பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்கதேசம் : இலங்கை, பாகிஸ்தான் அணிகள் வெளியேறின!!

BAN

ஆசிய கிண்ணம் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் வெற்றிப்பெற்றது.

ஆசிய கிண்ணம் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேச அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடிப்பெடுத்தாடியது. ஆரம்ப ஆட்டக்காரர்களாக மன்சூர் மற்றும் சர்ஜில் கான் களமிறங்கினர்.

இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதேபோல் ஹபிஸ் 2 ஓட்டங்களிலும், உமர் அக்மல் 4 ஓட்டங்களில் வெளியேறினர். எனினும் விக்கெட் காப்பாளர் சர்பிராஸ் அகமதுவும், சோயப் மாலிக்கும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

மாலிக் 30 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 41 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். சர்பிராஸ் அகமது அதிரடியாக ஆடி 58 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில், 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சவும்யா சர்கார் மற்றும் சபீர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளித்து விளையாடியனர்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 46ஆக இருந்தபோது சபீர் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சர்காரும் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதிக்கட்டத்தில் இணைந்த சாஹிப் அல் ஹாசன் மற்றும் மொர்டாசா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ஓட்டங்கள் எடுத்து வங்க தேசம் வெற்றி பெற்றது. சாஹிப் 22 ஓட்டங்களுடனும் மொர்டாசா 12 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும் வாய்ப்பை பங்களாதேஷ் அணி பெற்றுக் கொண்டதுடன், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தன.

வவுனியாவில் நடைபெற்ற சாரணர் இயக்க ஸ்தாபகர் தின நிகழ்வுகள்!!

 
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 159 ஆவது பிறந்த தின நிகழ்வுகள், மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு த.நிகேதன் தலைமையில் வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக மத வழிபாடுகளும், அதனைத் தொடர்ந்து சாரண மாணவர்கள் பங்குபற்றிய துவிச்சக்கர வண்டி விழிப்புணர்வு பயணம் வவுனியா நகரெங்கும் சிறப்பாக நடைபெற்றதுடன். தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் சாரணர்களின் கலை நிகழ்வுகளும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 9 ஆவது தேசிய சாரணர் ஜம்போறியில் பங்குபற்றிய மாவட்ட சாரணர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று இலங்கையின் பிரதிநிதியாக மொரோக்கோ மற்றும் சார்ஜா சென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த திரி சாரணர்களான திரு சு.காண்டீபன், திரு ஸ்ரீ.கேசவன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன், மாவட்டத்தில் தரு சின்னம் பெற்றவர்களான திரு அ.அனந்தன், வி.அனோஜன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வாக திரிசாரணர்களின் ஸ்தாபகர் தின இரத்ததான நிகழ்வு வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வின் அதிதிகளாக வவுனியா மாவட்ட சாரணர் ஆணையாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான திரு எம்.எஸ்.பத்மநாதன், ஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் திரு ஆ.பொன்னையா,தாண்டிக்குளம் வித்தியாலய அதிபர் திருமதி மோகன், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் கௌரவ செயலாளரும், உதவி மாவட்ட ஆணையாளருமான திரு சு.காண்டீபன், உதவி மாவட்ட ஆணையாளர்களான திரு கு.கமலகுமார், திரு வி.அனோஜன், சாரண ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_2865 IMG_2867 IMG_2877 IMG_2907 IMG_2930 IMG_3027 IMG_3046 IMG_3061 IMG_3068 IMG_3090 IMG_3129 IMG_3139 IMG_3146 IMG_3161 IMG_3169 IMG_3175 IMG_3181 IMG_3188 IMG_3214 (2) IMG_3215 (1) IMG_3215 (2) IMG_3215 (3) IMG_3215 (4)

இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை!!

Dilshan

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷான் 16 பந்தில் 2 நான்கு ஓட்டங்களுடன் 18 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம் டில்ஷான் (1,676 ஓட்டங்கள், 73 போட்டி) டி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் குப்திலை (1,666 ஓட்டங்கள், 57 போட்டி) பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மெக்கலம் 71 போட்டிகளில் 2,140 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும், டி20 போட்டிகளில் அதிக நான்கு ஓட்டங்களை அடித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்கல்லத்தை (199 நான்கு ஓட்டங்கள்) டில்ஷான் சமன் செய்துள்ளார்.

நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென உயிரை விட்ட 9 வயதுச் சிறுமி : நடந்தது என்ன?

Flight

சீனாவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த 9 வயதான சிறுமி ஒருவர் நடுவானில் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள ஹாங்காய் நகரில் இருந்து லூப்தான்சா என்ற பயணிகள் விமானம் ஜேர்மனியில் உள்ள முனிச் நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவரும் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானத்திலேயே சிறுமிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி திடீரென மயக்கமுற்றாள்.

சூழ்நிலையை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை திசை திருப்பி ரஷ்யாவில் உள்ள Yemelyanovo என்ற விமான நிலையத்தில் நள்ளிரவு 1.22 மணியளவில் தரையிறக்கினர்.

முன்னதாக, சிறுமியின் உடல்நிலை குறித்து தகவல் அளிக்கப்பட்டிருந்ததால் விமான நிலையத்தில் அம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. விமானம் தரையிறங்கிவுடன் சிறுமியை அவசரமாக வெளியே கொண்டு வந்து அம்புலன்ஸில் ஏற்றினர்.

ஆனால், ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் சிறுமியின் நாடியை சோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமியுடன் பயணித்தவர்கள் மற்றும் விமானத்தில் சிறுமி ஏறியபோது அவரது உடல்நிலை எப்படி இருந்தது என்பது தொடர்பான தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவன அதிகாரிகளும் பொலிசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொலைக்காட்சி நேரலையில் மோதிக்கொண்ட சீமான் மற்றும் அருணன்!!(வீடியோ)

Seeman

தனியார் தொலைக்காட்சியின் நேரலையில் கலந்துகொண்ட சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அருணன் ஆகியோர் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான தொலைக்காட்சிகள் விவாத நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தரப்பினரை ஒரே இடத்தில் அமர செய்து மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க செய்கின்றன. எனினும் அவ்வப்போது இது போன்ற நிகழ்ச்சிகளில் சலசலப்பு ஏற்படுவதுண்டு. இது போன்று சலசலப்பு தான் நேற்று ஏற்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நடத்திய நேரலை நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் சீமான், பாஜக வானதி சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அருணன் மற்றும் திமுகவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஆகியோர் பங்கேற்றனர்

விவாதத்தின் போது சீமான் வேறு இடத்தில் இருந்துள்ளார். இந்த விவாதத்தின் போது அதிமுக, திமுகவை தோற்கடிப்பது தொடர்பாக நாம் தமிழர் சீமானுக்கும், அருணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை விட தான் ஒரு வாக்கு குறைந்து எடுத்தாலும் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்ந்து விடுவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையில் ஆவேசமடைந்த சீமான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரை நோக்கி ‘ஏய் என்னய்யா லுசு மாதிரி பேசுற’ என பேசியுள்ளார்.

அருணுனும், ‘நீதான்டா லுசு, யாரைப்பார்த்து லுசு ங்கிற’ என கேட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

நேரலை நிகழ்ச்சியில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தின் பிடியில் உள்ள மனைவியின் கடைசி முத்தம் : நெஞ்சை நெகிழச் செய்யும் ஓர் சம்பவம்!!

2

புற்றுநோய் காரணமாக விரைவில் மரணமடையவுள்ள தனது மனைவி குறித்து இணையபக்கத்தில் கணவர் எழுதியுள்ள பதிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பாடகர்களான ஜோய் மற்றும் ரோறி தம்பதியினர் ஏராளமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இசை துறையில் பாரிய விருதான கிராமி விருதுக்கும் இந்த தம்பதியினர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோய் ஃபீக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது நோயை குணப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாழ்வின் இறுதிகட்டத்தில் உள்ளார். இதுகுறித்து அவரது கணவர் ரோறி தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ளதாவது,

எனது மனைவி தற்போது தூங்கவுள்ளார். அவரது உடல் விரைவில் தனது செயல்களை நிறுத்திவிடும். இன்று காலை அவரை பரிசோதித்த செவிலியர் ஜோய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

தனது மகளின் 2வது பிறந்த நாளை பார்ப்பதற்காக மட்டுமே இத்தனை நாட்களாக காத்திருந்த ஜோய், மகள் இண்டியானாவின் பிறந்தநாள் முடிந்ததையடுத்து தற்போது அவர் நித்திரையடையவுள்ளார்.

