வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்திலிருந்து இராணுவம் வெளியேறியது!!

 
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994ம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்று (20.08.2016) வெளியேறியுள்ளனர்.

அண்மையில் வடக்குக்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினர் இவ் இராணுவ முகாமுக்கு முன்பாக மக்களின் காணிகளிலிருந்து வெளியேறு என ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் உத்தியோகபூர்வமாக இக் கட்டத்தினை மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

1 DSC_0018 DSC_0019 DSC_0020 DSC_0021 DSC_0022 DSC_0024 DSC_0025

திடீர் என தரை இறக்கப்பட்ட உலங்கு வானூர்தியால் மடுவில் பதற்ற நிலை!!

1

மன்னார் பொது விளையாட்டரங்கில் இன்று மதியம் தரை இறங்க வேண்டிய அமைச்சர் உட்பட பிரமுகர்கள் உள்ளடங்கிய உலங்கு வானூர்தியானது விமானியின் கவனயீனம் காரணமாக மன்னார் மடுமாதா சிறிய குருமடத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனால் மன்னார் மடுமாதா சிறிய குருமட பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்படதாக தெரிய வருகின்றது.

அங்கே ஏற்பட்ட பதற்ற நிலையினை தொடர்ந்து குறித்த உலங்கு வானூர்தியின் விமானி குறித்த வானூர்தியை மீண்டும் மன்னார் பொது விளையாட்டரங்கில் தரையிறக்கியுள்ளார்.

குறித்த வானூர்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் தரையிறக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோடு, மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர் ஒருவர் உட்பட பிரமுகர்கள் பயணித்த குறித்த வானூர்தி மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தில் விமானியின் தவறுதல் காரணமாக தரை இறக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனால் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் விரைந்து சென்று மேலதிக நடவடிக்கைளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த உலங்கு வானூர்தியில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் அரபி நாட்டவர்கள் பயணித்துள்ளதாக தெரிய வருகின்றது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் சவுதி நாட்டு தனவந்தர்களின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று வன்னி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது குறித்த வீடுகளை அமைப்பதற்கு நிதி வழங்கிய சவுதி நாட்டின் தனவந்தர்கள் கலந்து கொண்டு குறித்த 50 வீடுகளையும் திறந்து வைத்துள்ளனர்.

பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மன்னார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதிய போசனத்திற்காக சென்ற போது குறித்த வானூர்தி மடுமாதா சிறிய குரு மட வளாகத்தில் தறையிரக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதன் காரணமாகவே அங்கு சற்று அச்ச நிலை ஏற்பட்டது.

2 3

இலங்கை அகதிகளின் பிள்ளைகள் 55 பேர் பாடசாலையில் இருந்து நீக்கம்!!

Srilanka

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் அரசின் குடியுரிமை இல்லாமல், படித்துவந்த இலங்கை அகதிகளின் 55 குழந்தைகள் பாடசாலைகளில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டனர். இது தொடர்பாக கியூ பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

“பிரைட் சொசைட்டி´ என்ற தொண்டு நிறுவனத்தை இலங்கையைச் சேர்ந்த ஞானசேகரன் தலைவராகவும், ஞானதீபன் செயலராகவும் இருந்து நடத்தி வந்தனர். பெங்களூரில் கடந்த 25 ஆண்டுகளாக இந்த தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், காலாவதி திகதி முடிவடைந்ததால், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் இந்த நிறுவனத்தை இடம் மாற்றம் செய்து நடத்திவந்தனர்.

இலங்கை உள்நாட்டு போரில், பெற்றோரை இழந்த குழந்தைகள், தமிழகம், கர்நாடக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளின் குழந்தைகள் உள்ளிட்ட 55 குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தனர்.

இந்த குழந்தைகள், அச்சிறுப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலையை அண்டியுள்ள பகுதியில் ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டனர்.

