அமெரிக்காவில் கண்திறந்த யேசுநாதர் சிலை : உண்மையில் நடந்தது இதுதான்!! (வீடியோ)

jesus-statue-opens-eye

மெக்ஸிகோவில் யேசுநாதர் சிலை ஒன்று உயிர்பெற்றதான காணொளி ஒன்று வைரலாக பரவி வருகிறது. இயேசுவின் உருவச் சிலை ஒன்றில் உள்ள கண்கள் இரண்டு திறக்கும் காட்சி அடங்கிய காணொளி சர்வதேச ஊடங்களில் வெளியாகியுள்ளது.

யாரா ஒருவரினால் இந்த சிலையை காணொளியாக பதிவு செய்துக் கொண்டிந்த சந்தர்ப்பத்தில் அங்கு எதிர்பாராமல் அந்த உருவ சிலையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி இணையத்தில் வெளியிட்டதன் பின்னர் வெகு விரைவாக பிரபலமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை பார்வையிட்ட பெரும்பாலானோர் இது நம்ப முடியாத அற்புத சம்பவம் ஒன்று என தெரிவித்துள்ளனர். எனினும் இது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஏமாற்று வேலை எனவும், இது காட்சிபடுத்தப்பட்ட மாயை என பலர் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இதனை ஆராய்ச்சி செய்து பார்த்த போது இது தொழில்நுட்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாயை என நிரூபிப்பதற்கான சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர்-நடிகைகளின் சம்பளத்தை 30% குறைக்க அதிரடி முடிவு!!

IMG_2780finalதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பரில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, நடிகர்- நடிகைகள் சம்பள குறைப்பு தொடர்பான முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘கடந்த காலங்களில் கூட்டமைப்புடன கலந்து பேசி எடுத்த முடிவின்படி, எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சாட்டிலைட் ஒளிபரப்பை டெலிகாஸ்ட் அடிப்படையில் ஒளிபரப்பப்படும். பெருகி வரும் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் 50 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் ஆகியோர் 30 சதவீதம் அவர்களது சம்பளத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும்’ என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கூட்டமைப்புடன் பேசியதன் அடிப்படையில் சிறு முதலீட்டு திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர்களுக்கு விரைவில் அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

உங்க வேலையை பாருங்க, கோபத்தை கொட்டித்தீர்த்த வரலட்சுமி!!

varalakshmi_sarathkumar_vishal_t

வரலட்சுமி தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு நல்ல நடிகை என்று பெயர் வாங்கிவிட்டார். இவர் நடிப்பிற்கு தேசிய விருதே கிடைக்கும் என பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் விஷாலை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக ஒரு செய்தி உலா வந்தது, இதை வரலட்சுமி முற்றிலுமாக மறுத்துள்ளார்.இதுமட்டுமின்றி ‘உங்களுக்கு சொல்லாமல் திருமணம் செய்ய மாட்டேன், உங்க வேலையை முதலில் பாருங்கள்’ என டுவிட் செய்துள்ளார்.

ரகசியமாக திருமணம் செய்து கொண்டாரா மதுரை முத்து??

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)
தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபலமான காமெடி பேச்சாளரும், தொலைக்காட்சி நடிகருமான மதுரை முத்துவின் மனைவி கடந்த பிப்ரவரி 4ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி பலியானார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இந்த துயரத்தில் இருந்து மீளமுடியாமல் முத்து தவித்து வருகிறார்.இந்நிலையில் இன்று அவர் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், மணக்கோலத்தில் இருப்பது போன்றும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், இந்த காட்சி ஒரு குறும்படத்திற்கு எடுக்கப்பட்ட ஒன்று, இதில் உண்மையில்லை என்று மதுரை முத்து விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறந்து போன கணவரின் சடலத்துடன் வாழ்ந்த மனைவி!

wife-holding-husband-1
ரஷ்யாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்து போன கணவனை மந்திரங்கள், புனித நீரின் மூலம் மனைவி, மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது.ரஷ்யாவை சேர்ந்த 76 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரே இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவருடைய கணவர் இறந்து போய் விட்டார்.வீட்டில் உள்ள ஷோபாவில் சடலத்தை போட்டதுடன் தொடர்ச்சியான பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.மீண்டும் கணவர் உயிர்பிழைத்து வருவார் என்ற நம்பிக்கையில், அவர் மீது புனித நீரை தெளித்து பல்வேறு மந்திரங்களையும் கூறியுள்ளார்.

