நல்லூரில் விமானத்தில் விற்பனையாகும் ஐஸ்கிரீம்!!

Nalloor

நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது.

நல்லூரை நோக்கி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்துள்ள நிலையில், புதிய வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

புது வகையான உத்தியை கையாண்டு மக்களைக் கவரும் வகையில் விமான வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்று நல்லூர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களை கவர்ந்திழுக்கும் அந்த விமானத்திற்குள் ஜஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆலயத்திற்கு வரும் மக்கள் ஜஸ்கிரீம் விற்பனை நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ரியோ ஒலிம்பிக்கில் நான் இறந்திருக்கக் கூடும் : வீராங்கனை கண்ணீர் மல்க பேட்டி!!

OP Jaisha

ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை, இதனால் நான் இறந்திருக்கக் கூடும் என ஒலிம்பிக் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெய்ஷா இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெயில் அதிகமாக அடிக்கும்போது நீண்ட தொலைவை கடக்கும் போது அதிகமான தண்ணீர் தேவையானது.

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு வழியில் உணவு கூட வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு எதுவும் வழங்கப்படவில்லை.

போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை போன்றது என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

மேலும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள நான் விரும்பியது கிடையாது என்பதையும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பயிற்சியாளர் தன்னை நீண்ட தொலைவிலான மாரத்தான் போட்டியில் ஓட கட்டாயப்படுத்திவிட்டார் என்றும் ஜெய்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

திரிமன்னவை அணியிலிருந்து நீக்கியது சரிதான் : சனத் ஜெயசூரிய!!

Trimana

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணியில் முன்னணி துடுப்பாட்ட வீரரான திரிமன்ன இடம்பெறவில்லை.

ஆனால் இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் சபையால் வலுவான விளக்கத்தை தெரிவுக் குழு தலைவரான சனத் ஜெயசூரிய அளித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்வரிசை வீரரான திரிமன்ன சமீப காலமாக துடுபாட்டத்தில் சொதப்பி வருகிறார். இதனால் இலங்கை அணியில் அவரது இடம் கேள்வி குறியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த திரிமன்னவால் சொல்லிக் கொள்ளும் அளவு ஜொலிக்க முடியவில்லை. அவர் மொயீன் அலி பந்தில் தொடர்ந்து ஸ்டம்பை பறிகொடுத்தார்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திரிமன்ன இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக களமிறங்கிய தனன்ஜெய டி சில்வா 300 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

தற்போது ஒருநாள் தொடரிலும் திரிமன்ன கழற்றிவிடப்பட்டுள்ளார். ஒருநாள் அணியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டதற்கான வலுவான காரணத்தை தெரிவுக் குழு தலைவரான சனத் ஜெயசூரிய கிரிக்கெட் சபையிடம் தெரிவித்துள்ளார்.

500 ரூபாய் பணத்திற்காக சகோதரர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூர அண்ணன்!!

Fire

பாகிஸ்தானில் 500 ரூபாய் தர மறுத்த தனது இரண்டு இளைய சகோதரர்களை, அண்ணன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஃபைசலாபாத்தைச் சேர்ந்தவர் முஷ்டாக். இவர் தனது இளைய சகோதரர்களான முகமது உமர், அபுபக்கர் ஆகியோரிடம் 500 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் பணம் தர அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த முஷ்டாக், தனது சகோதரர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார். பின்னர், தன்னையும் தீக்கிரையாக்கியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் மூன்று சகோதரர்களையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்னர். அவர்கள் மூவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், இது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முஷ்டாக ஒரு குடிகாரர் என்றும், சகோதரர்களை தாக்கிய போது அவர் சுய நினைவில் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

8 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞனுக்கு பொலிசார் வலைவீச்சு!!

