நுங்கம்பாக்கத்தில் சுவாதி ஆவியா? திகில் கிளப்பும் இளைஞர்!!

Swathi

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சுவாதி ஆவியாக அலைவதாக இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அண்மையில் வடமாநில இளைஞர் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் ஆவி ஒன்றை பார்த்ததாக தகவல்கள் வெளியானது.

அதை ஆராய்ந்து பார்க்க நான் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றேன். அப்போது பயணிக்ள அமரும் இடத்தில் ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து கொண்டிருந்தார்.

நான் அருகில் செல்ல சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண் காணவில்லை. பயந்து போய் வந்த வழியே நான் திரும்பி சென்றேன். அப்போது, திடீரென்று அந்த பெண் சிரித்து கொண்டு முன்னே தோன்றினார்.

நான் பயந்து அங்கிருந்து ஒடி வந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் பகிர சுவாதி ஆவியாக அலைவதாக வதந்தி பரவி வருகிறது.

நல்லூர் முருகன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மஞ்சத் திருவிழா!!(படங்கள்)

 
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் 10ஆவது நாளான நேற்று மாலை 5 மணியளவில் மஞ்சத் திருவிழா என்றழைக்கப்படும் மஞ்சம் மாலை நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மஞ்சத் திருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

001 1 13895110_1172459139443122_6782114372645379077_n 13907002_1172457799443256_8045796718444736756_n 13920921_1172462449442791_1644983534267486496_n 13924978_1172462256109477_720628024276015709_n 13938613_1172458582776511_5955558562619714643_n 14021498_1172457809443255_5978212734541751874_n 14034775_1172459352776434_2114370380834063135_n 14034823_1172458919443144_1119898665451798097_n 14034846_1172461446109558_2054376057132227812_n 14045646_1172462886109414_3099541695542947694_n 14055041_1172457822776587_7581685895908960314_n 14063707_1172459439443092_1570403472925131400_n 14063875_1172462066109496_4542758538127575246_n 14067494_1172458842776485_3932086402610423288_n 14067596_1172463006109402_5691772350574569912_n 14067685_1172458782776491_800652715302150743_n 14068179_1172462639442772_3432255122596821317_n 14068263_1172458532776516_6584743834783607553_n 14079741_1172458162776553_3333962884959353055_n

வவுனியா நோக்கிப் பயணித்த கொள்கலன் விபத்து!!

A9

ஏ9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து வெளியேறிய பெற்றோலை பிரதேச மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

தனது தாயாரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தியதால் வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைத்த இளைஞன்!!

1

அமெ­ரிக்­காவில் வசிக்கும் ஜேர்­ம­னிய இளைஞர் ஒருவர் கலி­போர்­னியா மாநி­லத்தில் பல்­வேறு வாகனங்கள், வீடு­களை தீக்­கி­ரை­யாக்­கி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்டுள்ளார்.

தனது தாயாரை அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து அதி­கா­ரிகள் நாடு கடத்­தி­யதால் பழி­வாங்கும் நட­வ­டிக்­கை­யாக தீ வைக்கும் நட­வ­டிக்­கையில் தான் ஈடு­பட்­ட­தாக அவர் கூறி­யுள்ளார்.

29 வய­தான ஹரி பர்க்ஹார்ட் எனும் இந்த இளைஞர் 2011 டிமெ­சம்பர் 30 ஆம் திக­திக்கும் 2012 ஜனவரி 2 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட நாட்­களில் கலி­போர்­னி­யாவின் சான் பெர்­னாண்டோ, மேற்கு ஹொலிவூட் பகு­தி­களில் இக்­குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­தாக லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் நடை­பெறும் வழக்கு விசா­ர­ணையில் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர்.

தனது தாயார் டொரத்தி பர்க்­ஹார்ட்டை அதி­கா­ரிகள் நாடு கடத்­தி­யதால், அமெ­ரிக்­காவை தீயில் வாட்­டி­யெ­டுக்கப் போவ­தாக இவர் அச்­சு­றுத்­தினார் எனவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவர் வாக­னங்­க­ளுக்கு வைத்த தீ பல வீடு­க­ளுக்கும் பர­வி­யது. இச்­ சம்­ப­வங்­களில் எவரும் காயமடை­யாத போதிலும் சொத்துகளுக்கு 30 இலட்சம் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2

குப்பைத் தொட்டியில் உறங்கிய இளைஞர் மீள்சுழற்சிக்கு உட்படும் நிலையிலிருந்து தப்பினார்!!