சமீபநாட்களாக மிக கடுமையான நாற்றம் வந்ததை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.விரைந்து வந்த அதிகாரிகள் சோதனையிட்டதில் சடலத்தை கைப்பற்றியதுடன் உண்மைகளும் வெளிவந்துள்ளது.மேலும் Battle of Extrasensory என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அடிமையாக இருந்ததும், இதன் அடிப்படையிலேயே கணவனுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சி செய்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

வெற்றிகரமாக முதல் பயணத்தை முடித்தது உலகின் மிகப்பெரிய விமானம்!!

625.0.560.350.160.300.053.800.668.160.90
உலகின் மிகப்பெரிய விமானமான Airlander 10 முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து அசத்தியுள்ளது.ஹைபிரிட் Air Vehicles எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கியுள்ள Airlander 10, 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 85 அடி உயரமும் கொண்டது.

விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையான Airlander 10, நேற்று மாலை Bedfordshire உள்ள Cardington விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை தொடங்கியது.உலகின் பெரிய விமானம் வானில் பறப்பதை காண, புகைப்படக்காரர்களும், மக்களும் விமான தளத்தில் குவிந்தனர். மேலும் கைதட்டி ஆரவாரம் செய்து முதல் பயணத்தை ஊக்குவித்தனர்.

பிரித்தானியா நிறுவனம் மேற்கொண்ட பல சீரமைப்பிற்கு பின்னர், வெற்றிகரமாக வானில் பறந்த Airlander 10, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.எச்.ஏ.வி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Stephen McGlennan பேசுகையில், இது ஒரு ராட்சத ஹெலிகொப்டர், ஒரு ஹெலிகொப்டர் செய்வதை Airlander 10 செய்து விடும்.

ஹீலியம் எனப்படும் வாயுவைக் கொண்டு மாசுபடுத்தாமல் இயங்கும் இந்த விமானம், ராணுவ உபகரணங்களை மிகவும் தொலைவான பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கும், கண்காணிப்புக்கும், ஆடம்பர பயணங்களுக்கும் ஏற்றது என குறிப்பிட்டுள்ளார்.

1000 பஸ்களை திருத்துவதற்கு 3000 மில்லியன் ரூபா!!

z_p08-Workers’-02

போக்குவரத்துக்கு உதவும் நிலையற்ற ஆயிரம் பஸ்களை மீள் திருத்தம் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு அதிக பழமையான பஸ்களை இவ்வாறு திருத்தம் செய்ய உள்ளதாக அந்த சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பீ.கே. ஆரியரத்ன கூறினார்.

இதற்காக 3000 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

மோட்டர் சைக்கிள் விபத்தில் இருவர் பலி!!

1 (50)

சூரியவெவ – எம்பிலிபிடிய பிரதான வீதியில் உனதிய பொகுன பகுதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

மோட்டர் சைக்கிள் ஒன்றுடன் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதேவேளை, மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் தலைகவசம் அணிந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு வாரங்களுக்குள் இராணுவ முகாம் நீக்கப்படும்!!

Sambanthan

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் இராணுவ முகாமை இரண்டு வாரங்களுக்குள் நீக்கி மக்களின் இடங்களை விடுவித்து கொடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கூறியுள்ளார்.

எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இதுகுறித்து பேச இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இராணும் முகாம் அமைக்கப்பட்டுள்ள தமது இடங்களை விடுவிக்க கோரி அந்த முகாமிற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்களை சந்தித்த போதே ஆர். சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் இந்த வாக்குறுதியை அடுத்து 05 நாட்களாக இடம்பெற்று வந்த எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் பூரணமாக விடுதலையடையவில்லை, சந்திரிகா!!