Boy

திருமணத்தின் பெயரில் 8 பேரை ஏமாற்றிய இளைஞனை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரையை சேர்ந்த சலாமியா பானு, (28) என்பவர் பொலிஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, மதுரையைச் சேர்ந்த காதர் பாட்சா என்பவர் கடந்த மே மாதம், என்னை திருமணம் செய்த நிலையில் என்னிடமிருந்த மூன்று லட்சம் ரூபாய், எட்டு சவரன் நகை, ஏ.டி.எம்., கார்டுகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்.

மேலும், எடுத்துச் சென்ற ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, 35 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே என் கணவருக்கு, சென்னையை சேர்ந்த நிர்மலாவுடன் திருமணமாகி, மூன்று குழந்தைகள், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜமுனா ராணியை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதுமட்டுமல்லாது, வத்தலகுண்டு மகாலட்சுமி என, எட்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, சிங்கப்பூரில் ஆசிரியை வேலை வாங்கி தருவதாகக் கூறி, மூன்று லட்சம் ரூபாயை காதர் பாட்சா மோசடி செய்துள்ளான் என திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் அளித்துள்ள புகாரை அடுத்து, பொலிசார் அவனை தேடி வருகின்றனர்.

போதிய சர்வதேச அனுபவமின்மையே திறமையை வெளிப்படுத்த முடியாமைக்கு காரணம் : சுமேத ஜகத் ரணசிங்க!!

OLYMPICS-RIO-ATHLETICS-M-JAVELIN

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் தன்னால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனமைக்கு போதிய சர்­வ­தேச அனு­ப­வ­மின்­மையே காரணம் என இலங்­கையின் ஈட்டி எறிதல் வீரர் சுமேத ஜகத் ரண­சிங்க தெரி­வித்தார்.

36 வீரர்கள் இரண்டு குழுக்­க­ளாக போட்­டி­யிட்ட ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் 71.93 மீறறர் தூரம் எறிந்த சுமேத ரண­சிங்க ஒட்­டு­மொத்த நிலையில் கடைசி இடத்தைப் பெற்றார்.

கடந்த வருட பிற்­ப­கு­தியில் நடை­பெற்ற தெற்­கா­சிய திறன்காண் போட்­டியில் 83.04 மீற்றர் தூரம் ஈட்­டியை எறிந்து தேசிய சாத­னையை நிலை­நாட்­டி­யி­ருந்தார்.

ஆனால் ஒலிம்­பிக்கில் அவ­ரது ஆற்றல் ஏறத்­தாழ 12 மீற்றர் குறைந்­தி­ருந்­தது.
ஆற்றல் குறைந்­த­தற்கு காரணம் என்­ன­வென ஒலிம்பிக் வீரர்கள் கிரா­மத்தில் சுமே­த­விடம் வினவிய­போது,

தெற்­கா­சிய போட்­டியில் கலந்து கொண்ட சில மாதங்­களில் ஒலிம்பிக் போட்­டியில் பங்­கு­பற்­றிய எனக்கு போதிய அனு­பவம் இல்லை. மேலும் இத்­த­கைய உய­ரிய போட்­டியில் பங்கு­பற்­றி­ய­போது என்னில் ஒரு பதற்றம் நில­வி­யது.

இதன் கார­ண­மாக என்னால் ஆற்­றலை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனது. ஆனால் இவ் விளையாட்டில் ஈடு­படத் தொடங்கி குறு­கிய காலத்தில் ஒலிம்பிக் தேர்ச்சி மட்­டத்தை அடைந்­த­தை­யிட்டு திருப்தி அடை­கின்றேன்’’ என்றார்.

எதிர்­காலத் திட்டம் என்­ன­வென அவ­ரிடம் கேட்­ட­தற்கு, ‘‘எதிர்­கா­லத்தில் பட்டப் படிப்பில் அதிக கவனம் செலுத்­த­வுள்ளேன். இத­னி­டையே ஈட்டி எறி­த­லுக்­கான பயிற்­சியில் ஈடு­ப­டுவேன். ஆசிய விளை­யாட்டு விழா, பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா ஆகிய போட்­டி­களை இலக்­காகக் கொண்டு பயிற்­சி­களில் ஈடு­ப­ட­வுள்ளேன்’’ என பதி­ல­ளித்தார்.

