வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா A9 வீதி சோயா வீதிக்கு அருகே இன்று ( 20.08.2016) அதிகாலை 12.20 மணியளவில் டிப்பர் – மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது, இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

A9 வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்தின் சாரதி நித்திரை தூக்கத்தின் காரணமாக முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிலிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கில் முற்றாக சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 news (1)  news (4)news (2)

பொது இடத்தில் நிர்வாண நிலையில் டொனால் டிரமப்!!(காணொளி இணைப்பு)

 
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண உருவ சிலைகள் அமெரிக்காவில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்பின் நிர்வாண சிலை சன் பிரான்சிஸ்கோ, லொஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லன்ட், சியாட்டில், மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இண்டி கிளின் என்ற குழுவை சேர்ந்தவர்களே இச்செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது, மேலும் சிலைக்கு கீழ் ஒரு பெயர் பலகையில் “The Emperor Has No Balls.” INDECLINE என பொரிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சை மிகுந்த கருத்துகளை கூறிய போதேல்லாம், இண்டி கிளின் (INDECLINE) குழு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல வித்தியாசமான வழிகளில் போராட்டம் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் நிர்வாண சிலையை பார்வையிடும் பொது மக்கள், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியும் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10

விடீயோவைப் பார்க்க

ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு வினோதம் : விட்டுக் கொடுக்காத அமெரிக்கா: பாடம் கற்ற பிரேசில்!!

 
ரியோ ஒலிம்பிக் 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடந்த 400*100 மகளிர் ரிலே ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் கோலை மாற்றிக் கொள்ளும் போது கோலை தவறவிட்டனர். இதனால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் பிரேசில் வீராங்கனையின் இடர்பாட்டால் தான் அவ்வாறு நடந்ததாக அமெரிக்க வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.
இதனையடுத்து நடுவர்கள் வீடியோவை ஆராய்ந்து பார்த்ததில் பிரேசில் வீராங்கனையின் தோல்பட்டை அமெரிக்க வீராங்கனையின் உடலில் படுவதை கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து பிரேசில் அணியை நீக்கிவிட்டு, அமெரிக்க அணிக்கு மீண்டும் தனியாக போட்டி வைத்தனர். இதில் 41.77 வினாடியில் ஓட்டத்தினை நிறைவு செய்த அமெரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

2வது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேசமயம் பிரேசில் அணி இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

11 12 13 14

14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் விளக்கமறியலில்!!

Abu

14 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவரை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான இளைஞன் தனது தங்கை உறவு முறையான சிறுமி ஒருவரையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதுதொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக தலைமறைவாகியிருந்த சந்தேகநபரை பாலமுனை பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் (17) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

28 வயதான இளைஞனே சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகபரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு!!

1

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மொத்த நீளம் 430 மீட்டர். 6 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கிறது. இதன் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே முடிந்து விட்டன. இந்த வாரத்தில் பாலம் பொதுமக்கள் நடந்து செல்ல திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 8 ஆயிரம் பேர் மட்டும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு ஒரு நாள் முன் கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும்.

சமீபத்தில் இந்த பாலத்தில் 2 டன் எடை கொண்ட மின் லாரி ஒன்றை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அவ்வளவு எடையையும் அந்த பாலம் தாங்கியது குறிப்பிடத்தக்கது.

3 4

குண்டுவீச்சில் உயிர் பிழைத்த சிறுவன் : நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ!!

Boy

சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதி போர்க்களமாக காணப்படுகிறது.

இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

இந்த கட்டிடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டான். அவனது பெயர் ஓம்ரான் தக்னீஷ்.

அவனது தலையில் ரத்தக் காயங்களுடன் உடல் முழுவதும் மண் தூசி படிந்திருந்தது. அவனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அமர வைத்தனர்.

அப்போது நடந்ததை அறியாத அந்த சிறுவன் தனது தலையில் இருந்து வழியும் ரத்தத்தினை கையால் துடைக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான அறிவுறுத்தல்!!

