வவுனியா புதூர் நாகதம்பிரானின் பெயரில் பணம் சேர்க்கும் திருடர்கள் : பரிபாலனசபையினர் எச்சரிக்கை!!

Puthur

வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா வரும் 06.06.2016 அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இன் நிலையில் ஆலயத்தின் பெயரில் போலியான பற்றுச்சீட்டு அச்சிடப்பட்டு காவி உடையுடன் திருடர்களால் பணம் சேர்க்கப்பட்டு வருகின்றமை ஆலய பரிபாலன சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே நாதம்பிரான் அடியார்களே..!! ஆலய பரிபாலன சபையினரால் யாருக்கும் பணம் சேர்ப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதனையும், நேர்த்திக்குப் பணம் செலுத்தும் அடியார்கள் பொங்கல் விழாவில் ஆலய பரிபாலன சபையினரிடம் ஒப்படைத்து பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

எல்லோரும் கன்னத்தை பிடித்து கிள்ளுகிறார்கள்- தெறி பேபி நைனிகாவின் கலாட்டா பேட்டி

b12

தெறி படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் பேபி நைனிகா தான். விஜய்யின் மகளாக இவர் படத்தில் கொடுக்கும் கவுண்டர் வசனங்களுக்கு திரையரங்கமே அதிர்கின்றது.இவர் நடிகை மீனாவின் மகள் என்பது பலரும் அறிந்ததே.

இந்நிலையில் நைனிகா ஒரு பேட்டியில் ‘ படம் பார்த்துட்டு நீ நல்ல நடிச்சுருக்கனு சொல்றாங்க, இப்போ எல்லோருமே என்னை தெறி பேபின்னு தான் கூப்புறாங்க.அப்புறம் கன்னத்தப்பிடிச்சு கிள்ளுறாங்க, ஒரு செல்பி எடுத்துக்குறேன் உன்னோட அப்படின்னு கேட்குறாங்க, ஷுட்டிங்கில் எமி தான் என்னோடு க்ளோஸ் ப்ரண்ட்’ என மழலை மாறாமல் பேசியுள்ளார்.

 

பெண்களின் வயிற்று கொழுப்புக்கு காரணம்!!

abf230692c74c71be82611537dd18851

பெண்கள் எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள்.பருவ வயதிலும் திருமணத்துக்கு முன்பும் சிற்றிடையோடும், ஒட்டிய வயிறுமாக வலம் வரும் இளம் பெண்களுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பெற்றபின் இடையும், வயிறும் பெருத்து அழகு காணாமல் போய்விடுகிறது. உடல்பருமனைப் பற்றி கண்டுகொள்ளாத பெண்கள் கூட எப்போதும் கர்ப்பிணிப் போல் தோற்றம் தரும் பெருத்த வயிறை வெறுக்கவே செய்கிறார்கள்.

1989-ல் தேசிய குடும்பநல மற்றும் சுகாதார ஆய்வில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 11 சதவீதம் பேர் உடல் பருமனாவது தெரியவந்துள்ளது. இதுவே 2005-ல் 15 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 5.8 கோடி பெண்கள் உடல் பருமனாக இருக்கிறார்கள்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் 2009-ல் நடத்திய ஆய்வில் 12.3 சதவீத நகர்ப்புற பெண்கள் குண்டாக உள்ளனர். இதற்கு காரணம் வீட்டு வேலை குறைவு, முறையற்ற உணவு ஆகியவைதான் என்கிறார்கள், நிபுணர்கள்.

மெனோபாஸ் பருவத்தை அடையும் 40 முதல் 60 வயதில் உடல் பருமனான நிலை மாறி தற்போது 20 முதல் 30 வயதில் பெண்கள் குண்டாக ஆரம்பித்து விட்டார்கள். உடல் பருமனாகும்போது அதிகப்படியான கொழுப்பு தோலுக்கு அடியில் படிகிறது. மிகவும் ஆபத்தானது வயிற்றில் சேரும் கொழுப்பு.

