அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்புட்டானுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பழ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தைகளில் காணப்படும் கேள்விகளுக்கு அமைய ரம்புட்டான் அறுவடை இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, அனைத்து காலங்களிலும் அறுவடைக்கு கிடைக்க கூடிய ரம்புட்டான் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பழ ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பழ ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விஷமருந்தி உயிரிழந்துள்ளனர்.
தந்தை, மகன் மற்றும் மகள் ஆகிய மூவரே உயிரிழந்திருப்பதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
புனித பெனடிக் வீதியைச் சேர்ந்த வாசுதேவன் சிவகுமார் (46), சிவகுமார் கதர்ஷனி (12), சிவகுமார் கவின்சன் (09)ஆகியோரே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள சிறுமி கதர்ஷனி பம்பலப்பிட்டி இராமநாதன் கல்லூரியிலும், சிறுவன் கவின்சன் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்கும் மாணவர்களென்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்றுக் காலை 8.30 தொடக்கம் 10.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் இடம்பெற்றிருக்க வேண்டுமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்றுக் காலை மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டில் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் மயக்கமுற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளனர்.
அவர்கள் விஷம் அருந்தியதனாலேயே மயக்கமுற்றிருப்பதனை அறிந்து கொண்ட மனைவி உடனடியாக மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவில் கொண்டு சேர்த்துள்ளார்.
குற்றுயிருடன் அனுமதிக்கப்பட்ட மூவரினதும் உயிரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டபோதும் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர்.
விஷம் அருந்தியதன் காரணமாகவே மூவரும் உயிரிழந்திருப்பதனை வைத்தியர்கள் ஊர்ஜிதம் செய்திருப்பதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும் பிரேத பரிசோதனை முடிவடையும் வரை எதனையும் திட்டவட்டமாக கூற முடியாததனால் சந்தேகத்தின் பேரில் எவரையும் இதுவரை கைதுசெய்யவில்லையென நேற்று மாலையளவில் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தற்கொலையா? அல்லது தவறுதலாக நஞ்சு அருந்தியதனால் இடம்பெற்ற மரணமா? அல்லது திட்டமிட்டு எவரும் செய்த கொலையா? என்ற எந்தவொரு தீர்மானத்துக்கும் நேற்று மாலை வரை வரமுடியாத நிலையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் பொலிஸார் நடாத்திய தேடுதலில் சந்தேகத்திற்கிடமான எவ்வித தடயங்களும் கிடைத்திருக்கவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தை வெளியிலிருந்தே அன்றைய தினம் காலை உணவை வாங்கி வந்திருப்பதாக தெரியவருகிறது.
இவரது மகன் நாளை நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதனால் பெற்றோருக்காக பாடசாலையில் நடாத்தப்பட்ட செயலமர்வில் கலந்து கொள்வதற்காக மனைவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பி வந்தவேளையிலே வீட்டில் இவர்கள் குற்றுயிராகக் கிடப்பதை அவதானித்துள்ளார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதனால் இவர்கள் உட்கொண்ட உணவுகளின் மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது.
உலகில் போர் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் நாடுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரம் மோப்ப நாய்களில், இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான அல்வின் மெஜிஸ்டின் என்ற மோப்ப நாய் கூடுதல் கண்ணி வெடிகளை மீட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் இலங்கையைச் சேர்ந்த அல்வின் மெஜிஸ்டின் நாய்க்கு விசேட விருது வழங்கப்படவுள்ளது.
புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை மீட்பது தொடர்பில் ஏற்கனவே இலங்கையின் மற்றுமொரு மோப்ப நாயான கய்ரோ ஸ்பாடகெஸுக்கும் சர்வதேச விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோப்பா நாய் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தது. 2016ம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் போரின் போது புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அதிகளவில் அகற்றிய அல்வின் மோப்பநாய் பெல்ஜியத்தில் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில் அல்வின் மிகச் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் சமீபத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனைகளில் சிந்துவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் உலகின் 6 ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோஜோமி ஒகுஹாராவுடன் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மோதினார்.
இதில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து அவரை முதல் இரண்டு செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்குமுன்னேறினார். இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தையும் உறுதி செய்தார்.
இதனால்உலக மக்கள் அனைவரும் யார் இந்த சிந்து என கூகுளில் தேட தொடங்கியதே சிந்து முதல் இடம்பிடித்ததற்கு காரணமாக கருதப்படுகிறது
மேலும் மல்யுத்ததில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தை சேர்ந்தவர் ஹாஷ்மோட் அலி(வயது 40). இவர் காட்டுக்குள் சென்று தேன் எடுப்பது, விறகு எடுப்பது மற்றும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படி ஒருநாள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காட்டுக்குள் சென்ற போது அயர்ந்து உறங்கிவிட்டார்.
