க. பொ. த. சா.த பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்!!

GCE OL

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் ஏனைய வருடங்களைப் போலவே இந்த வருடமும் மார்ச் மாதம் இறுதியில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையில் மாற்றம் இல்லை!!

potato

உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்ட நிலையில், இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் பழனியாண்டி சுந்தரம் தெரிவித்தார்.

ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்வதாக சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டள்ளார்.

இந்நிலையில் எதிர்காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், அதன் விலையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில்!!

Bilgates

போர்ப்ஸ் பத்திரிகையின் 2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் கடந்த ஆண்டு 1,826 பேர் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,810 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

இப்பட்டியலில் தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்(75 பில்லியன் டொலர்கள்) முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.2 பில்லியன் டொலர் குறைந்துள்ளது. இவர் கடந்த 22 ஆண்டுகளில் 17வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்கள் முறையே அமென்சியோ ஒர்டேகோ, வொரன் பவட்டும் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு 16 ஆவது இடம் வகித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பேர்க், இந்த ஆண்டு 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தனது 29 மில்லியன் டொலர் சொத்தை பங்கு பிரிப்பது எவ்வாறு : பின்லேடன் எழுதிய உயில்!!

Osama-Bin-Laden

அல்கைதா தலைவர் பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது, அந்த இடத்தில் இருந்த 113 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அராபிய மொழியில் இருந்த அந்த ஆவணங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான சில ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன.

சூடான் நாட்டில் தான் விட்டுச்சென்ற 29 மில்லியன் டொலரை தனது இறப்புக்கு பிறகு எப்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி பின்லேடன் எழுதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூடானில் தனது சொத்தில் ஒரு சதவீத பணத்தை அல்கைதா மூத்த தலைவர் மபூஸ் அவுல்ட் அல்-வாலித்துக்கு கொடுக்க வேண்டும் அதில் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே 20 லட்சம்வரை அல்-வாலித்துக்கு கொடுக்கப்பட்டு விட்டதாகவும், சூடானில் உள்ள பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவருக்கு பரிசு கொடுப்பதாக, தான் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் பின்லேடன் அதில் எழுதி உள்ளார்.

இன்னொரு சதவீத பணத்தை மற்றொரு நண்பரான என்ஜினீயர் அபு இப்ராகிம் அல்-இராகி சாத்துக்கு கொடுக்க வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார். அந்த நபர், சூடானில் பின்லேடனின் முதலாவது நிறுவனத்தை நிறுவ உதவியவர் ஆவார்.

குறிப்பிட்ட அளவு சவுதி ரியால் பணத்தையும், தங்கத்தையும் தனது தாயார், மகன், மகள், சித்தப்பா, சித்தப்பாவின் பிள்ளைகள், தாயாரின் சகோதரிகள் ஆகியோர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.

மீதி பணம் முழுவதையும், புனித போருக்காக பயன்படுத்துமாறு பின்லேடன் கேட்டுக்கொண்டுள்ளார். தனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு குடும்பத்தினரை வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி பின்லேடன் எழுதிய மற்றொரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தந்தைக்கு முன்பே, தான் இறந்து விட்டால், தன்னுடைய மனைவியையும், பிள்ளைகளையும் தந்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பின்லேடன் கூறியுள்ளார்.

‘உங்களுக்கு பிடிக்காததை நான் செய்திருந்தால் என்னை மன்னியுங்கள்’ என்று கடிதத்தின் இறுதியில் தந்தையிடம் பின்லேடன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மாணவியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 20 வருடங்கள் சிறை!!

jail

பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரேமா சுவர்ணாதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். எது எவ்வாறு இருப்பினும் தீர்ப்பு வழங்கப்பட்ட வேளை சந்தேகநபர் நீதிமன்றத்தில் இல்லாது தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து அவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

2004ம் ஆண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி!!

IND

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட் இழப்பிற்கு 138 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்​கை அணி சார்பாக கப்புகெதர அதிகபட்சமாக 30 ஓட்டங்க​ளைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 26 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பாக யுவராஜ் சிங் 35 ஓட்டங்களையும் விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

விராட் கோலி இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.

இப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாவது கேள்விக்குறியாகியுள்ளது.

வவுனியாவில் சுகாதார சீர்கேடான வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு!!

closed

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றிற்கு நேற்று(29.02.2016) வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பல வருடமாக இயங்கிவரும் வெதுப்பகத்தில் சுகாதார சீர்கேடான முறையில் உற்பத்திப் பொருட்களை தயாரித்து விநியோகம் செய்துவருவதாகவும், தூய்மை இன்மை, ஆபத்தை தருவிக்கக்கூடிய வகையில், தூசிபடிதல் போன்ற சுகாதார சீர்கேட்டினை கருத்தில் கொண்ட வவுனியா சுகாதார பொதுப் பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது உரிமையாளருக்கு எதிராக நேற்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது குறித்த வெதுப்பக உற்பத்தி நிலையத்திற்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வெதுப்பகம் கடந்த 2013 ஆம் ஆண்டும் பொது சகாதார பரிசோதகர்களினால் சுகாதாரம் அற்ற முறையில் வெதுப்பக உற்பத்தி தயாரிப்புக்களை மேற்கொண்டதாக தெரிவித்தும், சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்றதை அடுத்தும் நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

41 வயதில் காதலரை திருமணம் செய்த பிரீத்தி ஜிந்தா!!