அடிவயிற்று கொழுப்பினால் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாலுணர்வு குறைபாடும் தோன்றுகிறது. இதை தடுக்க சில பழக்க வழக்கங்களை மேற்கொண்டாலே போதும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறும்.

தூங்கி எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை தொடங்கி விட வேண்டும். முழு தானியங்கள், புரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரவில் சீக்கிரமே உணவை முடித்துக் கொண்டு படுக்கைக்கு செல்ல வேண்டும். கேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளது. ஓட்ஸ் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. பெண்களின் ஹார்மோன் செயல்பாட்டுக்கு சோயா நல்லது. இவற்றை உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு தொந்தரவுகளில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஓட்டல் உணவுக்கு எப்போதும் குட்பை சொல்லிவிடுங்கள். முறையாக உடற்பயிற்சி செய்து, வயிற்றுக் கொழுப்பைக் குறையுங்கள். இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மெலிந்து சிக்கென சிட்டுப்போல் பருவப் பெண் அழகிற்கு வந்துவிடுவீர்கள்.

 

பாடசாலையில் மாணவர்களை நிர்வாணமாக நிற்க வைத்த ஆசிரியர்: பெற்றோர்கள் கடும் கண்டனம்!!

2EEF5D4800000578-3339277-image-m-19_1448901341989

ஜேர்மனி நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் நிர்வாணமாக நிற்கவைத்துள்ள சம்பவத்திற்கு பெற்றோர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.ஜேர்மனியின் Dusseldorf நகரில் Europa என்ற பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் பயின்று வந்த 13 வயதான மாணவர்களுக்குதான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இரண்டு மாணவர்கள் நின்றுள்ளதை பார்த்த ஆசிரியர் ஒருவர் இருவரையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரின் முன்னால் நிறுத்தியுள்ளார்.’விளையாட்டு பொருட்கள் உள்ள அறையில் சிலபொருட்கள் காணாமல் போனதற்கு நீங்கள்தான் காரணம். உங்களுடைய பைகளை திறந்து காட்டுங்கள்’ என தலைமை ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இருவரும் ‘நாங்கள் எதுவும் திருடவில்லை’ எனக்கூறிக்கொண்டு அவர்களின் பைகளை திறந்துக் காட்டியுள்ளனர்.பைகளில் ஒன்றும் இல்லாததால் திருப்தி அடையாத தலைமை ஆசிரியர்,‘ உங்களுடைய ஆடைகளை நீக்குங்கள். சோதனை செய்ய வேண்டும்’ எனக் கடுமையான குரலில் பேசியுள்ளார்.

வேறு வழியின்றி இரண்டு மாணவர்கள் தங்களுடைய மேலாடைகளை கழட்டிவிட்டு உள்ளாடைகளுடன் நின்றுள்ளனர்.இந்த நிலையிலும் திருப்தி அடையாத அந்த கொடூரமான தலைமை ஆசிரியர் ‘இருவரின் உள்ளாடைகளையும் தூக்கி வீசுங்கள். இல்லையென்றால்,பொலிசாரை கூப்பிடுவேன்’ என அதட்டியுள்ளார்.

‘நான் இப்போது ஒன்று, இரண்டு என எண்ணுவேன். அதற்குள் நீங்கள் உள்ளாடைகளை நீக்கியிருக்கவேண்டும் எனக் கூறிவிட்டு எண்களை எண்ண தொடங்கியுள்ளார்.வேறு வழியில்லாத மாணவர்களும் உள்ளாடைகளையும் கழட்டியுள்ளனர். அப்போது, உள்ளே எந்த விளையாட்டு பொருளும் இல்லாததால் தலைமை ஆசிரியர் அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவர கொதித்தெழுந்த பெற்றோர்கள் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.புகாரை பெற்று பொலிசார் விசாரணையை துவக்கியபோது, விளையாட்டு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் எந்த பொருளும் காணாமல் போகவில்லை என தெரியவந்துள்ளது.

