வரலட்சுமியுடன் விஷால் : இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!!

Vishal

விஷாலும், வரலட்சுமியும் காதலர்கள் என்று சினிமா வட்டாரத்திலும், மீடியா வட்டாரத்திலும் ஒரு செய்தி அடிப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வருவதும், விஷால் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு லட்சுமி இருப்பார் என்று கூறியதும் இவர்கள் காதலர்களாகதானோ என்ற ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் எல்லாமே சொல்லும் என்று டுவிட்டும் போட்டுள்ளார்.

இதை பார்த்த அவரது ரசிகர்களும், சக நடிகர்களும் விஷால், வரலட்சுமியை திருமணம் செய்துகொள்ளப் போவதைத்தான் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் விஷால் தரப்பில் இருந்தோ, வரலட்சுமி தரப்பில் இருந்தோ இதற்கு எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் மௌனம் சாதிப்பதால் கிட்டத்தட்ட தங்கள் திருமணத்தை உறுதி செய்து கொண்டார்களோ என்ற சந்தேகமும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பரவி வருகிறது. எது, எப்படியோ கூடிய விரைவில் இதுகுறித்து உறுதியான தகவல்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய இரு நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்த இலங்கை முடிவு!!

Srilankan

பாரிஸ் மற்றும் பிராங்பேர்ட் (Frankfurt) ஆகியவற்றுக்கான தனது சேவையை, இவ் வருடத்தின் குளிர்காலத்துடன் (winter) இடைநிறுத்த ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிராங்பேர்ட் மற்றும் கொழும்புக்கு இடையிலான இறுதி விமான சேவை (UL 553/554) ஒக்டோபர் 30ம் திகதியும், பாரிஸில் இருந்து கொழும்புக்கான இறுதி விமான சேவை (UL 563/564) நவம்பர் 6ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

நாளாந்தம் ஏற்படும் நிதி இழப்புக் காரணமாக குறித்த விமான சேவைக்கு நிதி வழங்குவதை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, ஶ்ரீ லங்கள் எயார் லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வவுனியா விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது!!

 
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைத்துத் தருமாறு கோரி இன்று காலை ஆரம்பமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மற்றும் நேரில் சென்ற சிறிரேலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா ஆகியோர் இன்று (27.06.2016) மாலை கூடிய வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் ஆகிய இணைந்து எடுத்த தீர்மானத்திற்க அமைவாக எதிர்வரும் வியாழக்கிழமை வவுனியா வரும் வடமாகாண முதலமைச்சர் அவர்களை சந்தித்து நேரடியாக சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி வவுனியா தாண்டிக்குளத்தில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கான முடிவினை எற்படுத்தித் தருவதாக அளித்த வாக்குறுதியை அடுத்து இன்றைய உண்ணாவிரதப் போராட்டம் மாலை 6.40 மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது.

DSC_0012 DSC_0013 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0021_1 DSC_0022 DSC_0025 DSC_0026 DSC_0027 DSC_0029

தலைமுடி நன்கு கருப்பாக வளரவேண்டுமா? இதை பின்பற்றுங்கள்!!

making_hair_grow_faster
இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல பொலிவை தருகிறது.

1. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சதா மஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.

2. முடி நன்றாக வளர: காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.

3. செம்பட்டை முடி நிறம் மாற: மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும்.

4. முடி நன்கு வளர: செம்பருத்தி பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும்.

5. தலைமுடி உதிர்வதை தடுக்க: கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலைமுடி உதிராது.

6. இளநரை கருப்பாக: நெலிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

7. முடி கருமையாக, முடி உதிர்வது நிற்க: காய்ந்த நெல்லிக் காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம்.

வவுனியா நகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!

 
வவுனியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தனியார் பேரூந்து ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு, வவுனியா விவசாயிகளின் பணிப்புறக்கணிப்பினை முன்னிட்டு வவுனியா நகர் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகம், வவுனியா இ.போ.சபை பேரூந்து தரிப்பிடம் போன்றவற்றில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

1 DSC_0019 DSC_0021 DSC_0052 DSC_0053

வவுனியாவின் அபிவிருத்தியை தீர்மானிப்பது வவுனியாவே : விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்!!

