டில்லியைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் 12 வயதில் கடத்தப்பட்டதுடன், 10 ஆண்டுகளாக கும்பலாக 400இற்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கடத்தியவர்களிடமிருந்து தப்பி வந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய், கடந்த 2006ஆம் ஆண்டு தனது 12 வயது மகள், தங்கை வீட்டுக்கு செல்லும் போது, கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கடத்தப்பட்ட பெண் 10 வருடங்களுக்கு பிறகு, 22 வயது பெண்ணாக பல்வேறு நபர்களால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு தனது வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார் என்றும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாவது,
சம்பவத்தன்று எனது சித்தி வீட்டிற்கு செல்லும் போது சிலர் என்னை மயக்கமருந்து தடவிய கைக்குட்டையால் என் முகத்தை அழுத்தியதால் மயக்கமடைந்தேன்.
அதன் பின் ஒரு விபசார கும்பலால் யாரோ சிலருக்கு விற்கப்பட்டேன். என்னை பலமுறை கும்பலாகச் சேர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவார்கள்.
அவர்கள் மேலும் பல விபசார தரகர்களால் என்னை பலருக்கு விற்பனை செய்தார்கள். சில காமுகர்கள் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சிகரெட்டால் சூடு வைத்தும் உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்துவார்கள். எனது உடல் தீ காயங் கள் மட்டுமில்லாமல் மனதும் காயமடைந்துள்ளது.
இவ்வாறு பல கொடுமைகளை அனுபவித்து எனது வாழ்க்கையை பதாளத்தில் தொலைத்துள்ளேன். மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களுக்கு விற்கப்பட்டு சித்திரவதை அனுபவித்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், கடத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 400இற்கும் மேற்பட்டோரால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின்படி தற்போது, 61 மற்றும் 70 வயதான இரண்டு முதியோர் உட்பட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரின் தோற்றம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேடமான விண்கலமொன்றினை உருவாக்கும் முயற்சியில் நசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விண்கலமானது 2016 செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதியளவில் பெண்ணு எனப்படும் கிரகம் நோக்கி பயணிக்கவுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த விண்கலம் தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதுடன், 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இந்த விண்கலமானது ரோபோ தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்ணு கிரகத்தில் 2 ஆண்டுகள் நிலவரைபிடல் மற்றும் நிலஅளவை தகவல்களை சேகரித்த பின்னர் அங்கிருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டு 2023 ஆம் ஆண்டளவில் இந்த விண்கலம் பூமியை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் பெண்ணு கிரகமானது எவ்வாறான கனிமங்கள் மற்றும் இரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு விஞ்ஞானிகள் ஆர்வம் செலுத்தியுள்ளதுடன் சுத்தமான நீருக்கு இணைவான இரசாயன மூலக்கூறுகள் காணப்படுகின்றதா என்பது குறித்தும் ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
கூகுள் உலக வரைபடத்தில் (Google Earth Map) நாம் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது. சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாய் இருப்பதுடன், அவை திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோ இருக்கும்.
அவ்வாறான சில இடங்கள் கூகுள் வரைபடத்தில் மறைக்கப்பட்டுள்ளமைக்கு பாதுகாப்புக் காரணங்கள் கூறப்பட்டாலும் தெளிவான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை.
மறைக்கப்பட்ட இடங்களாவன…
1. நேபால் பனிச் சேணம் (Nepal Snow Saddle): 22,000 அடி உயரத்தில் உறைந்த பனி மலையின் உச்சியில் இப்பகுதி உள்ளது.
2. உடைந்த அம்பு (The Broken Arrow): மற்ற இடங்களோடு ஒப்பிடும் போது இந்த இடம் சற்று மங்கலான முறையில் தெரிகிறது.
3. ஹார்ப் அரசு ஆய்வு மையம் (HAARP government research facility): அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ளது.
4. பேக்கர் ஏரி (Baker Lake): கனடாவில் உள்ள இந்த இடம் வேற்றுக்கிரக வாசிகளுக்கான கலங்கரை என்றும் சிலரால் நம்பப்படுகிறது.
