இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்த தனித்தனி சம்பவங்களில், இரண்டு இளம் குழந்தைகள் உள்ளிட்ட மூவர் பட்ட நூலால் கழுத்தறுக்கப்பட்டு இறந்துள்ளனர்.
பட்டம் விடும் போட்டியில், மற்ற பட்டங்களின் நூல்களை அறுப்பதற்காக கண்ணாடி துண்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும் பட்டத்தின் நூலால் தங்கள் கழுத்தறுக்கப்பட்டு மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் தன் குடும்பத்துடன் திரைப்படம் பார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியும் அடக்குவார். காரில் உள்ள சன் ரூஃ ப் வசதியை விட்டு சாலையில் எட்டிப் பார்த்த போது, சிறுமியின் கழுத்து சாலையில் பறந்து கொண்டிருந்த பட்ட நூலால் அறுபட்டது.
இதே போன்ற சம்பவத்தால் ஒரு நான்கு வயது சிறுவனும் இறந்துள்ளான். டெல்லியில் தற்போது இது போன்று பிரத்யோகமாக கூர்மையாக்கப்படும் நூல்களுடன் பட்டங்கள் விட அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
இலங்கையில் டெங்கு நோயால் மூன்று பேர் உயிரிழக்கும் போது, புகையிலை பாவனையால் நாள் ஒன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமன் குமார இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆண்டு ஒன்றுக்கு புகையிலை பாவனையால் இலங்கையில் 20,000 பேர் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடக அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உலகில் 95 வீதமானோர் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் 22 வீதமான ஆண்கள் புகைத்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மதுபானம் பாவிப்பதில், காரத்தன்மையான அல்லது உடலுக்கு மிகவும் கேடான மதுபானம் பாவிப்பவர்களில், உலக தரவரிசையில் இலங்கை முதலிடம் வகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்த ராஜசேகர்(29) என்பவருக்கு மேகலா(26) என்ற மனைவியும், முத்துசெல்வி(8), காவியா(6), ஆர்த்தி(3) என்ற மூன்று பெண்குழந்தைகளும் உள்ளன.
ராஜசேகருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா அடித்தல் போன்ற பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
இந்நிலையில் நேற்றிரவு ராஜசேகர் அதிக அளவு மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அவரை கழுத்து நெரித்து கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இதனால் உயிருக்கு பயந்த அவரது மனைவி அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மனைவி தன்னை தனியாக விட்டு விட்டு சென்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக எழுப்பி தலைக்கு அடிக்கும் சாயத்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.
இதனால் அக்குழந்தைகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி துடித்து இறந்தனர்.
காலையில் போதை தெளிந்த ராஜசேகர் குழந்தைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்த மக்கள் அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த போது மூன்று குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அவரது மனைவிக்கு தகவல் அனுப்பினர். அதன் பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் என் கணவரின் போதை பழக்கமே தன் மூன்று குழந்தைகளின் உயிரை பறித்து விட்டது என அவரது தாயார் அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதி நவீன செல்பேசிகளான ஸ்மார்ட் ஃபோன்களால் மூளையின் நினைவுத்திறன் பாதிக்கப்படுவதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Trend in Cognitive Sciences எனும் இதழில், மூளை செயற்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் சாம் கில்பர்ட் விளக்கமளித்துள்ளார்.
ஸ்மார்ட் ஃபோன்கள், மடிக்கணினிகள், கணினிகள் ஆகியவை நமது அன்றாடச் செயல்களை எளிதாக்குகின்றன. அவற்றின் உதவியுடன் தேவையான தகவல்களை உடனடியாகத் தேடித் தெரிந்துகொள்ள முடிகிறது.
இவற்றின் வரவால் பலவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவை நமக்கு இல்லாமற்போனது. இதனால் மூளை தேவையில்லாமல் பல பணிகளை செய்ய வேண்டிய அவசியமும் இல்லாமற்போனது.
