தமன்னா காட்டில் அடைமழை தான் என்று சொல்ல வேண்டும். வரிசையாக பல படங்களில் இவர் நடித்து வருகிறார், இதற்கு முக்கிய காரணம் பாகுபலி பிரமாண்ட வெற்றி தான்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘பாகுபலி படத்தில் அரை நிர்வாணமாக நடித்தீர்களா? என்று தான் பார்ப்பவர்கள் அனைவரும் கேட்கிறார்கள்.நான் அப்படி நடிக்கவில்லை, கேமராவில் அப்படி காட்டப்பட்டது’ என கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த செப்டம்பர் மாதம் வான் தாக்குதலைத் தொடங்கியது. அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்ப்டடது.
இந்த தாக்குதலை நடத்துவதற்காக இதுவரை சிரியா மற்றும் ரஷ்யாவில் உள்ள விமானப்படை தளங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. மேலும் ஈரானில் உள்ள விமானப்படை தளத்தை ரஷ்யா பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், சிரியாவில் தீவிரவாதிகள் மீதான வான்வெளி தாக்குதலுக்கு தங்கள் நாட்டு விமானப் படை தளத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவிடம் இருந்து உடனடியாக பதில் கிடைக்கவில்லை. ஷாகித் நோஜெக் விமானப் படை தளத்தை சிரியா மீதான தாக்குதலில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப கடந்த வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தி வந்தது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் பக்ராம் காசெமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிரியாவில் தீவிரவாதிகள் மீதான வான்வெளித் தாக்குதல்கள் தற்காலிகமானது, ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்றது.
தாக்குதலில் ரஷ்யாவின் நடவடிக்கை குறித்து ஈரான் பாதுகாப்பு துறை மந்திரி விமர்சனம் செய்த சில மணி நேரங்களில் இது நடைபெற்ற்துள்ளது” என்றார்.
இந்தோனேசியாவில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுக் கூட்டங்கள் இருக்கின்றன. இந்த தீவு கூட்டங்களுக்கு படகு போக்குவரத்துதான் முக்கிய காரணியாக இருக்கிறது. இன்று சுமத்திரா தீவியின் கிழக்கு மாகாணமான ரியாயுவின் துறைமுக நகரமான டான்ஜங் பினாங் பகுதியில் இருந்து 17 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு மோசமான வானிலைக் காரணமாக திடீரென கடலில் மூழ்கியது.
இந்த விபத்து அறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் விபத்துக்குள்ளான படகில் இருந்து தண்ணீரில் விழுந்த 17 பேரில் 12 பேரை மீட்டனர். இதில் 10 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். மாயமான ஐந்து பேரை கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் சுலாவேசி மாகாணத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டத்தில் காதல் ஜோடியினர் குடித்துவிட்டு பொலிசாரை அடித்ததோடு மட்டுமல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மக்கான் சிக்னலில் போக்குவரத்து எஸ்ஐ ராம்குமார் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கே வந்த காதல் ஜோடி பைக்கை நிறுத்தியுள்ளனர்.
பைக்கில் இருந்து இறங்கிய அர்ச்சனா, வாகன ஓட்டி ஒருவரின் கன்னத்தில் அடித்துள்ளார், இதனை தடுக்க வந்த பொலிஸ் ராம்குமார், அப்பெண்ணிடம் எதற்காக இவரை அடித்தாய் என கேட்டுள்ளார். இதற்கு அப்பெண் பொலிசாரின் கன்னத்திலும் பளார் விட்டுள்ளார்.அதன் பின்னர் காதல் ஜோடி விவேகானந்த், அர்ச்சனா ஆகிய இருவரும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
காவல் நிலையத்திற்கு இந்த ஜோடியை அழைத்து செல்லும்போது, என்னையா பிடிக்க பார்க்கிறாய்? என பெண் பொலிசை பார்த்து கேள்வி எழுப்பிய அர்ச்சனா அவரது முகத்திலும் பளார் விட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இவர்களிடம், விசாரணை நடத்தியதில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது, பெங்களூரில் இருந்த அர்ச்சனா, தனது காதலன் விவேகானந்தை பார்ப்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளார்.
