ஏ.டி.எம் இயந்திரங்களில் திருட்டு! சீன பிரஜைகள் இருவர் விளக்கமறியலில்!!

1150

வங்கிகளிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதனமான முறையில் வாடிக்கையாளர்களின் விபரங்களை திருடி வந்த சீனப் பிரஜைகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த இருவரையும், கொழும்பு 6 பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.வங்கிகளிலுள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் தேவையற்ற இலத்திரனியல் பாகங்களை பொருத்தி உரிமையாளர்களின் தகவல்களை குறித்த இருவரும் திருடி வந்துள்ளனர்.ஏ.டி.எம் அட்டையை பணத்தினைப் பெற்றுக்கொள்ள இயந்திரத்தில் செலுத்தும் போது, சந்தேகநபர்களால் பொருத்தப்பட்ட பாகத்தினூடாக தகவல்கள் திருடப்பட்டு வந்தன.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த 26ம் திகதி வங்கி நிர்வாகம், பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது புறக்கோட்டையில் உள்ள குறித்த வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட இலத்திரனியல் சாதனம் கண்டறியப்பட்டது.

அத்துடன், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஏ.டி.எம் இயந்திரத்திலும் இவ்வாறு இலத்திரனியல் சாதனம் பொருத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்த போது, குறித்த சீன பிரஜைகள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில், வெள்ளவத்தை பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்ட உபகரணங்களை கழற்றிச் செல்ல வந்த சீன பிரஜைகள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களை திருட பயன்படுத்திய இலத்திரனியல் சாதனம் வெளிநாட்டு, உள்நாட்டு நாணயத்தாள்கள் போன்றன கைப்பற்றப்பட்டன.இதேவேளை, சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 11ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

காரில் தூங்கிய சாரதி! தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!!

1 (50)

ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில், கொழும்பு பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற கார் ஒன்று வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று சனிக்கிழமை காலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.காரில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து! மூவர் வைத்தியசாலையில்!!

17

கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை பரந்தனிலிருந்து முல்லைத்தீவு சென்றுகொண்டிருந்த வேளை, கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த சாரதி உட்பட மூவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியா தமிழ்ச் சிறுவர்கள் இருவர் பௌத்தத் துறவிகளாக துறவறம்!!(காணொளி)

 
இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக துறவறம் பூண்டுள்ளனர்.

கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரின் வழிநடத்தலில் இந்தச் சிறார்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாறினார்கள்.

துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி பெற்றுள்ள இந்தச் சிறார்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழங்குவதற்காக தயார்படுத்தவுள்ளதாக பெந்திவெவ தியசேன தேரர் அங்கு சென்ற பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரிடம் கூறினார்.

-BBC தமிழ் –
 

1 3 2

வவுனியாவில் மே 1ம் திகதி சகல தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்கவும் : வர்த்தக சங்கம்!!

1-may_pic

நாளை மறுதினம் மே முதலாம் திகதி தொழிலாளர்கள் தினம் அனுஷ்டிகப்படவுள்ளது. அதனை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை வழங்கி தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமையினையும் கௌரவத்தினையும் வழங்குமாறு வவுனியா மாவட்ட வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர்களின் தினத்தினை தொழிலாளர்கள் அனுஷ்டிக்க அவர்களுக்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் ஆதரவு வழங்கி நாளை மறுதினம்(01.05.2016) தினம் சகல தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குமாறு மேலும் தெரிவித்துள்ளனர்.

மே 2 ஆம் திகதி விடுமுறை இல்லை!!

Holiday

மே தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே 2ஆம் திகதி அரச விடுமுறை தினமில்லையென பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத்ததுக்கு 1 கோடி நிதி வழங்கிய லைகா நிறுவனம்!!

Lyca

லைகா நிறுவனம் தற்போது கமல் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இதற்கான விழாவில் நடிகர் சங்கத்ததுக்கு 1 கோடி நிதி காசோலையை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா புரொடக்ஷன் இணைந்து வழங்கும் கமல்ஹாசன் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஸ்கரன் மற்றும் கருணாமூர்த்தி, ராஜு மஹாலிங்கம் இவர்களுடன் பிரபு, சிவகுமார், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க பொதுச் செயலாளார் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசரிடம் வழங்கினார்.
விழாவில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் லைகா குழும தலைவர் சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.

