அம்பாறையில் வாள் வெட்டு : ஐவர் காயம், இருவர் கைது!!

Vaal

மருதமுனைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் காலை ஆறு மணியளவில் மருதமுனை 06ஆம் பிரிவு மக்பூலியா கிராமத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருள் நால்வர் கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் மற்றொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர்களது உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மாமா – மருமகன் ஆகியோரிடையான சொத்துப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையே வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு!!

Closed

சர்வதேச தொழிலாளர் தினமான, இன்று ஞாயிற்றுக்கிழமை மே முதலாம் திகதியன்று, மதுபான சாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் மாவட்டங்களிலேயே மேற்படி கடையடைப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபான சாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புளொட் அமைப்பின் மேதின அறைகூவல் -2016!!

Sitharthan

உலகளாவிய ரீதியில் மே முதல் நாளை மேதினமாகக் கொண்டாட சர்வதேச தொழிலாளர் சமூகம் ஏகமனதாக முடிவு செய்தது. இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒன்றுகூடல் என்பன பிரதான பங்கினை வகிக்கின்றன.எது எவ்வாறு இருப்பினும் மே தினத்தை தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை வென்றெடுத்த பொன்னாளாகக் கொண்டாடி வருகின்றது.

எமது தாயகபூமியில் நாம் நிர்க்கதியான நிலையில் தொடர்ந்தும் அடிமை வாழ்வு வாழ்கின்றோம். எமது இருப்பு இன்று கேள்விக்குறியாகின்றது. அரசியல் கைதிகளின் விடுதலையோ அல்லது எமது மக்களின் நிலங்களோ இன்னும் விடுவிக்கபடாமையே எம்மை தொடர்ந்தும் அடிமை வாழ்வை வாழ தூண்டுதலாய் அமைகிறது.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டில் தலைநிமிர்ந்து வாழ எமது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) ஆகிய நாங்கள் தொடர்ந்தும் அரசை வலியுறுத்தும் விடயங்களாக,

1- தனியார் ஊழியர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

2- தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான அடிப்படைச் சம்பளம் உறுதிபடுத்தப்படல் வேண்டும்.

3- சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் என்பன எமது பிராந்தியத்தில் முற்றாக களையப்படல் வேண்டும்.

4- வெளிநாட்டு பணிப்பெண்களின் வேலை நிர்ணயம் உறுதிபடுத்தப்படல் வேண்டும்.

5- அரசுக்கெதிரான வன்முறைகள் மற்றும் சமூக சீரழிவுகளை மாற்றியமைக்க இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.

6- பட்டதாரிகளின் முறையான வேலைவாய்ப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும்.

7- புலம்பெயர் தமிழர்கள் தாயக பூமியில் முதலீடு செய்வதன் மூலம்
எம்மினம் மாற்றான் கையில் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே தங்கள் முதலீடுகள் மூலம் எமது இனத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துங்கள்.

ஆகவே மே தினத்தை மதித்து அதற்கு உகந்த கெளரவத்தை அளித்திடல் வேண்டும். இதுவே தொழிற்சங்கவாதிகளின் தலையாய வேண்டுகோளாகும். அத்துடன் மே தினக் கொண்டாட்டங்கள் கேளிக்கையாகக் கூடாது. மே தினத்தின் ஆழ்ந்த எண்ணக் கருவினை விளங்கிக் கொள்ளாது அதனை ஒரு வெறும் கேளிக்கையாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பொருளாதாரப் பின்னடைவுகளாலும், மந்த நிலைகளாலும் தொழிலாளர் வர்க்கத்தினரே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தொழில் இழப்பையும், உழைப்பையும் தாங்கி அவர்கள் தமது இருப்பை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
மேதினம் உழைக்கும் வர்க்கத்தினரான தொழிலாளரின் இருப்பை மீள் பரிசீலனைக்கு உள்ளாக்கும் அறைகூவல் விடுக்கும் ஒரு நாளாகும்.

இனம், மொழி, மதம் என்ற அடிப்படைகளில் தொழிலாளரின் ஐக்கியம் துண்டாடப்படுதலைக் கண்டறிந்து அனைத்துத் தொழிலாளரும் ஒன்றுபட வேண்டும் என புளொட் அமைப்பினராகிய நாங்கள் அறைகூவல் விடுகின்றோம்.

கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ)
தலைவர்,
தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)

நித்திரையில் இருந்த கணவனை கொலை செய்த மனைவி!!

Death

எம்பிலிப்பிட்டிய, உடவளவ பிரதேசத்தில் கணவனை, மனைவி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று சனிக்கிழமை அதிகாலை நித்திரையில் இருந்த கணவனின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், பொலிஸார் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் ​குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று மே தினம் : மேதினம் ஒரு பார்வை!!

May

இன்று மே தினமாகும். (சர்வதேச தொழிலாளர் தினம்) 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது.

இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832ல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835ல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள்.

2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் பொலிஸார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு பொலிஸார் உயிரிழந்தார்.

பின்னர் பொலிஸார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று தொடங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 இலட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

உழைப்பாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..

வவுனியாவில் மேதினத்தை முன்னிட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்பு!!(படங்கள்)

 
தமது உழைப்பின் மூலம் இவ் உலகை உருவாக்கிய உலகத் தொழிலாளர் தினமான மேதினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவிலும் இரு மாபெரும் மேதின ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இருந்து ஒரு மேதின ஊர்வலமும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து மற்றுமோர் ஊர்வலமும் நடைபெறவுள்ளன.

இதனை முன்னிட்டு வவுனியா முழுவதும் பலத்த பாதுகாப்புக் கடமைகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர். மோப்ப நாய்களின் உதவியுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் பொலிசார் ஈடுபட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் நடைபெறும் மேதினம் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள உங்கள் வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

13084170_475762822617038_1567170910_n 13090091_475763809283606_11333448_n 13090132_475762802617040_967720540_n 13090398_475766269283360_669398995_n 13115629_475762745950379_540610243_n 13140643_475762792617041_645888082_n 13141037_475762835950370_1493112453_n 13149815_475762799283707_79669474_n

அனுராதபுரத்தில் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மூவர் பலி!!

Shoot

அனுராதபுரம், திரப்பனே பகுதியில் வாகனத்தினுள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம், இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் மூன்றும், அவ்விடத்தில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சி.ஏ.கே 0692 என்ற இலக்கத் தகட்டைகொண்ட வாகனத்திலேயே இருந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

2ம் இணைப்பு

அனுராதபுரம் திருப்பனை பிரதேசத்தில் கார் ஒன்றுக்குள் இருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

திருப்பனை, ஹிதோகம, துருவில பகுதியில் இன்று கார் ஒன்றில் இந்த சடலங்கள் கிடந்துள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து திருப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல் : சிதம்பரநாதன் கிருஷ்ணதாஸ்

Sithambaranaathan Krishnathas

சிதம்பரநாதன் கிருஷ்ணதாஸ்
(ஊழியர் : நியூ லலிதா டெக்ஸ் – வவுனியா )
பிறப்பு :29.03.1979 || இறப்பு :29.4.2016

வேலணை நாவலடிப்புலத்தை பிறப்பிடமாகவும் வவுனியா உக்கிளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கிருஷ்ணதாஸ் அவர்கள் 29.04.2016 நேற்று இறைபதம் எய்தினார்.

அன்னார் சிதம்பரநாதன் சரஸ்வதி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும் யசோதையின் அன்புகணவரும் காரைநகர் கோவளத்தை சேர்ந்த செல்வராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், முருகதாஸ், சிவதாஸ், மாலதி, சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் உதயரூபன் (குகன்மோட்டர்ஸ் வவுனியா) மயூரன் (லண்டன்) மாலதி, துர்க்கா, சிவலிங்கம், சிவசேந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் நாளை 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்செந்தூரன் மில் வீதி உக்கிளாங்குளம் வவுனியாவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக தட்சணாங்குளம் இந்துமயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும் .

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : 0773634361

மேலும் பல புதிய வசதிகளுடன் WhatsApp!!

Whatsapp

வட்ஸ்அப்பில் வொய்ஸ் மெய்ல், ஜிப்(zip) பைல் செயாரிங் ஒப்சனை கொண்டுரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது.

அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹெக் செய்து பார்க்க முடியாத வகையில் end-to-end encryption ஒப்சனை கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து பல்வேறு வசதிகளை வழங்கவுள்ளது. அன்ட்ரொய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ் இல் (IOS) call back ஒப்சன் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் வட்ஸ் அப் செல்லாமலே மொபைல் போனில் இருந்து அழைப்பை மேற்கொள்ளலாம்.