அதே சமயம், மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தலைமை ஆசிரியர் நடந்துக்கொள்ளவும் இல்லை என்பதும் அப்பள்ளியின் மாணவர்கள் மூலம் தெரியந்துள்ளது.எனவே, பொருட்களை திருடியதாக சந்தேகப்பட்டு தான் ஆசிரியர் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்திருந்தாலும், அதனை மோசமான வழியில் விசாரணை செய்தது குற்றம் என்பதால் தலைமை ஆசிரியர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசுவை வெட்டி எடுத்த கொடூரம்! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Baby-in-womb

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் ஒருவரின் கருப்பையில் இருந்த சிசுவினை வெட்டி எடுத்த பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கொலராடோ மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

35 வயதான டைனல் லேன் என்ற பெண், 7 மாத கர்ப்பிணியாக இருந்த மிச்செல் வில்கின்ஸ் (26) என்பவரை தாக்கியுள்ளார். தாக்கியதோடு மட்டுமல்லாமல் கருவில் இருந்த சிசுவை வெளியே எடுத்துள்ளார்.இதில் சிகிச்சை பலனின்றி அந்த சிசு இறந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக வில்கின்ஸ் பிழைத்து கொண்டுள்ளார்.

லேன் தனது காதலரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று, வில்கின்ஸை தாக்கி அவரது கருவில் இருந்த சிசுவை வெளியே எடுத்துள்ளார்.அப்போது அவரது காதலர் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த ரத்தக்கறை தன்னுடையது என்றும் தனது கரு கலைந்துவிட்டது எனவும் லேன் பொய் சொல்லியுள்ளார்.

அந்நேரத்தில் வில்கின்ஸ் வீட்டின் அடித்தளத்தில் சென்று கொண்டு கதவை மூடி ஒளிந்து கொண்டுள்ளார். மேலும் 911-க்கு போன் செய்த அவர், நடந்தவற்றை கூறியதோடு, தனது ரத்தப் போக்கை நிறுத்த முயன்றுள்ளார்.அதற்குள் லேனின் காதலன், லேனையும் அந்த சிசுவையும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்த வழக்கில், கடந்த பிப்ரவரியில் லேன் மீது கொலை குற்றம் உறுதியாகி வழக்கு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக் கிழமையான இன்று, அவர் மீது சட்ட விரோதமாக கர்ப்பத்தை கலைத்தது உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வில்கின்ஸ், லேனிடம் நீதிமன்றத்தில் கூறுகையில், நீ என் சிசுவை கொன்று என்னை வேண்டுமென்றே பல முறை இறக்க வைக்கிறாய்.மேலும், நீ நமது சமூகத்தில் வாழும் தகுதியை இழந்துவிட்டாய். எனவே நீ அதிகப்பட்ச தண்டனை பெற வேண்டும் என விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், தன் சிசுவை கொன்ற லேனை தான் மன்னிப்பதாகவும், அவரிடம் இருந்து எந்த விளக்கத்தையும் தான் ஏற்க போவதில்லை என வில்கின்ஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிய விரும்பாத ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்!!

1

தாய்­லாந்தில் இடுப்புப் பகு­தியில் இணைந்து தம்­மி­டைய இரு கால்­களை பங்­கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோ­த­ரிகள், தாமாக கைக­ளையும் கால்­க­ளையும் பயன்­ப­டுத்தி நட­மா­டவும் ஆடை அணி­யவும் மாடிப் படி­களில் வேக­மாக ஏறி இறங்­கவும் முச்­சக்­க­ர­வண்­டியை செலுத்­தவும் கற்றுக் கொண்டு அனை­வ­ரையும் வியப்பில் ஆழ்த்தி வரு­கின்­றனர்.