இந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக, இருவரும் மது அருந்திவிட்டு, வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர், அப்போதுதான் இவர்கள் வாகனம் ஓட்டும் விதத்தை வாகன ஓட்டி ஒருவர் கண்டித்துள்ளார்.
இதன் காரணமாக அர்ச்சனா அவரை அடித்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக விவேகானந்தை கைது செய்ய பொலிசார் முயன்றபோது, அர்ச்சனா அவர்ளை தடுத்துள்ளார்.
மேலும், சினிமா பாணியில் உதட்டோடு உதடு வைத்த நிலையில் முத்தம் கொடுத்துக்கொண்டனர். இதனைப்பார்த்த பொலிசார் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
இதோடு விட்டுவிடாமல், காவல் நிலையத்தில் கூச்சலிட்ட அர்ச்சனா, பெண் பொலிசாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியுள்ளார், அரசு ஊழியரின் பணியில் குறுக்கிட்டது மற்றும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் நாச்சிக்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாத்திரை சென்ற பஸ் வண்டியொன்று, தனியார் பஸ் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நாச்சிக்குடா பொலிஸார் தெரிவித்துள்னர்.
இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பலியானவர் 66 வயதான வடலி அரிப்பு – இளவாலையைச் சேர்ந்த பெண் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உலகிலேயே செலவுகள் குறைந்த நகரங்களுள் கொழும்பு 303வது இடத்தைப்பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.உலக நாடுகளின் 372 நாடுகளுள் கொழும்பு 303 வது இடப்தைப் பிடித்துள்ளதாக கொஸ்ட் ஒப் லிவிங் அறிக்கை தெரிவித்துள்ளது.
குறித்த 2106 ஊடக அறிக்கையின் ஆய்வுக்கமைய கொழும்பானது 35.99 புள்ளிகளைப்பெற்றுள்ளதாகவும் இதன்படி பொருட்களின் விலை, குறைந்த விலையில் வீடுகள்உள்ளிட்டவை மூலம் கொழும்பு செலவு குறைந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்தியாவின் திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொச்சி, விசாகப்பட்டினம்,ஹதராபாத் போன்ற நகரங்களுடன் உக்ரேனின் லெவி நகரமும் செலவுகள் குறைந்த நகரமாகபெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை உலகில் அதிகம் செலவுகள் ஏற்படும் நகரமாக பெர்முடாவின் ஹெமில்டனும்,சுவிட்ஸலாந்தின் சூரிச், நோர்வேயின் ட்ரொம்சோ, ஜப்பானின் டோக்கியோ,அமெரிக்காவின் பல நகரங்கள் அதிகம் செலவுகள் ஏற்படும் நகரமாகஉள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டு அடி நீளமான ராஜநாகத்திடமிருந்து எஜமானின் உயிரைக் காப்பாற்றவதற்காக நாயொன்று தன் உயிரை மாய்த்துக் கொண்ட நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவமொன்று நேற்று யாழ்.கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் யாழில், நேற்று மாலை 5.00 மணியளவில் விளையாட்டரங்கு ஒழுங்கை ஜி.பி.எஸ் வீதி, கல்வியங்காடு எனும் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.மேற்படி வீட்டில் வசிக்கும் செல்வரட்ணம் பிரசாந்த் என்பவர் அல்சேசன் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
பிரஸ்தாப நாய் தினந்தோறும் அவருடனே அருகிலிருந்து சாப்பிடுவதும் உறங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது.இந்நிலையில் நேற்று குறித்த வீட்டின் பின் வளவுக்குள் ராஜநாகம் ஒன்று பிரவேசித்துள்ளது.நாகம் வந்திருப்பதனை அவதானித்த நாய், எஜமான் முன் குரைத்து அவரை விழிப்படையச் செய்துள்ளது.நாயின் அடையாளப்படுத்தலுடன் வீட்டின் பின்பகுதிக்குள் சென்ற போது அங்கு மூலையில் ஏதோ வொன்று மறைந்துள்ளதை அவதானித்த நபர் அது என்னவென கண்டறிய தடியை அங்கு நீட்டியுள்ளார்.இதன்போது வெகுண்டெழுந்த சுமார் எட்டு அடி நீளமான ராஜநாகம் அவரை கொத்த முயன்றுள்ளது.
