மனைவி விவாகரத்து கோரியதால் சினிமா துணை நடிகர் தற்கொலை முயற்சி!!

sucide

மனைவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் சினிமா துணை நடிகர் இளவரசன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும், டமால் டுமீல், சகுனி, கள்ள பாடம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் அரசு என்ற இளவரசன். இவருக்கு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி காதல் கலப்புத் திருமணம் நடைபெற்றது. மனைவி ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் வசித்து வந்தார்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த இளவரசன் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

தகவல் கிடைத்ததும் பொலிசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டில் பொலிசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில் இளவரசன் நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு உருக்கமான முறையில் எழுதி இருந்தார். கடிதத்தில் கூறியிருப்பதாவது..

நான் சினிமாவில் துணை நடிகராகவும், பல நாடகங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறேன். 7 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். எனக்கு திரை உலகில் போதுமான சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டது.

எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். என் குழந்தையையும் என்னிடம் காட்ட மறுக்கிறார்கள். மகனை பார்க்க முடியாத ஏக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

இதற்கிடையே என் மனைவியிடம் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது. இதில் எனக்கு விருப்பம் இல்லை. நிதி நிறுவனத்தில் எனது மனைவியுடன் பணியாற்றிய சிலர் அவரது மனதை எனக்கு எதிராக மாற்றிவிட்டார்கள்.

இனி எந்த நடிகருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதே என் ஆசை. உங்களை (விஷால்) சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி உதவி கேட்க முயன்றேன். ஆனால் உங்களை என்னால் சந்திக்க முடியவில்லை எனவே கடிதம் எழுதி இருக்கிறேன்.

எனக்கு வேறு வழி இல்லாததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன். என் மரணத்திற்குப் பின்னராவது சினிமாவில் போராடும் எல்லா நடிகர்களும் நல்ல வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. என்று இளவரசன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமலாபால் விஜய் விவாகரத்து : வௌிவந்த பரபரப்புத் தகவல்கள்(வீடியோ)

Amala

நடிகை அமலாபால் விஜய் விவாகரத்து ஒரு வழியாக ஓய்வுக்கு வந்த நிலையில், இந்த விவாகரத்துக்கு காரணம் யார் என்ற உண்மை தற்போது வௌியாகியுள்ளது. இதோ அந்த பராபர்ப்புத் தகவல்கள்..

ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் பலி!!

Nepal

நேபாளத்தில் ரயுதாகத் மாவட்டம் பொகாராவில் உள்ள கயுர் என்ற இடத்தில் இருந்து பயணிகள் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் சித்வான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி ரோட்டில் இருந்து 100 மீட்டர் ஆழத்தில் ஓடும் திரிசுலி ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.

அதற்குள் பஸ்சில் இருந்த 21 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். விபத்துக்குரிய காரணம் தெரியவில்லை. அது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

கணவன் மீதுள்ள கோபத்தில் குழந்தையைத் தாக்கும் தாய்!!(அதிர்ச்சி வீடியோ)

Attack

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெய்ரேலி நகரில் வசிக்கும் ஒருபெண் தனது கணவர் மீது உள்ள வெறுப்பால் பச்சிளம் குழந்தை என்று பார்க்காமல் தனது ஆண் குழந்தையை சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையதளங்களின் மூலம் வீடியோவாக வெளியாகி உள்ளன.

இது குறித்து அந்தப் பெண்ணின் கணவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு தெரிவித்தார்..

எனக்கும் எனது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் என் மீதுள்ள வெறுப்பால் பச்சிளம் குழந்தை என்று கூட பார்க்காமல் என் குழந்தையை சரமாரியாக தாக்கியதுடன், இந்த கொடுமையை தடுக்க வந்த என்னையும் அவர் கண்மூடித்தனமாக தாக்கினார்.

இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க எனது வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தினேன். அதில் அவர் என் மகனை துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன். இச் சம்பவம் காரணமாக நான் மிகவும் மன வேதனையில் உள்ளேன். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேயாக மாறிய ஒரு தாயிடம் சிக்கிய அந்த பச்சிளம் குழந்தை படும் வேதனையை காண..

காணாமல் போன மாணவியை விடுவிக்க 75 இலட்சம் ரூபா கப்பம் கோரும் கும்பல்!!

Missing

காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கூறி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பம்பலபிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண் தர்மினி (19) என்ற மாணவி கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன மாணவி தொடர்பில் தாயார் பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து விட்டு நேற்று முன்தினம் (24.08) அன்று தனது சொந்த ஊரான மானிப்பாய்க்கு வருகை தந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் அவர்களது வீட்டிற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், காணாமல் போன மகளை விடுதலை செய்து தருவதாக கூறியதுடன், 75 லட்சம் ரூபா பணத்தினை தயார் படுத்துமாறும் கூறியுள்ளார்.

