இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
உலகின் மிகப்பெரிய விமானம் இன்று சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானம் டெலிபோன் கம்பத்தில் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
302 அடி நீளம், 143 அடி அகலம், 85 அடி உயரத்துடன் கூடிய உலகின் மிகப்பெரிய இந்த விமானத்தின் சோதனை வெள்ளோட்டம் கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தரையில் இருந்து புறப்படுவதற்கு மட்டும் இந்த விமானத்தில் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது.
இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்ககளால் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைவராக செயற்படும் ஸ்டீவ் ஸ்மித் நாட்டுக்கு அழைக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய தலைவராக டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையுடனான ஒருநாள் தொடரில் மீதமுள்ள 3 போட்டிகள் மற்றும் 2 T20 போட்டிகள் ஆகியவற்றுக்கு அணியை வோர்னர் வழிநடத்துவார் என்று அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணியை ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தும் 23 வது தலைவராகவும், 10 வது T20 தலைவராகவும் டேவிட் வோர்னர் பெயர் பெறுகிறார்.
பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சந்தேகிக்கப்படும் ஐந்து வர்த்தகர்களின் வௌிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதித்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழும்பு குற்றப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்ற பிரிவினர் மற்றும் கேகாலை பொலிஸார் இணைந்து 8 குழுக்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகளை மாவனெல்ல நீதவான் எல்.கே.மஹிந்த மேற்கொண்டதாக, மேலதிக பொலிஸ் ஊடகப் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரிஷாந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக கேகாலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அங்கு விஷேட வைத்தியர் மூலம் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், பிரிஷாந்த ஜெயக்கொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இதுவரை இந்த விடயம் குறித்து இறந்ததாக கூறப்படுபவரின் நண்பர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிலரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை வர்த்தகர் காணாமல் போன பின்னர் இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரி தொலைபேசி அழைப்பு கேகாலை பகுதியில் இருந்து வந்ததாகவும், சடலம் கண்டெடுக்கப்பட்டது கேகாலையை அண்மித்த பகுதியில் இருந்தே எனவும், குறிப்பிட்ட பிரிஷாந்த ஜெயக்கொடி, இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கலாம் எனவும், அந்த அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுஇவ்வாறு இருக்க உயிரிழந்ததாக கூறப்படும் வர்த்தகரிடம் இருந்து கடன் பெற்ற மற்றும் குறித்த வர்த்தகர் கடன் வாங்கிய வர்த்தகர் குறித்து விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக, பொலிஸ் தரப்பின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது, இரவு 11.15 அளவில் மனைவிக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அவரது மனைவி வீட்டைத் திறந்து வௌியே வந்த போது, சுலைமானது கைக்கடிகாரம் மற்றும் அவர் கொண்டு வந்த உணவுப் பொதியும் நிலத்தில் கிடந்ததாக, பம்பலபிடிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது வீட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த சிலரே கணவரைக் கடத்தியிருக்கலாம் எனவும் அவரைத் தேடித் தருமாறும், சுலைமானின் மனைவி அன்றைய தினமே பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபரொருவரின் பழுதடைந்த நிலையிலான சடலம், மாவனெல்ல பகுதியில் இருந்து மீட்கப்பட்டதோடு, அது காணாமல் போன வர்த்தகருடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதோடு பின்னர் கொழும்பில் இருந்து பொலிஸ் குழுவும், வர்த்தகர் சுலைமானது தந்தை உள்ளிட்ட உறவினர்களும் அப் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, சடலத்தில் இருந்த சில அடையாளங்கள் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு அது தனது மகன் என அவது தந்தை குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கைப்பற்றப்பட்ட சடலம் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திலஹரத்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.
மேலும் 78 இருபதுக்கு இருபது போட்டிகளை சந்தித்துள்ள அவர், 1 சதம் 13 அரைச்சதங்கள் அடங்களாக 1884 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
39 வயதாகும் டில்ஷான் அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 28ம் திகதி தம்புள்ளையில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் 20க்கு இருபது போட்டிகளுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல்தாங்கிய பாதயாத்திரை இன்று(25.08.2016) வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தில் விஷேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமானது.
