சென்னையில் ஆசிரியை ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் அருகேயுள்ள ஒரு கல்லூரியில், அரவிந்த் குமார் என்ற மாணவன் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் கணனி ஆசிரியை கனிமொழிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
கணனி ஆசிரியையான கனிமொழிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மாணவரும் ஆசிரியையும் கடந்த 16ம் திகதி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியை மற்றும் மாணவர் ஆகிய இரு வீட்டு தரப்பும், சேலையூர் பொலிசில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், 18ம் திகதி கனிமொழி மட்டும் வீடு திரும்பியுள்ளார். ஆனால் மாணவரை காணவில்லை.
இந்த சமயத்தில் கடந்த ஞாயிறன்று சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே மாணவர் அரவிந்த்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஆசிரியையின் கணவர், ஏற்கனவே அரவிந்த்தை மிரட்டியிருந்ததாக மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் அரவிந்தகுமாரை கொலை செய்திருக்கலாம் எனவும் மாணவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ரம்யா சமீபத்தில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட பொழுது பாகிஸ்தானியர்கள் நன்றாகவே எங்களுடன் பழகினர்.
பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரம்யாவின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மேலும், ரம்யா மீது தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மங்களூர் அருகே ரம்யா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர் முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ரம்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், முட்டை வீசப்பட்டதாக பொலிசார் தன்னிடம் தெரிவித்தனர். ஆனால் தனக்கு இது பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கட்சி தொண்டரை திடீரென சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு மவுனமாக இருந்த விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பரிசு கொடுத்த தொண்டர் ஒருவரை விஜயகாந்த் சரமாரியாக தாக்கியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் தொண்டர் ஒருவர் விஜயகாந்துக்கு நினைவு பரிசை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். அப்போது முறைத்து பார்த்த விஜயகாந்த் அவரை சரமாரியாக அடிக்க, அவர் அங்கிருந்து ஓடுகிறார்.
ஆனால் விஜயகாந்த் தொண்டரை ஏன் அடித்தார் என்று தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் விஜயகாந்த் இது போன்ற சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்.
ராம்குமாருக்கு சுவாதி யார் என்பதே தெரியாது. இந்த உண்மையை அவரது பேஸ்புக்கிற்கு உள்ளே கவனிக்கும் நம்மால் உணர முடியும் என தமிழச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
சுவாதி படுகொலை – காவல்துறையினரால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராம்குமார் பேஸ்புக் உள்ளே இருக்கும் தகவல்கள் என்ன? வாருங்கள் உண்மைகளை கண்டறிவோம்!
சென்னை பொலிஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சுவாதி படுகொலை வழக்கில் ‘ராம்குமார்தான் குற்றவாளி’ அறிவித்த போது அதற்கான காரணங்களையும் விளக்கினார்.
“பேஸ்புக்கில் முதன்முறையாக சுவாதியை ராம்குமார் பார்த்த போது அவர் மீது காதல் கொண்டார்” என்றும் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்த போது சுவாதி ஏற்றுக் கொண்டார் எனவும் கூறப்பட்டது. அதற்கு பிறகு 6 மாதங்களாக பேஸ்புக் மூலமாக இருவரும் தொடர்பில் இருந்ததாகவும் அவப்போது பேஸ்புக்கில் ‘சாட்’ செய்தார்கள் எனவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கு பிறகு சுவாதியை அடிக்கடி சந்திப்பதற்காக சுவாதி குடியிருந்த ஏரியாவிலேயே ராம்குமார் வாடகை அறை எடுத்து தங்கி அங்கிருந்த துணிக்கடை ஒன்றில் வேலை செய்து கொண்டு அடிக்கடி சுவாதியின் பின்னால் சுற்றியதாகவும் கூறப்பட்டது.
“சென்னைக்கு வந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் சுவாதியை சந்தித்து தன் காதலை ராம்குமார் வெளிப்படுத்திய போது, சுவாதி ‘தேவாங்கு’ என்று திட்டியதால் ஆத்திரமடைந்த ராம்குமார் ஜீன் 24 இல் சுவாதியை கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவானார்” என்பதுதான் போலிஸ் தரப்பு தகவல்.
ஆனால் ராம்குமார் ஜவுளி கடையில் வேலை செய்யவும் இல்லை. சுவாதியின் பின்னால் சுற்றவும் இல்லை என்பதோடு, ராம்குமாருக்கு சுவாதி யார் என்பதே தெரியாது என்கின்ற உண்மையை அவரது பேஸ்புக்கிற்கு உள்ளே கவனிக்கும் நம்மால் உணர முடியும். பேஸ்புக்கில் ராம்குமார் ப்ரெண்ட் லிஸ்ட்டில் சுவாதியின் பெயர் இல்லை. ஒருவேளை ராம்குமார் டெலிட் செய்திருக்கலாம் என்ற கேள்வி வருமானால் அதற்கும் இக்காணொளியில் விடைஇருக்கிறது.
