தனது தாயாரின் சாம்பலுடன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற மகள்!!

linda-benham-and-her-daughter-rebecca-chelmick

கனடா நாட்டில் உயிரிழந்த தாயாரின் சாம்பலை எடுத்துக்கொண்டு மரத்தான் போட்டியில் பங்கேற்று மகள் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எட்மோண்டன் நகரில் ரிபேக்கா செல்மிக் என்ற பெண் தனது 65 வயதான தாயாருடன் வசித்து வந்துள்ளார். கல்லீரல் நோயால் தாய் அவதியுற்று வந்தாலும் கூட தனது மகள் ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என அவர் ஊக்கம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் உடல்நிலை மோசம் அடைந்ததும் தாயார் உயிரிழந்தார்.
தாயாரின் உடலை உறவினர்கள் தீயிட்டு எரித்ததும் ரிபேக்கா தாயாரின் சாம்பலை(அஸ்த்தி) எடுத்து பத்திரமாக வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை அன்று எட்மோண்ட் நகரில் மரத்தான் போட்டி தொடங்கியுள்ளது. 21 கி.மீ கடக்க வேண்டிய இந்த போட்டியில் ரிபேக்காவும் பங்கேற்றுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், தனது தாயாரின் சாம்பலை தன்னுடன் கொண்டு சென்ற ரிபேக்கா எல்லைக்கோட்டை அடையும் வரை அதனை தனது இதயத்திற்கு அருகிலேயே வைத்துக்கொண்டு ஓடி வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து தெரிவித்த ரிபேக்கா..

“நான் சாதிக்க வேண்டும் என எனது தாயார் மிகவும் விரும்பினார். ஆனால், அவர் இப்போது என்னுடன் இல்லை. நான் சாதிக்கும்போது என் தாய் ஏதாவது ஒரு வடிவத்தில் என்னுடன் இருக்க வேண்டும் என விரும்பினேன்.

மரத்தான் போட்டியில் ஓடியபோது என் தாயாருடன் பேசிக்கொண்டு சென்றதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. இப்போது போட்டியில் வெற்றி பெற்று விட்டேன். எனது தாயாரின் கனவும் நனவாகி விட்டது” என ரிபேக்கா உருக்கமாக பேசியுள்ளார்.

4 வயதில் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி!!

Girl

4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உத்தரபிரதேச மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர்-சாயா தேவி தம்பதியினரின் இளைய மகள் அனன்யா சர்மாவுக்கு 4 வயது 8 மாதம் முடிவடைந்துள்ளது.

இந்த வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல அனன்யா எல்.கே.ஜி படிக்கப் போகவில்லை. மாறாக இந்த சிறிய வயதிலேயே நேரடியாக 9 வது படிக்கும் வாய்ப்பு அந்தக் குழந்தைக்குக் கிடைத்துள்ளது.

இதன் மூலம் தனது சகோதரி சுஷ்மா வர்மா 7 வயதில் 10 வது வகுப்பு முடித்த சாதனையை அனன்யா முறியடித்திருக்கிறார். இது குறித்து மாவட்ட கல்வி ஆய்வாளர் உமேஷ் திரிபாதி ‘அனன்யா மிகவும் திறமையானவர். தற்போது இந்தி மொழியை அவள் திறமையாக பேசுகிறாள்.

மேலும் 9 வது வகுப்பு புத்தகங்களையும் அவள் எளிதாக வாசிக்கிறாள். இதனால் நேரடியாக 9 வது படிக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்கிறது’ என்றார்.

அனன்யாவின் தந்தை தேஜ் பகதூர், அனன்யா 1 வயது 9 மாதங்களிலேயே ராமாயணம் மற்றும் சுந்தர காண்டம் போன்ற புத்தகங்களை சரளமாக வாசிப்பாள் என்றார்.

படி என நாங்கள் ஒருபோதும் அவளை வற்புறுத்தியதில்லை. இந்த மாதிரி அதிசய குழந்தைகள் இருப்பதால் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பமாக உணர்கிறோம்’ எனவும் தெரிவித்தார்.