இதன் மூலம் மூளையின் செயற்திறன் ஏராளமாக சேமிக்கப்படுகிறது. இவ்வாறு செயற்திறன் சேமிக்கப்படுவதால், மூளையின் நினைவுத்திறன் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், நவீன சாதனங்களை அதிகம் பயன்படுத்துவதால், மூளையின் நினைவுத்திறன் குறைந்துவிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எனவே, ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட நவீன சாதனங்களின் உதவியுடன் மூளையின் வேலைச்சுமையைக் குறைக்கும் அதே நேரத்தில், அது நமது நினைவுத்திறனை எந்த அளவு பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என சாம் கில்பர்ட் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் தாயொருவர் அவரது குழந்தையினை நிர்வாணமாக கடையொன்றிக்கு அழைத்து சென்ற சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய சீனாவில் ஈனன் மாவட்டத்தில் சிங்ஹாங் பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி குறித்த தாய் அவரது குழந்தையினை நிர்வாணமாக சூப்பர் மாக்கெட் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த 2 வயது நிரம்பிய குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவைச் சேர்ந்த 908 பேர் தமது தலைகளை மொட்டையடித்துக் கொண்டதன் மூலம், தமது நகரில் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சியோங்ஜூ எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு விநோதமான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களாவர்.
வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதலை முறியடிப்பதற்காக சியோங்ஜூ பிராந்தியத்தில் வட அமெரிக்காவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மேற்படி எதிர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் 908 பேர் தமது தலைகளை மொட்டையடித்துக் கொண்டனர் என ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் வலிமையான எதிர்ப்பு வெளிப்பாடாகும் என அவர் கூறினார். கடந்த ஜனவரி மாதம் தனது நான்காவது அணுவாயுத சோதனையை வடகொரியா நடத்தியது.
அதன்பின் செய்மதியொன்றை ஏவியதுடன் ஏவுகணை சோதனைகளையும் நடத்தியது. இதனால், தென் கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நவீன ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்குப் பொருத்தமான இடத்தை தான் ஆராய்ந்து வருவதாக தென் கொரிய ஜனாதிபதி பார்க் க்வென் ஹை அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சியோங்ஜூ பிராந்தியத்தில் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை நிறுவ அங்குள்ள மக்கள் ஆட்சேபித்தால் வேறு இடம் கருத்திற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஜெமெய்க்கா நாட்டின் தேசிய ரீதியான மிஸ் யூனிவர்ஸ் ஜெமெய்க்கா அழகு ராணியாக முடிசூட்டப் பட்டிருந்த ஷேர்லின் ரெட்லெய்னிடமிருந்து அப் பட்டம் பறிக்கப் பட்டுள்ளதாக மேற்படி அழகுராணி போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித் துள்ளனர்.
இப் போட்டி ஏற்பாட்டாளர் களுக்கு எதிராக ஷேர்லின் ரெட்லெய்ன் வழக்குத் தொடுத்த நிலையில் இப் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் ஜெமெய்க்கா அழகுராணி போட்டியில் ஷேர்லின் ரெட்லெய்ன் முதலிடம் பெற்றார்.
கடந்த டிசெம்பர் மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளில் ஜெமெய்க்காவின் சார்பில் அவர் பங்கு பற்றினார்.
எனினும், மிஸ் யூனிர்வஸ் ஜெமெய்க்கா அழகுராணியாக தெரிவு செய்யப் பட்டமைக்காக தனக்கு வழங்கப்பட வேண்டிய பரிசுப் பணம் மற்றும் கொடுப் பனவுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் முறையாக வழங்கவில்லை என ஷேர்லின் குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பாக, மிஸ் யூனிர்வஸ் ஜெமெய்க்கா போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குத் தாக்கல் செய்தார்.