5. ராம்ஸ்டெயின் விமானப் படைத்தளம் (Ramstein Airforce Base): ஜெர்மனியில் உள்ள விமானப் படைத்தளமான இதுவும் மறைக்கப்படுகிறது.
6. பசிபிக் வடமேற்கு, அமெரிக்கா: வேலிகள் இருப்பதைத் தவிர்த்து அந்த இடத்தைப் பற்றிய வேறு எந்த விபரமும் இல்லை.
7. ஸாஸ்ஹலோம்பட்டா (Szazhalombatta): இது ஹங்கேரி நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம்.
8. ஹஸ் டென் போஸ்க் மாளிகை (Huis Ten Bosch Palace): டச்சு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தில் இந்த மாளிகை மறைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
9. மோபில் எண்ணெய் கூட்டுத்தாபனம் (Mobil Oil Corporation): அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் இது உள்ளது.
10. ரீம்ஸ் (Reims): பிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் விமானப்படைத்தளமாகும்.
11. மாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca): அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த கார் பந்தயத்தளம்.
12. பாபிலோன் (Babylon): ஈராக் நாட்டில் உள்ள மிகவும் மங்கலாகக் காட்சியளிக்கும் பகுதி இது.
13. டான்டாகோ தேசிய பூங்கா (Tantauco National Park): சிலி நாட்டில் உள்ள இந்த தேசியப் பூங்காவானது ஏன் மறைக்கப்படுகிறது என்பதற்குத் தெளிவான காரணம் இல்லை.
14. பாதுகாப்பு சிறைச்சாலைகள் (Security Prisons): அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு சிறைகள் மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15. ஒரு ரஷ்ய நாட்டவரின் இல்லம்: கூகுள் வரைபடம், பாதுகாப்புக் காரணத்திற்காக நபர் ஒருவரின் வீட்டை மறைத்து வைத்துள்ளது.
16. நேட்டோ தலைமையகம் (NATO Headquarters): போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம்.
17. ஸீப்ருக் (Seabrook): அமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்பியரில் உள்ள அணு வசதி மையம்.
2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் விசேட சித்தி பெற்று, நாடளாவிய ரீதியில் முதல் 10 இடங்களைப்பெற்ற 12 மாணவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.
2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமை குறித்து ஜனாதிபதி இதன்போது பாராட்டியதுடன், மாணவர்களுக்கு மடிக்கணனிகளும் வழங்கப்பட்டன.
அத்துடன், மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் சவுந்தரராஜா.
இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். தர்மதுரை படத்தில் இவருடைய நடிப்பும் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சவுந்தரராஜா தனது அம்மா, அண்ணன் உள்பட தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றிருந்தார். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி வரும் வழியில் கோவில்பட்டி அருகே அவர்கள் பயணித்த கார் என்ஜினில் இருந்து திடீரென்று புகை வந்துள்ளது.
உடனே, காரை நிறுத்திவிட்டு என்னவென்று பார்ப்பதற்குள் கார் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. அப்போது, காரின் உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு இறங்கினார்கள். இதனால், சவுந்தரராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஆனால், அவர்கள் சென்ற ஸ்கார்பியோ கார் முழுவதும் எரிந்து நாசமானது.
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வவுனியாவிலிருந்து வேல்தாங்கிய பாதயாத்திரை வருடாவருடம் இடம்பெறும் நிகழ்வு இம்முறையும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு இம்முறை ஆறாவது தடவையாக எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பமாகவுள்ளது.
ஆலய நிர்வாகியும் அறநெறிச் செல்வியுமான கு.ஜெயராணி (சாமி அம்மா) தலைமையில் ஆரம்பமாக உள்ள பாதயாத்திரையில் பெருந்திரளான நல்லூர்க் கந்தன் அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் வேல்தாங்கிய பாதயாத்திரைக் குழுவினர் மன்னார் வீதியூடாக வவுனியா நகரை அடைந்து பின்னர் A9 வீதியூடாக நல்லூர் கந்தன் ஆலயத்தினை நோக்கி புறப்படும்.