உலகத் தமிழர்களே! உங்கள் மகன் மீது அபாண்டமான கொலை குற்றச்சாட்டை சுமத்தி அவன் உண்மைகளை பேசி விடக்கூடாது என்று அவனுடைய கழுத்தையும் காவல்துறை அறுத்து உங்கள் முன் நிறுத்தினால் உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? அதே மனநிலையில் தான் ராம்குமாரின் ஏழைப் பெற்றோர்கள் பரிதவிக்கிறார்கள். மறுபுறம் ராம்குமார் எந்த உண்மைகளையும் வெளியே சொல்லிவிடக் கூடாது என்று இன்றுவரை சிறைக்குள் அவனோடு இரு போலிசாரையும் தங்க வைத்து பெரும் அச்சுறுத்தலுக்குள் காவல்துறையினர் வைத்துள்ளனர்.
அதேப்போல் நம் மகளைப் போன்ற சுவாதியின் கொடூரக் கொலை நடந்தேறிய அன்று எத்தனை நெஞ்சங்கள் பதறினவோ அத்தனை நெஞ்சங்களும் சுவாதியின் கொலையில் உண்மையாக குற்றவாளியை தப்ப வைக்கும் தமிழக காவல்துறையினருக்கு எதிராக கண்டனக் குரல்களை வெளிப்படுத்த வேண்டும்.
இதுதான் நீங்கள் சுவாதிக்கும், ராம்குமாருக்கும் செய்யும் பேருதவியாக இருக்கும்.
“பேசினாலும் சாகத்தான் போகிறோம். பேசாவிட்டாலும் சாகத்தான் போகிறோம் எனில் பேசிவிட்டு செத்துப் போக சில இளைஞர்கள் துணிந்து நிற்கிறார்கள். அவர்களில் ஒருவரான தோழர் திலீபன் மகேந்திரன் இன்று போலிசரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக மிக முக்கிமான இந்த ஆதாரத்தை மக்கள் சக்தியிடம் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். ”
உலகத் தமிழர்களே! இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் புகழாரம் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.
இவரது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார, இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீரர் ஒருவரே டில்சான். களத்தில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய திறமையுடைய நல்ல ஒரு வீரரை இலங்கை கிரிக்கெட் இழந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் அற்புதமான சேவகனே டில்சான் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். டில்சான் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசாகும். டில்சானுடன் விளையாடியமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நகரமொன்றின் மேயராக நாய் ஒன்று மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மினசோட்டா மாநிலத்தின் கோர்மரன்ட் எனும் நகரில் கௌரவ மேயராக மேற்படி நாய் தெரிவுசெய்யப்பட்டது.
கோர்மரன்ட் நகரில் நடைபெறும் வருடாந்த விழாவொன்றில் இத் தெரிவு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு டொலர் கட்டணம் செலுத்தும் எவரும் இதற்கான தேர்தலில் வாக்களிக்க முடியும்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற தேர்தலில் டியூக் எனும் நாய் மீண்டும் வெற்றி பெற்றது. 9 வயதான இந்நாய் மூன்றாவது தடவையாக மேற்படி நகரின் கௌரவ மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக 2014 ஆம் ஆண்டு இந் நாய் வென்றது.
ஜெய், அஞ்சலி இருவரும் தற்போது பலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் Lightman ஒருவருக்கு காயம் ஏற்பட படப்பிடிப்பும் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அவர் கொஞ்சம் குணமான பிறகே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
படக்குழு இப்படத்திற்காக 45 லட்சத்தில் சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சென்னையை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர்.
பிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் இளைஞர் ஒருவர் பளியகியுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .
வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் உளைச்சலில் சிக்கித் தவித்த நிலையில் இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட இவரது உடல் மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
குறித்த இளைஞனின் தற்கொலை தொடர்பாக பொலிசார் விசாரணைளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்து பத்து நாட்களேயான நிலையில் இவரது தற்கொலை அவரது மனைவியை கடுமையாகப் பாதித்துள்ளது.
இருபத்தி ஏழு வயதுடைய இந்த இளைஞனின் தற்கொலை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் கிருஷ்ணர் ஜெயந்தியும் உறியடி உற்சவமும் நேற்று 25.09.2015 வியாழக்கிழமை இடம்பெற்றது .
மேற்படி உற்சவத்தில் காலையில் சங்காபிசேகம் இடம்பெற்று மலையில் வசந்த மண்டப பூஜையின் பின் ஸ்ரீ தேவி சமேத பூதேவி சமேத மகாவிஷ்ணு பகவான் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி வெளிவீதி வலம் வந்து வெளிவீதியில் நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மற்றும் அருளகம் சிறுவர் இல்ல மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடனங்கள் இடம்பெற்று தொடர்ந்து உறியடி உற்சவமும் இடம்பெற்றது .