ஜனவரி மாதம் முதல் தனக்கு வழங்கப்பட வேண்டிய 20 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 30 கோ.டி ரூபா) பெறுமதியான பரிசுகளை ஏற்பாட்டாளர் கள் வழங்கவில்லை எனவும், இதன்மூலம் போட்டிக்கான ஒப்பந்த விதிகளை ஏற் பாட்டாளர்கள் மீறி யுள்ளனர் எனவும் தனது மனுவில் ஷேர்லின் ரெட்லெய்ன் குறிப்பிட்டி ருந்தார்.
இது தொடர்பாக பிரதிவாதி கள் பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கு 42 நாள் அவகா சத்தை நீதிமன்றம் வழங்கி யிருந்தது.
இந்நிலையில், ஷேர்லின் ரெட்லெய்னிடமிருந்து மிஸ் யூனிவர்ஸ் ஜெமெய்க்கா அழகுராணி பட்டம் பறிக்கப் பட்டுள்ளதாக இப் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
‘ஷேர்லின் ரெட்லெய்ன் அழகுராணியாக முடிசூட்டப் பட்டதிலிருந்து, இந்த அமைப்பின் நோக்கம் மற்றும் எண்ணங்களுக்குப் பொருத்தமான வகையில் செயற்படுவதற்காக அவருக்கு வழிகாட்டுவதற்கு நாம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால், அவரின் நடவடிக்கைகள் அழகுராணி போட்டி கலாசாரத்துக்கு முற்றிலும் முரணானவையாக இருந்தன’ என செய்தியாளர் மாநாடொன்றில் இப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மாதத்தில் குறைந்தபட்சம் 21 நாட்களாவது ஜெமெய்க்காவில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை யையும் ஷேர்லின் மீறியுள்ள தாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தான் பயமுறுத்த ல்களுக்கு அடிபணியாமல் இருந்ததாலேயே தனது அழகுராணி பட்டம் பறிக்கப்பட்டுள்ளதாக ஷேர்லின் ரெட்லெய்னர் தெரிவித்துள்ளார்.
கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று பலப்பிட்டியவில் நேற்று முந்தினம் (17.08) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் காணாமற்போயுள்ளதுடன் அவர் பற்றிய தகவல்களேதும் இதுவரை கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவரொருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட சடலம் தரம் 10 இல் கல்வி பயிலும் லக்ஷானி வாஸனா என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கையின் கணவன் மீது ஏற்பட்ட மோகத்தால் மனைவியொருவர் கணவனைக் கொலை செய்த சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகேயுள்ள கல்மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவருக்கு முதல் மனைவி மூலம் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி இறந்துவிட்டார்.
இந்நிலையில் ராமகனியை(36) தங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையிலேயே, ராமகனி தனது தங்கையின் கணவனோடு உல்லாச வாழ்க்கை நடத்த ஆசைப்பட்டு கணவனை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, மனைவி ராமகனி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ராமகனி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, எனது கணவருக்கும், எனக்கும் அதிக வயது வித்தியாசம் இருந்தது. ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு எனது தங்கை உத்திரகனியின் கணவர் அன்பழகனும், நானும் தனியாக சந்தித்து பேசினோம். அப்போது முதல் எங்கள் இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டது.
லொறி சாரதியாக இருந்த அவர் அடிக்கடி வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு என்னுடன் வந்து உல்லாசமாக இருப்பார்.
நானும், தங்கை வீட்டுக்கு செல்வதாக எனது கணவரிடம் கூறி விட்டு சென்று விடுவேன். நாங்கள் இருவரும் அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வெளியூரில் வேலைக்குச் சென்றிருப்பதாக தங்கை யிடம் கூறிவிட்டு அன்பழகன், எங்கள் தோட்டத்தில் வந்து தங்கினார். பக்கத்தில் லொறி ஓட்டி வருவதாக எனது கணவரையும் கூறி நம்ப வைத்து அவர் எங்களுடன் இருந்தார்.