 
இன்று காலை 8 மணிமுதல் தினச்சந்தை வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் தமது 35 வியாபார நிலையங்களை மூடி இவ் உண்ணாவிரதப் போரட்டத்தில் இணைந்து கொண்டனர்.

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்தில் அமையவேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று உண்ணாவிரதத்திலிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை ஆரம்பமான தொடர் உண்ணாவிரதம், இன்று முடிவு ஏதும் எட்டப்படாவிட்டால் தொடர்ந்து நாளையும் தொடரவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.கே.மஸ்தான் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, சிறிரேலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர், மற்றும் சங்க உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

1 DSC_0058 DSC_0059 DSC_0060 DSC_0061 DSC_0062 DSC_0063 DSC_0064 DSC_0065 DSC_0066 DSC_0067 DSC_0068 DSC_0070 DSC_0072 DSC_0073 DSC_0074 DSC04948 DSC04949 DSC04950 DSC04951 DSC04960 DSC04969 DSC04971

மெட்ராஸ் படத்தில் நடித்த குணசித்திர நடிகை தீக்குளித்து தற்கொலை

madras_actressdead001

ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் மெட்ராஸ். இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.இதற்கு முக்கிய காரணம் மிகவும் யதார்த்தமாக பலரும் படத்தில் நடித்தது தான், இந்த படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் நீலாவதி.

இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தீக்குளித்து இறந்துள்ளார், இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இவர் ஒரு சில சீரியலிலும் நடித்தவராம்.

சியான் விக்ரம் வீட்டிற்கு மருமகன் ஆகப்போகிறவர் இவர்தானாம்!!

mqdefault

சியான் விக்ரம் இப்போதும் புதுமாப்பிள்ளை போல் இருக்கிறார். ஆனால் அவருடைய பிள்ளைகளுக்கே திருமணம் செய்து வைக்கும் நேரம் வந்துவிட்டது.விக்ரமின் மகள் அஷிதாவிற்கு அடுத்த மாதம் ஜுலை 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக நாம் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் அவர்களது வீட்டு மாப்பிள்ளை யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிகே பேக்கரி ரங்கநாதன் குடும்பத்தின் மனு ரஞ்சித் விக்ரமின் வருங்கால மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க முழுக்க பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமாம்

வவுனியா தனியார் பேரூந்து ஊழியர்கள் கண்டனப்பேரணி!!

 
பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை(27.06.2016) முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று திங்கட்கிழமை காலை முதல் வவுனியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்
இன்று (27.06.2016) காலை 10.30 மணியளவில் வவுனியா தனியார் பேரூந்து தரிப்பிடத்திலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை தொடரணியாகச் சென்ற பேரூந்துகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகே தரித்து இ.போ.ச இணைந்த தனியார் நேர அட்டவனை எங்கே?, மாகாண அரசே உரிய அதிகாரத்தை பெற்று எமது தனியார் போக்குவரத்து சேவையினை சீர் செய், நல்லாட்சி அரசே தனியார் போக்குவரத்தினை ஒதுக்காதே என பல்வேறு பாதாகைகனை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் வவுனியா தனியார் போக்குவரத்தின் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ராஜேஸ்வரன் அவர்களினால் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருச்செல்வம் திரேஸ்குமார் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

1 2 DSC_0038 DSC_0039 DSC_0040 DSC_0041 DSC_0044 DSC_0045 DSC_0046 DSC_0047 DSC_0048 DSC_0089 DSC_0090 DSC_0092 DSC_0093 DSC_0095 DSC_0098 DSC_0102 DSC_0105 DSC_0107 DSC_0108 DSC_0110 DSC_0111 DSC_0112 DSC_0113 DSC_0114 DSC_0116 DSC_0120 DSC_0122 DSC_0125_1

ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தாய் : கொடூரமாக குத்தி கொலை செய்த மகன்கள்!!

1 (14)

சவுதி அரேபியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்ற தாயாரை மகன்கள் இருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சவுதியின் தலைநகரான ரியாத்தில் 20 வயதான இரட்டை சகோதரர்கள் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் மீது இவர்களுக்கு அளவற்ற விசுவாசம் இருந்துள்ளது. மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு இருவரும் ரகசியமாக திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த திட்டம் இவர்களது தாயாருக்கு தெரியவந்துள்ளது.