பாங்­கொக்கின் வடக்கே சுமார் 250 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள நகொன் ஸவான் என்ற பிராந்­தி­யத்தில் வாழும் பின் மற்றும் பான் ஆகிய இந்த சிறு­மிகள் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.அந்த சிறு­மி­களை பிரிக்க முடியும் என மருத்­து­வர்கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்ள நிலையில், அவர்­களோ தொடர்ந்து பிரி­யாது ஒன்­றி­ணைந்து இருக்கவே விருப்பம் தெரிவித்துள் ளமை குறிப்பி டத்தக்கது.

 

கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ளும் பெண் குழந்தைகள்!!

3464153658_cd50e6c517_b

நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது.காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர்.

இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டிலும் உள்ள சடங்குகளை இணைத்து செய்யும் இந்த சமூகத்தினர், இந்த திருமண விழாவை 2 நாட்கள் நடத்துகின்றனர்.அதாவது, இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளை அழிவே இல்லாத விஷ்ணுவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால், அந்த பெண் குழந்தைகள் காலம் முழுவதும் விதவையாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை அந்த சமூக மக்களிடம் உள்ளது.

பெல் பழம் எனப்படும் பழத்தை அந்த பெண் குழந்தைகள் ஒரு கையில் வைத்துக் கொண்டு, மறு கையால் விஷ்ணு சிலையை தொடுவதன் மூலம், திருமணம் நடப்பதாக கருதப்படுகிறது.இதையடுத்து திருமண விழாவை போலவே விருந்தினர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள்.

காலம் காலமாக முன்னோர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றிவருவதால் நாங்களும் இதனை தவறாமல் செய்து வருகிறோம் என பெண் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

 

மெழுகுவர்த்தியால் நேர்ந்த தீ விபத்து: 6 சிறுமிகள் தீயில் கருகி பலி!

1 (15)

உத்தரப்பிரதேசத்தில் இரவில் அணைக்காமல் விடப்பட்ட மெழுகுவர்த்தியால், வீடு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் குயிலா கண்டோன்மெண்ட் பகுதியில்அமைந்துள்ளது காலிதாம் கோவில். இந்த கோவிலின் அருகே வீடொன்றில், நான்கு சகோதரிகளும், அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் இருவரும் தங்கி இருந்துள்ளனர்.

இவர்களது பெற்றோர் பக்கத்து ஊரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால், சிறுமிகள் மட்டும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, இரவு உறங்கச் செல்வதற்கு முன்னால் மெழுகுவர்த்தியை அணைக்க சிறுமிகள் மறந்து விட்டதாகத் தெரிகிறது.இதனால், அதில் இருந்து பற்றிய தீ, வீடு முழுவதும் பரவியது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தைக் கண்டு அக்கம்பக்கத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

தீயை அணைக்க அவர்கள் முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த ஆறு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சகோதரிகள் சலோனி (வயது17), சஞ்சனா (15), பூரி (10), துர்கா (8) என்றும் அவர்களுடைய உறவுக்கார சிறுமிகள் மகிமா(9) மற்றும் தபு (7) என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் பலியான இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வாள் வெட்டில் ஒரே குடும்பத்தை சார்ந்த ஐவர் காயம்!!

valvedu-2-680x365

மருதமுனை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே வாள் வெட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வாகன விலை அதிகரிக்காது!!

145227035190913

வெளி­நாட்டு நாணய மாற்றில் ஏற்­பட்ட தளம்பல் நிலை கார­ண­மா­கவே கடந்த காலங்­களில் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட வாக­னங்­களின் விலை அதி­க­ரித்­ததே தவிர வற்­வரி அதி­க­ரிப்­பினால் அல்ல என அகில இலங்கை வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் மஹிந்த சரத்­சந்­திர குறிப்­பிட்டார்.மேலும் மே 2 ஆம் திக­திக்கு முன்னர் இறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­க­ளுக்கு அதி­க­ரிக்­கப்ட்ட 15 சத­வீத வற்­வரி தாக்கம் செலுத்­தாது எனவும் அவர் குறிப்­பட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது

நவீன ரக வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்கம் மற்றும் பயன்­ப­டுத்­தப்­பட்ட வாகன இறக்­கு­ம­தி­யாளர் சங்கம் உட்­பட்ட பிர­தி­நி­திகள் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நிதி­ய­மைச்சர் ரவி­க­ரு­ணா­நா­யக்க ஆகி­யோரை கடந்த புதன் கிழமை சந்­தித்­தனர். இதன் போது குறித்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதன் போது வாகன இறக்­கு­மதி தொடர்பில் ஏழும் சட்­டப்­பி­ரச்­சி­னை­களை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் குழு ஒன்று அமைக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.மேலும் எமது சங்­கத்­தினால் வற்­வரி அதி­க­ரிப்­பினால் ஏற்­படுத் தாக்­கத்­தினை குறைப்­ப­தற்கு நிலை­யான முறைமை ஒன்றை கடைப்­பி­டிப்­ப­தற்கு பிரே­ரித்­தி­ருந்தோம். குறித்த யோச­னையை பரி­சீ­லிப்­ப­தா­கவும் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அந்த வகையில் மே மாதம் 2 ஆம் திகதி முன்­ப­தாக இறக்­கு­மதி செய்­யப்­படும் வாக­னங்­க­ளுக்கு எவ்­வித வரி அதி­க­ரிப்பும் ஏற்­ப­டுத்­தப்­பட மாட்­டாது. ஆனாலும் கடந்த காலங்­கிளில் அனைத்து வாக­னங்­க­ளுக்­கு­மான விலை 300 000 முதல் 400 000 வரையில் அதி­க­ரிப்பு எற்­பட்­டி­ருந்­தது. இதற்கு காரணம் கடந்த காலத்தில் நாணய மாற்றில் ஏற்பட் தளம்பல் நிலையாகும். தற்போது காணப்படும் பொருளாதார முறைமையினால் வாகன இறக்குமதி துறையில் பாரிய வீழ்ச்சிய ஏற்பட்டிருந்தது

அடங்காத மலிங்க : இலங்கை மருத்துவர் காரசார குற்றச்சாட்டு!!

Malinga

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்க தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் என்று எனக்கு புரியவில்லை. அந்த 6 மாத காலம் இன்னும் கூட முடிவடையவில்லை.

இருப்பினும் இது அவரது முடிவு, நான் இதில் கருத்து தெரிவிக்க முடியாது. அவர் எனது ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாத வரை நான் அவருக்கு அட்வைஸ் செய்ய முடியாது.

சமிந்த வாஸ் கூறி சச்சின் டெண்டுல்கர் கூட அவரது முதுகுவலிக்கு என்னிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் மலிங்கா விடயத்தில் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறியுள்ளார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாபமாகப் பலி!!

canada_death

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர்.

கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர்.

24 வயது நிரம்பிய கஜன் கலாபாகன் , மற்றும் 21 வயது நிரம்பிய லிங்கவிஜிதன் கிருபநாயகம் ஆகிய இருவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் தெரிவிக்கையில்,

உறவினர்கள் எழுவர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் இவர்கள் இருவரும் உயிர்காப்பு கவசம்(Life Jacket) அணியாதிருந்துள்ளனர்.