கமல் சொன்ன பொய் : ஆதாரத்துடன் வெளியான உண்மை!!

Kamal

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்றும், அதனால் வாக்களிக்க போவதில்லை எனவும் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவரது பெயர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதற்கிடையே தேர்தல் ஆணையம் டுவிட்டர் பக்கத்தில், நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

விமானத்தைத் தாக்கிய மின்னல் : அலறித் துடித்த பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!!(காணொளி)

flight

பிரித்தானியாவில் தரையிறங்க ஆயத்தமான விமானத்தை மின்னல் தாக்கியதால் அதில் இருந்த பயணிகள் பீதியில் அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் மின்னல் ஒன்று விமானத்தின் இறகு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பீதியில் அலறியுள்ளனர்.

இருப்பினும் மின்னல் தாக்கிய விமானத்தை பிரித்தானிய ஏர்வேஸ் விமானி பத்திரமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

விமானத்தை மின்னல் தாக்கிய போது அந்த ஒரு நொடி வானம் இரத்தச் சிவப்பாக காட்சியளித்துள்ளதாக கூறுகின்றனர்.

விமானத்தில் இருந்த பலரும் மின்னலின் தாக்கத்தை உணர்ந்ததாகவும், அது விமானத்தில் மோதுவதை தங்களால் உணர முடிந்தது எனவும் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் தரையிறங்கியதில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியுள்ளது, இருப்பினும் முழுமையான சோதனைக்கு பின்னரே அடுத்த சேவைக்கு இந்த விமானத்தை பயன்படுத்த இருப்பதாக பிரித்தானியா ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் மட்டும் 3 விமானங்கள் மீது மின்னல் தாக்கியுள்ளதாக விமானிகள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மின்னல் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளதால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக மே 2ம் திகதி முதல் பாடசாலைகள் 12 மணியுடன் மூடல்!!

Closed

வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் அனைத்தும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நண்பகல் 12 மணியுடன் நிறைவடையுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,மறு அறிவித்தல் வரை நண்பகல் 12 மணியுடன் பாடசாலைகள் மூடப்படுமென வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாணத்தில் நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளும் நண்பகல் 12 மணியுடன் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓடி விளையாடு பாப்பா

13115626_1075525155822401_61695722_n

வீதியில் விளையாட்டு
இன்பான காற்றோடு.

சுவாசத்தில் ஒரு பாட்டு
துள்ளலான மெட்டோடு.

ஓடிக் களைத்திடினும்
உற்சாகமான விளையாட்டு.

கணனியில் கண்ணயர்ந்து
காணமல் போவதை நீ மாற்று.

ஓடிப்பிடித்து சுதந்திரமாய்
ஒளிந்து நீயும் விளையாடு.

தேடி நட்பு நாடி வரும்.
தேகப்பயிற்சி கூடி வரும்.

பாடப்படிப்பு முடிந்தவுடன்
பம்பரமாய் சுழன்றாடு.

கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும்
களிப்பு தரும் விளையாட்டு.

வானம் பார்த்து மகிழ்வுடனே
பட்டம் விடு காற்றோடு.

பகை மறந்து அன்போடு
பந்த அடித்து விளையாடு.

சரி பிழை எது என்று முட்டி
மோதிப் பார்த்துவிடு.

நேர்மையாக நீ ஆடு.
நேரம் மறந்து களித்தாடு.

வீதியிலே விளையாட்டு.
சமூக விளிப்புத்தரும் விளையாட்டு.

கணனியில் விளையாட்டு
அறிவு தரும் வகைபாரு.

தெருவிலே விளையாட்டு
உணர்வு தரும் உறவோடு.

-குமுதினி ரமணன்-

வவுனியா பிரதேச செயலகத்தினால் வதிவோர் தகவல் முறைமை அறிமுகவிழாவும் வழங்கலும்!!

