யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் கொலைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக மானிப்பாய் பகுதியில் பொலிஸார் தொடர்ந்தும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தமிழ் பேசும் பொலிஸார் அதிகமாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, யாழ். குடா நாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல்கள், கொலை, திருட்டு மற்றும் போதைபொருள் விநியோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நபாகளை இலக்கு வைத்து கல் வீசி எறியும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த கைத்துப்பாக்கிகள் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வழங்கப்பட்டதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ரிவோல்வர்களைக் கொண்ட 15 மீற்றர் தொலைவு வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் மேலும் 25 கைத்துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.புகையிரத திணைக்களப் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது பழைய துப்பாக்கி வகை ஒன்றையே பயன்படுத்தி வருகின்றனர்.
புதிய ரிவோல்வர்களை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒரு புகையிரதத்திற்கு இரண்டு ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் பயன்படுத்தக்கூடிய ஒரு ஐஓஎஸ் (IOS) அப்பிளிக்கேஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது இளம் வயதினரும் சமூக வலைதளங்களை பயன்படுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனாலே பேஸ்புக் நிறுவனம் இளம் வயதினர் மட்டும் பயன்படுத்தக் கூடிய, ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் Lifestage என்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தும் முன் பல முக்கிய தகவல்கள் பெறப்படுகிறது. பின்னர் அவை ஒரு வீடியோவாக மாற்றப்பட்டு profile videoவாக, அவர்களின் பள்ளிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி விடுகிறது.
பல்வேறு கட்டுபாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் இளம் வயதினரிடையே நல்ல வரவேற்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியோ ஒலிம்பிக் பட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து வசமானது.
இதுதவிர இளம் வயதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் 21 வயதான சிந்து தட்டிச் சென்றுள்ளார். சிந்து வெள்ளி வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா 2வது பதக்கத்தை பெற்றுள்ளது.
இதன் மூலம் இவருக்கு பரிசு மழை கொட்டுகிறது, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து பரிசு மற்றும் பாராட்டு மழையில் நனைந்து வரு கிறார். அவருடைய சொந்த மாநிலமான தெலங்கானா சார்பில் அவருக்கு 5 கோடி மற்றும் அரசு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர அரசு 3 கோடி பரிசுத்தொகையுடன், அரசு வேலையும் பி.வி.சிந்துவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது.
இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி கொடுத்த பி.வி சிந்துவுக்கும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
பி.வி.சிந்து தற்போது ஹைதராபாத் தில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதை தொடர்ந்து அவருக்கு துணை மேலாளர் பதவி உயர்வும், 75 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை விவரம்
தெலங்கானா: 5 கோடி
ஆந்திரா: 3 கோடி
டெல்லி: 2 கோடி
மத்தியப் பிரதேசம்: 50 லட்சம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம்: 75 லட்சம்
இந்திய பாட்மிண்டன் சங்கம்: 50 லட்சம்
அமெரிக்காவில், தந்தை ஒருவர் தனது நான்கு மாத பெண் குழந்தையை கையால் 22 முறை குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி பார்க்க விடாமல் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால் தான் குழந்தையை அடித்து கொன்றேன் என கைதான தந்தை வாக்கு மூலம் அளித்துள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் அளித்துள்ள தகவலில், சம்பவம் நடந்த தினத்தன்று 21 வயதான கோரி மோரிஸ் என்ற அந்த கொடூர தந்தை, Minneapolis பகுதியில் உள்ள அவரது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரது, நான்கு மாத பெண் குழந்தை எமர்சின், சத்தம் போட்டுக்கொண்டிருந்துள்ளது. குழந்தையின் சத்தம் தொலைக்காட்சி பார்ப்பதற்கு இடையூறாக இருந்ததால் கோபமடைந்த அவர்,குழந்தையின் நெஞ்சில் தனது கையால் 7 முறையும், முகத்தில் 15 முறையும் குத்தியுள்ளான். இதனால் அந்த பச்சிளம் குழந்தை மயக்கமடைந்துள்ளது.
பின்னர் கோபம் தணிந்த மோரிஸ், பொலிசாருக்கு போன் செய்து தன் குழந்தையை கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், மயக்க நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் குழந்தையை சோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கோரி மோரிஸின் மனைவி கூறியதாவது, மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போதே, சில விநாடிகளில் கோபமடையக்கூடிய மாதிரியான மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியுள்ளார். குடும்பத்தினரும் மோரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்டுள்ள மோரிஸ் தற்போது the Hennepin County சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்ய 2 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் 2014ம் ஆண்டில் நடந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 36 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
36 பேரும் தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதனை திக்கார் ஆளுநர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.