உடனே விரைந்து செயற்பட்ட நாய் ராஜநாகத்தை தன்வாயால் இறுக கெளவியபடி அவ்விடத்தை விட்டு விரைவாக சென்று எஜமானின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.நாய்க்கும் ராஜநாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் நாகத்தின் விஷப்பல் தாக்கி காலில் காயமடைந்த நாய் உடனடியாக சிகிச்சைக்காக மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.00 மணியளவில் நாய் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
நாயுடனான மோதலில் பலவீனமடைந்த ராஜநாகமானது அயலவர்களின் உதவியுடன் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டு இரும்புக்கூட்டில் அடைக்கப்பட்டது.இதேவேளை எஜமானின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு மரியாதை செய்வதற்காக நாயின் இறுதிச் சடங்கானது இன்றைய தினம் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.மேலும் பிடிபட்ட ராஜநாகத்தையும் உயிரிழந்த அல்சேசன் நாயையும் அப்பகுதி மக்கள் பலர் சென்று பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைகழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட முதலாம் வருட தமிழ் மற்றும் முஸ்லீம் மாணவர்கள் மீது பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்கலைகழக நிகழ்வொன்றுக்காக குறிஞ்சிக்குமரன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் நேற்றிரவு 7.45 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 20 பேர் கொண்ட குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசம், தடிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த நான்கு மாணவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்களுக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்காத காரணத்தாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பினர் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கனிஷ்ட தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இதற்கு முன்னரும் இடம்பெற்ற போதிலும் அது குறித்த தகவல்கள் பெரிதாக வெளியில் வெளிவருவதில்லை என பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள் பெரும்பாலும் பதக்கத்தை கடிப்பதுப் போன்ற போஸ் கொடுப்பார்கள். எதற்காக எப்பொழுது பார்த்தாலும் மெடலை கடித்தபடியே போஸ் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வி பலருக்கும் வந்திருக்கக்கூடும்.
இந்த போஸானது எல்லா ஒலிம்பிக்கிலும் பொதுவான ஒன்றே…!
இது குறித்து பலதரப்பட்ட வித்தியாசமான காரணங்களைப் பார்ப்போம்,
*வித்தியாசமான போஸை வெளிப்படுத்தும் விதமாக இப்படி ஒரு போட்டோவை எடுக்கிறார்கள்.
* கோல்ட் மெடலை கடிக்கும் போதே, அது ஒர்ஜினல் கோல்டா அல்லது ட்யூப்ளிகெட்டா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* 2010-ல் ஜெர்மனைச் சேந்த ஒலிம்பியன் David Moeller உணர்ச்சிவசப்பட்டு மெடலை கடித்ததால் பல் உடைந்து போனது என்பது வரலாற்று பதிவு. இதற்கு David Moeller சொன்ன காரணம், ‘போட்டோகிராஃபர்கள் என்னை மெடலை கடிக்கும்படி சொல்லிக் கொண்டே இருந்தனர். அப்படி கடித்ததில் என்னுடைய முன்பக்கமிருந்த ஒரு பல்லில் பாதி உடைந்துவிட்டது’ என்றார்.
* ஒலிம்பிக்கின் ஒவ்வொரு கோல்ட் மெடலின் எடையும் 500 கிராம் ஆகும். அதில் 1.34 சதவீதம் மட்டுமே தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பது கலப்படம் இல்லாத வெள்ளி. இதுதான் ஒலிம்பிக்கில் கொடுக்கப்படும் கோல்டில் கலந்துள்ளது.