இதே­வேளை, சுமேத போன்ற வீரர்­க­ளுக்கு பிர­தான சர்­வ­தேச மெய்வல்­லுநர் போட்­டி­களில் பங்குபற்ற வாய்ப்பு வழங்குவது மிக அவசியம் எனவும் அதன் மூலமே ஆற்றல் அதிகரிக்கும் எனவும் பயிற்றுநர் பிரதீப் நிஷான்த தெரிவித்தார்.

காட்டூன் கதாபாத்திரத்தை மகிழ்விப்பதற்காக 12 வயதான வகுப்புத் தோழியை கத்தியால் குத்திய சிறுமிகள்!!

2

இணை­யத்­தள கதை­களில் வரும் திகில் பாத்­தி­ர­மான ஸ்லெண்டர் மேனை (Slender Man) மகிழ்விப்ப­தற்­காக, தனது வகுப்­பி­லுள்ள 12 வயது சிறு­மியை கத்­தியால் குத்­திய இரு சிறு­மிகள் தொடர்­பான வழக்கு அமெ­ரிக்­காவில் நடை­பெ­று­கி­றது.

விஸ்­கொன்ஸின் மாநி­லத்தைச் சேர்ந்த மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகிய இரு சிறு­மி­களே தனது வகுப்­பி­லி­ருந்த மற்­றொரு மாண­வியைக் கத்­தியால் குத்­தி­ய­­தாக குற்றம் சுமத்தப்­பட்­டுள்­ளனர்.

பாதிக்­கப்­பட்ட மாண­வியை இவர்கள் இரு­வரும் 19 தட­வைகள் கத்­தியால் குத்­தி­ய­தாக தெரிவிக்கப்ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மாணவி படு­கா­யங்­க­ளுடன் உயிர் தப்­பினார். 2014 மே மாதம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றது.

குறித்த மாண­வியை அவளின் பிறந்த தினத்தை கொண்­டா­டு­வ­தற்­காக தம்­முடன் வரு­மாறு அழைத்த பின் இக்­குற்றச் செயல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாதிக்­கப்­பட்ட மாணவி, விஸ்­கொன்ஸின் மாநி­லத்தின் வவ்­கேஷா நகரில் பற்­றை­க­ளுக்கு இடையி­லி­ருந்து சைக்­கி­ளோட்டி ஒரு­வரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்தார். அவரின் உடலின் பல்வேறு இடங்­களில் காயங்கள் காணப்­பட்­டன.

இம்­சம்­பவம் தொடர்­பாக மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகிய இரு­வரும் கைது செய்யப்­பட்­டனர். குறித்த மாண­வியை தாம் கத்­தியால் குத்­தி­ய­மைக்கு மோர்கன் கேய்­ஸரும் அனீஷா வேயரும் கூறிய காரணம் பல­ருக்கும் மேலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

ஸ்லெண்டர் மேன் எனும் இணை­யத்­தள திகில் பாத்­தி­ரத்தை மகிழ்­விப்­ப­தற்­காக இந்நடவடிக்கையை தாம் மேற்­கொண்­ட­தாக இவ்­வி­ரு­வரும் கூறினர்.
அம்­மா­ண­வியை கொலை செய்­வ­தற்கு சில மாதங்­க­ளாக இவ்­வி­ரு­வரும் திட்டம் தீட்­டி­யமை பொலி­ஸாரின் விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­தது.