Scholarship

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தமது பரீட்சை சுட்டெண்ணை சீருடையின் இடது பக்கத்தில் குறித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் மாணவர்களை உரிய நேரத்தில் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்து வருவதுடன், பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் உள்நுழைவதற்கு பெற்றோருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அனமதியின்றி எவரும் பரீட்சை நடைபெறும் நிலையங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை என்பதுடன், பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை கைதுசெய்யும் படி பரீட்சைகள் திணைக்களம் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 2959 மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறுகின்றது.

350,701 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதோடு, இதில் 421 மாணவர்கள் விசேட தேவையுடையவர்கள் என்றும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

கொட்டாஞ்சேனையில் சோகம் : தந்தை, மகன், மகள் தற்கொலை!!

Body

கொட்டாஞ்சேனை, வாசல மாவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 47 வயது தந்தை, 13 வயது மகள் மற்றும் 09 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் விஷமருந்தியிருப்பதாக அயலவர்களுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் மூவரும் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் -2016(அறிவித்தல்)

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நாளை   (20.08)  சனிக்கிழமை முற்பகல்   11.30  மணியளவில்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கனக சிவராஜா குருக்கள் தலைமையில் இடம்பெறுகிறது .

மேற்படி மகோற்சவத்தில்

27.08.2016 அன்று  சப்பர திருவிழாவும்

28.08.2016 அன்று இரதோற்சவமும்

29.08.2016  அன்று தீர்த்த உற்சவமும் இடம்பெறும்

அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

ஆலய மகோற்சவ நிகழ்வுகள் தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

410 13912805_10210258058274766_1465876284657973984_n ukilaankulam

 

 

வவுனியா வேப்பங்குளத்தில் முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (19.08.2016) காலை 9.00 மணியளவில் ஏற்ப்பட்ட முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிலை அதே வழியில் பயணித்த முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்ப்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிலிலுடன் மோதுண்டு அருகே காணப்பட்ட வாடிகாலிலும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

1 DSC_0057 DSC_0058 DSC_0059 DSC_0060 DSC_0061 DSC_0063 DSC_0064 DSC_0065 DSC_0066 DSC_0067 DSC_0068 DSC_0069

உசைன் போல்ட்டுக்கு மேலுமொரு தங்கம்!!

RIO DE JANEIRO, BRAZIL - AUGUST 17: Usain Bolt of Jamaica gestures prior to competing in the Men's 200m Semifinals on Day 12 of the Rio 2016 Olympic Games at the Olympic Stadium on August 17, 2016 in Rio de Janeiro, Brazil. (Photo by Cameron Spencer/Getty Images)

ரியோ ஒலிம்பிக் விழாவில் ஆடவருக்கான 200 மீட்டர் இறுதிப் போட்டியில் உலகின் அதிவேக மனிதரான ஜமேக்காவின் உசைன் போல்ட் வெற்றிபெற்றார்.

ரியோடி ஜெனிரோ ஒலிம்பிக் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 19.78 காலப்பெறுதியில் வெற்றி பெற்று உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

உசைன் போல்ட் 2008 ல் பீஜிங்கில் இடம்பெற்ற போட்டியிலும் 2012 இல் லண்டனில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!

Ranil

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு “புதிய நாடு – ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் கொண்டாட்ட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் கூட்டிணைவால் நாட்டில் முதல்தடவையாக இணக்க அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் கோடிட்டுக் காட்டக்கூடிய ஒரு மைல் கல்லாக இது அடையாளப்படுத்தப்படுகின்றது.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்ட புதிய வேலைத்திட்டமொன்றை நாட்டில் முன்னெடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

முன்னைய அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை ஒழித்து, வெளிப்படைத் தன்மையுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதும் புதிய அரசாங்கம் எதிர்நோக்கியிருந்த மற்றுமொரு சவாலாக அமைந்தது.

வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக கே.கே.மஸ்தான் ஜனாதிபதியால் நியமனம்!!

Masthan

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியானது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து காணப்படுவதால் தமிழ் முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி மஸ்தான் எம்பியும், சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர் தர்மபாலாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இறுதியாக இடம் பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி விருதுக்கு தெரிவான தமிழ் இளைஞன்!!

1

நுவரெலியா மாவட்டத்தில் டயகம பிரதேசத்தை சேர்ந்த நடராஜா இமாசுதன் என்ற இளைஞரொருவர் புத்தாக்க ஆணைக்குழுவினால் ஜனாதிபதி விருதை பெற்றுக்கொள்வதற்கு தெரிவாகியுள்ளார்.

Gsm controller என்ற இந்த சாதனத்தினூடாக கைத்தொலை பேசிக்கு ஒலிசமிக்ஞை செய்யக்கூடிய சிறந்த உபகரணத்தை கண்டுபிடித்தமைக்காகவே இந்த விருது வழங்கப்படவிருக்கின்றது.

இவர் கண்டுபிடித்த இந்த சாதனத்தை கொண்டு உயிர் உடைமைகளுக்கு பாதுகாப்பினை வழங்க முடியுமென இமாசுதன் தெரிவிக்கின்றார்.

இதைப்போன்ற சாதனம் இன்னும் உருவாகவில்லை எனவும், இக்கருவியை முழுமையாக நிறைவு செய்வதற்கு பல தடைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இவர் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று, தற்போது திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 3

நடிகர் மாதவன் மீதான வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு!!

Mathavan

பழநி பாலசமுத்திரத்தில் நடிகர் மாதவனுக்கு சொந்தமாக 4.88 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ராஜவாய்க்காலின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இருப்பதாகவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்றக் கோரியும் என்.கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குதொடர்ந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பழனி வட்டாசியர் தாக்கல்செய்த பதில் மனுவில், அரசுநிலத்தை மனுதாரர் மாதவன் ஆக்கிரமிப்பு செய்யவில்லை.ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு இடையூறு செய்யவில்லை.

வாய்க்காலில்சீராக தண்ணீர் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாருக்கும் இடையூறு இல்லாமல் அவரதுசொந்த இடத்தில்தான் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர்அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்குவந்தது.

பழனி வட்டாட்சியரின் பதில் மனுவை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவேண்டிய அவசியம் இல்லை எனகூறி வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற காதல் ஜோடி!!

1

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டியில், உள்ளரங்க ஓடுபாதையில் நடக்கக்கூடிய கெய்ரன் டிராக் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஜாசன் கென்னி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

நடப்பு ஒலிம்பிக்கில் அவரது 3வது தங்கமாகும். மொத்தத்தில் அவரது ஒலிம்பிக் தங்கத்தின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக தங்கம் வென்றவரான முன்னாள் சைக்கிள் பந்தய வீரர் சர் கிறிஸ் ஹோயின் சாதனையை 28 வயதான ஜாசன் கென்னி சமன் செய்தார்.

இவரது காதலியும் வருங்கால மனைவியுமான 24 வயதான லாரா டிரோட்டும் சைக்கிள் பந்தய வீராங்கனை தான். இதே நாளில் நடந்த ஒம்னியம் பிரிவில் சம்பியன் மகுடத்தை தக்க வைத்து பிரமாதப்படுத்தினார்.

ஒலிம்பிக் போட்டிகளில் தனது தங்கப்பதக்கத்தை 4ஆக உயர்த்திய லாரா டிரோட், அதிக தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.

தங்க ஜோடியாக வலம் வந்த கென்னி-லாரா டிரோட் மைதானத்தில் முத்தமழை பொழிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஏற்கனவே நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இவர்கள் அடுத்த மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் சைக்கிள் பந்தயத்தில் மட்டும் இங்கிலாந்து 6 தங்கம் உள்பட 12 பதக்கங்களை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

2 3