இங்கிருந்தவாறு, இக் குழந்தைகள் அச்சிறுப்பாக்கம், செண்டிவாக்கம் உள்ளிட்ட அரசு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வந்தனர். இவர்கள் வழங்கிய சான்றிதழ்களில் குடியுரிமை சான்று இல்லை என்பதால் அவர்களை பாடசாலை நிர்வாகத்தினர், வெள்ளிக்கிழமை நீக்கம் செய்தனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை கியூ பிரிவு பொலிஸார், அச்சிறுப்பாக்கத்துக்கு வந்து, கடந்த இரு நாட்களாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

13 வயதுச் சிறுமியைக் கடத்திய 19 வயது இளைஞன்!!

Kidnap

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவரை இன்று அதிகாலை 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது,

சிறுமியை காணவில்லை என்று அவரை தேடிய நிலையில் அவரை குறித்த இளைஞர் கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மத்திய முகாம் பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

பாலியல் தொழிலுக்காக 16 வயது மகளை விற்க முயன்ற தாய் கைது!!

Arrest

இந்தியாவின் மும்பையில் பாலியல் தொழிலுக்காக 16 வயது மகளை 5 இலட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மும்பையின் கோவண்டியைச் சேர்ந்த ஒரு பெண் அவளின் 16 வயது மகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும், இதற்காக ஆட்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் பொலிஸிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணிடம் பேரம் பேசும் நபர் போன்று நாடகமாடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்தனர்.

குறித்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்த பேசிய போது, தனது 16 வயது மகளை 5 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளார்.

பின்னர் 4 இலட்சத்து 25 ஆயரம் ரூபாயிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு,அதில் 50 ஆயிரம் முற்பணம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. முற்பணம் தொகையை வாங்கியதும் கையும் களவுமாக அந்த பெண்ணை ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், 3 முறை திருமணமான அந்த பெண் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தனது கணவருக்கு பிறந்த மகளை விற்க முயன்றதும் தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட பெண் தனது சகோதரியின் மகளின் திருமணத்தை நடத்துவதற்காக 5 இலட்சம் ரூபாயிற்கு பெற்ற மகளை விற்பனை செய்ய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் ஒரு பயணியால் எதிர் காலத்தை இழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன் : விமானி பணிநீக்கம்!!

Srilankan

ஜேர்மனி Frankfurt விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் கட்டுநாயக்கவை வந்தடைந்தது.

விமானப்பணியாள் ஒருவரின் வருகை தாமதம் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானியின் பதவியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாமதம் காரணமாக, Frankfurt விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டிருக்க வேண்டிய விமானம்,நேற்று காலை கட்டுநாயக்கவை அடைந்துள்ளதுடன் பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால் ஐரோப்பிய விதிமுறைகளுக்கு அமைய பயணிகளுக்கான நஸ்டஈடு வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தாமதத்தை காரணமாக கொண்டு குறித்த பிராங்போட் – கொழும்பு விமானசேவை எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நகரைக் காக்க இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கைகள்!!

Ilancheliyan

யாழ் குடாநாட்டில் திடீரென மீண்டும் இடம்பெறத் தொடங்கியுள்ள குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கும் நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டும், துரிதச் செயற்பாட்டு பொலிஸ் படையணியை (Rapid Action Police Force) உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

வடமாகாணத்தின் அதி முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகிய நல்லூர் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகின்ற சூழலில், கடந்த ஒரு வார காலமாக யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுக் கொலைகள், கொலை முயற்சிகள், படுகாயம் ஏற்படுத்தவல்ல தாக்குதல் சம்பவங்கள் சில இடங்களில் தலை தூக்கியிருக்கின்றன.

இதனால் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட யாழ் குடாநாட்டுக்கான உயர் பொலிஸ் அதிகாரிகள் நீதிபதி இளஞ்செழியனை அவருடைய அலுவலகத்தில் வெள்ளியன்று சந்தித்து எடுத்துரைத்தனர்.

இதன் போதே நீதிபதி இளஞ்செழியன் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் இதனைத் தெரிவித்தார்,

கடந்த ஒருவாரத்திற்கு முன்னரான மூன்று மாத காலப்பகுதியில் யாழ் குடாநாட்டின் சட்ட ஒழுங்கு நிலைமைகளை சீரான முறையில் தமது இறுக்கமான கட்டுப்பாட்டில் திருப்திகரமான முறையில் வைத்திருந்த பொலிஸாரை நீதிபதி இளஞ்செழியன் பாராட்டினார். மேலும் குறித்த சந்திப்பின் போது..