தேஜ் பகதூர் குடும்பத்திற்கு இந்த சாதனை ஒன்றும் புதிதல்ல. அனன்யாவின் சகோதரன் சைலேந்திரா தனது 14 வயதில் பிசிஏ முடிக்க, சகோதரி சுஷ்மா 15 வயதில் பிஹெச்டி படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

சுஷ்மாவின் 7 வயதில் 10 வது படிப்பை முடித்ததற்காக இளைய மாணவர் என்ற பட்டத்துடன் சுஷ்மா ‘லிம்கா’ புத்தகத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் நாடுகள் எவை தெரியுமா?

Edu

இலங்கையில் வழங்கப்படும் இலவச கல்வியை நாம் எல்லோரும் முறையாக பயன்படுத்துகிறோமா என்பது அனைவரது மத்தியிலும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கையில் இலவச கல்வி வழங்கப்படுவது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கும் பத்து நாடுகளின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 10 ஐரோப்பிய நாடுகள் இலவச கல்வியை வெளிநாட்டு மாணவர்களுக்காக வழங்கி வரும் அதேவேளை, அதற்கு அதகளவு நிதி ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஜேர்மன் வெளிநாட்டு மாணவர்களுக்காக இலவச கல்வியை வழங்கிவருவதுடன், வெளிநாட்டு மாணவர்களின் பல்கலைக்கழக கல்விக்காக 250 யுரோக்களை ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், நோர்வே பாடசாலை கல்வியையும், பல்கலைக்கழக கல்வியையும் இலவசமாக வழங்கிவருவதோடு, சுவீடன் மற்றும் ஒஸ்டரியா நாட்டில் வருடாந்தம் இலவசக் கல்விக்காக 730 ரியோ ஒதுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பின்லாந்தில் அடுத்த வருடம் முதல் இலவசக் கவ்விகாக நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும், செக் குடியரசில் கல்வியுடன், மொழிப்பட்டப்படிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரான்ஸ், பெல்ஜியம், கிரிஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20 ரூபாய் திருடியவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கிய கொழும்பு நீதிமன்றம்!!

Court

தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாயலில் உண்டியலில் இருந்து 20 ரூபாய் பணத்தை திருடியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பலபிடிய ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த மொஹமட் பாரூக் நிலாம் என்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கறுவாத்தோட்டப் பொலிஸாரினால் வழக்குக்குச் சாட்சியாக 10 ரூபா நாணயத்தாளும், குற்றியொன்றும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது.

மேலும் நான்கு பேர் சாட்சியாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறைத் தண்டனை 10 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பணக்கார நாடுகளில் அமெரிக்காவுக்கு முதலிடம் : இந்தியா 7வது இடத்தில்!!

Rich

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் கொண்ட பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதல் இடம்பிடித்துள்ள நிலையில், இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

உலகின் பணக்கார நாடுகள் தொடர்பில் ‘நியூ வேல்ட் வெல்த்’ என்ற அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் முடிவுகளின்படி உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் சொத்து மதிப்பு 48,900 பில்லியன் டொலராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் சீனா இருக்கின்றது. அதன் மொத்த தனிநபர் சொத்து மதிப்பு 17,400 பில்லியன் டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் 15,100 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ள ஜப்பான் இடம்பிடித்துள்ளது. 4வது இடத்தில் இடத்தை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இதன் மதிப்பு 9,200 பில்லியன் டொலர் ஆகும். தொடர்ந்து 5வது இடத்தில் ஜெர்மனியும், 6வது இடத்தில் பிரான்ஸ் இருக்கின்றது.

இந்தியா 5,600 பில்லியன் டொலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. கனடா 8வது இடத்திலும், அவுஸ்திரேலியா, இத்தாலி முறையே 9 மற்றும் 10வது இடங்களை பெற்றுள்ளது.

தனிநபர்களின் நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கிடப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாக கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் பீட்சா கிடைக்காததால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

Pizza

உரிய நேரத்தில் பீட்சா கிடைக்கவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றுக்காக பீட்சா ஓர்டர் செய்த நபர் ஒருவர், உரிய நேரத்தில் அவை விநியோகம் செய்யப்படவில்லை என அதிருப்தி அடைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல பீட்சா விற்பனை நிலையமொன்றுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கிழக்கு பலாங்குதுறை பகுதியைச் சேர்ந்த சன்ன முத்துவடுகெ அன்டன் பெர்னாண்டோ என்ற நபரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றுக்காக பீட்சா விநியோகம் செய்யுமாறு கோரி குறித்த நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 7.30 மணி வரையிலும் பீட்சா விநியோகம் செய்யப்படாமையினால் அதிருப்தி அடைந்த குறித்த நபர், நீர் கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி வர்த்தகர் கடத்தல் : 15 வர்த்தகர்களிடம் விசாரணை!!

