கைவிலங்கிட்டபடியே காதலிக்கு தாலி கட்டிய காதலன் : வினோத சம்பவம்!!

Mrg

பீகாரில் நபர் ஒருவர் கைவிலங்கிட்டபடியே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திக் விஜய் குமார் மற்றும் பூஜா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பூஜாவை ஆபாசமாக புகைப்படம் எடுத்த திக் விஜய், அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த பூஜா, தனது காதலனின் செயலை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, இவர்களின் காதல் கதையை கேட்ட நீதிபதி, நீ அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

15 நாட்கள் காலஅவகாசம் தருகிறேன், அதற்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படியே இதற்கு ஒப்புக்கொண்ட திக் விஜய், சிறையில் இருந்து திருமணத்திற்காக மட்டும் விடுவிக்கப்பட்டார். திருமணத்தின்போது, மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த திக் விஜய்யின், கைவிலங்குகள் அகற்றப்படவில்லை.

கைவிலங்கிட்டபடியே, தனது காதலியை திருமணம் செய்துகொண்டார், திருமணம் முடிந்த பின்னர் திக் விஜய் சிறையில் அடைக்கப்பட்டார், அப்பெண் அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

இனி டொரண்ட் வலைத்தளத்தை விஜயம் செய்யாதீர் : மீறினால் இது தான் தண்டனை!!

Torrent

ஆபாச வலைத்தளங்களை தடை செய்ததை தொடர்ந்து இந்திய அரசாங்கம் தற்போது டொரண்ட் வலைத்தளங்கள் மீது குறி வைத்துள்ளது. டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமாக தகவல்களை பகிந்துகொள்ளும் இணையதளங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.

டொரண்ட் உள்ளிட்ட சட்ட விரோதமான வலைத்தளத்தை இனி பயனர்கள் விஜயம் செய்தாலோ அல்லது அதன் கோப்புகளைப் பதிவிறக்கம் செய்தாலோ அது ஒரு குற்றச்செயலாக கருதப்படும்.

மேலும், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று லட்சம் அபதாரமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவு படி, இந்த தடைசெய்யப்பட்ட இணையதளங்களை பயன்படுத்துவோர் மீது காப்புரிமைச் சட்டப் பிரிவு 63, 63-A, 65 மற்றும் 65-அ வின் படி தக்க தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் செல்வி திருமகள் பாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்!!

 
வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி அதிபர் நிருத்தியவாணி திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவியாகிய செல்வி திருமகள் பாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலாநிதி தமிழ் மணி அகளங்கன் தலைமையில் நேற்று (21.08.2016) மாலை 4.00 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அவரது பாரியார் திருமதி குகநந்தினி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதம அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து சிறி பிரபாகர குருக்கள் அவர்களினால் சலங்கை பூஜை நடத்தப்பட்டதுடன் ஆசியுரையும் வழங்கப்பட்டது. பூஜை செய்யப்பட்ட சலங்கையை ஆசிரியர் திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் தனது மானவியான செல்வி திருமகள் பாஸ்கரன் காலில் அணிவித்தார்.

பரதநாட்டிய அரங்கேற்றம் என்னும் செல்வி.திருமகள் பாஸ்கரனின் அரகேற்ற நூலின் முதற்பிரதி கலாநிதி தமிழ் மணி அகளங்கனால் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராத கிருஸ்ணனிடம் வழங்கப்பட்டது.

செல்வி திருமகள் பாஸ்கரனின் அரங்கேற்றத்தைத் தொடர்ந்து விசேட விருந்தினர்களை கௌரவிக்கும் நிகழ்வைத்தொடர்ந்து பிரதம விருந்தினர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அவரது பாரியார் திருமதி குகநந்தினி இராதாகிருஸ்ணன் ஆகியோர் செல்வி. திருமகள் பாஸ்கரனின் பெற்றோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விழாவின் கதாநாயகியகிய செல்வி. திருமகள் பாஸ்கரன் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் மா.தியாகராஜா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜா, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கலைஞர் உடுவை சி.தில்லை நடராசா, முதுநிலை ஆடல் ஆசான் கலைஞர் வேல் ஆனந்தன், கலாநிதி திருமதி கிருஸ்சாந்தி ரவீந்திரா,நாட்டிய கலாயோதி திருமதி. துஸ்யந்தினி வேலுப்பிள்ளை. ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

1 2 3 IMG_7470 IMG_7482 IMG_7483 IMG_7488 IMG_7492 IMG_7495 IMG_7512 IMG_7516 IMG_7521 IMG_7522 IMG_7532 IMG_7538 IMG_7540 IMG_7548 IMG_7553 IMG_7553_1 IMG_7556 IMG_7559 IMG_7581 IMG_7584 P1210024 P1210040 P1210042 P1210045 P1210049 P1210051 P1210056

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம்!!