Kuppai

இளைஞர் ஒருவர் குப்பைத் தொட்­டி ­யொன்­றுக்­குள் உறங்­கி­ய­போது, குப்­பை­ க­ளுடன் சேர்த்து மீள்சு­ழற்­சிக்கு உட்­ப­டுத்­தப்­படும் ஆபத்­தி­லி­ருந்து நூலி­ழையில் தப்­பிய சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்பெற்­றுள்­ளது.

ஓர்கன் மாநி­லத்தின் அல்­பெனி நகரைச் சேர்ந்த 23 வய­தான ஐவன் ரொசா­லியோ மெண்டிஸ் பெரெஸ் எனும் மேற்­படி இளைஞர் வீதி­யோ­ரத்­தி­லி­ருந்த குப்பைத் தொட்டி ஒன்­றுக்குள் ஆழ்ந்த உறக்­கத்­தி­லி­ருந்தார்.

அப்­போது, குப்பை ஏற்­றிச்­செல்லும் வாக­ன­மொன்­றுக்குள் குப்­பை­க­ளுடன் சேர்த்து மேற்­படி இளைஞரும் கொட்­டப்­பட்டார். அக்­ குப்­பைகளை அரைத்து மீள்­சு­ழற்­சிக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருந்த வேளையில், விழித்­தெ­ழுந்த அவர், தனது நிலையை உணர்ந்து திடுக்­கிட்டார்.

உரத்த சத்தம் எழுப்பி சார­தியின் கவ­னத்தை ஈர்க்க அவர் முயன்றார். எனி னும், சார­திக்கு அவரின் குரல் கேட்­க­வில்லை. அதை­ய­டுத்து குப்பை வண்­டி­யி­லி­ருந்த கார்ட்­போட்­களை வெளியே வீசி எறிந்தார் ஐவன்.

அதை அவ­தா­னித்த குப்பை வண்­டியின் சாரதி, அவ்­ வா­க­னத்தின் பின்­புறம் சென்­ற­போது ஒருவர் உள்ளே இருப்­பதை உணர்ந்து அவ­சர சேவைப் பிரி­வு க்கு தகவல் கொடுத்தார். அதன்பின் தீய­ணைப்புப் படை­யி­னரின் உத­வி­யுடன் குப்பை வண்­டி­யி­லி­ருந்து ஐவன் மீட்­கப்­பட்டார்.

அவர் பல தடவைகள் குப்­பை­க­ளுடன் சேர்த்து அழுத்­தப்­பட்­டி­ருந்­த­தாக தீய­ணைப்புப் படை அதி­காரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐவனின் காலில் முறிவு ஏற்பட்டிருந்ததால் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய அனுமதி கேட்கும் கணவன்!!

Fight

கர்நாடக மாநிலம் பீதரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி தன்னைத் துன்புறுத்துவதாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தனது கடையை பறித்துக் கொண்டதாகவும், வாழ வழியில்லாமல் தவிப்பதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரியும் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கர்­நா­டக மாநிலம் பீதரைச் சேர்ந்தவர் விக்னேஷ். அவரது மனைவி பெயர் பிரனீதா. திருமணமாகி 12 வருடங்களாகின்றன. விக்­னேஷ் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
12 வருட வாழ்க்­கையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆரம்­பத்தில் இது சாதாரணமாகத் தோன்ற பின்னர் இரு­வரும் சண்­டை­பி­டித்­துள்­ளனர். இதனிடையே அவர்­களின் கடை­யின் வருமானமும் போதவில்லை.

இதனால் கணவருடன் எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாறாம் பிரனீதா. இவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய பெரியவர்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து நின்று அவர்களும் சண்டை போட்டு வந்துள்ளனர்.

இந்த சண்டை நாளுக்கு நாள் முற்றவே விவாகரத்து கோரி நீதி­மன்­றத்­தை அணுகினர் தம்பதியினர். அது இன்னும் முடியாமல் உள்ளதாம். இந்த நிலையில் மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் விக்னேஷ்.

அதில், எனக்கும், எனது மனைவிக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. இதைக் காரணமாக வைத்து எனது மனைவியும், அவரது உறவினர்களும் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர். தொல்லை தருகின்றனர்.