அதேபோல் voicemail, zip file sharing feature கொண்டுவரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அனுப்பிய மற்றும் பெறப்பட்ட பி.டி.எப். பைல்களான Docs, Sheets மற்றும் Slides files உள்ளிட்டவற்றை zip file மாற்றி அனுப்பும் வசதியையும் கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு, 24 பேரைக் காணவில்லை!!

Quatamala

குவாத்தமாலாவில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காணாமற்போயுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய 15 பேர் குப்பைக் கூழங்களில் இருந்து உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமற்போனவர்களில் 7 சுத்திகரிப்பு பணியாளர்கள் அடங்குவதாக அந்நாட்டு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனையவர்கள் அந்த பகுதிக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசித்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். காணாமற்போனோரை தேடும் பணிகள் துரிதப்பட்டுள்ளன.

நோர்வேயில் விமான விபத்து : பயணித்த அனைவரும் பலி!!

Fli

நோர்வேயில் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் பலியானார்கள். நோர்வேயின் இரண்டு பெரிய நகரான பெர்கானில் அமைந்துள்ள தீவில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

2 விமான குழுவினர் மற்றும் 11 பணியாளர்களுடன் பயணித்த ஈரோகொப்டர் ஈசி 225எல் என்ற இந்த விமானத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ரோட்டர் தனியாக கழன்று 300 மீட்டர் தூரத்தில் சென்று விழுந்துள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நகரில் அமைந்துள்ள தீவில் வெடித்து சிதறியது, இதில் விமானம் முழுவதும் சேதமடைந்ததில் விமானத்தில் பாதி பாகங்கள் தரையிலும், மீதி பாகங்கள் தண்ணீரிலும் சிதறியுள்ளன.

மான்குட்டிகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்!!

1

ராஜஸ்தானில் வசித்து வரும் Bishnoi இன மக்கள் மான்கன்றுகளுக்கு பாலூட்டி வருவது மனித நேயத்தின் அடையாளத்தினை உலகிற்கு காட்டுகிறது.

சுமார் 550 வருடங்களாக இயற்கையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வரும் இம்மக்கள், இயற்கையுடன் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.

விலங்குகளையும், தாங்கள் பெற்ற குழந்தைகளையும் ஒன்றாகவே பார்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு தாயானவள் தன் குழந்தைக்கு பாலுட்டும் அதே மார்பில், தான் வளர்த்து வரும் மான் கன்றுகளுக்கும் பாலூட்டுகிறாள்.

அருகில் உள்ள காட்டில் வளரும் விலங்குகளோடு, குழந்தைகளும் சேர்ந்து விளையாடுகின்றனர், இதுகுறித்து அங்கு வசித்துவரும் Mangi Devi Bishnoi (45) என்ற தாயார் கூறியதாவது, மான் குட்டிகள் எங்களுடைய வாழ்க்கை, எங்களுடைய குழந்தைகள் ஆவார்.

நான் அவர்களுக்கு, பால் கொடுப்பது, உணவளிப்பது என அனைத்தையும் செய்கிறேன். இதில் எனக்கு எவ்வித பாராபட்சமும் கிடையாது என கூறியுள்ளார்.

RoshiniBishnoi(21) என்ற மாணவி கூறியதாவது, நான் குட்டிமான்களோடு தான் வளர்ந்தேன், மான்களுடன் வளர்ந்த காரணத்தால், அவற்றை நான் ஒரு சகோதரனாகவோ, சகோதரியாகவோ தான் பார்க்கிறேன், அதனுடன் விளையாடும், பேசுவோம்.

மான்களுக்கும் நாங்கள் பேசும் மொழி ஓரளவுக்கு புரியும், அவற்றினை நாங்கள் விலங்குகளாக பார்க்காமல், எங்கள் குடும்ப உறுப்பினர்களாக பார்க்கிறோம்,

எனது பெற்றோரும் எனக்கும், எங்கள் வீட்டில் வளரும் மான்களுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் காட்டமாட்டார், அதனை எங்கள் வீட்டில் வைத்து பத்திரமாக பாதுகாப்போடு அதிக அன்பினை செலுத்தி, வளர்த்து வருகிறோம் என்றும் இது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

2

2016 சட்டமன்றத் தேர்தலில் புதிய வரலாறு படைத்த தமிழகம்!!