யாழில் ஏற்பட்டிருந்த அமைதி நிலைமை இப்போது தலையெடுத்துள்ள சில குற்றச்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அவற்றைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்கு விரைவுச் செயற்பாட்டு பொலிஸ் படையணி ஒன்றை உருவாக்கி பறக்கும் படையாக பொலிஸாரை செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், யாழில் திடீரென வாள்வெட்டு அதன் காரணமாக கொலை, கொலை முயற்சி, வெட்டுக்காயங்கள் போன்ற சில சம்பவங்கள் கடந்த வாரத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நிலைமையை வளரவிடக் கூடாது

இம்மாதம் 29, 30, 31 ஆகிய தினங்களிலும் ஆவணி மாதம் 29, 20, 31 ஆகிய 3 தினங்களும் நல்லூர் ஆலயத்தின் முக்கிய உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் சட்ட ஒழுங்கை சீராக மேற்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதுவிதமான குற்றச் செயல்களும் இடம்பெறா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், குற்றச் செயல்கள் நடைபெற்றால் உடனடியாக அவற்றை கட்டுப்படுத்துவதற்கு அதிவேக நடவடிக்கை எடுப்பதற்காக உடனடியாக யாழ் பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் அல்லது யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கட்டுப்பாட்டில் துரித செயற்பாட்டு பொலிஸ் படையணி ஒன்றை உருவாக்கி செயற்படுத்த வேண்டும்.

குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற இடத்திற்குத் துரிதமாக பொலிஸார் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இந்த செயற்பாடு அவசியமாகின்றது.

இதன் போது சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்தல், குற்றச் செயல்கள் இடம்பெறா வண்ணம் தடுத்தல், குற்றம் புரிவர்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இந்த படையணி விரைந்து செயற்பட முடியும்.

விரைவு செயற்பாட்டு பொலிஸ் படையணியானது, யாழ் குடாநாட்டின் எந்த பொலிஸ் நிலைய பிரதேசமாக இருந்தாலும் பிரதி பொலிஸ் மா அதிபர் அல்லது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலில் அங்கு பறக்கும் படையாக பொலிஸார் செயற்பட வேண்டும்.

குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். வேறு மாவட்டத்திற்கு சந்தேக நபர்கள் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கக் கூடாது. வேறு நாட்டுக்குத் தப்பிச் செல்லவும் இடமளிக்கக் கூடாது.

நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று சந்தேக நபர்கள் நாட்டைவிட்டு வெளியேறாத வண்ணம் விமான நிலையத்தில் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, கடல்வழியாக சந்தேக நபர்கள் தப்பிச் செல்ல முடியாத வண்ணம் கடற்படையை தயார் நிலைக்குக் கொண்டு வர வேண்டியதும், பொரிஸாரின் பொறுப்பாகும்.

அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் அதிவேகமாக செயற்பட்டு பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்ய கட்டளை பிறப்பிக்க வேண்டும்.

கொலை கொள்ளை, கற்பழிப்பு, வாள்வெட்டு போதைப் பொருள் கடத்தல் போன்ற பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி மேற்பார்வையில் விசாரணைகள் நடத்துவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும்.

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் கிராம சேவையாளர்களின் உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த 3 மாத காலமாக அமைதி நிலவியதைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டு மக்கள் பொலிஸார் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த ஒரு வாரமாக இடம்பெற்ற சில சம்பவங்கள் சீர்குலைத்து விட்டன.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ் குடாநாட்டு மக்கள் அமைதியாக வாழ பொலிஸார் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ வேண்டும் எனவும் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்

இதே வேளை சட்ட ஒழுங்கை நிலைநாட்டி, யாழ் குடாநாட்டில் அமைதியைப் பேணுவதற்கு துரிதமாகப் பொலிஸார் செயற்படுவார்கள் என்றும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள் எனவும் யாழ் குடாநாட்டுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் நீதிபதியிடம் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

சுவாதி படுகொலையின் பின்னணியில் பாஜகவின் கருப்பு முருகானந்தம்? பரபரப்புத் தகவல்கள்!!