Kidnap

பம்பலப்பிட்டியில் 29 வயதான இளம் வர்த்தகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

காணாமல் போன வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள், வழக்குகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகருடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட நபர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. வர்த்தகர் கடத்தப்பட்ட இடத்தில் காணப்படும் சீ.சீ.ரீ.வி கமராக்களின் காட்சிகள் நேற்றைய தினம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதியான தகவல்களையும் வெளியிட முடியாத நிலைமை காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நல்லூரில் செருப்புடன் நடமாடிய இருவருக்கு நேர்ந்த அவலம்!!

Nalloor

நல்லூர் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது. இந்நிலையில் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று இரவு செருப்புடன் இருவர் ஆலய சூழலில் நடமாடியுள்ளனர். இதன் போது சிவில் உடையில் இருந்த பொலிஸார் குறித்த இருவரையும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர்.

இதன் போது குறித்த வழக்கை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இளைஞர்கள் இருவரையும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு : பொது சுகாதார சங்கம் நடவடிக்கை!!

Food

பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்..

தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின்போது 137 வர்த்தகர்கள் அசுத்தமாக பொது மக்களுக்கு உணவு வகைகளை விற்பனை செய்தமை , தமது வியாபார நிறுவனத்தை சுத்தமாக வைத்திருக்காமை , பழைய உணவுகளை விற்பனை செய்தமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தவகையில் குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது டிஜிட்டல் வர்ண குறியீடு இல்லாத குளிர்பான போத்தல்கள் ஒரு தொகுதியும் கைப்பற்றப்பட்டுள்ளது. . எதிர்வரும் காலங்களில் உணவு பாதுகாப்பு தொடர்பில் கடுமையான சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி!!

Earthquake

இத்தாலியில் சற்றுமுன் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பூமியதிர்ச்சி ரோமினும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 6.1 ரிச்டர் அளவில் குறித்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேத விபரம் பற்றி இன்னும் தெரியவரவில்லை.

கடைசி பஸ்ஸை தவறவிட்டதால் அம்பியூலன்ஸை திருடிய பெண்!!

Theft

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்திய சாலையிலிருந்து வீடு திரும்புவதற்கு பஸ் கிடைக் காததால் அம்பியூலன்ஸை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

43 வயதான லிஸா கார் எனும் இப் பெண்ணுக்கு எதிராக, ஒஹையோ மாநிலத்தின் சின்சினாடிட் நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடுக் கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்குச் சென்றிருந்த இப் பெண், அங்கிருந்து வீடு திரும்ப முயன்றபோது அன்றைய கடைசி பஸ்ஸை தான் தவற விட்டிருப்பதை உணர்ந்தார்.  அதையடுத்து வைத்தியசாலை வளாகத்திலிருந்து அம்பியூலன்ஸ் ஒன்றைத் திருடி அதை தனது வீடு நோக்கி அவர் செலுத்திச் சென்றார்.

மேற்படி அம்பியூலன்ஸை நோயாளி ஒருவர் சகிதம் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தப் பட்டிருந்தபோது, அதன் சாரதி அப்பால் சென்றிருந்த வேளையில் அவ் வாகனத்தை லிஸா திருடிச் சென்றார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்பியூலன்ஸ் சிறிது தூரம் சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் லிஸா கார் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் தேடப்பட்ட 31 வயது இளைஞன் வயோதிபர் வேடத்தில் வாழ்ந்த நிலையில் கைது!!

Police search man

பொலி­ஸாரால் தேடப்­பட்டு வந்த அமெ­ரிக்க இளைஞர் ஒருவர், வயோ­திபர் போன்று வேட­ம­ணிந்து ஒளிந்து வாழ்ந்த நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

31 வய­தான ஷோன் மில்லர் எனும் இந்த இளைஞர் போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட குற்­றத்­துக்­காக அமெ­ரிக்க பொலி­ஸாரால் தேடப்­பட்டு வந்­தவர்.