காதல் என்பது தனிமனித உரிமை. நீ என்னை கட்டாயம் காதலிக்க வேண்டும் என யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. மேலும், இது சட்டவிரோதமான செயலும் கூட. ஆனால், சிலர் பழகும் விதத்தை கண்டால் நமக்கே அவர் நம்மை காதலிக்கிறார் என்ற எண்ணம் தானாக மனதில் பிறந்துவிடும்.
ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு எல்லை இருக்கிறது. எல்லைகள் அற்ற உறவு என்பது காதலும், நட்பும் தான். ஒரு வயதுக்கு மேல், பெற்றோரே கூட பிள்ளைகளிடம் ஒரு அளவிற்கு மேல் நெருக்கம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், காதலும், நட்பும் தான் இந்த எல்லையில்லாத உறவுகள்.
மேலும் இங்கு தான் சித்துவிளையாட்டும் இருக்கிறது. மணக்க… மணக்க பழகிவிட்டு, காதல் என்று போய் நின்றால், ச்சேச்சே.. நான் அப்படி ஒரு எண்ணத்தில் பழகவில்லை என்று கூறினால் ஆண்களுக்கு கொஞ்சம் கடுப்பாகதான் செய்யும்.
இந்த வகையில், சில வசனங்கள் கேட்கும் போது, “எங்களை உசுப்பேத்தவே இப்படி பேசுகின்றார்களா…” எனத் தோன்றும். அந்த வகையான வசனங்கள் பற்றிஇனிப் பார்க்கலாம்..
நண்பன்
தோள்களில் சாய்ந்து குமுறி, குமுறி அழுது, போகும் இடமெல்லாம் நானும், வருவேன், போ, போ என வந்துவிட்டு, “ஐம் யுவர் குட் ஃப்ரென்ட் யு க்நோ” என கூறுவது.
நிச்சயம்
எனக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க, நான் உன்ன ஒரு லவ்வர் ஃபீல்’ல பார்க்கவும் இல்ல, அப்படி ஒரு எண்ணத்துல பழகவும் இல்ல என கூறுதல்.
கேசுவலாக
நான் உன்கிட்ட என்ன பத்தி பேசுனது, நம்மள பத்தி பேசுனது எல்லாமே கேசுவலா பேசுனது. அத நீ தப்பா நெனச்சுக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்.
அக்கறை
ஒரு அக்கறைல தான், நான் உன் வாழ்க்கை, உன் வேலை பத்தி அதிகமா அக்கறை எடுத்துக்கிட்டேன், மத்தபடி தப்பா வேற எதுவும் இல்ல.
சாரி
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்சி போல தான் பல பெண்கள் கடுப்படிக்க செய்கிறார்கள். “நாம ஏன் எப்பவுமே ஃப்ரெண்ட்ஸா இருக்க கூடாது.”
கனவு
எனக்குன்னு சில கனவுகள் இருக்கு. அத என்னால இழக்க முடியாது. அதுமட்டுமில்லாம என்னோட வுட்பீ பத்தி நிறைய கனவுகள் இருக்கு, ஆசைகள் இருக்கு. என்னால இப்ப வேற எதுலையும் கான்சென்றேட் பண்ண முடியாது.
இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே மூட்டு வலி, இடுப்பு வலி என்று வந்துவிடுகிறது. இதற்கு பெரும்பாலும் எத்தனால், சிலிகன் போன்ற சத்துக்கள் உடலில் குறைவாக இருப்பதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் தற்போது உள்ள இளைஞர்கள் மதுபானத்தை அதிகம் அருந்துகின்றனர். அதிலும் பியர் தான் அனைவராலும் அதிகம் அருந்தப்படுகிறது.