கடந்த காலங்களில் உலக அழிவு தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என மாயா நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டு வந்தன.
அது தோல்வியடைந்த பின்னர் தற்போது மற்றுமொரு உலக அழிவு தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தற்போது நிபரு எனப்படும் கிரகம் சூரிய மண்டலத்தில் சுதந்திரமாகத் திரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த கிரகம் எதிர்வரும் மாதம் பூமியுடன் மோதும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் பல சந்தரப்பங்களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வான்பரப்பில் ஊதா நிரத்திலான சந்திரனுக்கு ஒத்த மர்மமான பொருள் தோன்றியது.
இந்த மர்மபொருள் சந்நிரன் மற்றும் சூரியன் தோன்றிய சந்தர்ப்பங்களில் உட்பட வானில் பாரிய காட்சியாக காணப்பட்டுள்ளன. இந்த பொருள் நிபரு எனப்படும் கிரகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தக் கிரகம் அடுத்து மாதங்களில் பூமியின் மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு – பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை பார்வையிட்டுச் செல்வதுடன், புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.
ஆனால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து பேலியகொட பொலிஸாரிடம் வினவியபோது,
“குறித்த சம்பவம் பற்றி எங்களுக்கு எதும் தெரியாது என்றும், எந்தத் தகவல்களும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.
மேலும், சடலம் பேலியகொட பாலத்திற்கு கீழே ஒருமணி நேரத்திற்கும் மேலாக மிதக்கின்றது. இதில் உயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கூறப்படுகின்றது.
அடையாளம் காணப்படாத இந்த சடலத்தை மீட்பதற்கும், மேற்படி எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. தலைநகரான கொழும்பில் இவ்வாறு கவனிப்பாரற்று சடலம் கிடப்பது அனைவரிடமும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரிகள் கூட இருக்கவில்லை. தகவல் தெரிந்தும் எந்த அதிகாரிகளும் விரைந்து செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
ஒடிசா மாநிலம் – கலஹன்டி பகுதியில் கணவர் ஒருவர், இறந்துபோன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து கொண்டு தனது மகளுடன் 10 கி.மீ நடந்து சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கலஹன்டி பகுதியைச் சேர்ந்த தனா மஜி என்பவர், தனது மனைவியான அமன்கடி டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஆனால் 60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதியை செய்து கொடுக்கவில்லை. ஏழையான தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு எடுக்கவும் வசதியிருக்கவில்லை.
இதையடுத்து, தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்துகொண்டு, தனது மகளுடன் ஊருக்கு நடந்து செல்ல ஆரம்பித்துள்ளார்.
சுமார் 10 கி.மீ கடந்த நிலையில் உள்ளூர் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீதம் உள்ள 50 கி.மீ தொலைவுக்கு இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசால், அரசு மருத்துவமனையில் இருந்து இலவசமாக பூத உடலை கொண்டு செல்ல ‘Mahaparayana’ என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பெண்களுடன் பேசி பழகி, அவர்களுடைய புகைப்படங்களை திருடிக்கொண்டு நீண்ட நாட்களாக அவர்களை துன்புறுத்தி வந்த இளைஞன் ஒருவனை சீ.ஐ.டி யினர் புத்தளத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும் ஒருவகையில் அவனுடைய உறவினர்கள் எனவும் அறியமுடிகின்றது.
இந்த இளைஞன் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளான். அவனது திட்டம் ஒன்றும் பலிக்காதமையால் வெறுப்படைந்து அவர்களது புகைப்படங்களையும் வேறு சில ஒலி வெட்டுக்களையும் முகநூலில் பகிரங்கப்படுத்தி உள்ளான்.
பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக கொழும்பில் உள்ள சைபர் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று புத்தளத்திற்கு வருகைத்தந்த சீ.ஐ.டி.யினர் குறித்த இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு அவனை கைது செய்துள்ளனர்.
இதன்போது, அவனது கணினியில் பல பெண்களின் புகைப்படங்கள் காணப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான இறுவெட்டுக்களையும் உளவுத் துறையினர் கைப்பற்றி உள்ளார்கள்.
இவர்கள் இலங்கையையின் முல்லைத்தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது அறியவருகிறது இறந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.
அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சென்ற கிழமையும் இலங்கைத்தமிழர் ஒருவர் கடலில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஆபத்தான கடல்கரைகளில் , மக்கள் குளிப்பதை உடனே தவிர்க்குமாறு பொலிசார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
கொழும்பு – குருநாகல் வீதியின் வரகாபொல துல்கிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மற்றுமொரு பயணிகள் பஸ் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காமடைந்தவர்கள் வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களில் இருவர் கேகாலை பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த தவறிய சாரதி நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த 35 ரூபா வரி, நேற்று (24) நள்ளிரவு முதல் 40 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.