கடந்த ஏப்ரல் 18 ஆம் திக­தி­யி­லி­ருந்து இவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார். அண்­மையில் மசாசூசெட்ஸ் மாந­லத்தின் கேப் கோட் நகரில் ஷோன் மில்­லரைப் போன்ற உருவம் கொண்ட வயோ­திபர் ஒருவர் நட­மா­டு­வதை பொலிஸார் உணர்ந்­தனர்.

கடந்த வியா­ழக்­கி­ழமை அவர் தங்­கி­யி­ருந்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்­தனர். இதன்­போது மாறு வேடத்தில் தப்பிச் செல்­வ­தற்கு ஷோன் மில்லர் முயன்றார்.

ஆனால், அவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். இரு துப்­பாக்­கிகள், 30,000 அமெ­ரிக்க டொலர் பணம் ஆகி­ய­வற்­றையும் அவ­ரி­ட­மி­ருந்து பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

வவுனியாவில் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் : சீர்கேடாக இயங்கிவந்த மூன்று உணவகங்களுக்கு சீல்!!

DSC02060

வவுனியாவில் கடந்த 25.07.2016 தொடக்கம் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இடம்பெற்று வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களிலுள்ள சுகாதார சீர்கேடுகளை இனங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதும் சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் தொவித்துள்ளனர்.

அந்தவகையில் கடந்தவாரம் வவனியாவில் பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள சீர்கேடான முறையில் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது மூன்றுபேருக்கும் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனைவிட வவுனியாவில் மேலும் ஜந்து உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரத்ததைப் பேணுமாறும் அதற்கு கால அவகாசத்தினை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அதற்குள் சீர் செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மொங்கோலிய பயிற்றுநர்கள் ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம்!!

2016 Rio Olympics - Wrestling - Final - Men's Freestyle 65 kg Bronze - Carioca Arena 2 - Rio de Janeiro, Brazil - 21/08/2016. Coaches of Mandakhnaran Ganzorig (MGL) of Mongolia protest against the result of the match with Ikhtiyor Navruzov (UZB) of Uzbekistan by taking off their clothes. REUTERS/Issei Kato FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS.

 

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியொன்றில் நடுவர்கள் அளித்த தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக வீரர் ஒருவரின் பயிற்றுநர்கள் தமது மேலாடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் கடந்த ஞாற்றுக் கிழமை இடம்பெற்றது.

மொங்கோலிய வீரர்களின் பயிற்றுநர்கள் இருவரே இவ்வாறு விநோத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளான ஞாயிறன்று நடைபெற்ற, 65 கிலோகிராம் எடைக்குட்பட்டவர்களுக்கான வெண்கலப் பதக்கத்துக்கான மல்யுத்தப் போட்டியொன்றில் உஸ்பெகிஸ்தானின் இக்தியோர் நவ்ருஸோவும் மற்றும் மொங்கோலிய வீரர் மன்தக்னரன் கன்ஸோரிக்கும் மோதினர்.

இப் போட்டியின் இறுதிக் கட்டத்தில், மொங்கோலியாவின் மன்தக்னரன் கன்ஸோரிக் முன்னிலையில் இருந்தார். அவர் உற்சாக நடனத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், நடுவர்கள் 7 – 7 என புள்ளிகளை மறு சீரமைத்தனர்.

அதன்பின் உஸ்பெகிஸ்தான் வீரருக்கு மற்றொரு புள்ளி அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிராக மொங்கோலிய வீரர் தெரிவித்த ஆட்சேபம் நிராகரிக் கப்பட்டது.

இப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் நவ்ருஸோவ் வெற்றி பெற்றார்.
இதனால், மொங்கோலிய வீரரின் பயிற்றுநர்கள் இருவரும் அரங்கிலேயே தமது மேலாடைகளை களைந்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது ஓர் எதிர்ப்பு நடவடிக்கை, நடுவர்களின் செயற்பாட்டில் பிரச்சினைகள் உள்ளன என மேற்படி பயிற்றுநர்களில் ஒருவரான பியாம்பரென்சின் பயாரா தெரிவித்தார்.

