டில்ஷான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்!!

Dilshn

சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் புகழாரம் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.

இவரது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார, இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீரர் ஒருவரே டில்சான். களத்தில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய திறமையுடைய நல்ல ஒரு வீரரை இலங்கை கிரிக்கெட் இழந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் அற்புதமான சேவகனே டில்சான் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். டில்சான் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசாகும். டில்சானுடன் விளையாடியமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நகரின் கௌரவ மேயராக மீண்டும் தெரிவான நாய்!!

D1

அமெ­ரிக்க நக­ர­மொன்றின் மேய­ராக நாய் ஒன்று மீண்டும் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. மின­சோட்டா மாநி­லத்தின் கோர்­மரன்ட் எனும் நகரில் கௌரவ மேய­ராக மேற்­படி நாய் தெரி­வு­செய்­யப்­பட்­டது.

கோர்­மரன்ட் நகரில் நடை­பெறும் வரு­டாந்த விழா­வொன்றில் இத்­ தெ­ரிவு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு டொலர் கட்­டணம் செலுத்தும் எவரும் இதற்­கான தேர்­தலில் வாக்­க­ளிக்க முடியும்.

கடந்த வார இறு­தியில் நடை­பெற்ற தேர்­தலில் டியூக் எனும் நாய் மீண்டும் வெற்றி பெற்­றது. 9 வயதான இந்நாய் மூன்­றா­வது தட­வை­யாக மேற்­படி நகரின் கௌரவ மேய­ராக தெரி­வு­செய்­யப்­பட்டுள்­ளமை குறிப்பிடத்­தக்­கது. முதல் தடவையாக 2014 ஆம் ஆண்டு இந் நாய் வென்றது.

D2

ஜெய், அஞ்சலி இடையே திடீர் பிரச்சனை!!

jei

ஜெய், அஞ்சலி இருவரும் தற்போது பலூன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் Lightman ஒருவருக்கு காயம் ஏற்பட படப்பிடிப்பும் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அவர் கொஞ்சம் குணமான பிறகே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

படக்குழு இப்படத்திற்காக 45 லட்சத்தில் சென்னையில் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். சென்னையை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் பிரித்தானியாவில் தற்கொலை!!

Dead

பிரித்தானியாவில் மலையில் இருந்து குதித்து தமிழ் இளைஞர் ஒருவர் பளியகியுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் உளைச்சலில் சிக்கித் தவித்த நிலையில் இந்த தற்கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட இவரது உடல் மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

குறித்த இளைஞனின் தற்கொலை தொடர்பாக பொலிசார் விசாரணைளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இவருக்கு அழகிய குழந்தை ஒன்று பிறந்து பத்து நாட்களேயான நிலையில் இவரது தற்கொலை அவரது மனைவியை கடுமையாகப் பாதித்துள்ளது.

இருபத்தி ஏழு வயதுடைய இந்த இளைஞனின் தற்கொலை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 2

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் கிருஷ்ண ஜெயந்தியும் உறியடி உற்சவமும்(படங்கள் )

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் கிருஷ்ணர் ஜெயந்தியும் உறியடி உற்சவமும்  நேற்று  25.09.2015 வியாழக்கிழமை  இடம்பெற்றது .

மேற்படி உற்சவத்தில்  காலையில் சங்காபிசேகம் இடம்பெற்று  மலையில்  வசந்த மண்டப  பூஜையின் பின் ஸ்ரீ தேவி சமேத பூதேவி சமேத  மகாவிஷ்ணு பகவான் அன்னபட்சி   வாகனத்தில் எழுந்தருளி உள்வீதி   வெளிவீதி வலம் வந்து வெளிவீதியில் நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரி மற்றும்  அருளகம் சிறுவர் இல்ல மாணவர்களின்    கலைநிகழ்வுகள் நடனங்கள் இடம்பெற்று தொடர்ந்து  உறியடி உற்சவமும் இடம்பெற்றது .

படங்கள்:கஜன்

IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF
IF

உலகம் அழியப் போகிறதா? பூமியுடன் மோதப் போகும் நிபரு கிரகம்!!

Nibiru-y-el-Apocalipsis-Final-659x450

கடந்த காலங்களில் உலக அழிவு தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகி இருந்தன. சில வருடங்களுக்கு முன்னர் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என மாயா நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டு வந்தன.

அது தோல்வியடைந்த பின்னர் தற்போது மற்றுமொரு உலக அழிவு தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

தற்போது நிபரு எனப்படும் கிரகம் சூரிய மண்டலத்தில் சுதந்திரமாகத் திரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அந்த கிரகம் எதிர்வரும் மாதம் பூமியுடன் மோதும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் பல சந்தரப்பங்களில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் வான்பரப்பில் ஊதா நிரத்திலான சந்திரனுக்கு ஒத்த மர்மமான பொருள் தோன்றியது.

