பிரித்தானியாவில் இளைஞர் ஒருவர் தனது கனவுக் காதலியை கண்டுபிடிக்க தன்னை தெரியுமா? என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டியதன் மூலம் காதலியை கண்டுபிடித்துள்ளார்.
பூம்டவுன் விழாவில் Nick Hopton என்ற இளைஞர் ஒருவர் தனது கனவு காதலியை கண்டுள்ளார். ஆனால் அவரிடம் தொலைபேசி எண்ணை வாங்க மறந்து விட்டதால் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார்.
இந்நிலையில், Nick Hopton முகநூலில் தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு வாரங்கள் கடந்தது. மிகுந்த வருத்தத்துடன் இருந்த Nick Hopton திடீரென்று என்னை தெரியுமா? என்ற வாசகம் பொருந்திய சுவரொட்டிகளை தெருக்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் ஒட்ட ஆரம்பித்தார்.
இதையடுத்து, அந்த பெண் அந்த சுவரொட்டிகளை பார்த்து விட்டு , குறிப்பிட்ட இளைஞருக்கு போன் செய்து பேசியுள்ளார். இருவரும் சந்திக்க ஏற்பாடுகள் செய்தனர்.
பின்பு, அந்த பெண்ணை சந்தித்து பேசிய Nick Hopton மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இவ்வளவு சீக்கிரம் நான் உங்களை சந்திப்பேன் என நினைக்கவில்லை. பல அழைப்புகள் வந்தன. ஆனால் இப்பொழுது தான் உண்மையான ஃப்ரேயா வை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அலுவலகங்களில் போகிமேன் கோ என்ற விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கிலும் பலர் தங்கள் கைப்பேசியை வைத்து விளையாடும் ஒரே விளையாட்டாக போகிமேன் கோ உள்ளது.
சாப்பிடாமலும், தூங்காமலும், இந்த விளையாட்டே கதி என்று சிலர் அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விளையாட்டால் ஆபத்து ஏற்படுகிறது என்று பிலிப்பைன்ஸ் நாட்டில் அரசு அலுவலகங்களில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அலுவலக நேரங்களில் போகிமேன் கோ விளையாடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது ஊழியர்களின் வேலையை பாதிக்கிறது என்று அந்நாட்டின் பொது உதவி மற்றும் கமிஷன் தகவல் அதிகாரி மரியா லுசா அகமதா கூறியுள்ளார்.
போகிமேன் கோ விளையாட்டில் இருந்து அரசு அலுவலகங்களின் இடங்களை நீக்குமாறு அந்நாட்டின் சிவில் சேவை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது
இதை தொடர்ந்து, போகிமேன் கோ விளையாட்டிற்கு வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளன.
சுவாதி படுகொலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பும் வகையில் ஓடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் தமிழச்சி. இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக சுவாதியின் அப்பா இதில் தீவிரமாக இருந்துள்ளார். ஏன்? எதற்காக? இதன் உள்நோக்கம் என்ன? என்பதை சுவாதியின் அப்பாவே விளக்க வேண்டும்.
மேலும் தமிழக காவல்துறையினர் ‘எக்ஸ்’ பெண் கூறிய உண்மையான தகவல்களை குறித்து ஏன் விசாரணை நடத்த முற்படவில்லை? இன்ஸ்பெண்டர் கருணாகரன் சுவாதியின் வழக்கை திசை மாற்றுவதில் ஏன் தீவிரமாக அதுவும் சட்டத்திற்கு புறம்பான முறையில் இயங்க முற்பட்டார்? இப்படி இன்னும் சில மர்மங்களை சுட்டிக்காட்டுகிறது இந்த வீடியோ!
ஒவ்வொரு முறையும் பெண்ணின் ஆதாரத்தை வெளியிடும் போதும் மிகுந்த பதற்றத்திற்கும் மனஉளைச்சலுக்கும் உள்ளாகிறார். தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு சுவாதியின் குடும்பத்தினரும் காவல்துறையினரும் நெருக்கடி ஏற்படுத்தி விடுவார்களோ என்று பெரும் அச்சத்துடன் இதையும் குறிப்பிட்டு எழுதும்படி கூறுகிறார்.