அத்துடன் அவ்வாறு பணத்தினை தயார்படுத்தாவிடின், தற்போதைய சூழ்நிலை தெரியும் தானே என்றும், அதற்கு ஏற்றவாறு பணத்தினை தயார் செய்யுமாறும், தாங்கள் கூறுமிடத்திற்கு வந்து பணத்தினைத் தருமாறும் கூறிவிட்டு சட்டடென்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அந்த மர்மநபர் வெளியேறியதும், குறித்த பெண்மணி உடனடியாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, அண்மையில் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியில் பிரணவன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட நபரை வெட்ட வந்தவர்கள் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்று அழைக்கப்படும் சன்னா மற்றும் அவரது நண்பர்கள் என மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதுடன், காணாமல் போன யுவதி சன்னாவின் குழுவில் இருந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வன்னி பட்டறை அலுவலகம் திறந்து வைப்பு!!

 
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு அரகாமையில் வன்னி பட்டறையின் அலுவலகம் நேற்று(26.08.2016) காலை வவுனியா மாவட்ட செயலாளர் திரு கா.உதயராசாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின தலைவர் சந்திரகுமார், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0154 DSC_0157 DSC_0158 DSC_0159 DSC_0162 DSC_0164 DSC_0166 DSC_0168 DSC_0170 DSC_0171 DSC_0172

பம்பலப்பிட்டி வர்த்தகர் கொலை புதிய கோணத்தில் பொலிஸார் விசாரணை!!

Sulaiman

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்தத்கர் கொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வேறு கோணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேசத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பிற்கமைய இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் குழுக்களின் அவதானம்திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் கொலை தொடர்பில் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், குறித்தவர்தத்கர்கள் இருவரிடமும் கொலை செய்யப்பட்ட வர்த்தகர் 400 இலட்சம் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக நேற்றைய தினம் பொலிஸார் தெரிவித்துள்னர்.

மேலும், இந்த கொலை தொடர்பில் முன்னெடுத்து வரும் விசாரணை அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவி எச்சரித்த குழு!!

hacked

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தின் மீது நேற்று மாலை ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் யூத் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளவர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

அத்துடன் குறித்த ஸ்ரீலங்கன் யூத் குழுவினால் இணையத்தளத்தில் சிங்களத்தில் கோரிக்கைகளையும் முன்வைக்கப்பட்டிருந்தன.

சிங்கள தமிழ் புதுவருட காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாக இந்தக்குழு தெரிவித்திருந்தது

இலங்கையின் இணையத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள இந்தக்குழு, இல்லையேல் இலங்கையில் இணையயுத்தம் ஏற்படலாம் என்றும் எச்சரித்திருந்தது.

உங்களுக்கு இவற்றை செய்யமுடியாது போனால் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அந்தக்குழு கோரியிருந்தது.

பிரதமரின் பொறுப்பற்ற செயல்கள் தடுக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த இணையத்தில் ஸ்ரீலங்கன் யூத் குழுவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சில மணித்தியாங்களின் பின்னர் குறித்த இணையத்தளம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

maxresdefault

குற்றத்தை ஒப்புக்கொண்ட மிருக வேட்டையர்களுக்கு கிடைத்த தண்டனை!!

Animal

நக்கீல்ஸ் வனப்பகுதியில் மிருகங்களை மிகவும் கொடுரமாக வேட்டையாடி அதனை பேஸ்புக் வலைத்தளங்களில் பதிவேற்றி மகிழ்ந்த வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று அவர்களது வழக்கு பன்வில சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் 6 பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இவர்களுக்கு 175,000 ரூபாய் அபராதப் பணம் விதித்து நீதவான் எம்.எச்.ரபீக்டீன் தீர்ப்பளித்துள்ளார்.

பாதுகாப்பு வனப்பகுதியில் மிருகங்களை வேட்டையாடியமை, அதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை சந்தேகநபர்கள் ஒப்புகொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு 25,000 படி இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக 50,000 அபராதப் பணமும், ஏனைய சந்தேகநபர்களுக்கு தலா 25,000 அபராதப் பணமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மூன்று வருடங்களில் 9,657 பேர் தற்கொலை!!

Sucede

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரத்து 657 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு சட்டமும் ஒழுங்கும் அமைச்சு சபையில் சமர்ப்பித்த பதிலிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2013ஆம் ஆண்டு 752 பெண்களும், 2 ஆயிரத்து 703 ஆண்களும், 2014ஆம் ஆண்டில் 660 பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 484 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு 669 பெண்களும், 2 ஆயிரத்து 389 ஆண்களுமாக மொத்தம் 3 ஆயிரத்து 58 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2013, 2014ஆம் ஆண்டுகளில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலேயே கூடுதல் தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்றும், 2015ஆம் ஆண்டு கண்டி பொலிஸ் பிரிவில் கூடுதலான தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக உயர்த்தத் திட்டம்!!