Swathi

சுவாதி படுகொலை குறித்து பொலிசார் ஒரு புறம் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், மறுபக்கம் இந்த கொலை குறித்து தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பிரெஞ்சு தமிழச்சி.

சுவாதி படுகொலைக்குத் தேவையான கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு முருகானந்தம்தான். அவர் ஏற்பாடு செய்த நபர்கள்தான் கொலையைச் செய்தனர்.

கருப்பு முருகானந்தம்தான் ராம்குமாரையும் இந்த வழக்கில் கொண்டு வந்தவர். உண்மையி்ல் ராம்குமார் பலி ஆடு என்று பிரெஞ்சு தமிழச்சி புதுப் பதிவைப் போட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

சுவாதி படுகொலை – தென் காசியில் ஏன் குற்றவாளிகள் கிடைக்கிறார்கள்?

தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை இந்து முன்னணியைச் சேர்ந்தவர். இவர் முன்பு பாஜக கட்சியிலும் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் இருந்தவர். இதற்கு பிறகே இந்து முன்னணிக்குள் நுழைந்தார். இவர் மீது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான புகார்கள் உண்டு.

தஞ்சையைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபாண்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது உட்பட 38 வழக்குப் பதிவுகளும், அதில் 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ளன.

கிட்டத்தட்ட 40 பேர்கள் வரை படுகொலை செய்த சாதனைக்கு உரியவர் என்று கருதியதாலோ என்னவோ அதையே சிறப்புத் தகுதியாக பெருமை கொண்டு, சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைப்பெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, பிரதமர் மோடி இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தனிக்கதை என்றாலும் கருப்பு முருகானந்தம் என்பவர் யார்? அவருடைய அரசியல் பலம் என்ன? சட்ட விரோத நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதற்கான சிறு வரையறை தான் இந்த ‘அறிமுக’ குறிப்பு.

இந்த கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையை நிர்வகிப்பது, அப்படைக்கு ஆள் சேர்ப்பது, பெண்களை சப்ளை செய்வது போன்ற பங்களிப்பைச் செய்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை.

கருப்பு (எ) முருகானந்தம் மனைவியும் தன் பங்குக்கு பெண்களை வைத்து ‘பிராத்தல்’ கம்பெனிகள் நடத்தி வருகிறார்.

சுவாதியை படுகொலை செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவாக்கப்பட்ட போது ‘கருப்பு (எ) முருகானந்தம்’ தான் அந்த பாதகத்தைச் செய்யத் துணிந்தார். அதற்காக அவருடைய நெருங்கிய நண்பரான ‘தென்காசி’ தங்கதுரை ஆட்களை சப்ளை செய்தார்.

முத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி என்ற அந்த கூலி ஆட்கள்தான் சுவாதியை கொன்றது. தமிழக காவல்துறையினர் திரும்பத் திரும்ப சுவாதியை வெட்டியது ஒருவர் தான் என்பதை தொடர் செய்தியாய் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறது. அது பொய்.

சுவாதியை கொல்லும் போது நடந்த உண்மைச் சம்பவத்தை சொல்ல முற்பட்டவர்களை அங்கிருந்த மேலும் பல கூலிப்படை ஆட்கள், ‘ஒழுங்கா வூடு போய் சேர மாட்ட…’ என்ற மிரட்டல்களோடு அந்த உண்மையையும் சுவாதியோடு சாகடித்தனர்.

சுவாதியை கொன்று அந்த பழியை இஸ்லாமிய இளைஞர் மீது போட வேண்டும். அதன் மூலமாக இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்த வேண்டும் என்பது இந்து பரிவார அமைப்புகளின் நோக்கம். அதைத்தான் சுவாதி கொன்ற மறுநாளே இணையதளங்களில் வதந்தியை பரப்ப அது வேறு கோணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி விட்டது.

