வவுனியா குடியிருப்பில் நகரசபைக்கு சொந்தமாக கட்டிடத்தொகுதியில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இராணுவ முகாம் இன்று மாலை 3 மணிக்கு உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதுடன் செய்தி சேகரிக்க அனுமதி மறுத்திருந்தனர்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசாவுடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரிய போதும் பிரதேச செயலாளரூடாகவும் ஊடகவியலாளருக்கு அனுமதி இல்லை என்ற பதிலே அனுப்பப்பட்டது.
குடியிருப்பு இராணுவ முகாமானது யுத்த காலங்களில் சோதனைச் சாவடியாக செயற்பட்டதுடன் இராணுவ முகாமைச்சூழ கோவில்கள், பாடசாலை, குடியிருப்பு, சிறுவர் பூங்கா மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை போன்றன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா பால்ட்டிமோரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய் உயிரிழந்தது.அமெரிக்காவின் பால்ட்டிமோரைச் சேர்ந்த எரிக்கா போர்ம்ஸ்கி என்பவர் அவரது குழந்தை மற்றும் வளர்க்கும் நாயை வீட்டில் விட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் எரிக்காவும் வீட்டுக்கு வந்தார். ஆனால் வீட்டுக்குள் யாரும் செல்லாத அளவுக்கு தீ எரிந்து கொண்டிருந்தது.
தீயணைப்பு படையினர் தீயை அனைத்து விட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, நாய் குழந்தையின் மேல் தீயில் கருகி இறந்த நிலையில் இருந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற, அதன் மேல் ஏறி படுத்துள்ளது. இதனால் குழந்தை லேசான தீ காயத்துடன் உயிருடன் இருந்தது.
நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்து, தயாரித்துள்ள படம் நம்பியார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில் படம் குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது, முதல் தயாரிப்பு படம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன்.
என்கிட்ட இருந்த எல்லாத்தையும் எடுத்து இந்தப் படத்தில் போட்டிருக்கேன், பல பிரச்சனைகள், இடையூறுகள், தடைகள் எல்லாவற்றையும் தாண்டி படத்தை கொண்டு வந்திருக்கிறேன்.படத்தை மக்களிடம் கொடுத்துவிட்டேன், என் குடும்பத்தையும் காப்பாற்றுங்க என உருக்கமாக பேசியுள்ளார்.
இந்த வருடம் வெளியான படத்தில் அதிக வசூலை குவித்த படங்களில் ஒன்று தெறி.இளையதளபதி நடிப்பில் அட்லி இயக்கிய இப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். இதில் அனைவரையும் கவர்ந்தவர் நைனிகா. மீனாவின் மகளான இவருக்கு தற்போது இப்படத்துக்குகாக Weawards என்ற விருது விழாவில் விருது வழங்கியுள்ளனர்.
விழாவில் பேசிய அட்லி, நைனிகாவை எனது குழந்தையாகவே நினைத்து தான் இப்படத்தில் நடிக்க வைத்தேன். அவளுக்கு இன்னும் பல விருதுகள் காத்திருக்கு என்றார்.இது தான் தெறி படத்துக்கான முதல் விருது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானை சேர்ந்தவர் Kengo Satake(48), இவரது மகன் Ryota (12). Kengo Satake அங்குள்ள பிரபல தனியார் பள்ளியில் தனது மகனை சேர்ப்பதற்காக சென்றுள்ளார்.
இப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால் நுழைவு தேர்வு வைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக அவர் சிறுவனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார்.ஆனால் அத்தேர்வில் சிறுவன் தேர்ச்சி அடையாததால், வீட்டிற்கு சென்ற அவரது தந்தை ஆத்திரத்தில், வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவனின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி, 17 வயதான யாஸிதி சிறுமி ஒருவர் தன்னையே எரித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாஸ்மின் என்ற சிறுமியே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜேர்மனியில் டாக்டர் Jan Ilhan Kizilhan நடத்தி வரும் மையத்தில் உளவியல் சிகிச்சை பெற்று வருகிறார் யாஸ்மின்.யாஸ்மின் வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை டாக்டர் Jan Ilhan Kizilhan தற்போது உலக மக்களுடன் பகிர்ந்துள்ளார்.
யாஸிதி என்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் யாஸ்மின். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஈராக்கின் வடக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படவர்களில் ஒருவர்.ஐ.எஸ் பிடியில் பாலியல் அடிமையாக தனது வாழ்க்கையின் மிக மோசமான நாட்களை கடந்த யாஸ்மின், அங்கிருந்து தப்பித்து ஈராக்கில் உள்ள அகதிகள் முகாமில் பாதுகாப்பாக இருந்துள்ளார்.