ஆலய நிர்வாகியும் அறநெறிச் செல்வியுமான கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரையில் பெருந்திரளான நல்லூர்க் கந்தன் அடியார்கள் கலந்துகொண்டனர்.
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வேல்தாங்கிய பாதயாத்திரைக்குழுவினர் மன்னார் வீதியூடாக வவுனியா நகரை அடைந்து பின்னர் A9 வீதியூடாக நல்லூர் கந்தன் ஆலயத்தினை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
வவுனியா பண்டாரிகுளத்தில் வீதியில் மின்சார கம்பி அறுந்த நிலையில், மின்சாரசபைக்கு மக்கள் பலதடவை தெரியப்படுத்தியபோதும், இரண்டு மணிநேரம் தாமதமாகவே மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா பண்டாரிகுளத்தில் மின்சார கம்பியொன்று வாகனத்தில் முட்டி அறுந்துள்ளது. அறுந்த மின்சாரக் கம்பி வீதியின் அருகே கிடந்த சமயத்தில் இதனை பார்வையுற்ற பொதுமகன் ஒருவரால் வவுனியா இலங்கை மின்சார சபைக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் தங்களுக்கு வடமாகாண இலங்கை மின்சாரசபை அறிவித்தால் தான் செல்வோம் என அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகண இலங்கை மின்சார சபை தொலைபேசிக்கு பலமுறை தொடர்புகொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை. ஒரு மணிநேரத்தின் பின்னர் பதிலளித்த மின்சாரசபை விரைந்து இதனை சீர்செய்வதாக தெரிவித்தனர்.
மாலை 4.30 மணியளவில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் 6.30 மணிக்கு பின்னரே சம்பவ இடத்திற்கு வருகைதந்த மின்சாரசபையினர் அறுந்த கம்பியினை சீர்செய்தனர்.
அறுந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கி யாராவது உயிரிழந்தால் யார் பொறுப்பு?
இவ் வீதி அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வீதியென்பதும், மாலை நேரங்களில் அதிகமாக மாணவர்கள் தனியார் வகுப்புகள் முடிந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.
இவ் விடயம் தொடர்பாக பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், எனது மகன் மாலை நேரத்தில் இவ் வீதியில் தான் விளையாடுவார். அறுந்த மின்சாரக் கம்பி தாக்கினால் யார் பொறுப்புக் கூறுவது?
மின் பட்டியல் செலுத்தாவிட்டால் உடனடியாக மின்சாரத்தினை துண்டிக்கும் வவுனியா மின்சாரசபை இவ்வாறான சம்பவங்களில் அலட்சியமாக இருக்கின்றது எனத் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் 23.08.2016செவ்வாய்கிழமை காலை ஒன்பது மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது.
30.08.32016 செவ்வாய்கிழமை இரவு மணியளவில் சப்பர திருவிழாவும்
31.08.2016 புதன்கிழமை காலை10.00 மணியளவில் தேர்த்திருவிழாவும்
01.09.2016 வியாழக்கிழமை காலை10.00 மணியளவில் தீர்த்த திருவிழாவும்
காலி வந்துரம்ப -பன்வில பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் அபூர்வ திறமையொன்றை தன்னகத்தே கொண்டுள்ளார்.
காலி – வந்துரம்ப மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் ரங்கமினி யசஸ்தி என்ற இவர் எவ்வித துணையும் இன்றி சுவரில் ஏறும் திறமையை கொண்டுள்ளார்.
7 வயதுடைய இந்த சிறுமிக்கு இரண்டு தங்கைகள் உள்ளதாகவும் சிறுவயது முதல் இந்த திறமை காணப்படுவதாக அவரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது கராதே விளையாட்டில் இணைந்துள்ள அவரின் உடல் மிகவும் நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்ட நரி எனப்படும் குணசேனவை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இருந்து நரி என்பவர் தப்பிச்சென்றதையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இது தொடர்பில் கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் விடுமுறைகளும் நரி கைதுசெய்யப்படும் வரையில் ரத்துச்செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நபரை கைதுசெய்வதற்கு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன் மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் உதயகாந்தன் தலைமையில் விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு நரி தேடப்பட்டுவந்தார்.