இந்த மர்மபொருள் சந்நிரன் மற்றும் சூரியன் தோன்றிய சந்தர்ப்பங்களில் உட்பட வானில் பாரிய காட்சியாக காணப்பட்டுள்ளன. இந்த பொருள் நிபரு எனப்படும் கிரகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கிரகம் அடுத்து மாதங்களில் பூமியின் மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பில் கவனிப்பாரற்று மிதந்த சடலம் : கண்டுகொள்ள யாரும் இல்லை!!

 
கொழும்பு – பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை பார்வையிட்டுச் செல்வதுடன், புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.

ஆனால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து பேலியகொட பொலிஸாரிடம் வினவியபோது,

“குறித்த சம்பவம் பற்றி எங்களுக்கு எதும் தெரியாது என்றும், எந்தத் தகவல்களும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.

மேலும், சடலம் பேலியகொட பாலத்திற்கு கீழே ஒருமணி நேரத்திற்கும் மேலாக மிதக்கின்றது. இதில் உயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கூறப்படுகின்றது.

அடையாளம் காணப்படாத இந்த சடலத்தை மீட்பதற்கும், மேற்படி எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. தலைநகரான கொழும்பில் இவ்வாறு கவனிப்பாரற்று சடலம் கிடப்பது அனைவரிடமும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரிகள் கூட இருக்கவில்லை. தகவல் தெரிந்தும் எந்த அதிகாரிகளும் விரைந்து செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

11 12

மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 10 கி.மீ நடந்த கணவன் : ஏழ்மையின் கோரம்!!(காணொளி)

Dead Body1

ஒடிசா மாநிலம் – கலஹன்டி பகுதியில் கணவர் ஒருவர், இறந்துபோன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து கொண்டு தனது மகளுடன் 10 கி.மீ நடந்து சென்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கலஹன்டி பகுதியைச் சேர்ந்த தனா மஜி என்பவர், தனது மனைவியான அமன்கடி டி.பி.நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை, அமன்கடி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆனால் 60 கி.மீ தொலைவிலுள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் வாகன வசதியை செய்து கொடுக்கவில்லை. ஏழையான தனா மஜிக்கு, வேறு வாகனத்தை வாடகைக்கு எடுக்கவும் வசதியிருக்கவில்லை.

இதையடுத்து, தனது மனைவியின் சடலத்தை தோளில் சுமந்துகொண்டு, தனது மகளுடன் ஊருக்கு நடந்து செல்ல ஆரம்பித்துள்ளார்.

சுமார் 10 கி.மீ கடந்த நிலையில் உள்ளூர் ஊடகத்தை சேர்ந்தவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீதம் உள்ள 50 கி.மீ தொலைவுக்கு இலவச அமரர் ஊர்தி ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அரசால், அரசு மருத்துவமனையில் இருந்து இலவசமாக பூத உடலை கொண்டு செல்ல ‘Mahaparayana’ என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

Dead Body

பெண்களின் மானத்தோடு விளையாடிய இளைஞன் கைது!!

couples_shadows_visual_stage

பெண்களுடன் பேசி பழகி, அவர்களுடைய புகைப்படங்களை திருடிக்கொண்டு நீண்ட நாட்களாக அவர்களை துன்புறுத்தி வந்த இளைஞன் ஒருவனை சீ.ஐ.டி யினர் புத்தளத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும் ஒருவகையில் அவனுடைய உறவினர்கள் எனவும் அறியமுடிகின்றது.

இந்த இளைஞன் பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி வந்துள்ளான். அவனது திட்டம் ஒன்றும் பலிக்காதமையால் வெறுப்படைந்து அவர்களது புகைப்படங்களையும் வேறு சில ஒலி வெட்டுக்களையும் முகநூலில் பகிரங்கப்படுத்தி உள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக கொழும்பில் உள்ள சைபர் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று புத்தளத்திற்கு வருகைத்தந்த சீ.ஐ.டி.யினர் குறித்த இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு அவனை கைது செய்துள்ளனர்.

இதன்போது, அவனது கணினியில் பல பெண்களின் புகைப்படங்கள் காணப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான இறுவெட்டுக்களையும் உளவுத் துறையினர் கைப்பற்றி உள்ளார்கள்.

முல்லைத்தீவைச் சேர்ந்த 5 பேர் பிரித்தானியாவில் கடலில் சடலமாக மீட்பு!!

 
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்று (புதன்கிழமை), 5 சடலங்கள் கண்டடெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இலங்கையையின் முல்லைத்தீவை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது அறியவருகிறது இறந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மேலும் ஒருவரும் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று கடலில் மூழ்கி காணாமல் போன மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரத்தின் பின்னர், மேலுமிரு சடலங்கள் கரையொதுங்கியதாகக் கூறப்படுகின்றது.