அடர்ந்த இருளில் புலி ஒன்று ஹாஷ்மோட்டை தாக்கியது, இதில் அவரது இடதுபக்க முகம் முற்றிலும் சேதமடைந்தது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த இவரது நண்பர்கள், புலியை துரத்தி விட்டு உயிருக்கு போராடிய ஹாஷ்மோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து அவர் உயிர் பிழைத்தாலும், இடதுபக்க முகம் விகாரமானது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை சரிசெய்ய அவரிடம் பணமில்லை, மற்ற வேலைகள் எதுவும் தெரியாததால் மீண்டும் காட்டுக்கே சென்று வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவரது மகளுக்கு திருமண வயது நெருங்கி விட்டாலும், இவருடைய தோற்றத்தால் யார் பெண் கேட்டு வரமாட்டேன் என்கிறார்கள் என்ற மனஉளைச்சலில் தவிக்கிறார்.
கடந்த 20 வருடங்களாக ஊர் திருவிழா, பொதுக்கூட்டம், உறவினர்கள் விழா என எந்தவொரு நிகழ்ச்சிக்கும் செல்வதில்லை என கூறும் ஹாஷ்மோட், மகளுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
எனினும் இதற்கான பணம் இல்லாத காரணத்தால் மற்றவர்களின் உதவியை நாடியுள்ளாராம் ஹாஷ்மோட்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் சமூகவலைதளத்தில் தன்னை ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் William Franklyn Miller(12) . இவருடைய புகைபடத்தை ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த புகைபடத்திற்கு பகிர்வுகள் வெள்ளம் போல அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் குவிந்தன.
மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாகவும், தற்போது வரை 152,000 பேர் பின்பற்றிவருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுவனின் தாயார் Will’s கூறியதாவது, சில பேர் போலியாக பின்பற்றுவதாகவும், மேலும் சிலர் இதை டேக் செய்து வருவதால், எந்த ஒரு கேள்வி என்றாலும் தனக்கு ட்விட் செய்யும் படியும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தான் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த இரண்டு தினங்களில் சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.
Franklyn Miller பல்வேறு தொலைக்காட்சி தொகுப்புகள் நடத்த வாய்ப்பு வருகிறதாம்.
தற்போது கூட இன்ஸ்டாபேமஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஸ்கைப் கேள்விகள் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் ரசிகர்கள் தங்கள் நாட்டிற்கும் வந்து இது போன்ற நிகழ்ச்சிகள் தொகுத்து நடத்துமாறு கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் Franklyn Miller ரோ படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், அமெரிக்க திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துவருவதாக கூறப்படுகிறது.
மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
எளிமையான வாழ்க்கையில் 120 வயதை எட்டியுள்ள அபூர்வ மனிதர். தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வதே அதற்கு காரணம் என்கிறார்.
வாரணாசி பகுதியில் வாழும், பிரம்மச்சாரியும் துறவியும் ஆன இவர் கடுமையான வறுமையிலும் பல நாட்கள் பட்டினி கிடந்தும் இளம் பருவத்தை கடந்திருக்கிறார்.
இவருடைய பெற்றோர் இவருக்கு ஆறு வயதிருக்கும்போதே இறந்துவிட்டனர். இவர் ஆன்மீக ஈடுபாட்டால் கோயிலில் ஒரு குருவிடம் அடைக்கலமானார்.
இவருக்கு உறவினர்கள் இருக்கின்றனர். ஆனால், அவர்களிடமிருந்து ஆன்மீகப் பணி காரணமாக தனித்தே வாழ்கிறார்.
இவர் கல்கத்தா நகருக்கு ஆன்மீகப் பயணியாக சென்றபோது, யோகா கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை விடாமல் இன்னும் கடைப்பிடித்து வருகிறார்.
யோகா பயிற்சியையும் ஒழுக்கத்தையும் ஒரு வைராக்கிய நெறியோடு கடைப்பிடித்து வருகிறார். இவருடைய எளிமையான பழக்கவழக்கங்களும் நலத்துக்கு ஒத்துழைக்கின்றன. பிரம்மச்சாரி என்பதோடு, எந்தவிதத்திலும் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட் ஆதாரம்: பாஸ்போர்ட் படி ஆகஸ்ட் 8, 1896 ல் பிறந்துள்ளார். அந்த கணக்குப்படி பார்த்தால் மூன்று நூற்றாண்டுகளாக பூமியில் வாழ்பவர் இவரே! வாழ்நாள் சாதனையாளர்களாக பலரை குறிப்பிடுகிறார்கள். ஆனால், வாழும் நாட்கணக்கிலே இவர் சாதனையாளராக உள்ளார். இதற்காக இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.
