யாழில் நாகப்பாம்பை கைகளால் பிடித்த குருக்கள் : இறுதியில் நேர்ந்த சோக சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில், குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். இதன்போது புதன்கிழமை (02) அன்று புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார்.

இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியுள்ளது.

இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன் : 10 வருடத்திற்கு பின் கைது!!

கம்பஹா, பமுனுகம, புபுதுகம பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து, பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த கணவன் பல ஆண்டுகளுக்கு பின்னர் பமுனுகம பொலிஸாரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தனது மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்து பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். பின்னர் சந்தேக நபருக்கு எதிராக வத்தளை நீதிமன்றில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்தெஹிவளை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய கணவனே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை தோழனுக்காக பெற்ற குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற தாய்; கதறி துடித்த தந்தை!!

இந்தியாவின் தெலங்கானாவில் பாடசாலை தோழனுடன் சேர்ந்து வாழ தடையாக இருப்பார்கள் என்று கருதி தனது 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான ரஜிதா. 55 வயதான சென்னையா என்பவர் முதல் மனைவி இறந்து விட்டதால் இரண்டாம் தாரமாக ரஜிதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரஜிதா தான் படித்த பாடசாலையில் தன்னுடன் பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதையொட்டி நடந்த விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட அவர், பாடசாலையில் தன்னுடன் படித்த தோழன் சிவக்குமாரை சந்தித்துள்ளார்.

ரஜிதா சிவக்குமாரிடம் பேசி பழக ஆரம்பித்திருக்கிறார். இதற்கிடையே இரண்டு பேரும் இருசக்கரவாகனங்களில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ளுமாறு ரஜிதா கேட்டிருக்கிறார். கணவன், குழந்தைகள் ஆகியோரை விட்டு விட்டு வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயார் என்று சிவக்குமார் கூறியுள்ளார்.

அந்த திருமணத்திற்கு தடையாக இருக்கும் தனது 3 குழந்தைகளையும், கணவனையும் கொலை செய்வதற்காக தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் தயிர் சோற்றில் விஷம் கலந்து சாப்பிட கொடுத்திருக்கிறார்.

கணவன் சென்னையாவுக்கும் அதே தயிர் சாப்பாட்டை கொடுத்த நிலையில், அவர் எனக்குத் தயிர் பிடிக்காது என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால் அந்த 3 குழந்தைகளும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு வாந்தி எடுத்த சாகும் நிலைக்கு சென்றுள்ளனர்.

வெளியே சென்றிருந்த சென்னையா, மீண்டும் வீட்டுக்கு வந்தபோது குழந்தைகளைப் பார்த்து பதறிப் போக, குழந்தைகளுக்கும் தனக்கும் வயிற்று வலியாக உள்ளது என நாடகமாடிய நிலையில் உடனே அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது 3 குழந்தைகளும் பரிதாபமாக இறந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பொலிஸார் மரணங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக ரஜிதா பயன்படுத்திய தொலைபேசியை வாங்கி ஆய்வு செய்தபோது அவர் தொடர்ந்து சிவகுருமாருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது.

எனவே ரஜிதாவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை நடத்திய போது தன் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, ரஜிதாவை கைது செய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று வாகனங்கள் : ஒருவர் பலி!!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி – கொழும்பு வீதியில் வெட்டுமகட பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (03) இரவு இடம்பெற்றுள்ளது.

களுத்துறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த சைக்கிளுடன் மோதி பின்னர் பஸ் உடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு : பொலிஸ் நிலையத்தில் சித்திரவதையா?

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைத்து உயிரிழந்த இளைஞனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞன் முல்லேரிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் சட்டத்தரணியும் நிர்வாக பணிப்பாளருமான சேனக பெரேரா, அந்த நபர் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

புதன்கிழமை (2) வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அவரது தாயார், தனது மகனின் ஆடைகள் கழற்றப்பட்டதாகக் கூறினார். கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த கால்சட்டை ஒரு குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இது குறித்து விசாரித்தபோது, ​​அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றதாக பொலிசார் தாயாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவலில் இருந்தபோது அந்த நபரின் மரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரபல நடிகர் இரவிக்குமார் காலமானார் : திரையுலகினர் கண்ணீர்!!

மலையாள சினிமாவில் பல முன்னணி வேடங்களில் நடித்த மூத்த நடிகர் ரவிக்குமார் (71) காலமானார். எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் பெரிய திரையில் நடிகர் ரவிக்குமார் மிகவும் பிரபலமானவராக வலம் வந்தார்.

பகலில் ஒரு இரவு (Pagalil Oru Iravu) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இவர் நடிப்பில் வெளியான இளமை ஒரு பூங்காற்று பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ளது.

புற்றுநோய்க்கான சிகிச்சை

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை 9 மணியளவில் அவர் காலமானார்.

அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தார். மலையாளம் மற்றும் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைய்லகினர் இரங்கல்களை கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் தர்ஷன் அதிரடியாக கைது : நடந்தது என்ன?

சென்னை முகப்பேரில் காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக எழுந்த தகராறில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷன் 2சென்னையில் வசித்து வருகின்றார். அவரது வீடு சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள பாரி தெருவில் அமைந்துள்ளது.