ஒருவாரம் அவர் எங்களுடன் தங்கியிருந்தார். அப்போது அன்பழகனும், நானும் பலமுறை உல்லாசமாக இருந்தோம். இது எனது கணவருக்கு தெரியவரவே, அன்பழகனைக் கண்டித்து அனுப்பிவிட்டார். என்னையும் கண்டித்தார்.
இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என்னால் அன்பழகனை பிரிந்திருக்க முடியவில்லை. இதையடுத்து தங்கராஜை கொலை செய்யத் திட்டமிட்டோம்.
எங்களது கொலைத் திட்டத்துக்கு தூத்துக்குடியிலுமுள்ள எனது அக்காவின் மகன் ராமுவையும்(22) துணைக்கு அழைத்து, கணவர் என்னை கொடுமைப்படுத்துவதாக ராமுவிடம் கூறினேன்.
சம்பவம் நடந்தபோது, அன்பழகனுக்கு போன் செய்து, வெளியே படுத்திருந்த எனது கணவரை கொலை செய்யுமாறு கூறினேன். இதனையடுத்து அவர் கொலை செய்தார்.
இதைத்தொடர்ந்து, தலைமறை வாகியிருந்த கள்ளக் காதலன் அன்பழகன், ராமு ஆகிய 2 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக தையல் இயந்திரங்கள் துவிச்சக்கரவண்டிகள் மற்றும் வாகனம் திருத்தும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்அவர்களின் அலுவலகத்தில் கடந்த 13.08.2016 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் தொழில்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ வாழ்க்கை-இந்த வார்த்தைக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. இந்த வார்த்தையின் பொருள்.
மனிதனே, அது உனக்குத் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இதனால் நன்கு பயன் பெறு.
வாழ்க்கை ஓர் அழகு
அதனை ரசித்து வாழ்
வாழ்க்கை ஒரு நல்ல கனவு
அதனை வாழ்ந்து நனவாக்கு
வாழ்க்கை ஒரு சவால்
துணிந்து அதனை எதிர் கொள்
வாழ்க்கை உன் கடமை
அதனை முறையாய் செய்து முடி
வாழ்க்கை ஒரு நீண்ட பாடம்
அன்போடு ஆர்வத்தோடு அதனைப்படி
வாழ்க்கை ஒரு விளையாட்டு
விளையாட்டினையும் ஒழுக்கம் தவறாது விளையாடு
வாழ்க்கை ஒரு துன்பமானதும் கூட
வாழ்ந்து அதனை வென்று விடு
வாழ்க்கை ஒரு பாட்டு
அதனை மகிழ்ச்சி பாட்டாக்குவதும்
சோகமான பாட்டாக்குவதும்
உன் கையில்
வாழ்க்கை ஒரு போராட்டம்தான்
வாழ்வு முடியும் வரை போராடு
வாழ்க்கை எதிர்பாரா அனுபவங்கள் கொண்டது
அதனை ஏற்றுக் கொள்
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டு
நீ அதனை உருவாக்கிக் கொள்.
வாழ்க்கை ஒரு பொக்கிஷம்.
அதனை காப்பாற்று. அழித்து விடாதே.
வாழ்க்கை உன் கையில் கிடைத்த காமிரா
நல்லவைகளை தேடி பிடித்துக் கொள்.
வாழ்க்கையின் சட்டங்கள்
* கடந்த காலத்தினைப் பற்றியே நினைத்து உருகாதே. இப்படி உருகாது இருந்தால் நிகழ் காலம் நன்கு இருக்கும்.
* பிறர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதிலேயே வாழ்க்கையை கழிக்காதே.
* காலம் எல்லா மனப் புண்களையும் ஆற்றும். கொஞ்சம் அவகாசம் கொடு.
* உன்னை மற்றவரோடு ஒப்பிடாதே.
* மண்டையை குடைந்து யோசிக்காதே. உரிய நேரத்தில் உரிய பதில்கள் தானே வரும்.