அதை­ய­டுத்து, மோர்கன் கேய்ஸர் மற்றும் அனீஷா வேயர் ஆகியோர் மீது கொலை முயற்சி குற்றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. தற்­போது 14 வய­தான இவ்­வி­ரு­வரும் சிறார்­க­ளாக அல்­லாமல், வளர்ந்­தோ­ராக கரு­தப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

இவ்­வ­ழக்கில் தான் நிர­ப­ராதி என கடந்த வருடம் அனீஷா கூறினார். இந்­நி­லையில் மற்றொருவரான மோர்க்கென் கேய்­ஸரும் தான் நிர­ப­ராதி என கடந்த வாரம் தெரித்­துள்ளார். மனநலன் பாதிக்­கப்­பட்­டவர் என்ற அடிப்­ப­டையில் தான் நிரபராதி என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் மனநலன் பாதிக்கப்பட்டவரா என்பதை கண்டறியவதற்கு இரு மருத்துவர்களை நீதிபதி நியமித்துள்ளார். இவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

ஸ்லெண்டர் மேன் (Slender Man) என்­பது இணை­யத்­தள திகில் கதை­களில் வரும் ஒரு கற்­பனைப் பாத்­தி­ர­மாகும். மிக அதி­க­மான உய­ரமும் மெல்­லிய உட­ல­மைப்பும் கொண்ட கோட், சூட் அணிந்ததாக இப்­பாத்­திரம் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த எரிக் நட்சன் என்­பவர் இப்­பாத்­தி­ரத்தை உருவாக்கினார். 2009 ஆம் ஆண்டு முதல் தட­வை­யாக இப்­பாத்­திரம் இணை­யத்தில் தோன்­றி­யது.

மனி­தர்­களை குறிப்­பாக சிறார்­களை பின்­தொ­டர்­வது, கடத்­து­வது, அச்­சுறுத்தும் ஒரு நப­ராக திகில் கதைகளில் இப்பாத்திரம் சித்திரிக்கப்படுகிறது.

1

அந்த கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் : கோபத்தில் திரிஷா!!

Trish

நடிகை திரிஷா திரையுலகிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “இதை கேட்கும் பொது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இத்தனை வருடம் எந்த ஒரு கதாநாயகியும் கதாநாயகியாகவே நடித்தது இல்லை என்றால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் தானே என்றார்.

இதையடுத்து சமீபத்தில் நடந்த விருது விழாவில் த்ரிஷாவும், அவரது முன்னாள் காதலர் ராணாவும் சந்தித்துக் கொண்டதுடன் நன்றாக பேசிக் கொண்டனர்.

இது குறித்து த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த கேள்விக்கு நான் என்றுமே பதில் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தாராம்

நடிக்க மாட்டேன் என்று நடிகை ஆனேன் : த்ரிஷா!!

Trisha

ஜோடி படத்தில் சிம்ரன் தோழியாக வந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா.

தொடர்ந்து 17 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னக திரை உலகின் நாயகியாக இருந்து வருகிறார். தென் இந்திய பிரபல நாயகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். ஆனால் இதுவரை ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுபற்றி கூறிய திரிஷா..

நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது என்றாலும், இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. மனதுக்குள் இது ஒரு வருத்தமாகவே இருக்கிறது. அவருடன் நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நல்ல படங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து நாயகியாக நடிப்பது பற்றி பலர் கேட்கிறார்கள். வேறு யாரும் இத்தனை ஆண்டுகள் ஹீரோயினாக இருந்ததில்லை என்று சொல்வதை பார்க்கும் போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன். நடிப்பதுதான் என் தொழில்.

மொடலிங் செய்த போது நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதன் பிறகு எதிர்காலம் நம் கையில் இல்லை என்பதை உணர்ந்து நடிகை ஆனேன். இப்போது வாழ்க்கையின் போக்கில் செல்கிறேன் என்று தெரிவித்தார்.

அவசர திருமணம் வேண்டாம் : அனுஷ்கா, கோலி!!

Kholi

விராட் கோலி – அனுஷ்கா சர்மா இந்த பிரபலங்களின் காதல் வாழ்க்கை தற்போது ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் ரகசியமாக பயணித்து கொண்டிருக்கிறது.