Preity Zinta

பொலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த உயிரே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பொலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரித்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார்.

சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் உலகம் சுற்றுவது என பொழுதை போக்கி வந்த பிரித்தி ஜிந்தா, தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார்.

41 வயதான பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை நேற்று முன்தினம் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான சூசன் கான், சுரில்லி கோயெல் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு ஏப்ரலில் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, பொலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

அம்மாவை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூரி!!

Soori

இந்த உலகத்தில் பிறந்த எல்லா உயிரினங்களுக்கும் அம்மா என்றால் அது ஒரு தனிப் பாசம்தான். அந்த மாதிரிதான் நடிகர் சூரிக்கும். இவருக்கு அவரது அம்மா என்றாலே அவ்வளவு அன்பு.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சூரி, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். படப்பிடிப்புக்காக பல்வேறு நாடுகள் பயணித்திருந்தாலும், இதுவரை சூரி தனது அம்மாவை ஒருமுறை கூட விமானத்தில் அழைத்துச் சென்றதே கிடையாதாம்.

தற்போது முதன்முறையாக அவரது அம்மாவை விமானத்தில் அழைத்துச் சென்று அழகு பார்த்துள்ளார் சூரி. இவரும், இவருடைய அம்மாவும் விமானத்தில் பயணித்தபடி ஒரு போட்டோவை சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் பயணம் செய்த அனுபவம் குறித்து அவரது அம்மா சூரியிடம் என்னதான் இருந்தாலும் நம்மூரு பஸ் மாதிரி வராதுப்பான்னு சொன்னதும் சூரியும், பைலட்டும் தெறிச்சிட்டாங்களாம்.

12ம் வகுப்பு பரீட்சையை ஒன்றாக எழுதும் தந்தை-மகன்!!

Dad and Sun

தமிழகத்தில் விரைவில் தொடங்க உள்ள 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், தந்தையும், மகனும் ஒன்றாக தேர்வு எழுதவுள்ளனர். மார்ச் 4ம் திகதி முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்த குணசேகரன் (52) என்பவருக்கு அருள்மணி என்ற மனைவியும் செல்வம், தமிழீழம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

இளைய மகன் தமிழீழம் கோபியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். வரவுள்ள பொது தேர்வில் அவர் பரீட்சை எழுதுகிற நிலையில், அவரது தந்தை குணசேகரனும் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்.

7ம் வகுப்பு வரை படித்திருந்த குணசேகரன் கடந்த 2013ம் ஆண்டு 8ம் வகுப்பு பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றார். தொடர்ந்து 2014ம் ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதி அதிலும் வெற்றி பெற்றார்.

இப்போது தனது மகனை போலவே தானும் 12ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளார். எனவே, தந்தை–மகன் இருவரும் தேர்வுக்காக படித்து வருகின்றனர்.

நள்ளிரவில் நிர்வாணமாக வலம் வந்த சாமியார்!!

Saamiyar

நாமக்கலில் சாமியார் ஒருவர் வீதியில் நிர்வாணமாக வலம் வந்ததால் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த, பொத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடாச்சலம், வேலூரில் கைரேகை மற்றும் ஜாதகம் பார்த்து வருகிறார்.

மனைவியை பிரிந்து தனியாக வசித்து வரும் அவர், கடந்த சில நாட்களாக வீட்டில் இரவு நேரத்தில் சத்தமாக பக்தி பாடல் பாடுவது, நிர்வாணமாக கண்களை மூடி தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் நடந்து வருவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பொலிசில் அவர் மீது புகார் அளித்துள்ளனர். பொலிசார் நிர்வாண சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

இந்திய சிறுமிகள் உலக பணக்காரர்களால் பரிசோதனை மிருகங்களாக்கப்படும் அவலம்!!

Indian

உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரது நிறுவனம் இந்திய சிறுமிகள் ஆயிரக்கணக்கானோரை பரிசோதனை மிருகங்களாக்கி வரும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பட்ட மருத்துவ வசதிகளை செய்து தருவதாக கூறி இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தொடர்ந்து பல சேவைகளை செய்து வரும் தொண்டு அமைப்பு இது. இந்த அமைப்பின் வாயிலாக போதுமான மருத்துவ வசதிகள் சென்று சேராத பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராகவும், கணினி மூலம் தாம் ஈட்டிய பெரும் சம்பாத்தியத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்துள்ளவருமாக விளங்குபவர், உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவியார் பிலிண்டா.