* உன் மகிழ்ச்சிக்கு நீயே பொறுப்பு.
* சிரி, புன்னகை, நீ உலகின் மொத்த பிரச்சினைகளுக்குப் பொறுப்பாளி அல்ல.
இப்படி வாழ்வினை பற்றி அநேக கருத்துகள் பரவலாக உள்ளன.
எல்லாவற்றினையும் சொல்லலாம், எழுதலாம். ஆனால் நடைமுறைப்படுத்தி வாழ்வது எளிதான காரியமா என்ன? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அது நம் முன்னோர்களுக்கு நன்கு தெரிந்து உள்ளது.
அதனை நம் இரத்தத்தில் ஊற வைத்து மூளையில் பதிய வைத்து வாழையடி வாழையாய் சிறந்து வாழ சில வழிமுறைகளை புகுத்தி உள்ளனர்.
தேவையான அனைத்தும் பெற்றாலே ஒரு வாழ்க்கை பூரணத்துவம் பெறுகின்றது.
பணம் இருந்து நோயும் இருந்தால் என்ன செய்வது?
அதுபோல் நல்ல ஆரோக்கியம் இருந்து வறுமை இருந்தால் அது வேதனை தானே.
இப்படி பல உதாரணங்களைக் கூறிக் கொண்டே போகலாம். ஆகவே தான் நம் முன்னோர் வாழ்க்கை வெற்றியின் சூட்சுமத்தினை ஒருவரை வாழ்த்துவதன் மூலம் உணர்த்தினர்.
மேலும் எதனை நாம் அடிக்கடி சொல்கின்றோமோ, நினைக்கின்றோமோ நாம் அதுவாகவே மாறி விடுவோம்.
இது இயற்கை. ஆகவேதான் பெரியோர்கள் முதியவர்களை அந்தந்த கால கட்டங்களின் தேவைக்கேற்ப வாழ்த்தினர்.
சிறியவர்களை ‘சிரஞ்சீவியாக இரு’ என்பர். நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் பெற்று வாழ் என்பது இதன் பொருள். மேலும் ஒழுக்கமான வாழ்வு வாழும் அனைவரும் பெரியோரே.
அவர்களுக்கு ‘வாக்கு பலிதம்’ உண்டு. ஆக ஒவ்வொருவரின் வாழ்வும் மேன்மை பெற்று சிறந்தது.
திருமண சடங்கில் தம்பதிகளை வாழ்த்தும் பொழுது
‘ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழ
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க’ என வாழ்த்தினர்.
ஆல் போல் தழைத்து என்றால் ஆலமரம் போல் உன் வாழ்வும் குடும்பமும் பரந்து விரிந்து உறுதியாய் காலம் முழுவதும் இருக்கட்டும் என்ற பொருள்படும்.
அருகு போல் வேரூன்றி என்றால் அருகம்புல்லின் வேர் பூமியின் அடியில் எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதனை எளிதில் அறிய முடியாது.
அவ்வேர், சூழ்நிலை கனியும் பொழுது மீண்டும் துளிர்த்தெழும் அழியாத் தன்மை கொண்டது.ஒவ்வொரு குடும்பமும் அதுபோல் உறுதியாக வேர் கொள்ள வேண்டும்.
மூங்கில் எப்பொழுதும் கூட்டம் கூட்டமாய் செழித்து இருக்கும். அது போல,ஒவ்வொரு மனிதனும் உற்றார்,உறவினர், சுற்றம் சூழ வாழ்வதே அழகு பெருமை.
ஆக எப்பேர் பட்ட அரிய கருத்துகளை சிறிய வார்த்தைகளில் நம் முன்னோர் நமக்கு புரிய வைத்து அதன் படி வாழவும் வாழ்த்தியுள்ளனர் என்பதனை பாருங்கள்.
மேலும் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க எனவும் வாழ்த்துகின்றனர். என்ன இந்த பதினாறு பேறுகள் இதனை காளமேக புலவர் கூறிள்ளார்.