இப்போது மீண்டும் இந்து பரிவார அமைப்புகளுக்கு நெருக்கடி. அதே கூலிப்படைகளிடம் பலி ஆடு வேண்டும் என்கிறார்கள். அதற்காக காவல்துறையினரோடு சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் ஒரு தலைகாதல். அதற்கு ஹீரோ வேண்டுமே?

முத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி, தங்கதுரை தென்காசி கிராமங்களில் தேடித் திரிந்ததில் கிடைத்த ஹீரோதான் ராம்குமார். இதற்கு பிறகே அதிர்ச்சியளிக்கும் திட்டங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களோடு நடத்தப்பட்டது. ஒரு சில போலிசோடு வந்தவர்கள் ‘தென்காசி’ தங்கதுரையின் கூலிப்படைகள். அவர்கள் தான் ராம் குமாரின் கழுத்தை அறுத்தவர்கள்.

இந்த கொலையாளிகளுடன் சுவாதியின் அப்பாவிற்கும் சித்தாப்பாவிற்கும் என்ன தொடர்பு? இந்த கூலிப்படைகளோடு போனில் பேசினார்களா? என்று காவல்துறையினால் கண்டு பிடிக்க முடியாதா? அவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் ‘Airtel’ நிறுவனத்தில் காவல்துறையினரால் தகவல் பெற முடியாதா? எனக்கே கிடைத்திருக்கிறது. காவல்துறையினருக்கா கிடைக்காது?

சுவாதி படுகொலை தொடர்பான விசாரணையில் ஈகோ பிரச்சனை என்னவென்றால், “கொலையாளியை இரண்டே வாரத்தில் பிடித்து விட்டோம்” என்று தமிழக முதல்வரிடம் பரிசு பெற்றதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு, “நாங்கள் பிடித்த பலி ஆடு (ராம்குமார்) குருமா தான்”னு காவல்துறையினர் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தால் வழக்கு விசாரணை எப்படி வேறு கோணத்திற்கு நகர்த்தப்படும்?

பிரதமர் மோடிக்கு கடிதம் : தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை!!

Girl Dead

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பஞ்சாபைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூஜா (20) என்ற இளம் பெண் பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் 2ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை ஆவார்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பூஜாவுக்கு கடந்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் இலவசமாக தங்கும் விடுதி மற்றும் உணவு வசதி வழங்கப்படும் என்று உறுதியளித்து கல்லூரியில் சேர்த்துக் கொண்டது.

ஆனால் இந்த வருடம் கல்வியில் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி இலவச தங்கும் விடுதி சேவையை வழங்கவில்லை. இதனால் பூஜா வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் நிலை உண்டானது. அதற்கு செலவும் அதிகமாக ஆனது.

பூஜாவின் தந்தை அப்பகுதியில் காய்கறி விற்பனை செய்பவர். அவரால் தினமும் இந்த செலவை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பூஜா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பூஜாவின் 4 பக்க தற்கொலை கடிதத்தில் தன்னுடைய பயிற்சியாளரே தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என்று கூறி உள்ளார்.

மேலும், சமூதாயத்தில் என்னை போன்று உள்ள பிற பெண்களுக்கு தேவையான கல்வி வசதிகளை பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

ட்விட்டரில் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 3.6 இலட்சம் கணக்குகள் முடக்கம்!!

twittersuspension

கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயற்பட்ட சுமார் 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், விதிமுறைகளை மீறி செயற்படுவதாக ட்விட்டர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்நிறுவனம் கடந்த ஆண்டு 1.25 இலட்சம் கணக்குகளை முடக்கியது.

இந்நிலையில், மேலும் 2.35 இலட்சம் ட்விட்டர் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 3.6 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

ட்விட்டர் வலைத்தளத்தைப் பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அதுபோன்ற கணக்குகளை வலைத்தளத்தில் இருந்து நீக்குவதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கையர்கள் 6000 வருடங்களுக்கு முன் சர்வதேச தொடர்புகளை வைத்திருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!!