எனவே தமிழக அரசு காவல்துறையினரின் விசாரணை போக்கில் தலையிட்டு என்ன நடக்கிறது? என்று விசாரணை நடத்த முன்வரவேண்டும் என கூறியுள்ளார்.
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி வயல் பிரதேசத்தில் நேற்று இரவு வயலில் காவல் புரிந்து கொண்டிருந்த விவசாயி ஒருவரை யானை தாக்கியதில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் சம்மாந்துறை, 90ஏ, மலையடி வீதியைச் சேர்ந்த கலந்தர் பர்ஹான் (32) என்பவராவார். இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் இந்தியாவோடு சமாதான பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளது. எனவே வாய்ப்பு கிடைத்தால் நடந்தே பாகிஸ்தான் செல்ல ஆசைப்படுகிறேன் என பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நடிகை மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ரம்யா சமீபத்தில் கன்னட டிவிக்கு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்ட பொழுது பாகிஸ்தானியர்கள் நன்றாகவே எங்களுடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போல அந்நாடு இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரம்யாவின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத், ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்புகள் நேற்று பெங்களூரு, மைசூரு, மண்டியா பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மேலும், ரம்யா மீது தேசவிரோத வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரம்யா பெங்களூர் மிரர் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தேச துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. நான் ஒன்றும் தேசத்திற்கு எதிராகவோ அல்லது தனி நபருக்கு எதிராகவோ கருத்தை தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் இந்தியாவுடன் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் பல ஆயிரம் மைல்களை நான் நடந்தே கடந்து பாகிஸ்தான் செல்ல ஆசைபடுகிறேன். இரு நாடுகளும் அமைதியை விரும்பும் நிலையில் பாகிஸ்தான் செல்ல நான் ஏன் தயங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
ரோயல் டர்வ் கழகத்தின் (Royal Turf Club) ஏற்பாட்டில் நுவரெலியா குதிரைப்பந்தயத் திடலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குதிரையோட்ட விழாவில் பெஷன் ஷோவும் நடைபெற்றது.
இலங்கை மற்றும் வெளிநாட்டு மொடல்கள் இதில் பங்குபற்றினர். அமிலானி பெரேரா, ரொமேனா ஓஷினி ஆகியோரினால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை மொடல்கள் காட்சிப்படுத்துவதை படங்களில் காணலாம்.
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனே 10 ஆவது இடத்தில் உள்ளார். உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து போர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கெடுப்பு நடத்தியது.
இந்தப் பட்டியலில் அமெரிக்க நடிகை ஜெனிஃபர் லோரன்ஸ் 2 ஆவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
இவரது ஒட்டுமொத்த வருமானம் 46 மில்லியன் டொலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் மெலிசா மெக்கர்தி, 33 மில்லியன் டொலர்களுடன் உள்ளார்.
இந்தியாவில் தீபிகா படுகோனே (வயது 30) ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கெடுப்பில் 10 மில்லியன் டொலர்களுடன் 10 ஆவது இடத்தில் உள்ளார்.
வடக்கிற்கான உத்தேச விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் இரண்டை நிர்மாணிப்பதற்கும் அதற்கான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைக்கு அமைவாக, விசேட பொருளாதார நிலையமொன்றை அமைப்பதற்குப் பதிலாக இரண்டு விசேட பொருளாதார நிலையங்களை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியிலும் வவுனியா மாவட்டத்தின் மதகுவைத்த குளம் பகுதியிலும் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், விசேட பொருளாதார நிலைய நிர்மாணத்திற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பொறுப்பு, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வரும் பெண் ஒருவர், கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரலில் தன்னுடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்கார பெண்ணுடன் புனேயில் இருந்து பீட் மாவட்டம் பார்லியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அன்றைய தினம் இரவில் அவர்கள் புனேயில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டனர்.
அப்போது அவர்களது மேஜைக்கு அருகே தீபக் (வயது 22), அபய் போரே (23), விஜய் (25) மற்றும் சுனில் (24) ஆகியோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, இராணுவ பெண் அதிகாரி அணிந்திருந்த தங்க நகைகள் அவர்களது கண்ணை உறுத்தியது. எனவே, அவருடைய நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி பெண் அதிகாரி காரில் ஏறி கிளம்பியதும், மேற்படி 4 பேரும் மற்றொரு வாடகை காரில் அவர்களை வேகமாக பின்தொடர்ந்து சென்று, சாலையின் குறுக்கே காரை நிறுத்தி இராணுவ அதிகாரியின் காரை மறித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவரது கார் நின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அக்கும்பல், பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரையும் காரில் இருந்து தரதரவென வெளியே இழுத்தனர்.