அத்தோடு, மேலுமொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், ஹெலிக்கொப்டரின் உதவியுடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்பிராந்தியப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று வரையில், இங்கிலாந்து முழுவதும் கடலில் குளிக்கச் சென்ற 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்ற கிழமையும் இலங்கைத்தமிழர் ஒருவர் கடலில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற ஆபத்தான கடல்கரைகளில் , மக்கள் குளிப்பதை உடனே தவிர்க்குமாறு பொலிசார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

21 3 4

கொழும்பு – குருநாகல் வீதியின் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் படுகாயம்!!

Accident

கொழும்பு – குருநாகல் வீதியின் வரகாபொல துல்கிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மற்றுமொரு பயணிகள் பஸ் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காமடைந்தவர்கள் வரகாபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களில் இருவர் கேகாலை பிரதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த தவறிய சாரதி நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு : விலை அதிகரிக்குமா?

potatoes

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்பட்டிருந்த 35 ரூபா வரி, நேற்று (24) நள்ளிரவு முதல் 40 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கொட்டாஞ்சேனையில் சடலம் மீட்பு!!

Police

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள விடுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியின் முகாமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் எவ்வாறு இறந்தார் என இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமானின் மரணத்துக்கான காரணம் வௌியானது!!

Sulaiman

பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் முஹமட் ஷாகிப் சுலைமான் உயிரிழந்தமைக்கான காரணம் வௌியாகியுள்ளது.

இன்று அவரது சடலம் குறித்த பிரேதப் பரிசோதனைகள் கோகலை வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி ரமேஷ் அலகியவத்தவினால் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி மரணத்துக்குக் காரணம் தட்டையான ஆயுதத்தினால் தலையின் பின் பகுதியில் தாக்கப்பட்டமையால் உடலின் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளமையே என தெரியவந்துள்ளது.

மேலும், அவர் கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலம் வரையான காலப் பகுதியில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, இரவு 11.15 அளவில் மனைவிக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் அவரது மனைவி வீட்டைத் திறந்து வௌியே வந்த போது, சுலைமானது கைக்கடிகாரம் மற்றும் அவர் கொண்டு வந்த உணவுப் பொதியும் நிலத்தில் கிடந்ததாக, பம்பலபிடிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது வீட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த சிலரே கணவரைக் கடத்தியிருக்கலாம் எனவும் அவரைத் தேடித் தருமாறும், சுலைமானின் மனைவி அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரொருவரின் பழுதடைந்த நிலையிலான சடலம், மாவனெல்ல பகுதியில் இருந்து மீட்கப்பட்டதோடு, அது காணாமல் போன வர்த்தகருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு பின்னர் கொழும்பில் இருந்து பொலிஸ் குழுவும், வர்த்தகர் சுலைமானது தந்தை உள்ளிட்ட உறவினர்களும் அப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, சடலத்தில் இருந்த சில அடையாளங்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு அது தனது மகன் என அவது தந்தை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கைப்பற்றப்பட்ட சடலம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஓமந்தை பகுதியில் சற்றுமுன் ஆயுதங்கள் மீட்பு!!

 
வவுனியா ஓமந்தை பகுதியில் காணி ஒன்றிலிருந்து சற்றுமுன் எல்.ஏம்.ஜி ரக ஆயுதங்கள் 30 பொலிசாரால மீட்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

இன்று(25.08.2016) காலை தனது காணியினை துப்பரவு செய்து கொண்டிருக்கும்போது இவ் ஆயுதங்களை கண்டுள்ளதாகவும் உடனடியாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிசார் 30 எல்.எம்.ஜி ரக ஆயுதங்கள் மற்றும் எறிகணை ஒன்றையும் மீட்டுள்ளதாகவும், சமன்குமார தலைமையில் சென்ற குழுவினரே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இக்காணியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகத்தினையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை மீட்புப் பணிகளை ஆரம்பிக்கப்படடுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

1 DSC_0175 DSC_0176 DSC_0177 DSC_0178 DSC_0179Picture-2016-08-25 17.16.51Picture-2016-08-25 17.17.07Picture-2016-08-25 17.17.24

வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 213வது வெற்றி விழா!!

 
மாவீரன் பண்டாரவன்னியனின் முல்லை கோட்டையை தகர்த்து கைப்பற்றிய 213ஆவது வெற்றி விழா வவுனியாவில் இன்று காலை மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூவியில் இடம்பெற்றது.

மாவீரன் பண்ணடாரவன்னியனின் நினைவுரைகள் இடம்பெற்றதையடுத்து மலர்தூவி மலர் மாலை அணிவித்தனர்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவனியா மாவட்ட செயலாளர் கா.உதயராசா, நகர வரியிறுப்பாளர் சங்கத்தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலருமான சந்திரகுமார் (கண்ணன்) முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் எம்.சிற்றம்பலம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்,செந்தில்நாதன் மயூரன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் , சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

1 DSC_0060 DSC_0062 DSC_0069 DSC_0071 DSC_0073 DSC_0075 DSC_0076 DSC_0078 DSC_0080 DSC_0081 DSC_0086 DSC_0087 DSC_0088 DSC_0090