chandrika_bandaranayake
வட மாகாண சபையும் வடக்கு முதல்வரும் முன்வைக்கும் சில காரணிகளை ஏற்றுக்கொள்ள முடியாத போதிலும் வடக்கு மக்கள் பிரச்சினைகளிலிருந்து இன்னும் பூரணமாக விடுதலை பெறவில்லையென்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர் புகுடாவுடன் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சந்திரிகா, அதன் பின்னர் அவரது யாழ்.விஜயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக செயற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் பொறிமுறைகளும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளை திருப்தியடையச் செய்துள்ளதென தான் நம்புவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் சந்திரிகா குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு பாதுகாப்பான சூழலையோ நல்லிணக்கத்தையோ ஏற்படுத்த முனையவில்லையென தெரிவித்த சந்திரிகா, தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை பலப்படுத்தி தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்னின்று செயற்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!(படங்கள்)

 
வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (18.08.2016) காலை 11.30 மணியளவில் ஏற்ப்பட்ட வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியா தாண்டிக்குளத்தில் சாரதி பயிலுனர்களுக்கு பயிற்சியளிக்கும் வாகனம் வீதியிலிருந்து மறுபக்கம் திரும்ப முற்பட்ட பொது ஏ9 வீதியிலிருந்து வவுனியா நோக்கி வந்த டிப்பரில் மோதுண்டது.

கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளனாது.

இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Vavunya AccidentIMG_2870 IMG_2871 IMG_2872 IMG_2873 IMG_2874 IMG_2875 IMG_2876 IMG_2877 IMG_2878 IMG_2879 IMG_2880 IMG_2881 IMG_2882 IMG_2883 IMG_2884 IMG_2885 IMG_2886 IMG_2887 IMG_2888 IMG_2889

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய காலம் நீடிப்பு!!

Election

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய இம் மாதம் 26ம் திகதி வரை காலம் ஒதுக்கப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்திற்கான தேர்தல் படிவங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே குறித்த படிவங்களை பூர்த்தி செய்து இதுவரை கையளிக்காத நபர்களுக்காக இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் படிவங்கள் கிடைக்காதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தேர்தல் வடிவங்களை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பதிவிறக்கம் செய்யும் படிவங்களை கிராமசேவகரின் உறுதிபடுத்தலுடன் மாவட்ட செயலகம் அல்லது தேர்தல்கள் திணைக்கள காரியாலயத்திடம் கையளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலஎல்லை இம்மாதம் 26ஆம் திகதி வரை மாத்திரமே வழங்கப்படும் என்றும்,அதற்கு பிறகு தேர்தல் படிவங்கள் எக்காரணத்தைக் கொண்டும் விநியோகிக்கப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும் 10 விடயங்கள்!!

happy

அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.அதிலும் உடல் அழகை மேம்படுத்த பலரும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் போது இந்த அழகான விடயம் நம்மிடம் எளிதில் வந்துவிடுகிறது. கடைபிடிக்க வேண்டிய 10 வழிமுறைகள்:-

1. நீங்கள் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இவை உங்களை அழகாக காட்டும்.

2. பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றவர்களுடன் அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இந்த அன்பான பழக்கவழக்கம் உங்கள் முகத்தை அழகாக காட்டும்.

3. வாய்விட்டு சிரியுங்கள். இதன் மூலம் உங்களை சுற்றி வசீகர அலை பரவும். உங்களின் சிரித்த முகம் பலரையும் சுண்டி இழுக்கும். இதனால் நீங்கள் மற்றவர்களுக்கு அழகாக தெரிவீர்கள்.

4. உடலில் கவனத்தை செலுத்துங்கள். உடலை கட்டுக்கோப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உற்சாகமாக இருக்கமுடியும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை பலருக்கும் பிடிக்கும்.

5. திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களது திறமை உங்களை தனித்து காட்டும். முகம் அழகானவர்களை விட திறமையால் அழகாக தெரியும் பலரையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

6. பிறரை குறை கூறும் பழக்கத்தை விட்டு விடுங்கள். சிறிய விடயங்களையும் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். பாராட்டி பேசும் உள்ளத்தை பலருக்கும் பிடிக்கும்.

7. உன்னால் முடியும் என்று நம்பிக்கை ஊட்டும் சொற்களை மற்றவர்களுக்கு கூறுங்கள். அதே சமயம் உன்னால் முடியாது என்று கூறுபவர்களை கண்டு கொள்ளாதீர்கள். நம்பிக்கை எண்ணமே உங்களை தனித்தன்மையுடன் காட்டும்.