2014ல் நடைபெற்ற இந்தப் படுகொலைகளின் போது, சுமார் 1,700 ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
ஸ்பீச்செர் முகாம் படுகொலைகள் என பிரபலமாக அறியப்பட்ட இந்த சம்பவம், ஈராக்கின் தெற்கே அமைந்த ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் திக்கார் மாகாணத்தில் இருந்து 400 பேர் வரை பலியாகினர் என்பது நினைவுக் கூறத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அந்த மாநில முதல்வரை பொலிசார் தூக்கிச் சென்றது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களான பீகார், உ.பி, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கிய நதியான கங்கை அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் ரெவா, சாட்னா மற்றும் பன்னா ஆகிய மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார். பன்னா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தரை வழியாகச் சென்று பார்வையிட்டார்.
ஒரு பகுதியில் அவர்கள் பார்வையிட சென்றபோது அவர்கள் சென்ற பாதையில் திடீரென வெள்ளம் ஒரு அடி அளவிற்குச் சென்றது. இதனால் முதல்வருக்கு பாதுகாவலுக்கு சென்ற பொலிசார் அவரை தூக்கிச் சென்றனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சவுகான் எதைப் பற்றி கவலைப்படாமல் தரை வழியாக அவரது பயணத்தை மேற்கொண்டார். பொலிசார் முதல்வரை தூக்கிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் தண்ணீர் கேட்டு வந்த 6 வயது சிறுமியை 10 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் இன்சாலி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு ரிக்க்ஷா ஓட்டியின் 6 வயது மகள், அருகில் இருந்த வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த 10 வயது சிறுவன் உள்ளே வா தண்ணீர் தருகிறேன் என கூறி அழைத்துள்ளான்.
ஆனால் உள்ளே சென்றதும் அச்சிறுவன் திடீரென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பயந்து போன அச்சிறுமி தொடர்ந்து கூச்சலிட்டு அழுதுள்ளார்.
இச்சத்தத்தை கேட்ட அருகில் இருந்த சிறுமியின் உறவினர்கள் அந்த சிறுவனிடன் இருந்து காப்பாற்றி, அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனால் சிறுவனை பொலிசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
ஒரு 10 வயது சிறுவன், 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது, பொற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பெருமழையினால் பாதிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுமியை தமது உயிரை துச்சமென நினைத்து கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சில நாட்களாக பெரும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. அங்குள்ள பல கட்டிடங்களும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கிய 12 வயது சிறுமியின் பரிதாபக்குரல் அப்பகுதியில் கடந்து சென்ற 42 வயதான கால்பந்து பயிற்சியாளர் பப்லூ மார்ட்டின் என்பவருக்கு கேட்டுள்ளது.
இதனையடுத்து துரிதகதியில் செயல்பட்ட அவர் உடனடியாக அந்த கட்டிடத்தினுள் புகுந்து அந்த 12 வயது சிறுமி பிரபா என்பவரை காப்பாற்றியுள்ளார்.
ஆனால் அவரால் அந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் போனது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்டு வெளியே எடுத்துள்ளனர்.
ஆனால் அவரது உயிரை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மேலும் அந்த கட்டிடத்தில் சிக்கிய இன்னொருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மழைக்கு முன்னரே அந்த கட்டிடத்தை காலி செய்யும்படி உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்ததால் அதில் தங்கியிருந்தவர் வெளியேறியுள்ளனர்.
ஆனால் அந்த கட்டிடத்தின் காவலாளியின் மகளை காப்பாற்றும் முயற்சியில் மாநில அளவில் பிரபலமான ஒரு கால்பந்து பயிற்சியாளர் உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழச்செய்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் கட்சியை பலப்படுத்த பழைய முயற்சியை கையில் எடுத்துள்ளார். கட்சி தொடங்கப்பட்டபோது, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சியினரை அவர் அடிக்கடி சந்தித்தார். கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் அதிகளவில் பங்கேற்றார். இதுமட்டுமின்றி பொது மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கி போராடினார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவரான பின் அவரது நடவடிக்கைகள் மாறின. சென்னையில் இருந்தபடியே, நிர்வாகிகளை இயக்க ஆரம்பித்தார்.
இதன் எதிரொலியாக, லோக்சபா, சட்டசபை தேர்தல்களில், தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. இதனால் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள், 90 சதவீதம் பேர் வெளியேறி விட்டனர்.
ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சிக்கு வந்தவர்கள் மட்டுமே, அதிகளவில் எஞ்சியுள்ளனர்.
இந்நிலையில் கட்சியை பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, தன் பழைய, முயற்சியை அவர் கையில் எடுத்துள்ளார்.
வெளிமாவட்ட நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசுவது, அவர்களை சென்னை அழைத்து ஆலோசிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை விஜயகாந்த் துவங்கி உள்ளார்.
இதுமட்டுமின்றி, விஜயகாந்த் உத்தரவுப்படி, அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திரைப்படங்களில் நடிக்க வந்த புதிதில் அடுத்த மாத வீட்டு வாடகையை எப்படி செலுத்துவது எனத் தெரியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை தான் எதிர்கொண்ட தாக பொலிவூட் நடிகை ஈஷா குப்தா கூறியுள்ளார்.