ஒரு கடைசி முத்தம் என இது குறித்து எழுதியுள்ள ரோறி, மரணமடைவது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை எனவும் நான் விரும்பிய அனைத்தையும் செய்துவிட்டேன்.

நான் விரும்பிய வாழ்க்கையையே வாழ்ந்துள்ளேன் என ஜோய் கூறியதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

1

முச்சக்கர வண்டிகளில் மூன்று பிரயாணிகளுக்கு மேலதிகமாக ஏற்றுவது இன்று முதல் தடை!!

Auto

முச்சக்கர வண்டிகளில் மூன்று பிரயாணிகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதோடு இச்சட்டத்தை மீறி வண்டியினை செழுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.

கடந்தக்காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற வீதி விபத்துகளில் முச்சக்கர வண்டி சாரதிகளின் கவனயினத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.

எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் பாதைகளில் பயணிக்கும் முச்சக்கரவண்டிகளில் பிரயாணிகளை ஏற்றுவது தொடர்பில் பொலிஸார் இன்று முதல் கடுமையான சுற்றிவலைப்புகளை முன்னெடுப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்புகள் ஆரம்பம்!!

 

அரச உத்தியோகத்தர்களுக்கான ஆங்கில மொழித்திறன் விருத்தி வகுப்பு இன்று02.03.2016 புதன்கிழமை  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க. பரந்தாமன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் வே. ஆயாகுலன், வவுனியா வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பா. நாகேஸ்வரபாலா, வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் சி. கிருஷ்ணகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இது ஆறு மாதங்கள் கொண்ட பயிற்சி வகுப்பு ஆகும். இப்பயிற்சி நெறியின் ஊடாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஆங்கில பேச்சுதிறன், மொழித்திறன், எழுத்துதிறன் என்பன விருத்தி அடையும் என்பது எதிர்பார்ப்பு ஆகும். இப்பயிற்சி நெறி பிரபல ஆங்கில ஆசிரியர் திரு எஸ். தில்லைமோகன் அவர்களால் நடாத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

10301190_465903436932686_2838145773808036973_n 10314018_465903630266000_1494720043392133223_n 12376295_465903500266013_467019778881477454_n 12376781_465903076932722_555372914581378056_n 12790918_465903250266038_2639479007102827461_n 12794611_465903816932648_7094505119574524968_n 12805928_465903306932699_7386331658080259816_n 12806194_465902933599403_4066778714017078605_n 12809652_465903356932694_4359982717831107624_n 12814307_465903410266022_4660349719532661224_n 12814767_465903150266048_2007824469805162688_n

அரச சேவை ஆசிரியர் சம்பளங்களின் திருத்தம் -2016(இணைப்பு)

 
அரச சேவை ஆசிரியர்  சம்பளங்களின் திருத்தம் -2016 தொடர்பான விளக்கம் வாசகர்களின் பார்வைக்காக தொகுத்து கொடுக்கபட்டுள்ளது .

இது தொடர்பான சுற்றறிக்கையில் உப அட்டவணை -02 இல் 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 வரை வழங்கப்படும் தொகையைக் குறித்துள்ளார்கள் .அது எப்படித் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதை முதல் பிரிவில் காட்டடைபட்டுள்ளது  .அந்த ஆசிரியர் வருடா வருடம் சம்பள ஏற்றங்களைப் பெற்றால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை இரண்டாம் பிரிவில் உள்ளது.

12794927_464534513736000_3289042306676263827_o

வவுனியாவில் பாக்கியம் அறக்கட்டளையினால் வறிய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கள்!!

 
லண்டனை தலைமையாக கொண்ட பாக்கியம் அறக்கட்டளையினால் இன்றைய தினம் வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை கணிஷ்ட உயர்தரம் பாடசாலையில் தாய் தந்தையரை இழந்த வறுமைக் கோட்டிற்கு உற்பட்ட சுமார் 50 மாணவர்களுக்கு பெருமதிமிக்க பாடசாலை புத்தகப்பைகள் வழங்கபட்டன.

இந்நிகழ்வில் பாக்கியம் அறகட்டளையின் ஸ்தாபகர்களான ந.பாலசசுந்தரம் மற்றும் திருமதி.லோகேஸ்வரன் மற்றும் செல்வி தனுஸ்டிகா, சகோதரிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் கூமாங்குளம் அஸ்திரம் மக்கள் நற்பணிமன்ற தலைவர் S.ப சுதர்சன் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஏனைய அஸ்திரம் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை லண்டனை சேர்ந்த The Compassison அமைப்பு மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.