 
வவுனியா பிரதேச செயகத்தின் ஏற்பாட்டில் வதிவோர் தகவல் முறைமை இலத்திரனியல் படுத்தப்பட்ட முதல்தர சேவையினை வடக்கு மாகாணத்தில் இன்று (29.04.2016) வவுனியா கள்ளிக்குளம் கிராம அலுவலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி றோகன புஸ்பகுமார அவர்களினால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுள்ள 156 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குடும்ப விபரங்களை தாங்கிய வதிவோர் தகவல் முறைமை வடக்கு மாகாணத்தில் முதற்தடவையாக வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டையினை இலத்திரனியல்படுத்தப்பட்டு அதில் குடும்ப உறுப்பினர்கள் விபரங்கள் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு தேடல்களுக்கான பயணம் 1 எனும் நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைத்து கிராம சேவையாளர்களின் பிரிவிலுள்ள பொது மக்களின் விபரங்களைத் திரட்டி கனணியில் உள்ளடக்கி இலகுவான சேவையினை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமே இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவிலும் இதன் நடைமுறை உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி.சுகந்தி கிஷோர், மேலதிக பிரதேச செயலாளர், திட்டப்பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகதர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், கள்ளிக்குளம் பிரிவு பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அரசாங்க அதிபரினால் பொது மக்களுக்கு வதிவோர் தகவல் முறைமை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட குடியியல் தரவுதளத்தின் வெளியீடும் வழங்கி வைக்கப்பட்டது.

DSC03299 DSC03312 DSC03334 DSC03352 DSC03354 DSC03358 DSC03359 DSC03362 DSC03370 DSC03372

வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் உபகரணக் கண்காட்சி!!

 
வவுனியா பிரமண்டு வித்தியாலயத்தின் கற்றல் கற்பித்தல் உபகரணக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் திருமதி எம்.ஏ.மோகன் தலைமையில் இன்று (29.04.2016) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா தெற்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் செல்வி கந்தையா, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை பொறியியலாளர் திரு.எஸ்.சிவகுமாரன், வவுனியா தெற்கு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.கணேசபாதம், ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் திரு.றோய் ஜெயக்குமார், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.அ.குணசீலன், இவர்களுடன் பாடசாலை சமுகத்தினர், பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டி சிறப்பித்தனர்.

DSC02955 DSC02959 DSC02969 DSC02971 DSC02973 DSC02974 DSC02975 DSC02978 DSC02982 DSC02985 DSC02991 DSC03004 DSC03012 DSC03019 DSC03020

வவுனியா கமநல வங்கியின் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கான மாபெரும் விளையாட்டு விழா!!

3

வவுனியா கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கமநல வங்கியின் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கான மாபெரும் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா நாளை 30.04.2016 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவில் பல்வேறு விளையாட்டு மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்தியாவில் கொளுத்தும் வெயிலுக்கு 4,200 பேர் உயிரிழப்பு!!

termometer

இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனல் காற்றும் பரவரலாக வீசுகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கோடை வெயில் மற்றும் அனல் காற்றின் கொடுமை தாங்காமல் 4,200 பேர் உயிழந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கோடை வெப்பத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.வெப்பத்தை தாங்க முடியாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரு தினங்களில் மட்டும் 96 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் கோடை வெயில் துவங்கி ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திற்கு ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் உயிர் பலி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஏமாற்றி பெண் பலாத்காரம்!!

1 (54)

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக்கூறி ஏமாற்றி, 35 வயது பெண்ணைப் பலாத்காரம் செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரிலுள்ள ஹனுமந்கார் பகுதியைச் சேர்ந்த 35 வயதுபெண் ஒருவர் பொலிசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், அவர் தன்னை குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றி, 6 பேர் கொண்ட கும்பல் ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றதாகவும்,

அங்கு அவர்கள் தன்னைப் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார்,இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பலாத்கார புகார் மட்டுமின்றி, மற்றொரு புகாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது அப்பெண் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபரை பணியில் இருந்து நீக்கியுள்ளது அவரது நிறுவனம்.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ‘அந்த நபர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. ஆனால், அதற்கு உரிய விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. இதனால், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.