இந்நிலையில் வீட்டின் அருகே தேநீர் கடை ஒன்று உள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் தனது மனைவியுடன் காரில் கடைக்கு வந்தார்.

அப்போது காரை தர்ஷனின் வீட்டு முன்பாக நிறுத்தியதாகவும், அது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

நேற்று (3) கார் பார்க்கிங் பிரச்சனை தொடர்பாக நீதிபதியின் மகன் மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதில் காயமடைந்த நீதிபதி மகன் ஆத்திசூடி மற்றும் மகேஷ்வரி ஆகிய இருவரும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீதிபதி மகன் ஆத்திசூடியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரின் சகோதரர் லோகேஷ் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்க்ஷன் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தர்ஷன் சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்திருந்ததுடன் விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர நடிகர் மரணம்!!

வெலிக்கடை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறி அப்பகுதி மக்கள் 119 என்ற காவல்துறை அவசர பிரிவுக்கு அழைத்து குறித்த இளைஞனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் திடீர் சுகவீனம் காரணமாக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நடனக் கலைஞர் மற்றும் விளம்பர நடிகர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2025 இல் முதல் காலாண்டிலேயே நிஜமாகிய பாபா வங்காவின் கணிப்பு!!

2025 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. எதிர்காலத்தில் பேரழிவு தரும் பூகம்பங்கள் ஏற்படும் என்று தீர்க்கதரிசி முன்னறிவித்தார்.

கடந்த வாரம், தாய்லாந்து மற்றும் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பலர் காணாமல்போயுள்ளதுடன், மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க நாட்டை ஆதரிப்பதற்காக ஐ.நா. 6.2 பில்லியன் பவுண்டுகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல்கேரிய ஆன்மீகவாதியான வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா பயங்கரமான புயலின் போது தனது சக்திகளைப் பெற்றதாகக் கூறி இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

யாழில் இளம் அரச உத்தியோகஸ்தர் விபரீத முடிவு : துயரத்தில் குடும்பம்!!

யாழில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அரசடி வீதி, இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நோயின் வீரியத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் நேற்றையதினம்(3) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் தாதிக்கு நேர்ந்த சோகம் : பணியாற்றிய வைத்தியசாலையிலேயே உயிரைவிட்ட சோகம்!!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமை புரியும் பெண்ணொருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.

வட்டுத் தெற்கு, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த மாதம் புதன்கிழமை (26) அன்று இரவு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது அராலி நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், விளான் சந்தி பகுதியில் அவரது மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த தாதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் திடீர் மரணம்!!

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அந்த இளைஞன் நுழைந்ததாக கூறி, அப்பகுதி மக்கள் 119 என்ற பொலிஸ் அவசர எண்ணுக்கு அழைத்துள்ளனர்.

அத்துடன் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காவலில் இருந்தபோது அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மருத்துவமனை தாதி தொடர்பான பாடத்திட்டத்தை கற்று வருகின்றார். குறித்த இளைஞன் ஒரு நடனக் கலைஞர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம்- கச்சேரி பகுதியில் காருடன் மோதிய கப் ரக வாகனம்!!

யாழ்ப்பாணம்-கச்சேரிக்கு முன்பாக காரும் கப் ரக வாகனமும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (03.04) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மதியம், கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது, சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் யுவதி : விசாரணையில் இருவர் கைது!!

கனடாவில், மார்க்ஹாமில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். கடந்த மாதம் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தாக்குதலுக்குள்ளான 20 வயது நிலாக்சி ரகுதாஸ் (மார்க்ஹாம்) என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஏக்வோன் முர்ரே (28) மற்றும் ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சாட் (35) ஆகியோரை அந்நாட்டு பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

இதற்கமைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கமறியலில் இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு நேர்ந்த துன்பம்!!

அவுஸ்திரேலியா – மெல்போர்னில் உள்ள இலங்கையருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டது. Malvern பகுதியில் உள்ள Zora Hair and beauty எனப்படும் அழகு நிலையமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டது.

பணம் மற்றும் நிறுவனத்தின் தயாரிப்பு பெயரில் உள்ள பல பொருட்களும் திருடப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்துள்ளனர். அருகில் இருந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, பொலிஸார் இது குறித்து உரிமையாளரிடம் தகவல் வழங்கியுள்ளார்.

கொள்ளையில் ஆண் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக மெல்போர்ன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மெல்போர்ன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ட்ரம்பின் வரி விதிப்பால் பாரிய ஆபத்தில் சிக்கவுள்ள இலங்கையின் ஆடை உற்பத்தி!!

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

12% ஆக இருந்த வரி விகிதம் இப்போது 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கை மீது விதிக்கப்படும் வரி விகிதம் மிக அதிகமாக காணப்படுகின்றது. இந்த சூழ்நிலை இலங்கையின் ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இலங்கையின் ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.

குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, மேலும் அவை அமெரிக்காவில் அதிக கேள்வியை கொண்டுள்ளன.

இந்தக் புதிய வரி விதிப்பு இலங்கையின் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய வழிகள் உள்ளன. ஏற்றுமதி வருவாய் கணிசமாகக் குறையக்கூடும்.

மேலும், ஏற்றுமதிகள் இப்படி சரிந்தால், எதிர்காலத்தில் இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரின் வேலைகள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.