யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (8) முதியவர் ஒருவர் மனவிரக்தியில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் 5ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த வயது 86 வயதான முதியரவ்ர் ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் அவரது பிள்ளைகள் மூவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த முதியவர் சனிக்கிழமை (8) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடல மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில் மனவிரக்தியில் முதியவர் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (Princely Liyanage) என்பவர், நடைப்பயிற்சி இயந்திரத்தில் (manual treadmill) 12 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் வேகமாக ஓடி இரண்டு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்த சாதனை முயற்சி மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை 1500 மணிக்கு கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலகே திசாநாயக்க உள்ளரங்கில் ஆரம்பித்தது.
இதன்போது, அவர் சவாலை வெற்றிகரமாக முடித்து, இரண்டு சாதனைகளையும் நிகழ்த்தினார். இலங்கை கடற்படை அவரது சாதனையை அங்கீகரித்துள்ள நிலையில், அவரது சகிப்புத்தன்மை மற்றும் உறுதியை மெச்சியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் உரிய முறையில் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளத் தவறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நோய் நிலைமை அதிகரித்து தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம்பே கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் வருடாந்த திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நேற்று மாலை (09) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவர்கள் 32, 36 வயதுடைய பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை என்பதோடு அனைவரும் மினுவங்கொட மற்றும் ராகமவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படும் என ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று சந்திர கிரகணங்களில் இரண்டு சந்திர கிரகணங்கள் முழு சந்திர கிரகணங்களாக தென்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (13.03.2025) மற்றும் வெள்ளிக்கிழமை (14.03) ஆகிய இரு திகதிகளில் நிகழவுள்ள முழு சந்திர கிரகணங்கள் இலங்கையில் தென்படாது.
மேலும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியில் நிகழவுள்ள முழு சந்திர கிரகணம் இலங்கையில் தென்படும் எனவும், சூரிய கிரகணம் நிகழவுள்ள திகதி குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை எனவும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் 20 வயது இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் மரணத்திற்கு குடும்ப தகராறு காரணம் என கூறப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024 டிசம்பரில் இலங்கையில் கடன் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 1,970,130 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இது 2023 டிசம்பரில் 1,917,085 அட்டைகளுடன் ஒப்பிடும்போது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது.
கடன் அட்டைகளில் நிலுவைத் தொகையும் அதிகரித்து, நவம்பரில் ரூ.151,614 மில்லியனாக இருந்த நிலையில், டிசம்பர் 2024 இல் ரூ.157,957 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இரத்தினபுரியில் மூத்த சகோதரர் தனது தம்பியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் அலுபத்கல, உடனிரியெல்ல பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவருக்கும், மூத்த சகோதரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் இந்த மரணம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இந்தக் கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் மூத்த சகோதரர் மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தாய் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். வடமராட்சி கரவெட்டி பகுதியில் மாணவன் ஒருவர் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில், இங்கிரிய, ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சகோதரர் இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
குறித்த இளம்பெண் மார்ச் 2 ஆம் திகதி மாலை 5:30 மணியளவில் இங்கிரிய பல்பொருள் அங்காடியில் பணி முடித்து வெளியேறிய பின்னர் காணாமல் போயிருந்தார்.
பொலிஸ் விசாரணையில், பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 30 வயது ஆசிரியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அவர், மார்ச் 2 ஆம் திகதி குறித்த இளம்பெண் தனக்கு இரண்டு முறை தொலைபேசியில் அழைத்ததாகவும், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்ட அதே நாளில் (7), அந்த ஆசிரியரும் ஹல்வத்துரவில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பின் புறநகர் பகுதியான கொஹுவல பகுதியில் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமனாராம வீதியில் நேற்றையதினம் மகனின் காரில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் 59 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென பின்னோக்கி நகர்ந்தமையினால் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த தாய் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் நேற்று (07.03) தெரிவித்தனர். பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குறித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில் குறித்த நபர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல் 1.45 மணியளவில் வீட்டில் உள்ள கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறிச்சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டதுடன், தலையில் காயமும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், உறவினர்கள் பிற்பகல் 1.55 மணியளவில் பண்டாரிக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் மரணத்தை தாம் பார்ப்பதில்லை வவுனியா பொலிசில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர்.
அதன்பின் பிற்பகல் 2 மணியளவில் வவுனியா பொலிசாருக்கு நேரில் சென்று தகவல் வழங்கப்பட்டது. நீண்ட நேரமாக சம்பவ இடத்தில் கிராம அலுவலர் உள்ளிட்ட பொது மக்கள் திரண்டிருந்த போதும் பொலிசார் வரவில்லை.
அதன் பின் பிற்பகல் 4 மணியளவில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் அவசர தொலைலைபேசி இலக்கமான 107 தகவல் வழங்கப்பட்டது.
அதன் பின் 4.30 மணியளவில் வவுனியா பொலிசார் வருகை தந்ததுடன், பண்டாரிக்குளம் பொலிசார் மாலை 5 மணிக்கு வருகை தந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வீட்டில் உள்ள கட்டிலின் மேல் ஏறி அறை ஒன்றின் சுவருக்கு வர்ணம் பூசிய போது கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சுமார் 7 வருடங்களின் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ அதிகாரிகளை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக எதிர்வரும் மே மாதம் திறந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டி பரீட்சைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அதிகாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 130,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது. பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2200 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தற்போது முகாமைத்துவ அதிகாரிகளுக்கான 4,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டிலேயே இறுதியாக முகாமைத்துவ அதிகாரிகள் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாணவர்களை பஸ்ஸில் ஏற்ற மறுத்து அடாவடி செய்த பேருந்து நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பேருந்திலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாவலபிட்டியிலிருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரசப் பேருந்தில், அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது அரசப் பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பேருந்தை விட்டு வெளியேற முடியாது. என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பதிலளித்த பேருந்து நடத்துனர், ‘ஆம், இது என்னுடைய பேருந்து நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்’ எனக் கூறும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையிலேயே பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் நாடாளும்ன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இளம் குடும்ப பெண் ஒருவரை மிரட்டி தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.03) வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து மிரட்டி தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
அத்தோடு, இதனை அவர் காணொளியாக பதிவு செய்துள்ளதுடன் அதனை வெளியிடுவேன் என மிரட்டி பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் கர்ப்பமான குறித்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார்.
இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பெண் முறைப்பாடு பதிவு செய்ததையடுத்து, சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார்.
இந்தநிலையில் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.