படகு கவிழ்ந்தமை தொடர்பாக உடனடியாக காவற்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கிடையில் பூங்கா மீட்புக் குழுவினர் இருவரை மீட்டதாகவும் இருவர் மட்டும் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திங்கள் இரவு காணாமல் போனவர்கள் செவ்வாய்க்கிழமை மதியமளவில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் நேற்று முன்தினம் அவர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அத்தோடு இந்த ஏரியில் இது படகு செலுத்துவதற்கான காலம் இல்லை எனவும் கூறப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் குறிப்பிட்ட ஏரி பனியில் இருந்து விடுபட்டிருந்ததாகவும் சம்பவம் நடந்த வேளை ஏரி நீரின் வெப்பநிலை 5 பாகை செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடும் குளிர் நீராக இருந்ததால் தான் அவர்களால் நீந்திக் கரை சேர முடியாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒன்ராரியோ மாகாண காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மேதினம்!!

final poster - Copy

வவுனியா சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் இணைந்த மாபெரும் மே தின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நாளை (01.05) நடைபெறவுள்ளது.

மே தின ஊர்வலம் காலை 9.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்னால் ஆரம்பித்து கடை வீதி வழியாக நகரசபையை சென்றடைந்து நகரசபை மண்டபத்தில் (பழைய மண்டபம்) பொதுக் கூட்டமும் நடைபெற உள்ளது.

மே நாள் ஊர்வலத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறும் மக்கள் உரிமையை வென்றெடுக்க மே நாளில் குரல் கொடுக்க அணிதிரளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஒருங்கிணைப்பாளர்
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு
வவுனியா மாவட்டம்.

final posterA4notes01 02

முச்சக்கர வண்டிகளுக்கும் ஆசணப்பட்டி!!

Auto

முச்சக்கர வண்டிகளுக்கு ஆசணப்பட்டி அணிவதை பரிந்துரை செய்வதற்கு வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டி விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து அவதானம் செலுத்திய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்ட போது மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குறிய சட்டம் குறுகிய காலத்தில் இடம்பெறும் என்று வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோந்தகொட கூறினார்.

முல்லேரியாவில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

Shooting

முல்லேரியா, பேதியாகொடை பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுடன் முல்லேரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கிரிபத்கொடை, மாகோல, தேவாலய வீதி பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா செட்டிகுளத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல்!!

 
வவுனியா செட்டிகுளத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (29.04.2016) நடைபெற்றது. இன் நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உரையாற்றுகையில்..

கடந்த 2½ வருடங்களில் வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது. வடக்கில் மக்களால் தெரிவுசெய்யப்ட்ட மாகாண சபை உருவாக்கப்பட்டு 2½ வருடங்கள் முடிவடைந்துள்ளது. கடந்த காலங்களில் சுகாதாரதுறையின் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை மறுக்கமுடியாது.

யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலையில் சுகாதார சேவையின் தேவையும் அதிகரித்துள்ளது. மாகாணசபைக்கு நிதிப்பற்றாக்குறை மற்றும் வேறுபல நிர்வாக சிக்கல்கள் உள்ளபோதும் மாகாண மத்திய அமைச்சுகளின் நிதியைகொண்டு முடிந்தவரை சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்துள்ளோம்.

குறிப்பாக சுதேச மருத்துவத்துறையை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சித்தர்களாலும், முனிவர்களாலும் பயன்படுத்தப்பட்ட சித்தமருத்துவம் எமது பாரம்பரிய வைத்திய முறையாகும். இதனை அழியவிடாது பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும்.

இதனடிப்படையில் மேலைத்தேய மருத்துவத்திற்கு இணையாக சுதேச மருத்துவத் துறையையும் அபிவிருத்தி செய்துவருகின்றோம். சித்தமருத்துவத்தின் தலைநகராக கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் விளங்கும். இதற்கான நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம்.

100 ஏக்கர் காணி கிளிநொச்சி கல்மடு நகரில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 ஏக்கரில் மூலிகைத்தோட்டமும், மிகுதியாகவுள்ள 25 ஏக்கரில் மூலிகை மருந்துகளைத் தயாரிக்கும் மருந்துத் தொழிற்சாலையும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்தவதற்கு தமிழ்நாடு சித்தமருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜா, மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் திருமதி சி.துரைரட்னம், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உபதலைவர் சந்திரமோகன், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

1 2 3 4 5 6