 
சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கம நிகழ்வு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று(21.08.2016) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பிரித்தானியாவின் லண்டனை தலமையகமாக கொண்டு இயங்கம் சர்வதேச இந்து இளைஞர் பேரவை என்ற அமைப்பு பல நாடுகளில் தனது கிளைகளை நிறுவி சமய, கலை, கலசார தமிழர் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள கட்டியெழுப்பும் வகையிலான பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றது.

இந்நிலையில் இவ் அமைப்பின் இலங்கை கிளையின் 3வது முத்தமிழ் சங்கமம நிகழ்வு தமிழர் கலாசாரங்களை பிரதிபலிக்கும் பல கலைநிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

பேரவையின் தலைவர் சி.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நந்திக் கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல், பஞ்சபுராணபாராயணம், தமிழ்மொழிவாழ்த்து, என்பவற்றை தொடர்ந்து ஆதிவிநாயகர் நடனப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம், வரவேற்புரையை பேரவையின் உப செயலாளரும் ஊடகவியலாளருமான கி.வசந்தரூபன், ஆசியுரையை ரவீந்திர உமாசுதக்குருக்கள், பிரபாகரக்குருக்கள் வழங்கியதுடன், அதனை தொடர்ந்து தொடக்கவுரையினை சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உபதலைவர் வீ.பிரதீபனும், வாழ்த்துரையினை தமிழ்மணி. மேழிக்குமரன் வழங்கினர்.

நாம் தொலைத்துவிட்ட பண்பாட்டு விழுமியங்கள் எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி செ.மதுரகனின் சிறப்புரையும், வாத்திய கலாலய மாணவர்களின் வாத்திய கானாமருதம் நிகழ்வும், கீர்த்தனாலயா இசைக் கூட மாணவர்களின் தமிழிசை நிகழ்வும், நுண் கலைமாணி திருமதி. புவனறூபி ஜெகதீசனின் மாணவி பைரவி இராஜேந்திரம் அவர்களின் ருத்ரதாண்டவம் நடன நிகழ்வும், ஆய்வாளர் அருணா செல்லத்துரையின் வன்னியின் சிவலிங்க வழிபாடு பற்றிய ஆய்வுப் பார்வை,

தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் காலவோட்டத்தில் இன்று தமிழர் பண்பாடு தளர்ந்துவிட்டதா? வளர்ந்துநிற்கிறதா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் நடைபெற்றது. தளர்ந்துவிட்டது எனும் தலைப்பில ஜெ. மயூரசர்மா, ஜெ.கோபிநாத், ஆ.ஜெசிதா ஆகியோரும்வ ளர்ந்துநிற்கிறது எனும் தலைப்பில் எஸ்.எஸ். வாசன், ஜெ. திருவரங்கன், ந. ஜெனன் ஆகியோரும் வாதிட்டனர்.

இந் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை தலைவர் சீ.யோகேஸ்வரன், கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்ல தலைவர் தி.இராசநாயகம், தொல்லியல்துறை ஆய்வாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அருணா.செல்லத்துரை, யாழ் பல்கலைக் கழக இசைத்துறை விரிவுரையாளர் ந. பரந்தாமன் ஆகியோரது சேவையைப் பாராட்டி சிறப்பு பட்டம் வழங்கி சர்வதேச இந்து இளைஞர் பேரவையால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தமிழ்நாடு கூனம்பட்டி ஆதின 57 வது குருபீடம் ராஜ சரவண சுவாமிகள், சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலை கழக இந்து நாகரிக துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலர் கா.உதயராசா, வவுனியா மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், விசேட விருந்தினராக பேரவையின் அமைப்பாளர் சி.கணேஸ்குமார் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

IMG_0618 IMG_0635 IMG_0647 IMG_0677 IMG_0692 IMG_0701 IMG_0717 IMG_0763 IMG_0771 IMG_0777 IMG_0784 IMG_0788 virum00m0m01m1m02m2m03m3m04mu1mu2mu3mu4mu5mu6mu7mu9mu10mu11mu12mu13mu14mu15mu16mu17mu18mu19

12 வயதுச் சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!