20160301_092910 20160301_092923 20160301_092939 20160301_092947 20160301_093204 20160301_094150 20160301_095017 20160301_095217 20160301_095333 20160301_095416 20160301_095517 20160301_095601 20160301_095928

இலங்கை சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

law-college-lanka

சட்டக் கல்லூரி 2017 ம் ஆண்டிற்குரிய மாணவர்களை தேர்வு செய்வதற்கான நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை சட்டக்கல்லூரியில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம் அடிப்படைத் தகுதிகள் உயர்தரம் 3 பாடம் சித்தி சாதாரண தரம் ஆங்கிலம் C தரச்சித்தி .

சட்டத்தரணியாக வருவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். பொதுஅறிவு,பொது உளச்சார்பு மற்றும் மொழிப் பரீட்சை என இரண்டு பாடங்கள் இடம்பெறும். இரண்டில் ஒன்றை கட்டாயமாக ஆங்கிலத்தில் தோற்றுதல் வேண்டும். ஆங்கில புலமை குறைந்தவர்கள் பொது அறிவு, உளச்சார்பு பரீட்சையை ஆங்கிலத்தில் தோற்றுவதுடன் மொழிப் பரீட்சையை தமிழில் தோற்றுவது இலகு.

தெரிவு செய்பவர்களுக்கு தங்குமிட வசதிகள் சட்டக்கல்லூரியினால் வழங்கப்படுகின்றன. அத்துடன் 24 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மகாபொல புலைமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.

இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளுக்கு இல்லாது இருப்பது கவலைக்குரிய விடயம்.
விண்ணப்பப் படிவங்களை சட்டக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள HNB வங்கியில் பணத்தை செலுத்தி சட்டக்கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம்.

இணையதள அரட்டையால் வரும் பிரச்சனைகள்!!

Chat

இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடும் ஒரு முக்கிய இடமாகவும் இணையதள அரட்டை அமைந்துள்ளது. இதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே அது சரியாகவும் இருப்பதில்லை. அதாவது இணையத்தில் அரட்டையில் ஈடுபடுவோரில் 15% திருமணமானவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பல இணையதளங்கள் தற்போது அரட்டை அடிப்பவர்களின் விவரங்களை சுய பரிசோதனைக்குட்படுத்துதல், ஒப்புதல் பத்திரம் வாங்குதல் போன்றவையுடன், குற்றவாளிகளின் பட்டியலையும் உடன் வெளியிடுகிறது. நீங்கள் அரட்டை அடிப்பவர் தன்னைப் பற்றி கூறும் தகவல்களுக்கு குறைந்தபட்சம் மட்டுமே மதிப்பளியுங்கள். ஏனெனில் அவர் வழங்கும் தகவல் எந்தளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதை அறிய இயலாது.

நீங்கள் அரட்டை அடிக்கும் நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிந்துகொள்ளாமல் உங்கள் முழுப் பெயரையோ, முகவரி, தொலைபேசி இலக்கம், பணியிடம் போன்ற எதையும் வழங்க வேண்டாம். பொதுவாக மின்னஞ்சலுக்கும் சரி, அரட்டைக்கும் சரி நீங்கள் உங்கள் பெயரை பயன்படுத்தாமல் ஏதாவது செல்லப் பெயரை வைத்துக் கொள்வது அதிக பயனளிக்கும். ஒருவரைப் பார்த்தே ஓரளவிற்கு அவரைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். எனவே நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரின் புகைப்படத்தைக் கேட்கலாம்.

புகைப்படத்தை அனுப்ப ஏதேனும் சாக்குப்போக்கு சொன்னாலோ, அனுப்பாமல் இருந்தாலோ அவருடனான தொடர்பை குறைத்தோ அல்லது நிறுத்திக் கொள்வதோ நல்லது. அப்படியே அந்த புகைப்படத்தை அனுப்பினாலும் அது தற்போதைய புகைப்படம் அல்லது அவருடையதுதான் என்பதில் எந்த ஆதாரமும் இல்லையே. கணினியின் திரையில் உங்களுடன் உரையாடும் நபரின் அரட்டைப் பேச்சும் அவரது குணநலனும் ஒன்றுபோல இருக்கும் என்று நினைத்து ஏமாறாதீர்கள்.