பெற்றோர்களின் முன்னிலையில் வீட்டில் சந்திப்பது, உறவினர்களின் திருமணங்களில் ரகசியமாக கலந்து கொள்வது என கமரா கண்களில் இருந்து சிக்காமல், மறைந்து மறைந்து தங்கள் காதலை பரிமாறிக்கொள்கிறார்கள்.

ஏன் இந்த இருட்டு வாழ்க்கை என்று அனுஷ்காவை கேட்டால் நல்ல செய்தி சொல்லும் வரை இருட்டு வாழ்க்கையே நல்லது என்று சூசகமாக பதிலளிக்கிறார்.

சரி ஏதாவது ஒரு கட்டத்தில் அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு அவசர திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை, என்னுடைய தோழிகள் அனுபவிக்கும் கஷ்டங்களே போதும் என்று பொடி வைத்து பேசுகிறார்.

அவசர திருமணம் என்றாலே பதறும் அனுஷ்கா, அதுபற்றி சொல்கிறார்..

பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினையை சந்திக்கின்றன. இதன் அடிப்படைக் காரணங்களில் அவசரக் கல்யாணம் தான் முதலில் நிற்கிறது. காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் காதல் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக்கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்ற படிகட்டுகளை ஏறிவிடுகிறார்கள்.

காதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவே கூடாது. நிதானமாக தங்களது நிலைமையை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தை பற்றி தெளிவாக பேசி ஒருமித்த கருத்துக்கு உடன்பட வேண்டும். அதற்கான வேலைகளில் தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறும் அனுஷ்கா, காதலிப்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்குகிறார்.

பொதுவாக காதலிப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம், தங்கள் காதல் விவகாரத்தை கூறி அவர்களிடம் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து அவர்களது மனதில் இடம் பிடிக்கவும், நம் காதல் மீதான உறுதியை காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.

அதற்கு பிறகும் அவர்களது எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை. ஆனால், காதல் விவகாரம் வீட்டில் தெரியவரும் போது, அதிலிருந்து தப்பித்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறி அவசர அவசரமாக திருமணத்தை முடித்து கொண்டால், காதல் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடும்.

அவசர கோலத்தில் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் காதலர்கள் இருவருமே வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றை இழந்து, கிடைத்ததை கொண்டு வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.

ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கை துணையின் மீது தங்களது கோபத்தை திருப்புவார்கள்.

என்னுடைய தோழிகளில் சிலர் இன்று அப்படிப்பட்ட ஒரு கசப்பு வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது, காதல் ஜோடிகளை தனிமை நிலைக்கு தள்ளிவிடும். ‘இத்தனை கஷ்டங்களை தரும் அவசர திருமணம் வேண்டுமா என்பதை பலமுறை யோசித்து அதற்கு பின்னர், முடிவெடுங்கள் என்று அறிவுரைகளை உதிர்க்கிறார்.

தாமதமாக வந்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானியின் ஓட்டுநனர் அனுமதியும் இரத்து!!

Srilankan

அண்மையில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவன விமானியின் விமான ஓட்டுநனர் அனுமதியும் (Pilot License) தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL554 என்ற விமானம் ஜேர்மனில் இருந்து கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், அந்த விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமடைந்ததோடு, நேற்றுமுன்தினம் இரவு 07.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து ஏற்பட்ட தாமதம் காரணமாக சம்பந்தப்பட்ட விமானத்தின் விமானி ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது அவர் மது போதையில் இருந்தாரா என மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர் தோல்வியடைந்துள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் அவரது விமான ஓட்டுநர் அனுமதியும் தறகாலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு புகையிரதத்தில் கதவைத் திறக்காத நெதர்லாந்தின் இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த கதி!!