பாதயாத்திரை பயணிக்கும் பாதையிலுள்ள இந்து ஆலயங்களில் நிர்வாக சபையினர் மற்றும் அடியார்கள் பாதையாத்திரையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவுள்ளனர்’ என்று அறநெறிச் செல்வி கு.ஜெயராணி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம் பெற்ற விபத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது,
இன்று காலை திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தண லக்ஸ்மி வயது (46) என தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிண் சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வான் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டி மழையால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால், பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் யார் முதல் இடம் பிடிப்பார்கள் என்ற போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தற்போது டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா அணி இலங்கை அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் அவுஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்ததால் முதல் இடத்தை இழக்கும் தருவாயில் இருந்தது.
இதனால், இந்திய அணி மேற்கிந்திய தொடரை 3-0 என்ற கணக்கில் கைபற்றினால் முதல் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால், இந்திய அணி 108 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடித்ததால் 111 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இலங்கையுடன் தொடரை முற்றிலும் இழந்த அவுஸ்திரேலியா அணி 108 புள்ளிகளுடன் தசம விகிதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சீனாவில் மனித மிருகம் ஒன்று நாயுடன் உடலுறவு கொள்வதை நேரலையாக இணையத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரை அடையாளம் கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் குழு, அவனை நிர்வாணமாக்கி நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், நாய்களை அடித்து துன்புறுத்தி உறவுக்கொண்டது மட்டுமில்லாமல் அதை நேரலையாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த கொடூர காட்சியை கண்ட நாய் ஆர்வலர்கள், குறித்த இளைஞன் செங்டுவில் உள்ள ஷில்லிங் குடியிருப்பை சேர்ந்தவன் என அடையாளம் கண்டுள்ளனர்.
இணையத்தில் அவனை பின்பற்றுபவர்கள் போல் பேசி நேரில் சந்திக்க வேண்டும் என கோரியுள்ளனர். அதன் பின்னர், நேரில் சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் குழு, அவனை நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.
கடும் காயங்களுடன் தெருவில் கிடந்த அந்த இளைஞனை மீட்ட பொலிசார், அவனை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் அவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் நாய்களை மீட்டு விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு 1,455 கோடி ரூபா மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது.
நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.
ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அரிய முத்துவின் மதிப்பு தெரியாமல் அதனை வீட்டிலேயே வைத்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவர் வசித்து வந்த மரத்தால் செய்யப்பட்ட வீடு திடீரென தீவிபத்திற்கு உள்ளானதும் அந்த முத்துவை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாக இந்த முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து விலையில்லா கற்கள் பற்றி ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
சுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.
இதன் இப்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட்(14,55,13,26,472 இலங்கை ரூபாய்) என தெரியவந்துள்ளது.
கடந்த 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ எடையுள்ள ‘அல்லா’ என்ற பெயருடைய முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்றுருந்தது.
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முத்து அந்த பெயரை முறியடித்து தற்போது நியூயோர்க் நகரில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை உலுக்கிய ஐடி ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை அடுத்த சிறுசேரியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சேலத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், சந்தேகத்தின் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த உத்தம் மண்டல், உஜ்ஜல் மண்டல், ராம் மண்டல் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் திகதி செங்கல்பட்டு நீதிமன்றம் குற்றவாளிகளை உறுதி செய்து மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்தனர் குற்றவாளிகள்.
மேல்முறையீடு மனு தொடர்பான விசாரணையில், குற்றவாளிகள் மீதான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரியின் குடும்பத்திற்கு 4 மாதத்திற்குள் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெருசலத்தில் ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த சந்தேகநபர், அங்கு வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதன்படி, சிறுமியின் வீட்டுக்கு சுத்தம் செய்யும் பணிகளுக்காக சென்ற வேளையே அவர் இந்த தீங்கை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, 46 வயதான குறித்த நபர் சுமார் மூன்று வருடங்கள் அந்த வீட்டில் பணிபுரிந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் தாய் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயிடம் சென்று சிறுமி இது குறித்து முறையிட்ட வேளை, சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவரைக் கைது செய்வதற்காக ஜெருசலம் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நடவு செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம்.
குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.
நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதற்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்ததே “அசையும் தூவல் நீர்ப்பாசனத்” தொகுதியாகும்.
நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றினை இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தினைச் (Seed & Planting Material Development Center (SPMDC) சேர்ந்த இராஜேஸ்வரன் சஞ்சீபன் சிறப்பாக வடிவமைத்துள்ளார். இந்த உபகரணத்தை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தைச் சேர்ந்த கே. உதயகுமார் உருவாக்கியுள்ளார்.
அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப் பாசனத் தொகுதி வடிவமைப்பு என்பது நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான தொழிநுட்பமாகும். மேலும் தேசிய ரீதியிலான பயிர் மாற்றீட்டுத் திட்டங்களில் இது ஓர் புரட்சியை ஏற்படுத்தும் எனலாம்.
இது ஓர் எண்ணக்கரு மட்டுமே. இந்த உபகரணத்தினை பயிர் செய்யும் அளவு, இடம் என்பவற்றுக்கு ஏற்ப குறுகியதாகவோ, பெரிதாகவோ மாற்றியமைத்தும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் வயல் நிலங்களில் நீர் பற்றாக்குறையாக உள்ள கால கட்டங்களில் குறைந்தளவு நீரினை அதிகபட்ச வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும்.
குறித்த தூவல் நீர்ப் பாசனத் தொகுதியானது விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னிலையில் கடந்த 22.06.2016 அன்று பரந்தன் அரச விதை உற்பத்திப் பண்ணையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
பரிசோதிக்கப்பட்டமை மட்டுமல்லாமல் குறித்த அசையும் தூவல் நீர்ப்பாசனம் மூலம் இதுவரை நீர் தட்டுப் பாடு காரணமாக பயிர்ச்செய்கை செய்யப்படாது இருந்த ஏழு ஏக்கர் வயல் நிலத்தில் வெற்றிகரமாக கச்சானும் (நிலக்கடலை), கௌப்பீயும் பயிரிடப்பட்டுள்ளது. அவை தற்போது செழிப்பாக வளர்ந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. குறித்த வெற்றிகரமான மாதிரி பயிர்ச் செய்கையை ஏராளமான விவசாயிகளும், விவசாயத்துறை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த அசையும் நீர்ப் பாசனத் தொகுதி மூலம் நுண் நீர்ப்பாசனம், பசளைப் பாசனம் (பசளை கரைக்கப்பட்ட நீரை விசிறல்), விவசாய இரசாயனங்களை (விவசாயப் பூச்சி கொல்லி) விசிறலாம்.
இதன் மூலம் நிலக்கடலை, உழுந்து, பயறு, கௌப்பீ, வெங்காயம், சோளம், மிளகாய், மரக்கறி வகைகளை பயிர் செய்ய முடியும்.
சாதாரண தூவல் நீர்ப்பாசனத் தொகுதி அமைப்பதற்கான ஆரம்பகால முதலீட்டினை விட இதற்கான முதலீடு மிகக் குறைவாக உள்ளது.
பக்க குழாய்களின் உயரத்தை பயிரின் உயரத்திற்கேற்ப மாற்றி குறைந்தளவு தொழிலாளர்களுடன் மிகக் குறைந்த நேரத்தில் முழுவயல்களுக்கும் சீரான முறையில் நீரை விசிறியடிக்க முடியும்.
குறித்த தொகுதியினை மனித வலுவினால் அல்லது இரு சில்லு, நான்கு சில்லு உழவு இயந்திரம் மூலம் இழுக்க முடியும்.
இப்படியான சிறப்பு செயற்திட்டங்களின் ஊடாக தண்ணீர் மேலாண்மையை நாம் சரிவர மேற்கொண்டு வந்தால் விவசாயத்திலும் நிச்சயம் சாதிக்க முடியும்.