அப்போது, முகாமிற்கு வெளியே ஐ.எஸ் தீவிரவாதிகள் குரல் கேட்பதாக கருதி, எங்கே மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி தன்னையே எரித்து கொண்டுள்ளார்.இதில் அவரது உடல் முழுவதும் தீக்கிரையாகியுள்ளது. முகாமில் டாக்டர் Kizilhan சிகிச்சை அளித்த யாஸ்மின் உயிரை காப்பற்றியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட யாஸ்மினை ஜேர்மனியில் உள்ள அவரின் மையத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து வருகிறார். தனக்கு நடந்த கொடுமைகளை யாஸ்மின் டாக்டருடன் பகிர்ந்துள்ளார்.டாக்டர் Kizilhan மையத்தில் இதுபோன்று பாதிக்கப்பட்ட 1100 பெண்கள் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது நலமாக குடும்பத்துடன் ஜேர்மனியில் வசித்து வரும் யாஸ்மின் மீண்டும் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க விரும்புவதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை கவருவதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்க முற்பட்டபோது கட்டிடங்களுக்கிடையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் Pittsburgh பகுதியை சேர்ந்தவர் Birdsong(22). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என கூறப்படுகிற்து.
இந்நிலையில் Birdsong அப்பெண்ணை கவருவதற்காக ஒரு உணவகத்திற்கு அழைத்துள்ளார். அப்பெண் வந்த போது, அக்கட்டிடத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு குதிக்க முயன்றுள்ளார்.ஆனால் அது எதிர்பாராத விதமாக கட்டிங்களுக்கு மத்தியில் விழுந்து மாட்டிக்கொண்டார். இச்சம்வத்தை அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து Birdsong ஐ நீண்ட போராட்டத்திற்கு பின் காப்பாற்றினர்.இதில் அவருக்கு பெரிதாக காயம் ஒன்றும் இல்லை எனவும், கணுக்காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவை இந்தியாவே கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையில், மலையாள இயக்குநர் ஒருவர் சிந்துவை அவமதிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
Ozhivu Divasathe Kali என்ற படத்தினை இயக்கிய மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், எல்லோருமே சிந்துவின் சாதனையை கொண்டாடுகிறார்கள். நான் அந்த சாதனையில் காறி துப்பினால் என்னவாகும்? இதை பெரிதாக கொண்டாட என்ன இருக்கிறது?” என்று கூறியுள்ளார்.
இயக்குநரின் இந்த பதிவுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன. மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற, சாக்ஷி மாலிக் குறித்து பேஸ்புக்கில் அவமானகரமாக கருத்து கூறிய உத்தரபிரதேச நபர் மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் கொடுத்த கடனை நண்பன் திரும்பி கொடுக்காத காரணத்தால் அவனது தலையை துண்டித்து, பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் வசித்து வந்த சசிகுமார்(24) என்பவர், தனது நண்பன் மஞ்சுநாத்(23) என்பவருக்கு ரூ.25 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.
பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், மஞ்சுநாத் கடனை திருப்பி அளிக்கவில்லை. இன்று தருகிறேன், நாளை தருகிறேன் என கூறி நாட்களை கழித்து வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட சசிகுமார், எனது பணத்தை திருப்பி தராவிட்டால் நடப்பதே வேறு என மஞ்சுகுமாரை மிரட்டியுள்ளார். ஆனாலும் மஞ்சுகுமார் பணத்தை திருப்பி தந்தபாடில்லை.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மஞ்சுகுமாரை சந்திக்க சென்ற சசிகுமார், அங்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறவே, கோபம் கொண்ட சசிகுமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மஞ்சுகுமாரின் வயிற்றில் கீறியுள்ளார்.