எனது ஒரே வாழ்வாதாரம் தையல் கடைதான். அதையும் பறித்துக் கொண்டனர். இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். என்னால் வாழ முடியவில்லை. இவர்களிடம் சிக்கி தினந்தோறும் சாகிறேன்.

இவர்களிடம் சிக்கி தவிப்பதற்குப் பேசாமல் எனது உயிரை மாய்த்துக் கொள்வதே நல்லது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன். சட்டப்படி தற்கொலை தவறு என்பதால் என்னால் அதை செய்ய முடியவும் இல்லை.

நான் கருணைக் கொலை செய்து கொள்ள எனக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும். அப்போதுதான் எனக்கு விமோச்சனம் கிடைக்கும். இல்லாவிட்டால் எனக்கு எனது மனைவி குடும்பத்தாரிடமிருந்து நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

பொலிஸாருக்கு விபரங்களை வழங்க மறுக்கும் நபர் தொடர்பில் தகவல் வழங்குமாறு வேண்டுகோள்!!

Sna1

யாழ். நகரப் பகு­தியில் சந்­தே­கத்தில் நட­மா­டிய நிலையில் கைது செய்­யப்­பட்ட நபர் தொடர்­பாக தக­வல்­களை தந்­து­த­வு­மாறு யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்­றத்­த­டுப்­பிரிவினர் பொது­மக்­களை கேட்­டுள்­ளனர்.

மேற்­கு­றித்த நபர் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் தெல்­லிப்­பழை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.எனினும் சிகிச்­சையின் பின்னர் அந்­நபர் வைத்­தி­ய­சா­லை­யினால் விடு­விக்­கப்­பட்டார்.

தற்­போது பொலிஸ் பாது­காப்பில் உள்ள குறித்த நபர் தன்னை பற்றி எந்த விப­ரங்­க­ளையும் தெரி­விக்­கா­ததன் கார­ண­மாக பொலிஸார் பொது­மக்­களின் உத­வியை நாடி­யுள்­ளனர்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள் 077-4035013 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Sna2

தயாரிப்பாளர் சங்கத்தினால் விஷாலுக்கு காலக்கெடு!!

Vishal

சென்னையில் நடைபெற்ற நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், நடிகர் விஷால் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டு, அவருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு..

ஆனந்த விகடன் வார இதழில் விஷால், நமது தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்துள்ளார். அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும்.

தவறும்பட்சத்தில் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ள கத்திச்சண்டை திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்த படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தீர்மானிக்கப்படுகிறது. என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் புதிய வீடியோ செயலி ”Duo” அறிமுகம் : விரைவில் பாவனைக்கு வருகின்றது!!

google-dua-video-calling-app

கூகுள் நிறுவனம் புதிதாக டூவோ (Duo) எனும் வீடியோ செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே பாவனையில் உள்ள வீடியோ அழைப்பு செயலிகளைவிட இதில் முக்கிய வேறுபாடொன்று உள்ளது.

வீடியோ அழைப்பு உங்கள் செல்பேசிக்கு வரும்போதே அழைப்பவரின் காட்சியைக் காண முடியும். எனவே, அழைப்பை ஏற்பதா வேண்டாமா என நீங்கள் தீர்மானிக்கலாம்.

Duo வின் இந்த வசதிக்கு “ நொக்- நொக்’ (Knock Knock) என்று பெயரிட்டுள்ளனர்.

அன்ட்ரொய்ட் மற்றும் அப்பிளின் iOS செல்பேசிகளில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

இதற்கென பிரத்தியேகக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டிய தொல்லை இருக்காது. செல்பேசி எண்ணுடனேயே இந்த சேவையில் இணையலாம்.

WiFi யிலும் செல்பேசியின் இணையத் தொடர்பிலும் தானாக மாறி மாறிச் செயற்படும் விதமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதால், அழைப்புத் துண்டிப்பு இல்லாமல் பேச முடியும் என்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இன்னும் ஒரு சில நாட்களில் Google Duo பாவனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் மைதானம் விமானப் படையினரால் ஒப்படைப்பு!!

Rambaikulam

கடந்த 30 வருடங்களாக விமானப்படையினர் வசமிருந்த வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானம் மீண்டும் பாடசாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் பிரதேசத்தில் நிலவிய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான மைதானம் வவுனியா விமானப்படை முகாமிற்கென சுவீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த மைதானம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு பாடசாலையின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, பாடசாலையின் அதிபரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி இரு பெண்கள் பலி, மேலும் இருவர் மாயம்!!