SL

இலங்கையர்கள் 6000 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச சமூகத்தினருடன் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான ஆதாரங்கள் பலாங்கொடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

களனி பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் முதுகலைமானி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் முன்னெடுக்கப்படும் அகழ்வுப்பணிகளில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அகழ்வின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய கண்டிபிடிப்பு இலங்கை மனிதகுல வரலாற்றில் முக்கிய மைல்கல் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அகழ்வின் போது சேதமடைந்த கல் ஆயுதங்கள் சிலவும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கிய வீடியோவில் காயங்களுடன் தோன்றிய சிறுவனின் சகோதரன் பலி!!

Dead

சிரியா நாட்டில் விமானப்படை தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அம்புலன்சில் அமர்ந்திருந்த 5 வயது சிறுவனின் சகோதரன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரத்தின் கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ளது.

இந்த பகுதியை மீட்பதற்காக, மேற்கு பகுதியில் இருந்து அரசின் விமானப்படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதால் அலெப்போ நகரம் எப்போதுமே போர்க்களமாக காணப்படுகிறது.

இந்நிலையில், இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றபோது 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். அவரது பெயர் ஓம்ரான் தக்னீஷ்.

அவரது தலையில் இரத்தக் காயங்களுடன் உடல் முழுவதும் தூசி படிந்திருந்தது. அவரை சிகிச்சைக்காக அம்புலன்சில் அமர வைத்தனர். அப்போது நடந்ததை அறியாத அந்த சிறுவன் தனது தலையில் இருந்து வழியும் இரத்தத்தினை கையால் துடைக்கும் வீடியோ காட்சி உலகம் முழுவதும் வாழும் மனிதநேயம் மிக்கவர்களை கதிகலங்க வைத்தது.

அதே கட்டிடம் இடிந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஓம்ரான் தக்னீஷின் மூத்த சகோதரனான 10 வயது சிறுவன் அலி நேற்று சிகிச்சை பலியின்றி மரணம் அடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள கிழக்கு அலெப்போ பகுதியில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் குழந்தைகள் உட்பட இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 15 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் போர் கண்காணிப்பு முகமை தெரிவித்துள்ளமை, குறிப்பிடத்தக்கது.

விபத்தில் மூவர் பலி!!

Accident

திஸ்ஸ – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் சற்றுமுன் விபத்து!!

 
வவுனியா குருமன்காட்டுசந்தியில் இன்று (21.08.2016) மதியம் 2.40 மணியளவில் ஏற்ப்பட்ட முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

குருமன்காட்டு முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலிருந்து வீதிக்கு ஏற முற்ப்பட்ட முச்சக்கரவண்டி வவுனியாவிலிருந்து மன்னார் வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலில் மோது விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

news (1) news (3) news (4) news (5) news (6) news (7) news (8)

வவுனியா மாவட்ட செயலகத்தில் குண்டு மீட்பு : அதிரடிப்படையினர் குவிப்பு!!

 
வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து இன்று (20.08.2016) பிற்பகல் 3.40 மணியளவில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட செயலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிட நிர்மாணப்பணியின் போது கட்டிட நிர்மாணப் பணியாளர்கள் குண்டு ஒன்றை மீட்டனர்.

இச் சம்பவத்தை உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சுமிச், அஸ்வின் ஆகிய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் நிர்மாணப்பணியாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் குண்டை மீட்டதுடன். இக் குண்டு பல வருடம் பழைமை வாய்ந்தது என தெரிவித்தனர்.

1 DSC_0071 DSC_0072 DSC_0073 DSC_0074 DSC_0075 DSC_0076 DSC_0077 DSC_0078 DSC_0080 DSC_0081 DSC_0082 DSC_0083 DSC_0088

ஹற்றனில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

Dead

ஹற்றன் செம்புவத்தை தோட்டத்தில் நேற்று மதியம் 22 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த தோட்டத்தின் வசிக்கும் 22 வயதான சிவலிங்கம் சசிகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் மரணம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இளைஞன் தனது வீட்டிலே தூக்கிட்டு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.