-காளமேகப்புலவர்.
துதி – புகழ்
வாணி – கல்வி
வீரம் – தைரியம்
விஜயம் – வெற்றி
சந்தானம் – வாரிசு
துணிவு – துணிவு
தனம் – பொருள்
அதிதான்யம் – உணவுப்பொருள்
சௌபாக்கியம் – வளம்
போகம் – மகிழ்ச்சி
அறிவு – புத்தி
அழகு – அழகு
புதிதாம்பெருமை – கவுரவம்
அறம் – தானம்
குலம் – ஒழுக்கமுடைய குடும்பம்
பூண்வயது – ஆரோக்யமான நீண்ட ஆயுள்
இவற்றினைத் தருவாய் இறைவனே என அவர் வேண்டுவது போல நமக்குத் தேவை யானவை வாழ்வில் எவை அதனை எவ்வாறு பெற வேண்டும் என உணர்த்துகின்றார்.
அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் கேட்கும் பதினாறு பேறும் இவ்வாறே அமைந்துள்ளது.
என வேண்டி நம் அனைவருக்கும் வேண்டி பெற வேண்டியதனை, வாழும் முறையினை கற்பிக்கின்றார்.
ஒருவன் நன்கு வாழ அவனது முயற்சி மட்டும் போதாது. அவனது குடும்பம் சமுதாயம் அரசாங்கம் அனைத்தும் நன்கு இருந்தாலே தனி மனிதன்.வாழ்வு சிறக்கும் என்கிறார்.
கலையாத கல்வி – வெறும் கல்வி என்பதில்லாமல் வாழ்விற்கு பயன்படும்.
குறையாத வயதும் – முதுமை கூடா வாழ்வு
ஒரு கபடு வாராத நட்பு – ஏமாற்றும் நட்பும், கூடா நட்பும் வேண்டாம்.
குன்றாத வளமையும் – மறையாத செல்வம்
குன்றாத இளமையும் – உடல் ஆரோக்யம்
கரு பிணி இல்லாத உடல் – நோயில்லாத உடல்
சலியாத மனம் – சோர்வடையாத மனம்
அன்பு அகலாத மனைவி – கணவன் – மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் அன்போடு இருக்க வேண்டும்.
தவறாத சந்தானம் – நேர்வழி செல்லும் குழந்தைகள்
மாறாத வார்த்தை – சொன்ன சொல் மாறாது இருத்தல்
தடைகள் வாராத கொடை – தங்கு தடையின்றி தானம் செய்தல்
தொலையாத நிதி – திருடு, களவு போகாத செல்வம்
கோணாத கோல் – நேர்மையான செயல்கள்
ஒரு துன்பம் இல்லாத வாழ்வு – வேதனை இல்லாத வாழ்வு
தூய நின் பாதத்தில் அன்பு – உன் பாதத்தில் என்றும் அன்பு
தர வேண்டும் தாயே
என்ற இந்த வேண்டுதலை இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமியை பூஜித்து வேண்டி பெறுவோமாக.
மதவாச்சி தள்ளாடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (18.08) பகல் இடம்பெற்றுள்ளது.
பட்டா ரக வாகனமொன்று கட்டுபாட்டை இழந்து வீதியில் தலைகீழாக கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 16 பெண்கள் 3 ஆண்கள் உட்பட 19 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 வயது பிள்ளை மற்றும் 2/1 வயது குழந்தையும் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் அரம்பித்துள்ளனர்.
சர்வதேச இந்து இளைஞர் பேரவை நடாத்தும் முத்தமிழ் சங்கமம் 2016 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.08.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள சிந்தாமணி பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் சைவ சிந்தாந்த முதுகலைமாணி சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக தமிழ்நாடு கூனம்பட்டி ஆதின 57 வது குருபீடம் ராஜ சரவண சுவாமிகள் கலந்து ஆசி வழங்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிக துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், பேராதனை பல்கலைக் கழக தமிழ்த்துறை தலைவர் வ.மகேஸ்வரன், முன்னாள் இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலர் கா.உதயராசா, வவுனியா மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். விசேட விருந்தினராக பேரவையின் அமைப்பாளர் சி.கணேஸ்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.