பார்க்க ஸ்மார்ட்டாக இருப்பது போலவும், பெரிய நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், திருமணமாகாதவர் என்றும் கூறுபவர்கள் பயங்கர குண்டாகவும், வேலையில்லாமல் சுற்றித் திரிபவராகவும், கல்யாணமாகி பல குழந்தைகள் பெற்றெடுத்தவராகவும் இருக்கலாம். நீங்கள் தெளிவாகவும், நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் இணையத்தில் அரட்டை அடித்து நல்ல நல்ல நண்பர்களையும் பெறலாம். அவர்களை ஆயுள் வரை நண்பர்களாகவும் தொடரலாம்.

இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு வீரர்!!

4

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை A அணி, இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கந்துறட்ட மரூண்ஸ் அணிக்காகவும் சம்பியன்ஸ் லீக் போடியில் அதே அணியிலும் 2013 ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார்.

1 2 3

பாலியல் சம்பந்தமான வழக்குகள் ஒரு வருடத்திற்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்!!

download (1)

பாலியல் குற்றம் இழைப்பவர்களுக்கு பிணை வழங்கக் கூடாது. அத்­துடன் பாலியல் வன்­முறை சம்­பந்­த­மான வழக்­கு­கள் ஒரு­வ­ரு­ட ­கா­லத்தில் விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­ப­டுதல் வேண்டும்” என மன்னார் மாதர் ஒன்­றியம் வேண்­டுகோள் விடுத்து போராட்டம் ஒன்றை முன்­னெ­டுத்­துள்­ளது.

பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் பாலியல் வல்­லு­றவுச் சம்­ப­வங்கள் மற்றும் படு­கொ­லை­களைத் தடுத்து நிறுத்­தக்­கோரி மன்­னாரில் மாதர் அபி­வி­ருத்தி ஒன்­றி­யத்தின் ஆத­ரவில் பெண்கள் அமைப்பு மன்னார் நகரில் பேரணி ஒன்றை நடத்­தி­யது. அத்­துடன் பிர­தமர் உட்­பட பல­ருக்கு இது ­வி­ட­ய­மாக மக­ஜர்கள் அனுப்­பியும் வைக்­கப்­பட்­டுள்­ளன.

வெள்­ளிக்­கி­ழமை காலை மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள பல பாகங்­க­ளி­லி­ருந் தும் வருகை தந்­தி­ருந்த நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலு­வ­லக முன்­றலில் ஒன்­று­கூடி பின் அங்­கி­ருந்து பதா­கைகள் ஏந்­தி­ய­வாறு மன்னார் நகரை வலம்­வந்து கோஷம் இட்டு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களைக் கண்டித்துப் பேரணி நடத்தினர்.

இச் சம­யத்தில் பெண்கள் பிரிவு பொலிஸ் அதி­கா­ரி­யி­டமும் மன்னார் அர­சாங்க அதி­ப­ரி­டமும் மகஜர்களை நேர­டி­யாக கைய­ளித்­த­துடன் பிர­தமர் உட்­பட பல­ருக்கு மக­ஜர்கள் அனுப்பிவைக்கப்பட்­டன.

இவ் மக­ஜர்­களில் பின்­வரும் விட­யங்­களை முன்­மொ­ழி­வாக இவர்கள் முன்­வைத்­துள்­ளனர்.

அதா­வது இந்­த­நாட்டில் உள்­ள­ பெண்கள் சிறு­மி­க­ளுக்­கெ­தி­ரான பாலியல் வன்­முறை சம்­பந்­த­மான வழக்­கு­களின் சட்­ட­மா­னது மீள் திருத்­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­படல் வேண்டும். அதா­வது திருத்­தப்­படும் சட்­டத்தில் பாலியல் குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு பிணை வழங்க முடி­யாத குற்­ற­மாக்­குதல் வேண்டும்.