‘’நாட்டை விட்டு வெளியேறி ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்றால், அரசாங்கத்திடம் உங்களது திட்டம் குறித்து தெரிவித்துவிடுவேன்’’ என தாயார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த இருவர் வீட்டை விட்டு வெளியே சென்று ரகசியமாக திட்டமிட்டுள்ளனர்.’தனது குடும்பத்தினர் உயிருடன் இருக்கும் வரை நமது கனவு நிறைவேறாது’ என எண்ணிய அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீண்ட கத்தி ஒன்றை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.இருவரின் திட்டத்தையும் முதலில் தெரிந்துக்கொண்ட தாயாரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். பின்னர், தந்தையை நோக்கி பாய்ந்த அவர்கள் அவரையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர்.இதற்கு அடுத்ததாக மூத்த சகோதரரான மூன்றாவது நபரையும் அவர்கள் இருவரும் வெட்டி தள்ளியுள்ளனர்.

மூவரும் உயிரிழந்து விட்டதாக எண்ணிய அவர்கள் அங்கிருந்து திருடிய கார் மூலமாக தப்பி சென்றுவிடுகின்றனர். இந்த சம்பவத்தில் தாயார் அதே இடத்திலேயே பலியானார்.தந்தை மற்றும் மூத்த சகோதரர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவம் நிகழ்ந்த பிறகு, தலைநகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் இரட்டை சகோதரர்களை பொலிசார் கைது செய்தனர்.இருவரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததனால் தான் சம்பத்தை நடத்தியதாக இருவரும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தரையிறங்கியபோது தீப்பற்றி எரிந்த விமானம் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 241 பயணிகள்!!

Las-Vegas-runway-f_3433573b
சிங்கப்பூர் நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியபோது என்ஜின் தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து அதிலிருந்து 241 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்ற விமானம் 222 பயணிகள் மற்றும் 19 விமான குழுவினருடன் இத்தாலியில் உள்ள மிலன் நகருக்கு புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி அதை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.

8 நிமிடத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி: வெளியான வீடியோ!!

swathi-killing

பெண் பொறியாளர் சுவாதி கொலை குற்றவாளியின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட பொலிசார், இன்னும் 4 நாட்களுக்குள் குற்றவாளியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் திகதி பொலிசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் காலை 6.32 மணிக்கு குற்றவாளி என்று சந்தேகப்படக்கூடிய அந்த நபர் தலையை கீழே குனிந்தபடி நடந்து வருகிறார்.

சுவாதியை அவருடைய தந்தை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்ட நேரம் காலை 6.35 மணி, இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அந்த கொலையாளி ரயில் நிலையத்துக்குள் சென்றிருக்க வேண்டும். சுவாதி 6.35 மணிக்கு ரயில் நிலையத்துக்குள் வந்ததும், அக்குற்றவாளி தான் தீட்டிய திட்டங்களை அரங்கேற்றியிருக்க வேண்டும் என பொலிசார் கூறியுள்ளனர்.

சுவாதியை 2–வது நடைமேடையில் வைத்து கொலை செய்யும் அந்த நபர், 6.43 மணிக்கு முதலாவது நடைமேடையில் வெட்ட பயன்படுத்திய அரிவாளை கையில் வைத்து கொண்டு ஓடுகிறார். மொத்தத்தில் கொலையாளி சுமார் 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்துக்கட்டிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.

தற்போது அந்த வீடியோ காட்சியில் பதிவான அந்த நபர் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. வீடியோ காட்சியில் பதிவான அந்த நபரின் உருவப்படத்தை பெரிதாக்கி, அதில் முகம் தெளிவாக தெரியும் அளவுக்கு தயார் செய்து வருகிறோம். அந்த படத்தை வைத்து குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் பிடித்துவிடுவோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி வீடு திரும்பிடாத ஆத்திரத்தில் கோவில் சிலையை சேதப்படுத்திய கணவர் கைது!!