Ranil

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் சங்கத்தின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது.

இதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். எதிர்வரும் இரண்டொரு வருடங்களுக்குள் இந்த இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

வெளிநாடுகளில் ஒரு தொழிலாளி குறைந்தது 300 டொலர் மாதாந்த சம்பளம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அந்த நிலை இலங்கையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதன் மூலம் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றம் கருதி மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்களில் இருவர் சகோதரர்கள்!!

m1

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஐந்து தமிழர்களில் இருவர் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், ஒருவர் 27 வயதானவர் எனவும் தெரியவந்துள்ளது.

லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்குச் சென்ற குறித்த ஐந்து பேரும் கடற்கரையில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது திடீரெனக் கடல் மட்டம் மிகவேகமாக உயர்ந்து அவர்களை கடலுக்குள் இழுத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த ஐவரினதும் அடையாளம் உறுதி செய்யப்பட்டதன்படி படி 22 வயதான நிதர்சன் ரவி, 23 வயதான இந்துசன் சிறிஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் நாதன் மற்றும் 27 வயதான குருசாந் சிறிதவராஜாஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்தவர்களில் கோபிநாதன் மற்றும் கெனிகன் நாதன் ஆகியோர் சகோதரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

m2

யாழில் அதிசய வெள்ளை நாகம்!!

21 - Copy

யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாகமானது சுமார் ஆறு அடி நீளமானது எனவும் கூறப்படுகின்றது.

யாழ். பொலிகண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இந்த அதிசய நாகம் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாகத்தினை அப்பகுதி மக்கள் யாழ். வள்ளிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21 22

சிறைச்சாலையை அழகுபடுத்திய கைதிகள் : நினைவுச்சின்னம் வழங்கிய நீதிபதிகள்!!

J2

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் நேற்று வியாழக்கிழமை நீதிபதிகளினால் திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகளினால் மட்டக்களப்பு சிறைச்சாலை சுவரில் வரையப்பட்ட ஓவியங்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதி எம்.ஐ.றிஸ்வி ஆகியோர் திறந்து வைத்து திரை நீக்கம் செய்துவைத்தனர்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் பிரதம சிறை அலுவலகர் என்.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த ஓவியங்களை வரைந்த இரண்டு கைதிகள் நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்னாலுள்ள சுவரில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கைதிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களின் ஆற்றலைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைஅலுவலகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

j1

சேரிப் பகுதியைச் சேர்ந்த சிறுவன் படைத்த சாதனை!!

12

இந்தியாவின் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 11 வயதான சந்தன் நாயக் என்ற சிறுவன் ஜேர்மனியில் உள்ள பேயர்ன் முனிச்சில் கால்பந்து அகடமியில் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக் இன்று ஜேர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

சுமார் இரண்டு மாதங்கள் நடக்கும் இந்த பயிற்சியில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 120 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். குறித்த பயிற்சியில் பங்கேற்கும் ஐந்து இந்திய ஜூனியர் கால்பந்தாட்ட வீரர்களில் சந்தன் நாயக்கும் ஒருவர்.

சந்தனின் தாயார் துகாட்டி நாயக் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து புவனேஸ்வரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சந்தன் நாயக்கை 6ம் வகுப்பு படிக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக சந்தன் நாயக் கூறுகையில், எனக்கு ரோல் மொடலாக இருப்பது ஆஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி.

பேயர்ன் முனிச்சில் விளையாட தேர்வானது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்திய அணியில் நானும் ஒரு வீரராக இடம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். உண்மையில் நான் என் பயிற்சியாளருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

11

ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த மாணவன் மர்மமான முறையில் மரணம்!!

Student

சென்னையில் ஆசிரியை ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகேயுள்ள ஒரு கல்லூரியில், அரவிந்த் குமார் என்ற மாணவன் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் கணனி ஆசிரியை கனிமொழிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

கணனி ஆசிரியையான கனிமொழிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மாணவரும் ஆசிரியையும் கடந்த 16ம் திகதி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து ஆசிரியை மற்றும் மாணவர் ஆகிய இரு வீட்டு தரப்பும், சேலையூர் பொலிசில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், 18ம் திகதி கனிமொழி மட்டும் வீடு திரும்பியுள்ளார். ஆனால் மாணவரை காணவில்லை.

இந்த சமயத்தில் கடந்த ஞாயிறன்று சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே மாணவர் அரவிந்த்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஆசிரியையின் கணவர், ஏற்கனவே அரவிந்த்தை மிரட்டியிருந்ததாக மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் அரவிந்தகுமாரை கொலை செய்திருக்கலாம் எனவும் மாணவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.