மேலும் மதுபானத்தை மருந்து போல் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஜொனாத்தன் போவெல் தலைமையில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பிரிவினர் எலும்பின் வலுவுக்கு பியரின் பங்களிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில் எலும்புகளுக்கு தேவையான எத்தனால், சிலிகன் போன்றவை பியரில் அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அருந்துவதால் பெண்களுக்கு வயதான காலத்தில் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் இருந்து விடுபடலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள், பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்டால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவதை கேட்டு இருப்போம். ஏனெனில் அவைகளில் எத்தனால் மற்றும் சிலிகான் இருப்பதே ஆகும் என்றும் கூறுகின்றனர்.
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு பாதிக்கப்படும். அதனால் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருப்பதே ஆகும்.
இந்த சமயங்களில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். அதிலும் பெண்கள் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் அளவு சிலிகான் உடலுக்கு மிகவும் அவசியமாகிறது. இது பீரில் அதிகமாக கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.
மேலும் உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகானை விட பலமடங்கு அதிகமாக பியரில் கிடைக்கிறது என்றும் சொல்கின்றனர். சொல்லப் போனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் கூமாங்குளம் மற்றும் தம்பனைச்சோலைபோன்ற கிராமங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குள் வாழும் குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து உள்ளிட்ட நால்வர் இந்தியாவின் உயரிய விளையாட்டுத் துறை விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜிது ராய் ஆகியோர் கேல் ரத்னா விருது பெறவுள்ளனர்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியரான தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜிது ராய், ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
தீபா கர்மாகரின் பயிற்சியாளர் விஸ்வேஷ்வர் நந்தி, விராட் கோலியின் தனிப் பயிற்சியாளரும், ஆலோசகருமான ராஜ்குமார் சர்மா உள்ளிட்ட 6 பேர் சிறந்த பயிற்சியாளருக்கு வழங்கப்படும் துரோணாசார்யா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேல் ரத்னா விருதுடன் பட்டயம் மற்றும் 7.5 இலட்சம் ரொக்கப் பரிசும், அர்ஜுனா, துரோணாச்சார்யா, தியான் சந்த் விருதுகளை பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் 5 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.
சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது.
ஜனாதிபதி பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
எஸ்.ஆர்.நாதன் அவர்களுக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கும் பர்வாசி பாரதிய சன்மான் விருது கடந்த 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட எஸ்.ஆர்.நாதன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்.
எனினும், மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் உள்ள அரச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி எஸ்.ஆர்.நாதன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் அவர்களின் இறுதி சடங்குகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரது உடல் பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலிக்காக வியாழக்கிழமை முதல் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் மறைவால், நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை அரச அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொகைமதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் அமர சத்தரசிங்க இதனை தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி 0.7 சதவீதத்தாலும், உணவில்லா பொருட்களின் செலவுப் பெறுமதி 0.1 வீதத்தாலும் குறைவடைந்தமை இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் மரக்கறி, தேங்காய், உடன்மீன், சீனி, கோதுமை மா, அரிசி, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடைந்தன.
இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பெறுமதியும் குறைவடைந்திருந்தது. எனினும், முட்டை, வாழைப்பழம், கோழி இறைச்சி உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள், தற்போதும் அதிகரித்து காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, உணவில்லா பொருட்கள் பிரிவில் சுகாதாரம், வீட்டு வசதி, மின்சாரம், எரிவாயு போன்றவற்றில் ஏற்பட்ட செலவுப் பெறுமதி ஜுன் மாதத்தை விடவும் ஜுலை மாதத்தில் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அகற்றப்பட்டமை இதற்கு ஒரு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது.
இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும்.
இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும்.
இந்த முகாம் இரவு 7.00 மணியிலிருந்து 10.00மணி வரையாக மூன்று மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ளது
பொதுமக்கள் இலவசமாக இந்த முகாமில் கலந்து கொண்டு வான்வெளியை கூர்மையாக அவதானிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.