ஈஷா குப்தா டில்லியைச் சேர்ந்தவர். 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகுராணியாகத் தெரிவானார். 2012 ஆம் ஆண்டு ஜெனட் 2 எனும் திரைப்படத்தின் மூலம் பொலிவூட் நடிகையாக அறிமுகமானார்.
திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பைக்கு சென்ற புதிதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். “அப்போது, அடுத்த மாத வாடகையை எப்படி செலுத்தப் போகிறேன் எனத் தெரியாமல் இருந்தது. உங்கள் திரைப்படங்கள் தோல்வியடைந்தால் யாரும் உங்களைத் தேட மாட்டார்கள்.
உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பொன்று கிடைக்காது. எனக்கு கோட்பாதர் எவரும் இல்லை. எனது ஒரே பாதர் (தந்தை) சினிமா தொழிற்றுறையை சாராதவர்” என ஈஷா குப்தா கூறியுள்ளார்.
அத்துடன், எனக்கு பின்புலமாக எவரும் இல்லாததால் நான் மிகக் கடுமையாக பாடுபட்டு பணியாற்றினேன். அதுவும் ஒரு நல்ல விடயம் தான். ஏனெனில், நான் இந்த நிலைக்கு உயர்ந்தமைக்கு எவரையும் காரணமாகக் கூறத் தேவையில்லை.
இதை சிலர் தவறாகக் கருதலாம். ஆனால், இது உண்மை. என்னை நடிகையாக்கியமைக்கு யாரையும் காரணமாகக் கூற முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஜெனட் 2 படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் முகேஷ் பட் உட்பட பலருக்கு நன்றி கூற தான் கடமைப்பட்டுள்ளதாகவும் ஈஷா குப்தா கூறியுள்ளார்.
களுத்துறை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். களுத்துறை கொஹோலான பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரனைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர் குஷல் பெரேரா ஒரு ஓட்டத்துடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன் கைகோர்த்த குஷல் மென்டீஸ் நிதான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.
மறுபுறம் டில்ஷான் 22 ஓட்டங்களைப் பெற்றவேளை, ஆட்டமிழக்க, மைதானம் நோக்கி வந்த தினேஷ் சந்திமால் அதிரடியாக ஆடி 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இறுதி வரை களத்தில் இருந்தார்.
எனினும் மென்டிஸ் 67 ஓட்டங்களுடன் வௌியேறியதும் பின்னர் வந்த வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காததால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 227 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்தது இலங்கை.
இதன்படி 228 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணிக்கு, டேவிட் வோனர் கைகொடுக்க தவறினார்.
அவர் 8 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் வௌியேற, அடுத்ததாக களமிறங்கிய ஸ்மித், மற்றுமொரு ஆரம்ப வீரரான பின்ஜ்சுடன் (Aaron Finch) இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
முடிவில் அந்த அணி 46.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்று, 19 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுக்களால் வெற்று வாகை சூடியது.
அவுஸ்திரேலியா சார்பாக பின்ஜ் 56 ஓட்டங்களையும், ஸ்மித் 58 ஓட்டங்களையும் விளாசினர்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீற்றர் ஓட்டத்தில் பற்றிய இரு வீராங்கனைகள் போட்டியின் மத்தயில் பரஸ்பரம் உதவிக்கொண்டமை பலரையும் மனம் நெகிழச் செய்தது.
அமெரிக்காவின் அபே டி அகோஸிடினோ, நியூஸிலாந்தின் நிக்கி ஹம்பிளின் இருவரும் ஓடிக்கொண்டிருந்தபோது இருவரும் மோதப்பட்டு வீழ்ந்தனர்.
அப்போது வர்ரங்கள் நாம் போட்டியை நிறைவு செய்ய வேண்டும் என நிக்கியை அழைத்தார் ஹம்பிளின். பின்னர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அபே அபோஸ்டினோவுக்கு நிக்கிக்கு உற்சாகமூட்டி அவரை ஓட அழைத்தார் நிக்கி.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நடாத்தும் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்டப்போட்டி ஜெயகாந்தன் (உயிரிழை முள்ளந்தண்டுவடம், பாதிப்புற்றோர் அமைப்பு) தலைமையில் நேற்று (20.08.2016) சனிக்கிழமை வவுனியா நகரசபை கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா), சிறப்பு விருந்தினர்களாக கா.உதயராசா (பிரதேச செயலாளர், வவுனியா) , கு.அகிலேந்திரன் (பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை,வவுனியா) , செ.ஸ்ரீறினிவாசன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா) , என்.பி.பர்சூக் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்), சோபனா (சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா) மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு விருந்தினர்களால் மங்களவிளக்கேற்றி வடக்கு,கிழக்கு தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி விளையாட்டினை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வின் இறுதிச்சுற்று அடுத்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.