நந்திக் கொடியேற்றல், மங்களவிளக்கேற்றல், பஞ்சபுராணபாராயணம், தமிழ்மொழ வாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து ஆதிவிநாயகர் நடனப்பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை பேரவையின் உப செயலாளர் கி. வசந்தரூபன் நிகழ்த்த ஆசியுரையினை கு.லம்போதரக் குருக்கள் மற்றும் ரவீந்திர உமாசுதக்குருக்கள் வழங்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தொடக்கவுரையினை சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் உபதலைவர் வீ.பிரதீபனும் வாழ்த்துரையினை தமிழ்மணி. மேழிக்குமரன் வழங்கவுள்ளனர்.
நாம் தொலைத்துவிட்ட பண்பாட்டு விழுமியங்கள் எனும் தலைப்பில் வைத்திய கலாநிதி செ.மதுரகனின் சிறப்புரையும், வாத்திய கலாலய மாணவர்களின் வாத்திய கானாம்ருதம் நிகழ்வும் கீர்த்தனாலயா இசைக்கூட மாணவர்களின் தமிழிசை நிகழ்வும் நுண்கலைமாணி திருமதி.புவனறூபி ஜெகதீசனின் மாணவி பைரவி இராஜேந்திரம் ருத்ரதாண்டவம் நடன நிகழ்வும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து தமிழ்மாமணி தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில்
காலவோட்டத்தில் இன்று தமிழர் பண்பாடு தளர்ந்துவிட்டதா? வளர்ந்துநிற்கிறதா? எனும் தலைப்பில் சிறப்புபட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
தளர்ந்துவிட்டது எனும் தலைப்பில ஜெ.மயூரசர்மா, ஜெ.கோபிநாத், ஆ.ஜெசிதாஆகியோரும், வளர்ந்துநிற்கிறது எனும் தலைப்பில் S.S.வாசன், ஜெ.திருவரங்கன், ந.ஜெனன் ஆகியோரும் வாதாடவுள்ளனர்.
இந் நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சீ.யோகேஸ்வரன், கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சிறுவர் இல்லத் தலைவர் தி.இராசநாயகம் தொல்லியல்துறை ஆய்வாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை, எழுத்தாளர் திருமதி.சி.தமயந்தி, யாழ் பல்கலைக் கழக இசைத்துறை விரிவுரையாளர் ந.பரந்தாமன் ஆகியோர கௌரவிக்கப்படவுள்ளனர்.
நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை பேரவையின் செயலாளர் ல.சதீஸ்குமார் வழங்கவுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையின் ஏற்பாட்டில் அரச அலுவலங்களிற்கிடையே 6 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கட் சுற்று போட்டி நேற்று (17.08.2016) வவுனியா நகரசபை பொது மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா பொதுவைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வைத்தியசாலையை சேர்ந்த உத்தியோகத்தர்கள் வவுனியா மாவட்ட திணைக்களங்களைச்சார்ந்த விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி செ.அன்ரன் சோமராஜாவிற்கு அவரது சேவையை கௌரவித்து சேவை நலன் பாராட்டு விழாவும் மணிவிழாவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று(17.08.2016) காலை வவுனியா நகரக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அவரது சேவையை கெரவித்து வாழ்த்துரை, கவிதைகள் நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன
இன் நிகழ்வில் புதிதாக வவுனியா தெற்கு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற முத்து இராதாகிருஸ்ணன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார், வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் சிறிஸ்கந்தராஜா, வவுனியா பிரதேச செயலளார் கா.உதயராஜா மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.