Hang Death

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 12 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள பாஸ்னி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 15 ஆம் திகதி அவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலத்தினை பிரேத பரிசோதனையிற்கு உட்படுத்த அனுப்பி வைத்த பொலிஸாருக்கு தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அந்த சிறுமியின் மர்ம மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவந்துள்ளன.

கூலி தொழிலாளிகளான குறித்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிடும் சூழ்நிலையில் அதே வீட்டில் தங்கியிருந்த 12 வயது சிறுவன் கடந்த 12 ஆம் திகதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக அவளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமி உயிரிழந்த 15 ஆம் திகதியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த குறித்த 12 வயதான சிறுவனை தற்போது கைது செய்துள்ள பொலிஸார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!!(புகைப்படங்கள்)

 
கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக ஃபிரான்ஸ் அரசாங்கம் செவாலியே விருதை கமல்ஹாசனுக்கு நேற்று அறிவித்தது.

இதுகுறித்து, திரைப்படத்துறையினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் புகைப்படத் தொகுப்பு இதோ..

Kamal1

10 வயது முத்த பெண்ணை மணந்த சினிமா நடிகர்!!

Actorதிருச்சியைச் சேர்ந்த சுரேந்திரன், தனது மகன் மலையமானை வைத்து கோலாகலம் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.

இவரது வயது 25, இந்நிலையில் அதே திருச்சியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுடன் மலையமானுக்கு காதல் ஏற்பட்டது. தீபா மலையமானை விட 10 வயது மூத்த பெண் என்பதால் மலையமான் காதலுக்கு சுரேந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பெண் வீட்டார் தலைமையில் நிச்சயிக்கப்பட்டபடி நேற்று (19ம் திகதி) மலையமான், தீபா திருமணம் நடத்த ஏற்பாடு தடபுடலாக நடந்தது. இத்திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் சுரேந்திரன் புகார் செய்தார். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் மேஜர் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.

இதன் பின் நாளிதழுக்கு பேட்டி அளித்த சுரேந்திரன், என் மகனை கடத்தி வீட்டு சிறையில் வைத்து திருமணம் நடத்தி உள்ளனர். எனது மகன் மாய வலையில் விழுந்து விட்டான். விபரம் தெரிந்த பிறகு என்னிடம் மீண்டும் வருவான் என்று தெரிவித்தார்.

தகாத உறவு காரணமாக யாழில் பெண் எரித்துக் கொலை!!

Fire

சாவகச்சேரி – நாவக்குளி பகுதியில் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் பலியானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் நாவக்குளி பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை தகாத உறவே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன் சந்தேகநபர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சாவகச்சேரி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப் பரிசில் எழுதச் சென்ற சிறுவனும் அவரது சகோதரியும் மாயம்!!

Missng

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு சென்ற சிறுவன் மற்றும் அவரது சகோதரியையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையத்திற்கு சென்ற இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை என அவர்களது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும் 10 வயது சிறுவன் மற்றும் அவரது 17 வயது சகோதரியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை குறித்த சிறுவர்களின் தாய், தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதால், இவர்கள் இருவரும் தாயை காணச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நோவூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளம், பாலாவி ரயில் கடவைக்கருகில் கார் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!!

Accident

புத்தளம், பாலாவி ரயில் கடவைக்கருகில் காரொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ரயில் கடவைக்கருகில் சமிஞ்சை விளக்கு இன்மையினால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கிக்குச் சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம் : 18 இலட்சம் ரூபா பறிபோனது!!

