வீசா வழங்கப்படும். 30 நாட்கள் முடிந்த பின் அவர்கள் தொடர்ந்து இங்கு தங்கவேண்டி வந்தால் வீசாவை நீடித்துக்கொள்ளலாம்.

சுற்றுலா, கல்வி, வைத்திய சிகிச்சை, வியாபாரம், ஆராய்ச்சி போன்ற எந்தத் தேவைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கும் வீசா வழங்குவதற்கு தடை கிடையாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சுவிஸ்லாந்தில் 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியின் சடலம் கண்டெடுப்பு!!

சுவிஸ்லாந்தில் உள்ள அல்ப்ஸ் மலையில் 75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியின் சடலம் பனியில் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடல்மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டருக்கு மேல் உள்ள அல்ப்ஸ் மலைத்தொடர் முற்றிலும் பனியினால் ஆன பிரதேசமாகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள இம்மலைத்தொடரில் இருந்த பனியாறுகள் தற்போது வற்றியுள்ள நிலையில், அங்குள்ள சுற்றுலா விடுதியின் ஊழியர்கள் பனி ஆற்றுப்பகுதியில் கண்ணாடி குடுவைகள் மற்றும் ஷூக்கள் கிடப்பதை பார்த்துள்ளனர்.

உடனே, அங்கு தோண்டிப்பார்த்த போது, இரண்டு சடலங்கள் அருகருகே கிடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் வெளியானதும், சடலமாக கிடந்த தம்பதியினரின் வாரிசுகள், அது தங்களது பெற்றோர்கள் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

1942 ஆம் ஆண்டு, ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள வாலைஸ் கண்டோ என்ற பகுதியில் மர்செலின் மற்றும் ப்ரான்சின் டுமெளலின் மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அதன் பின்னர் காணாமல் போய்விட்டனர்.

இப்போது, அவர்களின் சடலங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையிலேயே கிடைத்துள்ளதால், பனிப்புயலில் சிக்கி அவர்கள் பலியாகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஏழு குழந்தைகளுக்கு பெற்றோரான இவர்களின் சடலங்கள் சிதைந்து போகாமல், நல்ல நிலையில் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் உரிய முறையில் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.