மேலும், இராணுவ அதிகாரியும், அவரது வேலைக்கார பெண்ணும் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்தனர். தடுக்க வந்த அவரது கணவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.
பின்னர், தாங்கள் வந்த காரில், அந்த பெண் அதிகாரியை கடத்திச் சென்றனர். மேலும், ஓடும் காரில் வைத்து அவரை தீபக்கும், அபய் போரேவும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், அவரை நிர்வாண கோலத்தில் சாலையில் போட்டு விட்டு தப்பிவிட்டனர்.
மராட்டியம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அகமத்நகர் மற்றும் பீட் மாவட்ட பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, மறுநாளே இதற்கு காரணமான 4 பேரையும் கைது செய்தனர். இந்த கொடூர குற்றச்சம்பவத்தின் பின்னணி காரணமாக அவுரங்காபாத் மோக்கா நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்தது.
இரு தரப்பு வாதமும் நிறைவு பெற்றதையடுத்து நீதிபதி எஸ்.எஸ்.கோசவி சமீபத்தில் தீர்ப்பு அளித்தார். அதன்படி, இராணுவ பெண் அதிகாரியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவர்கள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், நகைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காக தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமலாபால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் வந்ததில் இருந்தே அவரை பற்றி நாளுக்கு நாள் ஒரு செய்தி வருகிறது. அதேபோல் இப்போதும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜெயிக்க போராடும் மா.கா.பா ஆனந்தின் புதிய படத்திற்கு நாயகியாக நடிக்க வைக்க அமலாபாலிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தினராம்.
ஆனால் அமலாபால் கதை கூட கேட்காமல் ஹீரோ யார் என்று கேட்டதுமே நோ சொல்லி விட்டதாக தெரிகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், நேற்று 2வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி இலங்கை அணி சார்பாக களமிறங்கிய ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக இரண்டே ஓட்டங்களுடன் வௌியேறி ஏமாற்றமளித்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானும் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பின்னர் வந்த குஷல் மென்டீஸ் நிதான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.
அவருக்கு ஈடுகொடுத்த தினேஷ் சந்திமாலும் அதிரடியாக ஆடி 48 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வௌியேறினார்.
எனினும் மென்டிஸ் பொறுமையாக ஆடி 69 ஓட்டங்களை விளாசி இலங்கைக்கு வலுவூட்டினார்.
அத்துடன் மெத்தியூஸ் 57 ஓட்டங்களையும் குஷல் பெரேரா 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை, 288 ஓட்டங்களை குவித்தது.
இதன்படி 289 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் மாத்திரம் நிலைத்து ஆடி 76 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
எனினும் ஏனைய வீரர்கள் எவராலும் அரைச்சதம் கூட பெற முடியாத நிலையில் 47.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி, 206 ஓட்டங்களை பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது.
இப் போட்டியின் ஆட்ட நாயகனாக மத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் பம்பலப்பிட்டி வர்த்தகரின் சடலம் மாவனெல்லை – ஹெம்மாத்தகம வீதியின் ருக்குல்கம பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. வர்த்தகரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கடத்தப்பட்ட வர்த்தகரின் உறவினர்களுடன் நேற்றிரவு அந்த இடத்திற்கு சென்றிருந்தனர்.
அங்கு மீட்கப்பட்ட சடலத்தை வர்த்தகருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று முற்பகல் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதன்பொருட்டு வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டி, கொத்தலாவல ஒழுங்கையின் 21 ஆம் இலக்க முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட 29 வயதான மொஹமட் ஷகீப் சுலைமான் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தோனேஷியா மற்றும் சீனாவிலிருந்து ஆடை இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆண்களுக்கான மரதன் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார் அவர். பதக்கம் வாங்கும்போதும் அதே சைகையைச் செய்தார்.
எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களின் போராட்டம் உலகின் கவனத்துக்கு வரவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ஃபெயிசா.
‘‘எங்கள் நாட்டில் மிக மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
ஒரோமோ பழங்குடி மக்களின் நிலங்களை அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டு, வேறு இடங்களுக்குச் செல்ல வற்புறுத்தி வருகிறது. தங்கள் நிலங்களை விட்டுச்செல்ல மாட்டோம் என்று பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த நடவடிக்கையில் இறங்கினேன். நான் எத்தியோப்பியா சென்றவுடன் கொல்லப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்.
மிக மோசமான நாடாக மாறிவிட்டது எங்கள் எத்தியோப்பியா. ஒருவேளை நான் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தாலும் சுதந்திரம் இல்லாத மக்களுக்காகப் போராடவே செய்வேன். ஒரோமோ மக்கள் எங்கள் பழங்குடியினர். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகவும் அமைதிக்காகவும் போராடுகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நிற்பதும் போராடுவதும் என் கடமை” என தெரிவித்துள்ளார் ஃபெயிசா லிலேசா.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 48 வயதான பெண் ஒருவர், கடந்த 18 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் தேனீர் மட்டும் குடித்து நலமாக வாழ்ந்து வரும் சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரியா மாவட்டத்தை சேர்ந்த பீலி பாய் என்ற பெண் சிறுவயதில் பாட்னாவிற்கு படிக்க சென்ற போது உணவு அருந்துவதையே தவிர்த்திருக்கிறார், அதிலிருந்து சாப்பிடுவதே இல்லை.
1995ம் ஆண்டு பீலி பாய்க்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பீலி பாய்க்கு எந்த குறையும் இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பீலி பாய் குடும்பத்தினர் கூறுகையில், அவர் 18 ஆண்டுகளாக எந்த உணவும் உட்கொள்ளாமல், தினமும் இரண்டு அல்லது மூன்று கோப்பை தேனீர் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளனர்.
பீலி பாய் 18 ஆண்டுகளாக தேனீர் குடித்து எடை குறையாமல் நலமாக உயிர் வாழ்ந்து வருவது வைத்தியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வைத்தியர்கள் கூறுகையில், வெறும் தேனீர் குடித்து உயிர்வாழ்வது சாத்தியமல்ல, சத்து குறைபாடு ஏற்படும் போது மருந்து உட்செலுத்தவதாக தெரிவித்துள்ளனர். இவரை மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் பிளாக் டீ பெண் என்றே அடையாளம் காண்கின்றனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே அணி கிரிக்கட் வீரரான ஸ்டுவட் மேக்கர், இலங்கை கிரிக்கட் அணியின் வீரரான குமார் சங்கக்காரவை கடவுளுக்கு சமமானவர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை ஆகஸ்ட் 18அம் திகதி ஸ்டுவட் மேக்கர் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இங்கிலாந்தில் இடம் பெற்ற ரோயல் லண்டன் ஒரு நாள் போட்டியில் சர்வே அணிக்கும் Northam ptonshire அணிக்கும் இடையில் போட்டி ஒன்று இடம் பெற்றுள்ளது.
கர்நாடகாவில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறியாமல் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கதக் மாவட்த்தை சேர்ந்த ஈரன்ன தல்வர், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் 3 வயது சிறுவன் தேவராஜ் ஆகியோர் முனிராபாத்தில் உள்ள ஹுளிகம்மா கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனிராபத் ரெயில் நிலையத்தில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் சிறுவன் எழுந்தும் அவர்கள் கண்விழிக்கவில்லை.
பெற்றோர்கள் தூங்குவதாக நினைத்து சிறுவன் அங்குள்ள பிளாட்பாரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் வெகு நேரம் ஆகியும் பெற்றோர்கள் கண் விழிக்காததை கண்டு சிறுவன் அழத்தொடங்கியுள்ளான்.
அங்கிருந்த பயணிகள் சிறுவனை கவனித்த போது தான், பெற்றோர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது, உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றியதுடன் சிறுவனை மீட்டுள்ளனர். மேலும் சிறுவனை அவரது உறவினர்களிடம் அல்லது காப்பகத்தில் ஒப்படைக்கப் போவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.