8. உங்களுக்கு உங்களையே பிடிக்காமல் இருக்கலாம். முதலில் அதை விட்டுவிடுங்கள். நிறம், உயரம் ஆகியவற்றை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு உங்களை நீங்களே நேசியுங்கள். இது உங்களை அழகாக காட்டும்.

9. உங்களுக்குள்ளே ஒரு குரல் இது முடியாது என்று அவநம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களை முடங்கிப் போகச் செய்யும். அதனால் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

10. உங்களை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். நடை, உடை போன்றவற்றில் கவனமாக இருத்தல், பாதங்களை சீராக வைத்துக் கொள்ளுதல், நறுமணம் வீசும் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துக் கொள்ளுங்கள்.

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்!!

S

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்’ பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.

முன்னதாக காலிறுதியில் ரஷ்ய வீராங்கனை விளிரியா கொலாகோவா உடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்ததால் ரெபிசாஜ் சுற்றில் விளையாடிய சாக்ஷி மாலிக், அச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ்ஜை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

s1

2016 Rio Olympics - Wrestling - Repechage - Women's Freestyle 58 kg Repechage Round 2 - Carioca Arena 2 - Rio de Janeiro, Brazil - 17/08/2016. Orkhon Purevdorj (MGL) of Mongolia and Sakshi Malik (IND) of India compete. REUTERS/Toru Hanai FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. - RTX2LLOL
2016 Rio Olympics – Wrestling – Repechage – Women’s Freestyle 58 kg Repechage Round 2 – Carioca Arena 2 – Rio de Janeiro, Brazil – 17/08/2016. Orkhon Purevdorj (MGL) of Mongolia and Sakshi Malik (IND) of India compete. REUTERS/Toru Hanai FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. – RTX2LLOL
2016 Rio Olympics - Wrestling - Quarterfinal - Women's Freestyle 58 kg Quarterfinal - Carioca Arena 2 - Rio de Janeiro, Brazil - 17/08/2016. Sakshi Malik (IND) of India and Valeriia Koblova (RUS) of Russia compete. REUTERS/Toru Hanai TPX IMAGES OF THE DAY. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. - RTX2LJMX
2016 Rio Olympics – Wrestling – Quarterfinal – Women’s Freestyle 58 kg Quarterfinal – Carioca Arena 2 – Rio de Janeiro, Brazil – 17/08/2016. Sakshi Malik (IND) of India and Valeriia Koblova (RUS) of Russia compete. REUTERS/Toru Hanai TPX IMAGES OF THE DAY. FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. – RTX2LJMX

82 வயது வயோதிபப் பெண் பாலியல் துஷ்பிரயோகம் : பொலிஸார் வலைவீச்சு!!

Abused

82 வயதான முதிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் காலி, மீட்டியாகொடை பிரதேசத்தில் நடந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்டியாகொடை தெற்கு தெல்வத்தை என்ற பிரதேசத்தில் வசித்து வரும் திருமணமாகாத முதிய பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.

முதிய பெண் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் அருகில் சில உறவினர்களின் வீடுகளும் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு 7 மணியளவில் சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்துள்ளதுடன், இரவு முழுவதும் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் குறித்து முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பிரபல தாதா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பலி!!

Vaalvettu

முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரேபலியாகியுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும் குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் இருந்த முன்பகையின் காரணமாக நேற்று புதன்கிழமை இரவுவீடு புகுந்து வெட்டியுள்ளார்.

உறவினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் பொலிஸ் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர், குறித்த நபரை பொலிஸார் தேடுதல் நடாத்திய போதும், அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தரை வெட்டியுள்ளார்.

ஆனால், குறித்த சன்னா கிளிநொச்சி மாவட்டத்தில் தலைமறைவாகி இருக்கின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றும் பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியதுடன்,பொலிஸாரின் ஒத்துழைப்பில் தான் குறித்த நபர் தலைமறைவாகியிருந்து, இவ்வாறானசட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ஒருவரை பொலிஸாரினால் கைது செய்ய முடியாமல்இருப்பதற்கான காரணம் என்ன என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.