இவ்வாறு நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை வினைதிறனுடன் வெற்றிகரமாக மேற்கொள்வதன் மூலம் இளைஞர்களையும் விவசாயத் துறைக்குள் ஈர்க்க முடியும்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஒருமுறை இஸ்ரேல் சென்றிருந்த சமயம் தலைநகர் டெல் அவிவில் அவர் தங்கியிருந்த விடுதி அருகே பெரிய குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அதில் சிலர் இறந்த தகவல் கலாமுக்கு உடனே கிடைத்தது. குண்டு வெடிப்புக்கு அடுத்த நாள் அந்த நாட்டின் பத்திரிகைகளில் குறித்த செய்தியைத் தேடினார். எங்களது நாட்டில் என்றால் அந்தச் செய்தி தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றிருக்கும். ஆனால், இஸ்ரேல் பத்திரிகைகளில் அந்த செய்தி ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலை’யில் (INVISIBLE CORNER OF NEWSPAPER) பிரசுரமாகி இருந்தது. அதேநேரம், விவசாயத்தில் சாதனை புரிந்த ஒரு விவசாயி தொடர்பிலான செய்தி தான் தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது.
இந்தச் சம்பவத்தை அப்துல் கலாமே பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கின்றார். ‘நமது ஊடகங்களும் இஸ்ரேல் பத்திரிகைகள் போல ஆக்கப்பூர்வமாக செயற்படுவது எப்போது?’ என்பது தான் இந்த நிமிடம் எம் முன்னுள்ள மில்லியன் டொலர் கேள்வி.
குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் பயிர்ச்செய்கையை வினைத்திறனுடன் மேற்கொள்ள அசையும் தூவல் நீர்ப்பாசனத் தொகுதியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
குறித்த நீர்ப்பாசனத் தொகுதி தொடர்பிலான மேலதிக விபரங்களையும், விளக்கங்களையும் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் கிளிநொச்சி விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
குறித்த செயற்திட்டத்தினை பரந்தன் அரச விதை உற்பத்திப் பண்ணை நிலையத்துக்குச் சென்று நேரில் பார்வையிடலாம்.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயல்பட்டு வந்த 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு முதல் 3.60 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், இதனடிப்படையிலே அவை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரியில் மட்டும் 1.25 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது. தற்போது மேலும், 2.35 லட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய கணக்குகளை தினந்தோறும் நீக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நீக்கப்பட்ட கணக்குகள் புதிய பெயர்களில் மீண்டும் தொடங்குகிறார்களா என்று கண்காணிக்கவும் கூடுதல் ஊழியர்களை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடத்துக்குள்ளாக விக்ரம், விஜய் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யுடன் திருமணம் செய்து கொண்டார்.நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியதால் சில குடும்ப பிரச்சனைகள் உருவாகி விவாகரத்து செய்துள்ளார்.
இதனால் ஒப்பந்த நிலையிலிருந்த பல படங்கள் கைநழுவி போனது. வடசென்னை மட்டுமே கையில் உள்ளதாம். இதனையடுத்து கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தின் கன்னட ரீமேக்கிலும், சுதிப்புடன் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளாராம்.
உலகம் முழுவதும் தமிழர்களும் பேசிய வசனம் கபாலிடா. 3 கோடி தடவைக்கு மேல் ரசிக்கப்பட்ட கபாலி டீசரில் வரும் அந்த வசனத்தை பலரும் தங்களுக்கேற்றபடி டப்மேஷ் செய்திருந்தனர்.அதில் பொண்டாட்டிடா என ஒரு பெண் பேசிய வீடியோ வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரஜினி அந்த பெண்ணை நேரில் சந்திக்க ஆசைப்பட்டு போன் செய்துள்ளார். போனை எடுத்த அந்த பெண்ணுக்கு சந்தோஷத்தில் துள்ளிக்குதித்துள்ளார்.
தனுஷ் வீட்டில் வைத்து அந்த பெண்ணை சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துள்ளார். கபாலிடா வசனத்தை எப்படி பொண்டாட்டிடா என பேசும் எண்ணம் வந்தது, நண்பர்கள் என்ன சொன்னார்கள் என கேட்க வெட்கப்பட்டு பதில் சொன்னாராம். அவருடன் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷும் இருந்தாராம்.