2015_Earthquake_in_Nepal-Pashupatinath_Temple_Area_(12)

மத்திய பிரதேசத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவி வீடு திரும்பவில்லை என்ற ஆத்திரத்தில் அனுமன் கோவிலில் இருந்த சிலையை உடைத்த கணவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். இது குறித்து நகர பொலிஸ் தலைவர் ஷஷிகாந்த் கங்கானே கூறும்பொழுது, பல்டா பகுதியில் பழமையான கேதாபதி அனுமன் கோவில் உள்ளது. இங்கு உள்ள சிலையை சேதப்படுத்தியதற்காக மனோஜ் பஞ்சாரா (37) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட சண்டையில் பஞ்சாராவின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை வீட்டிற்கு திரும்ப அழைத்து வர பஞ்சாரா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. அதன்பின் அனுமன் கோவிலில் சென்று அவர் வேண்டியுள்ளார். அவரது அனைத்து வேண்டுதல்களுக்கு பின்னரும் மனைவி திரும்பி வராத ஆத்திரத்தில் நேற்றிரவு அனுமன் சிலையை உடைத்துள்ளார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மனோஜ் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தினை அடுத்து அந்த கோவிலை சுற்றி சில வலது சாரி அமைப்புகள், இந்த விவகாரத்தில் பொலிசார் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டன. இதனையடுத்து கோவிலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

திருமணத்தில் வீடியோ எடுக்கவில்லையா? மணமகளை குண்டுகட்டாக தூக்கிகொண்டு வெளியேறிய குடும்பம்!!

indian-wedding-big-image-9-rahul-weds-radhika_1427799010_725x725
திருச்சியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வீடியோ எடுக்கவில்லை, ஆடம்பரமாக ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற காரணத்தை கூறி, பெண்வீட்டார் திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரேவதி, செந்தில் ஆகிய இருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று திருமணம் நடக்கவிருந்தது. அப்போது புரோகிதர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருக்கையில், திடீரென கோபம் அடைந்த மணமகள் வீட்டார், திருமணத்தில் வீடியோ எடுக்கவில்லை, ஒழுங்கான மண்டபமும் இல்லை என கூறி திருமணத்தை நிறுத்த கூறியுள்ளனர்.

மேலும் மேடையில் இருந்த குத்துவிளக்கு மற்றும் தாம்பாள தட்டுகளை தூக்கி எறிந்துள்ளனர்.எங்கள் வீட்டின் சார்பாக பெரிய ஆட்கள் வருவார்கள், எனவே நன்றாக வீடியோ எடுக்க வேண்டும் என கூறியிருந்தும், வீடியோவுக்கு ஏற்பாடு செய்யவில்லை என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். மணமேடையை விட்டு மணமகளை எழுந்து வருமாறு கூறியுள்ளனர், ஆனால் மணமகள் மறுத்துவிடவே, மணமகளை குண்டு கட்டாக தூக்கிகொண்டு வெளியேறியுள்ளனர்.

இதில் ஏற்பட்ட கலவரத்தில் மணமகள் மயங்கிவிடவே, அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர், இந்த சம்பவம் தொடர்பாக மணமகன் வீட்டார் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் இருவீட்டாரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் மணமகள் வீட்டார் விடாப்பிடியாக இருக்கவே இந்த திருமணம் நின்றுள்ளது.

வவுனியா தனியார் பேரூந்துகள் பணிபுறக்கணிப்பு : அதிகரித்த அரச பேரூந்து சேவை!!

 
தனியார் போக்குவரத்துச் சேவைகள் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ள நிலையில் வவுனியாவில் தனியார் பேரூந்துகள் எவையும் சேவையில் ஈடுபடுத்தப் படாமையினால் அரச உத்தியோகத்தர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பேரூந்திற்கு 60 வீதமும், இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையை மேற்கொண்டு வருவதாக வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசுடனும், மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எந்தவித பலனும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் குற்றம்சுமத்தப்பட்டள்ளது.

1 DSC_0001 DSC_0002 DSC_0003 DSC_0004 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0012 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018

பஸ் விபத்து – 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

india-bus-accident_f97a98ba-ccc0-11e5-9f1f-e42e029c5977

பிபில – பதுளை வீதியின் உனகொல்ல பகுதியில் பஸ் ஒன்று 10 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 27 பேர் காயமடைந்த நிலையில், பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பிபிலயில் இருந்து சேனாபதிய நோக்கிய சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே, இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லையென வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.