Cash

காலி – அம்பலன்கொட பகுதியில் வங்கிக்குச் சென்ற பெண் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தனியார் வங்கியில் இருந்து பெற்றுக் கொண்ட பணத்தினை பிரிதொரு வங்கியில் வைப்பிலிடச் சென்ற வேளையே இந்தக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 55 வயதான அந்த பெண், அம்பலன்கொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்தரமுல்லைக்கு இடமாற்றப்படும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்!!

passport office

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் பத்தரமுல்லையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளது. பொதுமக்கள் விரைவாக தமது சேவைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த திணைக்களம் பத்தரமுல்லையில் அமைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பத்தரமுல்ல ‘சுஹுருபாய’ என்ற புதிய கட்டத்தில் இதன் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு 10 ஆனந்த ராஜகருணா மாவத்தையில் தற்போது அமைந்திருக்கும் பிரதான அலுவலகம், கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா போன்ற நகரங்களில் அமைந்துள்ள கிளைக்காரியாலயங்களில் குடிவரவு, குடியகல்வு தொடர்பான விடயங்கள் நடைபெற மாட்டாதென அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த மாதம் 29ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டு, விசா வழங்குதல், கடவுச்சீட்டுகளில் திருத்தம், பொது சேவைகள், வழங்குதல், வெளிநாட்டு பயண உரிமம் தொடர்பான பணிகள் போதிய குடியுரிமை ஆகியவற்றின் ஒருநாள் சேவைகள் இடம்பெறாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்தமாதம் 26 மற்றும் 29ஆம் திகதிகளில் விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் பயணிகளின் நடவடிக்கைகள் சாதாரணமாக நடைபெறும் என்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகையிரதங்களின் வேகங்கள் குறைக்கப்படவுள்ளன!!

Train SL

புகையிரத பாதைகளில் யானைகளின் குறுக்கீடுகள் அதிகளவு காணப்படும் பிரதேசங்களில்பயணிக்கும் புகையிரதங்களின் வேகங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யானைகள் கடக்கும் புகையிரத பாதைகள் தொடர்பாக ஆராய்வதற்கு புகையிரத திணைக்களஅதிகாரிகளும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் நேற்றும், இன்றும் மேற்கொண்டஆராய்வு பயணங்களின் முடிவிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யானைகள் புகையிரத பாதைகளை கடக்கும் பிரதேசத்தில் இரு பக்கங்களிலும்அமைந்துள்ள புதர்களை வெட்டி அகற்றுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யானைகள் புகையிரதப் பாதைகளை கடக்கும் பிரதேசங்களை புகையிரதசாரதிகளால் இலகுவில் அடையாளங் காணக்கூடியதாக இருக்கும் எனவும் அதிகாரிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகையிரத பாதைகளில் யானைக் கூட்டங்களை பிரதேசவாசிகள் அவதானிக்கும்சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல்தெரிவிக்கும் முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள்குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளால் தெரிவிக்கப்படும் விடயங்களை சாரதிகளுக்கு அறிவிக்கவும்நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும்,இதன்மூலம் யானைகள் புகையிரதங்களில் மோதிஉயிரிழப்பதை தடுக்க முடியும் என்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இராணுவ இரகசியங்களை விற்றாரா சுவாதி : ராம்குமார் தாயார் புகாரால் புதிய பரபரப்பு!!

Swathi

மைசூரில் வேலை பார்த்தபோது இன்போசிஸ் நிறுவனம் மற்றும் இராணுவ இரகசியங்களை சுவாதி சட்டவிரோதமான முறையில் விற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் தாயார் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் பெண் பொறியாளரான சுவாதி.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இந்த சம்பவம். துப்பு எதுவும் கிடைக்காமல் கொலையாளியை பிடிக்க முதலில் போலீசார் திணறினர்.

பின்னர் ரயில் நிலையம் அருகில் இருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், ராம்குமார் உண்மையான குற்றவாளி கிடையாது. பொலிசார் வழக்கை விரைந்து முடிக்க ராம்குமாரை பலிகடா ஆக்க முயலுகின்றனர் என அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஒரு தலைக் காதல் தோல்வி காரணமாக தொடர்ந்து இந்த கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டாலும், தொடர்ந்து வழக்கில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராம்குமாரின் தாயார் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர், “சென்னையைச் சேர்ந்த ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கடந்த ஜூன் 24 ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்றபோது அங்கு இருந்த பலர் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளனர்.

அப்போது ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளை சுவாதியை கொலை செய்த கொலைகாரர்கள் துரத்தினர் என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் நுங்கம்பாக்கம் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு 14 சிம் கார்டுகள் மற்றும் ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் முதலில் தெரிவித்தனர்.