2 3 4

 

வவுனியாவில் காலாவதியான யோக்கட்களை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றம் 10 000 ரூபாய் அபராதம்!!

vavuniya_court

வவுனியாவில் காலாவதியான யோக்கட்களை வியாபார நிலையத்திற்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்றபோது வாகனத்தை சோதனையிட்ட வவுனியா பொது சுகாதார பரிசோகர்கள், காலாவதியான யோகட்டை விநியோகம் செய்ய முயன்றவரை வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தியபோது ரூபா பத்தாயிரம் அபராதம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்வம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியாவிலிருந்து கூலர் வாகனத்தில் யோகட் வியாபார நிலையங்களுக்கு விநியோகம் மேற்கொள்ள முயன்றபோது வவுனியா பிரதான வீதியில் குறித்த கூலர் வாகனத்தை இடைமறித்த வவுனியா பொது சுகாதார பரிசேதகர்கள் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது காலாவதியான 29 கப் யோகட்களை கூலருக்குள் வைத்து விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்து வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றல் நேற்று முற்படுத்தியபோது நீதவான் ரூபா பத்தாயிரம் தண்டமாக செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான யோகட்களை சேகரித்து பாதுகாப்பான பெட்டியில் காலாவதியான பொருட்கள் என்று எழுதி வைத்திருக்கவேண்டும் என்று ஏற்கனவே அறிவறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அதற்கு அமைவாக நடந்து கொள்ளாமல் 29 யோகட் கப்பினை வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்யும் நோக்கிலே வைத்திருந்தாக தெரிவித்து இவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான யோகட்டினை குறித்த நிறுவனம் திரும்பப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திகளை விழுங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த நபர் : வயிற்றுக் குள்ளிருந்து 40 கத்திகள் அகற்றப்பட்டன!!

*** CORRECTION: BYLINE UPDATED *** GURDASPUR, INDIA - AUGUST 19: Team of Surgeons, Physicians and Critical Care Physicians seen operating patient, Jarnail Singh on August 19, 2016 in Gurdaspur, Punjab. AN INDIAN man has received emergency treatment after swallowing 40 metal knives. 42-year-old Jarnail Singh was admitted to The Corporate Hospital in Gurdaspur, India, a few days ago with complaints of abdomen pain and weakness. A team of surgeons were astonished when they discovered he had swallowed not one, not two, but 40 knives over the last two months because he liked the way they tasted. After five hours of surgery, Jarnail was successfully treated and will be discharged in the upcoming days. PHOTOGRAPH BY Dinesh Dubey / Barcroft Images London-T:+44 207 033 1031 E:hello@barcroftmedia.com - New York-T:+1 212 796 2458 E:hello@barcroftusa.com - New Delhi-T:+91 11 4053 2429 E:hello@barcroftindia.com www.barcroftimages.com

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 40 கத்­தி­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

42 வய­தான ஜேர்னைல் சிங் எனும் இந் ­நபர், உலோ­கத்­தா­லான மேற்­படி 40 கத்­தி­க­ளையும் விழுங்கி­யி­ருந்தார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சில தினங்­க­ளுக்கு முன் இவ­ருக்கு கடு­மை­யான வயிற்­று­வலி ஏற்­பட்டதை­ய­டுத்து, பஞ்சாப் மாநிலத்தின் குர்­தாஸ்பூர் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

தான் கத்­தி­களை விழுங்­கு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­ததாக அவர் கூறினார். ஆனால், ஒன்றல்ல, இரண்­டல்ல 40 கத்­திகள் இவரின் வயிற்றில் இருப்­பதை அறிந்து மருத்­து­வர்கள் பெரும் வியப்­ப­டைந்­தனர்.

கத்­தி­களின் “சுவை” தனக்குப் பிடித்­தி­ருந்ததால் அவற்றை தான் விழுங்­கி­ய­தாக ஜேர்னைல் சிங் கூறினார் என மருத்­துவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

கடந்த வாரம் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மேற்­படி கத்­திகள் அகற்­றப்­பட்­டன. சுமார் 5 மணித்­தி­யா­லங்கள் இச் ­சத்­தி­ர­சி­கிச்சை நீடித்­தது.

“எனது மருத்­துவப் பணியில் இவ்­வா­றான ஒரு விட­யத்தை நான் ஒரு போதும் கண்­ட­தில்லை என இச் சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்ட மருத்­து­வர்­களில் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

தற்போது வைத்திய சாலையில் தங்கியுள்ள ஜேர்னைல் சிங், இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப் படுகிறது.

Knife1