அதற்கு காரணம், உலகப் பதிவுப்படி உலகின் மூத்தவராக இருந்த ஜப்பானியர் ஜீரோமோன் கிமுறா ஜூன் 2013 ம் ஆண்டில் தனது 116 வயதில் இறந்துவிட்டார். அதனால், இப்போது சிவானந்தா உலகின் முதியவர் என்பது உறுதியாகிறது.
பாஸ்போர்ட் அதிகாரிகள் அவர் வயதை கோயில் பதிவில் உள்ளதோடு ஒப்பிட்டும் உறுதிசெய்துள்ளனர். ஆனாலும், பல இந்தியர்கள் 12 வயது வரை குறைத்தும் பதிந்துள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.
பிரபலமாவதை விரும்பாத சிவானந்த, தனது முதுமையை உலகப் பதிவில் இடம்பெறச் செய்ய விரும்பவில்லை அவருடைய நல விரும்பிகளே ஏற்பாடு செய்கின்றனர்.
அதே சமயம், வினோதமான முதுமைத் தோற்றம் அவர் 120 க்கு உரியவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இப்போதும் நீண்ட தூரத்துக்கு என்னால் ரயிலில் சுதந்திரமாக பயணம் செய்ய முடியும் எந்த மருத்துவ சிக்கலும் எனக்கு ஏற்படாது என்கிறார்.
மேலும், மின்சாரம், கார், தொலைக்காட்சி, போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளை நான் விரும்புவதில்லை. தற்போது நான் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி நிறைந்த வாழ்வை வாழ்ந்து வருகிறேன் என்று கூறுகிறார்.
சிவானந்தாவின் சில பழக்கங்கள்: பலநாள் வெறும் வயிற்றுடன் தூங்கியிருக்கிறேன் என்கிற, இவரது சாப்பாடு மிகவும் எளிமையானதுதான். பால், பழங்களையே ஒரு ஆடம்பர உணவாக நினைத்து ஒதுக்குகிறார் என்றால் பாருங்களேன்.
எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்காமல், வேகவைத்த அரிசி, குண்டு பருப்பு, இரண்டு பச்சைமிளகாய் தான் இவர் உணவாக சாப்பிடுகிறார்.
தூங்கும்போது, தலைக்கு தலையணைக்குப் பதிலாக ஒரு பலகையையே வைத்துக்கொள்கிறார்.
இவருடைய உயரம் 1.58 மீட்டர், பொதுவாக, 100 வயதுக்கு மேற்பட்டவர்களாக ஊடகங்களில் அறிமுகமாகிறவர்களின் தோற்றம் மிக சுருக்கங்களுடன் நலிவுற்றே காணப்படும். ஆனால், சிவானந்தா அப்படி இல்லை.
70 வயதில் ஒரு ஆரோக்கியமுள்ள முதியவர் போலவே தோன்றுகிறார்.
யோகாவை பற்றி எத்தனையோ சிறப்புகள் அதை நன்கு அறிந்தவர்களால் சொல்லப்படுகிறது. அதை முறையாக கடைப்பிடிக்க தெரிந்தவர்களுக்கு இந்த சாதனை சாதாரணம் என்பது போலவே சிவானந்தா பேச்சும் உள்ளது.
சிலர் யோகா பயிற்சி செய்தாலும் அதன் சரியான நலத்தை அடைவதில்லை. அதற்கு காரணம் கடைப்பிடிப்பதில் உள்ள குறைபாடுகளே!
இவர் ஒரு உணவு பாடம்: மருத்துவர்கள் உட்பட, உடல் நல பராமரிப்பு பற்றி ஊடகங்களில் பேசுபவர்கள். அனைத்து சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவு அவசியத்தையும், ஏதேனும் ஒரு சத்து குறைந்தாலோ, செலவளிக்கப்படாத கலோரிகள் உடலில் சேர்வதாலோ வரும் நோய்கள் பற்றியும் கூறி அச்சுறுத்துவார்கள்.
இன்னொருபுறம் நவீன ஆடம்பரமான க்ரீம் வகை உணவுகள், பீட்சா, பார்க்கர் என நகர மக்களை பிடித்து சுழற்றிக்கொண்டிருக்கிறது.