பெண்கள் சிறு­மி­க­ளுக்­கெ­தி­ரான பாலியல் வன்­முறை சம்­பந்­த­மான வழக்­கு­களில் குற்­ற­மா­னது ஒரு வ­ரு­ட­கா­லத்தில் விசா­ரிக்­கப்­பட்டு தீர்ப்பு வழங்­கப்­ப­டுதல் வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு எதி­ரான குற்­றங்­களை விசா­ரிக்க ஒவ்வொரு மாவட்­டத்­திலும் சிறப்பு நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­ப­டு­வ­துடன், அந்­நீ­தி­மன்­றங்­களில் பாதிக்­கப்­பட்­டோர்­க­ளது பாதுகாப்பு உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு, அவர்­க­ளது சுயதனித்­துவம் பாதிக்­கப்­ப­டாத வகையில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்படல் வேண்டும். ‘சுருக்­க­முறை ­வி­சா­ரணை’அகற்­றப்பட்டு மாவட்ட நீதி­மன்றில் அல்­லது உயர்நீதி­மன்றில் பாலியல் வல்­லு­றவு தொடர்­பான வழக்­கு­க­ளது விசாரணைகள் மேற்­கொள்­ளப்படல்.

கடந்த காலங்­களில் சட்­ட­மா ­அ­திபர் திணைக்­க­ளத்தில் ஆயி­ரக்­க­ணக்கில் தேங்­கி­யுள்ள பாலியல் வல்­லு­றவு சம்­பந்­த­மான வழக்­கு­களைத் துரி­த­ வி­சா­ர­ணை­களை நிகழ்த்­து­வதன் மூலம் தீர்ப்பளித்தல்

நீதி­யை­ அ­முல்­ப­டுத்தும் அமைப்­பு­க­ளா­கிய காவற்­றுறை, நீதி­மன்றம், சட்­ட மா அதிபர் திணைக்களம் மேலும் நீதி­ய­மைச்சு, பெண்கள் விவ­கார அமைச்சு, சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை மற்றும் சிறுவர் பாது­காப்பு மற்றும் நன்­ன­டத்தை ஆணைக்­குழு போன்ற கட்­ட­மைப்­புகள் அனைத்தும் பெண்கள், சிறு­வர்கள் தொடர்­பாகத் தற்­போ­துள்ள நட­வ­டிக்­கை­களைத் துரிதப்படுத்துவ­துடன் இக்­கட்­ட­மைப்­பு கள் ஆன­வை­ பால்­ நிலைக் கூரு­ணர்­வுடன் எவ்­வி­த­ பாரபட்ச­மு­மின்றிச் செயற்­படும் விதத்தில் திருத்­தப்­படல் வேண்டும். குறிப்­பாகத் தமிழ் மொழிபேசும் உத்­தி­யோ­கத்­தர்­கள் உட­ன­டி­யாக நிய­மிக்­கப்­படல் வேண்டும். பெண்கள் உரி­மை­மீறல்க­ளை­ ஆய்­வு­ செய்­வ­தற்­கா­ன­ சு­ய­மா­ன­ ஆ­ணைக்­குழு ஸ்தாபிக்­கப்­பட்டு இக்­கு­ழு­வா­னது பெண்­க­ளுக்­கெ­தி­ராக நடைபெறும் சகல வன்முறைகளைத் தடுப்பதற்கான திட்டங்களைத் துரிதகதியில் அமுல்படுத்துவதற்கான அதிகாரத் தைப் பெற்றிருத்தல் வேண்டும் என வேண்டியுள்ளனர்.

இம் மகஜர்கள் நீதியமைச்சர், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், பொலிஸ் மா அதிபர், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தலைவி, சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன் னடத்தை ஆணையாளர், சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விமானப்படை நூதனசாலை இன்று பொதுமக்கள் பார்வைக்கு!!

Air

இலங்கை விமானப் படையின் 65வது வருட நிறைவு தினத்தையொட்டி, இரத்மலானையிலுள்ள விமானப் படையின் நூதனசாலையை பொதுமக்கள் இன்று இலவசமாக பார்வையிட முடியும் என விமானப்படைப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமானப்படையின் 65வது நிறைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் இரத்த தானம் வழங்கல், இலவச சுகாதார சேவைகள், கல்விச் சேவைகள், கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை!!

Alcacol

இலங்கையிலுள்ள வளர்ந்தோர்களில் 40 சதவீதமான ஆண்களும் 2 சதவீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர் எனவும், இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் 20 சதவீதமான கட்டில்களில் மதுவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே சாமிக ஜயசிங்க மேற்கூறிய தகவல்களை வெளியிட்டார்.

மதுவாலும் புகையாலும் ஏற்படும் தீங்குகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நலன்புரி அமைப்புகள் தொடர்ந்தும் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.