இந்நிலையில், நேற்று காலை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் நரி கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தையே மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகரில் உள்ள திருவெறும்பூர் அருகே வின் நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலாயுதம். இவரது மகள் வாசவி சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அஸ்வின் குமார் என்பவரை காதலித்துள்ளார்.
அஸ்வின் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வேலாயுதம் மகளை திருச்சி அழைத்து சென்று, போதை மாத்திரை கொடுத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.
இது குறித்து திருவெறும்பூர் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மதன் தலைமையிலான பொலிசார் வாசவி வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது வாசவியை வேலாயுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி அறையில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வாசவியிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடைத்து வைத்துள்ளதாகவும், நாள்தோறும் 12 மாத்திரைகள் வரை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனடியாக வாசவியை மீட்ட பொலிசார் அவரது விருப்பத்தின் பேரில் அவரை காதலர் அஸ்வினுடன் சேர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பாரியளவு சேதமடைந்துள்ள போதிலும், அதில் பயணித்தவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் மத்திய இத்தாலியில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
நில நடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 120 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் ரென்ஜி தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
அக்கும்மொலியின் மேயரின் தகவலின்படி, ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் தூங்க பயந்து கொண்டு வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர்.
நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமது கணவருக்காக பிணை கோரி நீதிமன்றம் சென்றிருந்த பெண் ஒருவரும் தனது மகனுக்காக பிணை கோரி நீதிமன்றம் சென்றிருந்த பெண் ஒருவரும் மோதிக் கொண்டுள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், நீதிமன்றத்தை அவமரியாதை செய்யும் வகையிலும் செயற்பட்டதாக இரண்டு பெண்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தொடக்க ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களத்தில் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி களமிறங்கி 4 ஓவர்கள் முடிவில் அணிக்கு 35 ஓட்டங்கள் பெற்று தந்தனர். இதனையடுத்து கவுசிக் காந்தி விக்கெட்டை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆர். சதிஷ் கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 164 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 165 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்திருந்த நிலையில், அடுத்ததாக துடுப்பெடுத்தாடிய சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணியின் ஓட்ட விகிதம் சரிய தொடங்கியது.
இதையடுத்து, 19 ஓவர்கள் முடிவில் 113/9 ஓட்டங்களை சூப்பர் கில்லீஸ் அணி எடுத்திருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
சரியான வழிகாட்டுதலும் கல்வியும் இருந்தால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ள பெண்ணும் உயர்ந்த நிலை அடையலாம் என நஜாத் என்ற பெண் நிரூபித்திருக்கிறார்.
நஜாத் பெல்கசம் இப்போது பிரான்ஸின் கல்வி அமைச்சராக இருக்கிறார். அவருடைய ஆரம்பகால வாழ்க்கையோ மொராக்கோவில் ஆடு மேய்க்கும் சிறுமியாக வேலை பார்த்ததுதான்.
இவருடைய வாழ்க்கை, கால்நடை மேய்க்கும் அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கும், அதுபோல, தாழ்வுநிலையில் உள்ளவருக்கும், உலகின் உயர்ந்த பதவி, பெருமைகளை அடைய முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
முதல் பெண் கல்வி அமைச்சர்
ஓகஸ்ட் 25, 2014 ல் பிரான்ஸின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுக்கு கல்விதுறை அமைச்சரானார். பிரான்ஸின் முதல் பெண் கல்வி அமைச்சர் என்பது பெண் சமுதாயத்துக்கும் பெருமையான விடயம்.
கால்நடை மேய்த்தார்
நஜாத் அக்டோபர் 4, 1977 ல் மொராக்கோவின் கிராமப் புறத்தில் பிறந்தார். அங்கு அவருடைய குடும்ப தொழிலில் உதவியாக ஆடுகளை மேய்க்கும் வேலையும் இளம் வயதில் செய்துள்ளார்.
அப்போது, அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவும் மாட்டார்.
ஆனாலும், புத்திசாதுர்யம், கல்வி கற்கும் ஆர்வம், சமூக நீதி பற்றிய அக்கறை, அவருக்கு இயல்பாகவே இளம் வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது.
பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தார்
பொருளாதார தேவைக்காக அவருடைய தந்தை பிரான்ஸில் உள்ள அமீன்ஸ் சூப்பர்ப்ஸ் நிறுவனத்தில், கட்டட தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்திருந்தார். பிறகு, தன் மகள் நஜாத் உட்பட குடும்பத்தினரை பிரான்ஸுக்கு 1982 ல் அழைத்துக்கொண்டார்.
அரசியல் படித்தார்
அதனால், நஜாத்துக்கு பிரான்ஸில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பாரிஸில் உள்ள அரசியல் படிப்பு பிரிவுகள் கல்வி நிறுவனத்தில் அரசியல் படித்து, 2002 ல் பட்டம் பெற்றார். கட்சிப் பணி
பட்டம் பெற்ற அதே ஆண்டில், பிரான்ஸின் சோசலிச கட்சியிலும் உறுப்பினராக சேர்ந்தார். அந்த கட்சியின் சார்பாக, உள்ளூர் வாசிகளிடம் ஜனநாயகத்தை வலியுறுத்துவது, அரசு காட்டும் பாரபட்சங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது. குடிமக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பது, வேலைவாய்ப்பு மற்றும் வீடு தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்க அணுகுவது, போன்ற சிறப்பான கட்சிப்பணிகளால் மக்களிடம் கட்சியை வலுப்படுத்தினார்.
காதல் திருமணம்
பட்டப்படிப்பின் போது ஏற்பட்ட பழக்கத்தின் விளைவாக, போரீஸ் வல்லாட் (Borries Vallaud) என்ற பிரான்சை சேர்ந்தவரை ஆகஸ்ட் 27, 2005 ல் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த கலப்பு மணம் உறவு நம்பிக்கையில் நாட்டுக்கு உரிமையாக அமைந்தது. அந்த வருடத்திலேயே சோசலிச கட்சியின் ஆலோசகராக பதவி உயர்ந்தார்.
தேடிவந்த பதவிகள்
2007, பிப்ரவரியில், செகோலின் ராயல் பிரச்சார குழுவில் பெண் பேச்சாளராக சேர்ந்தார். மே 16, 2012 ல் பிரான்ஸ் ஜனாதிபதியின் பிராங்கோயிஸ் ஹோலண்டே அமைச்சரவையில் பெண்ணுரிமை அமைச்சராகவும் அரசின் சபாநாயகராகவும் பதவி ஏற்றார்.
ஒளிதெறிக்கும் உயர்வு
ஆரம்ப காலத்தில் மேய்ப்பு சிறுமியாக இருந்தாலும் இன்றைய அவருடைய திறமைகள், அமைச்சர் பதவிக்கு நிச்சயமாக குறைந்ததில்லை, ஆனால், தாழ்வான ஆரம்ப வாழ்க்கையை எண்ணி அருவருக்கும் தடை மனோபாவம் இல்லாமல், சர்வதேச சமூகம் மாறியிருப்பது வரவேற்பானது.
இன்னும் சொல்லப்போனால், அடித்தட்டு மக்களின் மனநிலையும் தேவையும் நன்கு புரிந்துகொள்ள நஜாத் போன்றவர்களுக்கு பதவி முன்னுரிமையே அளிக்கலாம். அவர்களும் தாங்கள் சாதித்த திருப்தியோடு நில்லாமல், தன்னைப் போன்றவருக்கும் முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருந்தால் சகல கோணத்திலும் முற்போக்கானதே!.
படிப்பில் ஈடுபாடுகொள்ளாதவனை ’மாடு மேய்க்கப் போ’ என்பார்கள். ஆனால், மாடு மேய்ப்பவர்களும் படிப்பில் ஆர்வம் கொண்டால் உலகம் வியக்க உயரலாம் என்பது நஜாத் வாழ்க்கையில் நிஜமாகிருக்கிறது. நஜாத் ஒரு ஒளிதெறிக்கும் உயர்வு!
உலக நீரோடையில் தொழில்நுட்ப வளர்ச்சியை விட, சமூக பேதமற்று பார்க்கும் மனநிலை வளர்வதுதான் சரியான முன்னேற்றம்.