ஆனால், எளிமையான உணவும் பட்டினியுமாக 120 வயது வரை வாழ்ந்திருக்கிறார். இது மருத்துவர்களாலும் பின்பற்ற முடியாத ஒரு சாதனை அதுமட்டுமல்ல, உடலை பாதுகாப்பதே எளிமையான உணவுகள் மற்றும் பழக்கங்கள்தான் என்பதும் புரிகிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த சூழலில் இருந்து, வெகுதூரத்துக்குச் சமுதாயத்தை கொண்டு சென்றுவிட்டோம். எளிதாக திரும்ப முடியாத ஆடம்பரத்துக்குள் இறுக்கிக் கொண்டோம். என்பதை இந்த வேளையில் நாம் உணரலாம்.
திரைப்பட இயக்குநர் சேரனின் சிடூஎச் நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அதன் நிர்வாகியான சேரன் மகள் விசாரணைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இயக்குநர் சேரன் கடந்த ஆண்டு சிடூஎச் என்ற திரைப்பட விநியோகம் ஒன்றை தொடங்கினார். அதன் மூலம் திரைப்படங்கள் சீடிக்களாக வீட்டிற்கு சென்றடையும் வகையில் மாவட்டம் தோறும் விநியோகஸ்தர்களை நியமித்தார்.
ஆனால் அந்நிறுவனம் சரிவர செயல்படாத காரணத்தினால், தருமபுரி விநியோகஸ்தர் பிரசன்ன வாசுதேவன் தான் வைப்பு நிதியாக கொடுத்த 4.53 லட்சம் ரூபாயை கேட்டுள்ளார்.
இந்த பணத்தை அவருக்கு நேரடியாக கொடுக்காமல், காசோலையாக கொடுத்துள்ளனர். ஆனால் அது வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பபட்டது.
இதனால் அவர் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைமுறைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தருமபுரி நீதி மன்ற நீதிபதி சண்முகவேல் ராஜன், நிறுவனத்தின் நிர்வாகியான சேரன் மகள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, தற்போதும் ஆஜராகவில்லை இதனால் அவர் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறபிப்பதாக அறிவித்தார்.
இதனால் அவர் ஜாமீனில் வெளிவரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு நுரையீரலில் ஒரு பகுதியை இழந்த 54 வயதுடைய சன்டியாகோ லெங், மிகவும் கடினமான பாய்மரப் படகோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் எத்தகைய தடைகள் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு இலக்கை அடைய முடியும் என்பதை சன்டியாகோ நிரூபித்துள்ளார்.
ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான படகோட்டப் போட்டிகள் மரினா டா குளோறியா நீர்நிலையில் நடைபெற்றன.
செவ்வாயன்று நடைபெற்ற நக்ரா 17 கலவை இரட்டைப் பாய்மரப் படகோட்டப் போட்டியில் 29 வயதுடைய சிசிலியா கரன்ஸா சரோலியுடன் ஜோடி சேர்ந்து ஆர்ஜன்டீனாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
பாய்மரப் படகோட்டத்தில் பங்குபற்றிய வீரர்களில் வயதில் மூத்தவரான சன்டியாகோ சிரமங்களை எதிர்கொண்டு வந்த வருடத்தில் உரிய பலனை ரியொ ஒலிம்பிக்கில் பெற்றுக்கொண்டார்.
படகோட்டத்தில் பங்குபற்றும் அவரது இரண்டு மகன்மாரான யாகோ, க்ளோஸ் ஆகிய இருவரும் தந்தையின் வெற்றியைக் கொண்டாடுமுகமாக கரையிலிருந்து நீந்திச் சென்று தந்தையை ஆரத்தழுவி பாராட்டினர்.
கடந்த வருடம் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட சன்டியாகோ லெங், இதற்கு முன்னர் 5 ஒலிம்பிக் அத்தியாயங்களில் பங்குபற்றியிருந்ததுடன் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தார்.
இதனை அடுத்து தென் அமெரிக்காவில் முதல் தடவையாக நடத்தப்படும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
கடந்த ஐந்து அத்தியாயங்களில் வெல்ல முடியாமல் போன தங்கப் பதக்கத்தை இம் முறை வென்றதையிட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதாக சன்டியாகோ லெங் தெரிவித்தார்.
இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். மேலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கும் வாழைப்பழம் தான் சிறந்தது என்று அனைத்து மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.
இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.
ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும்.
உடல் எடை அதிகரிக்கும். ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. 15 நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.
இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும் என்று கூறுவதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது.
வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
12 வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படும்.
வயதானவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும். எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.