Train

நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21.08) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன் சிலாபம் கோட்டை புகையிரத முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முதலாம் வகுப்பு சொகுசு உறங்கும் அறையை கொண்ட இவர்கள் பொலிஸார் பல முறை முயற்சித்தும் கூட அறையை திறக்காதமையால் புகையிரதம் தாதமானது.

இந்த நிலையிலேயே குறித்த தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா செல்வோருக்கு இலவச விசா!!

Visa

இந்தியாவிற்கு புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரை செல்வொருக்கான விசா இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ஆர்.கே. சிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரதி இந்தியத்தூதுவர் ஆரிநாதம் பாக்சீ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் ஈசா ஸ்ரீவாத்வச ஆகியோரின்ஏற்பாட்டில் அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உயர்ஸ்தானிகர் ஆர்.கே.சிங்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா மீதான நல்லெண்ணத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவின் சுற்றுலா கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும்இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் விபத்து : 24 பேர் படுகாயம்!!

 
மடுவில் இருந்து முழங்காவில் ஊடாக யாழ்ப்பாணம் சென்ற பேருந்து ஒன்று இன்று பகல் பூநகரி மண்டைக்கள்ளாறு நாளாவெளி பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் 24 பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பேருந்தில் பயணித்தவர்கள் மடு திருத்தலத்தில் தரிசனத்தை முடித்து விட்டு இன்று அதிகாலை யாழ் நோக்கி சென்றவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

A A2 A3

பிரமிக்கவைத்த வர்ண பட்டம்விடும் போட்டி!!(படங்கள்)

 
கொழும்பு-காலி முகத்திடலிற்கு மேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்ண பட்டங்கள் நேற்றைய தினம் பறக்க விடப்பட்டுள்ளன. பாரிய பட்டமிடும் விழாவை முன்னிட்டே இவ்வாறு ஏராளமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொண்டாட்டத்தின் போது சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டியாளர்கள் கலந்துக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்கள்,முதியவர்கள் உட்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டத்தின் அளவு மட்டும் ஆக்கத்திறனை அடிப்படையாக கொண்டு தரமான பட்டத்தை 4 பேர் உள்ளடங்கிய குழுவினர் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3

ஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்!!

FB

புனேவை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்திய நாட்டையே உலுக்கியுள்ளார்.

சுவாதி சிதால்கர் என்ற பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் தான் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும், தனது நாற்காலிக்கு பின்னால், தரையில் தனது குட்டி மகன் படுத்து பால் போத்தலை வாயில் வைத்திருப்பதை போன்ற புகைப்படத்தை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, தரையில் கிடப்பது எனது மகன் அல்ல, எனது இதயம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னோடு இருக்க வேண்டும் என ஆசைப்பட்டான்.

ஆனால் என்னால் விடுமுறை எடுக்க முடியவில்லை. ஏனெனில் வங்கியில் கடன் விடயம் தொடர்பான பணி கொஞ்சம் இருந்ததால் வேலைக்கு வந்துவிட்டேன்.

தரையில் படுத்துக்கொண்டு எனது மகன் பாலை குடித்துக்கொண்டிருக்கிறான், இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எனது பணியை முடித்துவிட்டேன். நான் மட்டுமல்ல பணிக்கு செல்லும் பல்வேறு பெண்கள் இதுபோன்று இக்கட்டான சூழ்நிலைகளை சமாளித்துக்கொண்டுதான் பணியாற்றி வருகின்றனர்.

நாங்கள் இப்படி பணியாற்றுகையில் சட்டசபையில் அமைச்சர்கள் தூங்கி விழுவது எந்த வகையில் நியாமானது. மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து அதற்காக தீர்வினை காண வேண்டும்.

குழந்தையை நான் பார்த்துக்கொண்டது போன்று, பொதுமக்களை அரசியல்வாதிகள் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த புகைப்படத்தின் மூலம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என ஆசைப்பட்டேன், அதன்படியே இந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.