சுவாதி கொலையில் பிலால் சித்திக் மீது சந்தேகம் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அவரிடம் 4 நாட்கள் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக பெங்களூருவில் கொலை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டியுள்ளனர். ஆனால் இது தொடர்பான உண்மையை போலீஸார் மறைத்துள்ளனர்.

சுவாதி கொலை காதல் அல்லது வேறு காரணங்களுக்காக நடந்து இருக்கலாம்.

சம்பவம் நடைபெறுவதற்கு 17 நாட்களுக்கு முன்பாக சுவாதியை அடையாளம் தெரியாத ஒருவர் தாக்கியதைப் பயணி ஒருவர் பார்த்துள்ளார்.

மதுரை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் 2 பேரைக் கைது செய்துள்ளதை வெளியே காட்டவில்லை.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை சுவாதி காதல் திருமணம் செய்து மதம் மாறியுள்ளதாக பெங்களூரு சென்ற போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சுவாதி மரணம் குறித்து தன் குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டாம் என சுவாதியின் தந்தை முதல்வரின் தனிப் பிரிவில் மனு கொடுத்துள்ளார்.

எனவே சுவாதி குடும்பத்தாரிடம் போலீஸார் சரியாக விசாரணை நடத்தவில்லை.

சுவாதியை ஒருவர் கடுமையாக தாக்கியதாகவும், அதை சுவாதி பொறுத்துக் கொண்டதாகவும் சுவாதியின் தோழி ஒருவர் போலீஸில் கூறியுள்ளார்.

பெங்களூருவில் சுவாதி பணியாற்றிய இன்போசிஸ் நிறுவனத்தின் இரகசியங்கள் மற்றும் இந்திய இராணுவத்தின் இரகசியங்களை சுவாதி விற்றதாக பெங்களூருவில் உள்ள தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளமை பெங்களூரு சென்ற தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தக் கொலையில் பல உண்மைகளை பொலிசார் மறைத்து விட்டனர். வேண்டுமென்றே எனது மகன் ராம்குமாரை குற்றவாளியாக்கியுள்ளனர்.

மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீஸார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தப்பிவிடுவர்.

ஆகவே இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சுவாதி கொலை சம்பவத்தை யாருமே செல்போனில் படம் பிடிக்கவில்லை என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், ரயில் நிலையத்தில் இருந்த சிலர் சம்பவத்தை படம் பிடித்ததாகவும், போலீசில் புகார் அளித்ததாகவும் புஷ்பா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, சுவாதி கொலையில் காதல் விவகாரம் மட்டுமின்றி, அவர் இராணுவ இரகசியங்களை விற்றதும் காரணமாக இருக்கலாம் என புஷ்பா சந்தேகம் தெரிவித்திருப்பது வழக்கு விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பாவின் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியின் இழப்பை தாங்க முடியாத கணவர் உயிரிழப்பு : ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

Hands

தனது மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

அரநாயக்க பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய குறித்த நபரின் மனைவி புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தன் மனைவியின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவர் மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த நபர் அவரின் மாமாவுடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் சாதிக்கக் காத்திருக்கும் இந்திய வம்சாவளிப் பெண்கள்!!

Indian

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய மேடைப் பேச்சு பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

அப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் அமெரிக்க தேர்தலுக்காக நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த, அதுவும் தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் அமெரிக்க பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களம் இறக்கப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 5 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளி பெண்கள்.

ஜனநாயகக் கட்சி சார்பில், வாஷிங்டனின் சியாட்டில் பகுதியில் பிரமிளா ஜெயபால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார்.

இதேபோல ஜனநாயக கட்சியின் சார்பில், தற்போது கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக உள்ள கமலா ஹாரிஸ் என்பவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் கமலா வெற்றி பெற்றால் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை கிடைக்கும்.

இந்தத் தேர்தலில் சமீபத்தில் கருத்து கணிப்பில் பிரமிளாவும், கமலாவும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல் ஃப்ளோரிடாவில் இருந்து குடியரசு கட்சி சார்பில், லத்திகா மேரி தாமஸ் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பாளை பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் ஆவார். ஜனநாயகக் கட்சி சார்பில் 2 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமிபேரா மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதேவேளை, இந்தத் தேர்தலில் மொத்தம் 19 பெண்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.