ஜோக்கர் படத்தை பார்த்த தனுஷ் கண்ணீர் விட்டுள்ளார். மேலும் ஜோக்கர் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜுமுருகன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜோக்கர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் ஜோக்கர் படத்தினை நடிகர் தனுஷ் பார்த்துள்ளார். குறித்த படத்தை பார்த்த பிறகு அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் , யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய தமிழ் திரைப்படநடிகர் பராட்டா சூரி தனது காரில் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது நிஜமான அமானுஷ்யத்தை (பேய்) நேரில் பார்த்ததாக தெரிவித்து அதனை வீடியோ எடுத்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றியுள்ளார்.
குறித்த காணொளியானது சமூகவலைத்தளங்களில் தீயாகப் பரவிவருகின்றது.
கோயம்புத்தூரில் இருந்து பழனி நோக்கி தனது வாகனத்தில் அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருக்கையிலேயே குறித்த அமானுஷ்யத்தை நேரில் கண்டதாக சூரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அது உண்மையில் பேய் எனவும் நம்ப முடியாத உண்மையெனவும் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் பெட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கடும் போராட்டத்திற்குப்பின் 1-2 என தோல்வியடைந்து தங்க பதக்கத்தை தவற விட்டார்.
இந்தியா உட்பட ஆசிய நாடுகள் எதிர்பார்த்த ரியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான பேட்மிண்டன் இறுதிப் போட்டி இன்றிரவு 7.40 மணியளவில் தொடங்கியது. இதில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினாவை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே ஸ்பெயின் வீராங்கனை கரோலினா அபாரமாக விளையாடினார். அவருக்கு இணையாக சிந்துவும் விளையாடினார். ஒரு கட்டத்தில் சிந்து 4-8 என பின்தங்கியிருந்தார். அதன்பின் சுதாரித்து விளையாடி முன்னணி பெற்றார். பரபரப்பாக சென்ற முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார் சிந்து.
2ஆவது செட்டில் கரோலினா மிகவும் சிறப்பாக விளையாடினார். ஒருகட்டத்தில் பி.வி. சிந்து 4-12 என பின்தங்கினார். அதன்பின்னர் கடுமையாகப் போராடியும் முன்னிலை பெற முடியவில்லை. இறுதியில் அந்த செட்டை 12-21 என இழந்தார்.
இதையடுத்து தங்கப்பதக்க்ததை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் ஸ்பெயின் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். சிந்து பதற்றத்துடன் விளையாட, மரின் கரோலினா மிகவும் சாதாரண நிலையுடன் காணப்பட்டார். கரோலினா 6-1 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சிந்து ஒன்றிரண்டு புள்ளிகளை பெற 9-4 என கரோலின் முன்னேறினார்.
அதன்பின் சிந்து எழுச்சி பெற்று புள்ளிகள் பெற, 10-10 சமநிலையடைந்தார். பின்னர் கரோலின் தொடர்ந்து 4 புள்ளிகளை பெற்று ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அதன்பின் இருவரும் தலா ஒரு புள்ளிகளை பெற 15-11 என ஸ்பெயின் வீராங்கனை முன்னிலையில் இருந்தார். அதன்பின் பி.வி. சிந்துவால் முன்னிலை பெற முடியவில்லை. ஆகவே, 3ஆவது செட்டை 15-21 என இழந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கரோலின் தங்கப் பதக்கம் வென்றதோடு ஒலிம்பிக் பெட்மிண்டனில் முதல் தங்கப் பதக்கம் வென்ற ஐரோப்பிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
உலகின் மிக நீளமா விமானமான எயார்லேண்டர் 10 (Airlander 10) தனது முதலாவது பயணத்தை புதன் அன்று வெற்றிகரமாக தொடங்கியது. லண்டனில் இருந்து வடக்கே உள்ள பெட்ஃபோர்டில் இருந்து புறப்பட்ட விமானமானது 15 நிமிடத்தில் 2000 அடியை எட்டியது.
முன்னதாக எயார்லேண்டரின் முதல் பயணம் ஞாயிறன்று தொடங்குவதாக இருந்தது ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தள்ளிவைக்கப்பட்டது.
பிரிட்டனின் ஹைபிரிட் ஏர் வெஹிகிள்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த விமானமானது ஆட்களோடு ஐந்து நாட்கள் வரையில் தொடர்ந்து பயணிக்கக்கூடியது.
ஆளில்லாத நிலையில் இரண்டு வாரங்கள் வரை தொடர்ந்து பறக்கும் வல்லமை படைத்தது மற்ற விமானங்களை விட குறைந்த அளவிலான எரிபொருளை செலவிடும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் சாதாரண பயணிகள் விமானத்தை விட 50 அடி கூடுதல் நீளமுடையது.