Election

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட, கடந்த ஏப்ரல் 22ம் திகதி முதல் ஏப்ரல் 29ம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதியளித்திருந்தது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி திகதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது, வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் குறித்த எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

அதில், தமிழக்கத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு 7,046 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக தேர்தல் வரலாற்றில் 7,046 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது

தமிழகத்தில் இதுவரைஅதிகபட்சமாக கடந்த 1989 சட்டமன்ற தோ்தலில் 2,968 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது அதை விட இரண்டு மடங்கு அதிகமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வரும் சட்டமன்ற தோ்தலில் போட்டியிட 779 பெண்கள் மற்றும் மூன்று திருநங்கைகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில் இம்முறை தான் அதிக எண்ணிக்யைில் பெண்கள் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய, முதல்வா் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட அதிகபட்சமாக 60 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

எனினும், இதில் எத்தனை பேரின் மனுவை தோ்தல் ஆணையம் ஏற்க போகிறது என்பதை பெருத்திருந்து பார்ப்போம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

3 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!!

Eritrean-Murdered-Victim’s-Skull-Found2

கனடா நாட்டில் 3 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ரொன்றொன்றோ நகரை சேர்ந்த Rigat Ghirmay(28) என்ற பெண்ணை Adonay Zekarias என்பவர் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரது உடலகை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு நிகழ்ந்த இந்த கொலையை தொடர்ந்து அதே வருடம் பெண்ணின் தலையில்லாத உடல் மட்டும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் விதித்தது.

இந்நிலையில், Lavender Creek Trail என்ற பகுதியில் இருந்து கடந்த புதன் கிழமை அன்று பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது.

பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் இருந்த பையை பொலிசார் சோதனை செய்தபோது, அதற்குள் மண்டை ஓடு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக தடவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அதனை சோதனை செய்தபோது, 2013ம் ஆண்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தலை தான் அது என உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அந்த பகுதிக்கு சீல் வைத்த பொலிசார் அங்கு சல்லடையிட்டு தீவிரமாக தேடுதலை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நடனம் ஆடச்சொன்னால் நடுக்கம் வருகிறது : சிவகார்த்திகேயன்!!

Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நடனம் என்றால் நடுக்கம் வருமாம். ரஜினி முருகன் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.

இது அவருடைய 11வது படம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன் படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

படங்களில் நடனம் ஆடிய அனுபவம் பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது, சினிமாவைப் பொறுத்தவரை நகைச்சுவை, காதல் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால் நடனம் ஆடவேண்டும் என்றாலே நடுங்கி விடுவேன். இதுவரை அந்த நடுக்கம் போகவில்லை. பாபா மாஸ்டர் நடனம் அமைத்தால் காலை முதல் இரவு வரை ஆட வேண்டியது இருக்கும். மிகவும் சிரமப்பட்டு ஆடுவேன். இந்த அளவுக்கு வேலை வாங்குவார்.

என்றாலும் அவர் சொல்லிக் கொடுத்த நடனங்கள் மான் கராத்தே, ரஜினி முருகன் படங்களில் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன என்று தெரிவித்தார்.

வவுனியா கமநல வங்கியின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தாண்டு விழா!!

 
வவுனியாவில் கமநல வங்கியின் ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இன்று (30.04.2016) நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ரி.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர்), சிறப்பு விருந்தினர்களாக எஸ்.குமாரதேவன் ( பொறியியலாளர், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்), என்.நவநேசன் (பொறியியலாளர், மத்திய நீர்ப்பாசனத் திணைக்களம்), கௌரவ விருந்தினர்களாக ரீ.யோகேஸ்வரன் (பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்- விரிவாக்கம்), ப.சத்தியசீலன் (பிரதி விவசாயப் பணிப்பாளர்- விதைகள்), மற்றும் பொதுமக்கள், அரச மற்றும் அரசார்பற்ற ஊழியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், பணிஸ் சாப்பிடுதல், யானைக்கு கண் வைத்தல் என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

P1200318 P1200319 P1200321 P1200323 P1200324 P1200325 P1200326 P1200328 P1200329 P1200330 P1200331 P1200332 P1200334 P1200335 P1200337 P1200338 P1200346 P1200347 P1200348 P1200349 P1200350 P1200351