Kadalதெற்கு கடற்பகுதியின் பலபிடிய பகுதியில் நீரில் மூழ்கிய இரு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரு ஆண்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை இவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

இங்கிலாந்து இளையோர் அணியை இங்கிலாந்தில் வைத்து WhiteWash செய்த இலங்கையின் இளையோர் அணி!!

SL

இங்கிலாந்திற்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும், இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி 3-0 என்று வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலிய அணியை 3-0 என்று டெஸ்ட் தொடரில் வெற்றிகொண்டு சாதனை படைத்துள்ள நிலையில் இலங்கையின் 19 வயதிற்குட்பட்டோர் அணியும் இங்கிலாந்தில் வெற்றிவாகை சூடியுள்ளமை பாராட்டதக்கதே.

ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த டெஸ்ட் தொடரை 1-0 என்று கைப்பற்றிய நிலையில், அதன் பின் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் 3 போட்டிகளிலும் இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதன் படி முதலில் ஆடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 49.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளைஞர் கிரிக்கட் அணி சார்பாக 2வது போட்டியில் சதம் விளாசிய அவிஷ்க பெர்னாண்டோ இந்தப் போட்டியிலும் அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார்.

அவிஷ்க பெர்னாண்டோ 138 ஓட்டங்களையும், டிலான் ஜயலத் 67 ஓட்டங்களையும், தலைவர் சரித் அசலன்க 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

301 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 276 ஓட்டங்களை மட்டுமே பெற்று 24 ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணி சார்பில் பந்து வீச்சில் ஹசரங்க டி சில்வா 3 விக்கட்டுகளையும், தமித் சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றி இலங்கை 19 வயதிற்குட்பட்ட கிரிக்கட் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வில் ஓர் முன்னாள் போராளியின் குமுறல்கள்!!

Poraali

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.08.2016) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் போது முன்னாள் போராளி ஒருவர் தனது ஆதகங்களை பின்வருமாறு வெளியிட்டார்..

அரசியல்வாதிகள் தங்களது சுய லாபநோக்குடன் தமிழ் மக்களுக்காக நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுவதைத் தவிர தமிழ் மக்களின் பிரச்சனையை யாரும் கவனிப்பதில்லை .

முன்னாள் போராளிகள் 107 பேர் மரணித்துள்ளனர். விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக பல கருத்துக்கள் வருகின்றன.

நாங்கள் தடுப்பு முகாங்களில் இருந்த சமயத்தில் எமக்கு உணவுகள் வழங்கப்பட்டது, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட உணவுகளை, தடுப்பூசிகளை பரிசளித்து சாப்பிடும் நிலையில் அன்று நாங்கள் இருக்கவில்லை.

அதனால் அதன் உண்மைத்தன்மை முன்னாள் போராளிகள் அல்லது புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகளுக்கே தெரியவில்லை . தற்போது நாங்கள் உள்ள நிலையில் அனைவரும் மனதளவில் பாதிப்படைந்துள்ளோம்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் நாங்கள் தமிழர்களுக்காக இருக்கின்றோம், விடுதலைக்காக இருக்கின்றோம், எமக்கு தீர்வுத் திட்டம் வேண்டுமேன பேசும் அரசியல்வாதிகள் முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி யாரும் கதைப்பதில்லை.

முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம். ஆனால் சமூகத்துடன் இணைக்கப்பட்ட எந்த அத்தாட்சியும் வெளியிடப்படவில்லை. முன்னாள் போராளி என்பதால் எனது உறவினர்கள் கூட என்னுடன் கதைப்பதில்லை அந்த அளவிற்கு எம்மை இந்த சமூகம் பின்தள்ளியுள்ளது.

நாங்கள் போராடியது எமது தமிழ் பேசும் மக்களுக்காக. இன்று தமிழ் மக்கள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் எமது போராட்டம். நங்கள் போராடாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகியிருக்கும். நாங்கள் போராடியது தமிழ் மக்களுக்காகவே.

முன்னாள் போராளிகள் எங்களுக்கு தனிநாடு, எங்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் , தமிழர் தனித்துவமாக நிம்மதியாக வாழ ஒரு வழி வேண்டுமேன்று போராடி மரணித்தவர்கள். அவர்களை நாங்கள் நினைவுகூறுவதற்குக் கூட தற்போது எதுவும் இல்லை.