இவரது தொண்டு அமைப்பின் உண்மையான குறிக்கோள் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வெளிவரத்துவங்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக இங்குள்ள 16,000 சிறுமியருக்கு இந்த மருந்து வழங்கியுள்ளனர். உடல் நலனுக்கு உகந்த மருந்து என கூறி அளிக்கப்பட்டுள்ள இந்த மருந்தால், பல சிறுமியரின் உடல் நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்தின் பக்கவிளைவால் கம்மம் பகுதியில் மட்டும் 5 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேப்போன்று குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் பழங்குடியின சிறுமியர் 14,000 பேருக்கு இந்த மருந்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சந்தேகமடைந்த இந்திய தொண்டு நிறுவனம் ஒன்று கம்மம் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வந்துள்ளன.

கம்மம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறுமியர் கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்.

பில்கேட்ஸ் தனது தொண்டு அமைப்பு வழியாக கர்ப்பப்பை புற்று நோய்க்கான மருந்தை சோதனை செய்யும் மிருகங்களாக 30,000 இந்திய சிறுமியரை பயன்படுத்தியுள்ளது,

பெயர் குறிப்பிடாத அந்த தொண்டு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பில்லியன் கணக்கில் டொலர் புழங்குவதால் இந்த விவகாரம் வெளியே வராதவாறு அதிகாரிகளின் நடவடிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தையின் தலையுடன் வீதியில் வலம்வந்த பெண்ணால் பரபரப்பு!!

 
மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார்.

குறித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த மொஸ்கோ பொலிசார் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண், திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டி, ‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால் பொலிஸார் பயந்து அவ்விடத்தை விட்டு விலகியுள்ளனர்.

இந்நிலையில், துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையை கையில் பிடித்தபடி அந்த வீதியில் வலம்வந்த நிலையில் பொலிஸார், மறைந்திருந்து அந்த பெண்ணை கைது செய்தனர்.

கைதுசெய்த பெண்ணுடன் அவரின் வீட்டுக்கு சென்ற பொலிஸார், அவரது வீடு தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

உடனடியாக தீயை அணைத்துவிட்டு உள்ளே சோதனை செய்தபோது தலையில்லாத அந்த குழந்தையின் உடலை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

எதற்காக இந்த கொலையை செய்தார் குறித்த பெண் செய்தார் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3

வவுனியா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டுவிழா!!

 
வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (01.03.2016) காலை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்து.

வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களின் வழிகாட்லின் கீழ் வடமாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 180 மல்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்கான எம்.பி.நட்ராஜ்; ம.தியாகராசா, ஜெயதிலக, மற்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன், பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி. பவானி பசுபதிராஜா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், தாதிய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்,

32லட்சம் ரூபா செலவில் அவுஸ்திரேலியா வைத்தியர்களின் அமைப்பினரால் வடமாகாண சகாதார அமைச்சரின் வேண்டுகோளிற்கு அமைய வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து வைத்திய நிபுணர்களின் பாவனைக்கான இயந்திரத்தினையும் கையளிப்பு செய்து வைக்கப்பட்டது.

DSC02015 DSC02017 DSC02019 DSC02027 P1190707 P1190708 P1190709 P1190710 P1190711 P1190712 P1190713 P1190714 P1190716 P1190719 P1190720 P1190721 P1190722 P1190725

வவுனியாவில் சுகாதார சீர்கேடான உணவகங்களில் திடீர் சோதனை!!

 
வவுனியவில் சுகாதார சீர்கேடான உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (01.03.2016) திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

வவுனியா நகரை அண்மித்த பகுதிகளிலே இன்று திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இரண்டு உணவகங்களில் சுகாதார சீர்கேடான முறையில் உணவு வகைகளை கையாளல், உணவு வகைகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்தல், சுகாதார முறையில் குடிநீர் இன்மை போன்றவற்றைக் கருத்தில்கொண்டு உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார முறைப்படி உணவகங்கள் இயங்க பூரண ஒத்துழைப்பினை வழங்க சுகாதார பரிசோதகர்கள் தயாராக உள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு சுகாதாரம் அற்ற முறையில் உணவு வகைகளை வழங்கிவரும் உணவகங்களுக்கு எதிராக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முறைப்படி பொது பரிசோதகர்களினால் பார்வையிடப்பட்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னரே உணவகங்கள் செயற்பட முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

DSC02057 DSC02060 DSC02061 DSC02065 DSC02066

வவுனியா வடக்கில் மூன்று பாடசாலைகள் இணைந்து நடாத்திய இல்ல திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா வடக்கு கரப்புக்குத்தி அ.த.க. பாடசாலை, விஞ்ஞானங்குளம் நவரட்னம் வித்தியாலயம், சிவன் முன்பள்ளி ஆகியன இணைந்து நடாத்திய வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.சு.பஞ்லிங்கம் தலைமையில் நேற்று (29.02.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.V.ஸ்ரீஸ்காந்தராசா, கெளரவ விருந்தினராக உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.S.ராஜேஸ்வரன் மற்றும் சின்னடம்பன் கிராமசேவையாளர் உ.பிரதீபா, பகுதி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

01 02 03 04 06 07 08 09 10 11 12 13 14 16 17 19 20 22 23 24 25 26 27 28 30 31 32 33 34 35 36 37 41 42 43