இதில் நிலைகுலைந்தது கீழே விழுந்த மஞ்சுகுமாரின் தலையை துண்டித்த சசி, அதனை தனது பைக்கின் பின்புறத்தில் உள்ள பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு, நேராக அங்கிருந்த காவல்நிலையம் சென்றுள்ளார்.ரத்த சொட்ட சொட்ட துண்டித்து தலையுடன் வந்த அந்த வாலிபரை பார்த்த பொலிசார் அதிர்ச்சியில் திக்குமுக்காடி போயினர்.இதனைத்தொடர்ந்த அந்த வாலிபரிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வாங்கிகொண்ட பொலிசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
உணவுகளை பொதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தரம் குறைந்த பொலித்தீன் ஒரு தொகையினை நுகர்வோர் அதிகார சபையினர் கைப்பற்றியுள்ளனர்.ஹோக்கந்தர மற்றும் ரத்மலான பகுதிகளிலே இந்த பொலித்தீன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன்களே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதனை தயாரித்த ஹோக்கந்தர பிரதேசத்தின் நிறுவனம் ஒன்றில் இருந்து 510 பெக்கட்டுகளும்,ரத்மலான பிரதேச பொலித்தீன் உற்பத்தி நிறுவனத்திலிருந்து 410 பெக்கட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்கள் போலி வியாபார பெயருடனும்,போலி ஆவணங்களுடனும் பொலித்தீனை விற்பனை செய்துவந்துள்ளதாக இதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நிறுவனங்களின் பதிவு இலக்கங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, குறித்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் இருவரும் எதிர்வரும் 29ஆம் திகதி கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் 113 கர்ப்பிணித் தாய்மார்கள் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் 28 பேர் இதய நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கடந்த வருடத்திற்கான கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்பு தொடர்பான அறிக்கையினை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது.
ஆசிய வலயத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு மிகவும் குறைந்த நாடாக இலங்கை கடந்த வருடம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததுடன்,கடந்த வருடம் மாத்திரம் 3,34,821 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கையில் குழந்தைகள் பிறக்கும் இறக்கும் வீதமானது இலட்சத்துக்கு 33.7 வீதம் என்றும், குறித்த மரணங்கள் இலங்கையின் பின்தங்கிய பகுதிகளிலே நிகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நிமோனியா மற்றும் இரத்த சோகையினால் கர்ப்பிணித் தாய்மார்கள் இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும், கிராமங்கள் மற்றும் பெருந்தோட்டப் பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதோடு,35 வயதுக்கு குறைவான பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை.
பரிதாபமாக இறந்துபோன கதீஸ்வரன் என்னும் தமிழர் ஆத்மசாந்திக்கு பிரார்த்தனை செய்வோம்.
அவரது நண்பர் ஒருவர் என்ன நடந்தது என்று முக நூலில் எழுதி உள்ளார்.
எனது நண்பனின் கூக்குரல் கடந்த சனிக்கிழமை 20/08/2016 நாமும் நண்பர்கள் உறவினர்கள் சகிதம் Poole எனப்படும் பிரித்தானியாவின் கடற்கரைக்கு சென்றிருந்தோம். காலை 8.30 மணிக்கு எமது பயணம் சந்தோசமாகவே ஆரம்பித்தது கடற்கரையிலே BBQ உடன் நானும் நண்பர்களும் ஈடுபட்டவேளை நிஷா கூக்குரலிட்டார் தாழுறார் காப்பாற்றுங்கோ என்று எல்லோரும் கடலைநோக்கி ஓடினார்கள்.
நானும் ஓடினேன் எனக்கு நீச்சல் தெரியாது நீச்சல் தெரிந்திருந்தால் கூட அந்த அலைக்கு என்னால் தாக்குப்பிடித்திருக்க முடியாது. எனவே நான் life guard இருக்குமிடத்தை நோக்கி ஓடினேன் அதற்கு முன்னரே மேனனும் சுரேசும் life guard க்கு தகவல் தெரிவித்திருந்து அவர்கள் ஓடி வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் கரையிலே கொண்டுவந்தபோதுதான் தெரிந்தது அது எம்முடன் வந்திருந்த கதீஸ்வரன் ambulance வரும்வரை ife guards CPR, First Aid கொடுத்துக் கொண்டிருக்க நாம் கடவுளை வேண்டிக்கொண்டிருந்தோம்.
Air Ambulance ஐயும் வரவழைத்திருந்தார்கள் இருந்தும் எதுவுமே பயன்ற்றதாகிப்போனது ஆம் ஐந்து வயதுடைய மகள், 41 நாட்களேயான மகன் அவருடைய அன்பு மனைவி மற்றும் அனைவரையும் விட்டுவிட்டு கதீஸ்வரனின் உயிர் பிரிந்திருந்தது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையம் அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்துள்ள பகுதியில் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பேரூந்து நிலைய கடைத்தொகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இரவு வேளைகளில் இனம்தெரியாத நபர்கள் ஒன்று சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும், மதுபானப் போத்தல்களையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கும் மக்கள்,
இதனால் இரவு வேளைகளில் கடைத்தொகுதிக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாகவும், வேலை முடித்து வீடு செல்லும் பெண்களும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், நகரின் மத்திய பகுதியில் இடம்பெறும் இவாறான சமூக சீர்கேடுகளை உரியவர்கள் உடனடியாகத் தலையிட்டு நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
படிக்கட்டுகளில் சாராயப் போத்தல்கள், சிகரெட் துண்டுகளின் எச்சங்கள் காணப்படுவதுடன், சில இடங்களில் சிறுநீரும் கழிக்கப்பட்டிருப்பதால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதை அவதானிக்க முடிகின்றது.
கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
நமது இதிகாசம், புராணங்களில் ஒருவர் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எப்படி வாழ்ந்தால் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், கர்மா என்றால் என்ன? எதனால் அடுத்த பிறவி எடுக்கிறார்கள், மறுபிறவி என ஒன்று இருக்கிறதா? என பலவன கூறப்பட்டுள்ளன.
இவை எல்லாம் உண்மையா பொய்யா? கட்டுக்கதையா? வெறும் கதையா? என இன்றளவும் பல மேடைகளில் தலைப்பாக கொண்டு பேசப்படுகின்றன. 50:50 இதை உண்மை என்றும் பொய் என்றும் கூறி தான் வருகிறார்கள்.
மரணம் என்பது யாரும் விரும்பாத ஒன்று. ஆனால், பிறக்கும் போதே மரணம் என்பது நிச்சயம் என்பது எழுதப்படாத நியதி. ஆனால், அந்த மரணம் எப்போது வரும் யாராலும் கணிக்க முடியாது.
அப்படிப்பட்ட மரணம் நிகழ போகிறது என சிவ புராணத்தில் கூறப்பட்டிருக்கும் 11 அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்…
1. வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரிடும் என் சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
2. திடீரென உடல் வெள்ளை / மஞ்சளாக நிறம் மாற துவங்குகிறது. உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்படுகின்றன என்றால் அடுத்த ஆறு மாதத்தில் அந்த நபர் உயிரிழக்க நேரிடலாம்.
3. தொண்டை மற்றும் நாக்கு ஒருவருக்கு விடாமல் வறட்சி அடைந்துக் கொண்டே இருக்கிறது எனில், அந்த நபர் விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
4. ஒருவரது இடது கை அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது / நாவில் வறட்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவர்.
5. ஒருவரால் கருப்பு அல்லது சிவப்பு நிற வட்டத்தை நிலா மற்றும் சூரியனில் பார்க்க முடிகிறது என்றால் அவர் 15 நாட்களுக்குள் இறந்துவிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
6. ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை பார்க்க முடியவில்லை / மிக மந்தமாக தான் தெரிகிறது எனில், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
7. ஒருவர் திடீரென நீல ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று அர்த்தமாம்.
8. கருடன், காகம், கழுகு / புறா ஒருவரது தலையில் வந்து அமர்வது மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
9. ஒருவர் தனது நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10.எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது / நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் சமிக்ஞை.
11. எண்ணெய், தண்ணீர் போன்றவறில் ஒருவரது பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என சிவ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிப்பது இல்லை. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?
அப்பா அல்லது உறவினர்கள் அல்லது ஆண் உறவுகளின் மூலம் நேர்ந்த கடந்த கால கசப்பான அனுபவத்தின் காரணமாக சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காமல் போகலாம்.
சில பெண்களுக்கு சின்ன வயதில் இருந்தே பால் சோறுடன் சேர்த்து, காதல் என்பது தீமை, ஆண்களை நம்பக் கூடாது என்பனவற்றை ஊட்டி வளர்த்திருப்பார்கள். இதனால் ஆண்களை கண்டாலே சற்று தள்ளி நிற்கும் பழக்கத்தை ஏற்படுத்து கொள்கின்றனர்.
காதல் என்பது நடைமுறைக்கு ஆவாத வேலை என்று எண்ணும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது. ஆண்களையும் சுத்தமாக பிடிப்பதில்லை.
பெண்ணியவாதம் குறித்து நிறைய ஈடுபாடுகள், செயல்பாடுகளில் இருக்கும் பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமாய் ஈர்ப்பு வருவதில்லை.
ஆண்களை விரும்பினால் அவர்கள் கூறுவதை தான் கேட்க வேண்டும், இது ஆணாதிக்க உலகம். இதனால் தங்களது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற காரணத்தினாலும் கூட பெண்கள் சிலர் ஆண்கள் என்றாலே பாவற்காய் போல காண்பதுண்டு.
இயற்கையாகவே சில பெண்களுக்கு தனிமை தான் பிடிக்கும். தோழிகள் கூட ஓரிருவர் தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உண்டாவது அக்னி வெயிலில் அடைமழை பொழிவது போல மிகவும் ஆச்சரியம்.