என்னுடன் ஒன்றாக பயிற்சி எடுத்த 140 போராளிகளில் நாங்கள் 4 பேர்தான் தற்போது உயிருடன் இருக்கின்றோம்.136 பேர் மரணித்துள்ளனர். அவர்களை நாங்கள் நினைவு கூற முடியாதா?

யுத்தத்தில் இறந்த இராணுவ வீரர்களுக்கு வடக்கில் நினைவுத் தூபிகள் தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளுக்கு தூபிகள் எங்கே?

உண்மையிலேயே விஷ ஊசி ஏற்றப்படாவிட்டாலும் மனதளவில் முன்னாள் போராளிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண ஒரு நோய் ஏற்ப்பட்டால் கூட ஊசி ஏற்றப்பட்டதால் வந்த நோயாக இருக்குமோ என்ற பயம் அனைத்து முன்னாள் போராளிகளிடமும் தற்போது காணப்படுகின்றது.

முன்னாள் போராளியான நாங்கள் ஒரு கூட்டத்திற்குச் சென்றால்கூட புலனாய்வுப் பிரிவினர் எம்மை பின் தொடர்கின்றனர்.

அப்படியிருந்தும் எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, ஆணைக்குழு முன் எனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

ஒற்றை இயந்திர விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ள அவுஸ்திரேலிய இளைஞர்!!

Fl

ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகம் முழுவதும் தனியாக வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞரான Lachlan Smart இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

விமான போக்குவரத்து மூலம் இவ்வாறு பயணித்தது இந்த இளைஞனுக்கு இதுவே முதல் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒற்றை இயந்திர விமானம் மூலம் 18 வயதான Lachlan Smart என்பவர் கடந்த ஜூலை 4 ம் திகதி அவரது பயணத்தை அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து ஆரம்பித்துள்ளார்.

இவர் ஏழு வாரங்களாக 24 ஆயிரம் மைல்கள் உட்பட 5 கண்டங்களில் உள்ள 20 நாடுகளை கடந்து வருகை தந்துள்ளார்.

ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகை வலம் வர முயன்ற முதல் அவுஸ்திரேலிய இளம் சிறுவன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, Ryan Campbell(19) என்பவரே உலகை வலம் வர முதலில் முயற்சி செய்த அவுஸ்திரேலிய பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ryan Campbell தனது பயணத்தை 2013ம் ஆண்டு 7 மாதங்கள் மற்றும் 25 நாட்களில் இந்த முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Lachlan Smart அவரது சாகசத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

உலக சாதனையை பெறுவதற்காக முயற்சித்த இளம் இளைஞனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Bryce Hutchesson கூறியுள்ளார்.

அத்துடன் இது உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் சிறந்த எடுத்துக் காட்டாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்கான எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். அதுவரையில் இலங்கை பெரிய வரவேற்பு மற்றும் விருந்தோம்பல்களை வழங்கும் என தாம் நம்புவதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் Bryce Hutchesson குறிப்பிட்டுள்ளார்.

எவரஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் இலங்கைப் பெண்ணுக்கு தூதுவர் பதவி!!

J1

எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதல் இலங்கை பெண்ணான ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு ஆக்கக்குறி (Brand) தூதுவர் பதவியை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக ஒரு வருடத்திற்கு இவர் ஆக்கக்குறி தூதுவராக பணியாற்றுவார் என அமைச்சு கூறியுள்ளது.

ஜயந்தி குரு உத்தும்பாலவுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி இந்த பதவி வழங்கப்பட உள்ளது.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 2017 ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை அவர் ஆக்கக்குறி தூதுவராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Everast

ரஷ்யாவிடம் தங்கப்பதக்கத்தை பறிக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு : காரணம் தெரியுமா?

Russia

பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீராங்கனைக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி அளிக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக ரஷ்ய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் 14 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்களது ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் மறுபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

இந்நிலையில் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ரஷ்யா வீராங்கனை யூலியா செர்மோஷன்ஸ்க்கயாவிடம் நடத்திய மறு பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷ்யா திருப்பி தர வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒலிம்பிக்கில் அவர் நிகழ்த்திய முந்தைய சாதனையும் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.