தீபிகா படுகோனே, பிரியங்காவை அடுத்து அபிநயா!!

131615431197113

இப்போதெல்லாம் நடிகர்கள் ஹாலிவுட் படங்களில் கமிட்டாவது டிரண்ட் ஆகி வருகிறது. அண்மையில் தான் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளனர்.அந்த வரிசையில் கோலிவுட் நடிகையான அபிநயா ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் அறிமுகமான மாற்றுத்திறனாளி நடிகையான அபிநயா, அதன்பின்னர் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது One Little Finger என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவரும், கின்னஸ் சாதனை படைத்தவருமான ரூபம் சர்மா இயக்கும் இப்படத்தில் அபிநயாவுக்கு பவர்புல்லான கேரக்டர் என்று கூறப்படுகிறது.

சரத்குமார் மீது பல கோடி ஊழல் புகார்- அதிர்ந்த திரையுலகம்!!

sarathkumarteluguரத்குமார் சமீப காலமாக பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகினார்.இந்நிலையில் தற்போது இவரின் மீது பல கோடி ஊழல் புகார் சென்னை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க பொறுப்பில் இருந்த போது, பல கோடி ஊழல் செய்ததாக கூறி, நடிகர் சங்கத்தின் முக்கிய பதவியில் இருக்கும் பூச்சி முருகன் புகார் கொடுத்துள்ளார்.

 

ஆடி காரில் வந்து பிச்சையெடுக்கும் ஹைடெக் பிச்சைக்காரர்!!

audi_beggar_003

பிரித்தானியாவில் பிச்சைக்காரர் ஒருவர் ஆடி காரில் வந்து பிச்சையெடுத்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்தவர் மாத்யூ பிரிண்டொன். கார்ன்வாலில் உள்ள நியூகுவே பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சையெடுத்து வருகிறார்.

தினமும் தனது வளர்ப்பு நாய் ஹசில்லுடன் வரும் இவர் அங்குள்ள சாலைகளில் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டுள்ளார்.இந்நிலையில் பிச்சையெடுத்து விட்டு விலையுயர்ந்த ஆடி காரில் அவர் புறப்பட்டு செல்லும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதனால் அவருக்கு பிச்சையளித்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவருக்கு உணவு மற்றும் பணம் அளித்துள்ளது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே இந்த வீடியோ வெளியானதால் தனது உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மாத்யூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவை நான் பார்க்கவில்லை. இந்த கார் எனது பாட்டி எனக்கு அன்பளிப்பாக கொடுத்தது.தற்போது அந்த கார் என்னிடம் இல்லை. தொலைந்துபோய்விட்டது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், எனக்கு பணம் அளிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.இது தொடர்பான நியூகுவே பகுதி பொலிசார் கூறுகையில், மாத்யூ ஒரு காலத்தில் வசதியாக இருந்திருக்கலாம்.எனினும் அவரது பரம்பரை சொத்துகளை அவர் செலவழித்திருக்கலாம். தற்போது அவர் பணம் இல்லாமல் சாலையில் பிச்சையெடுத்து வருகிறார்.

இந்த வீடியோ வெளியானதில் இருந்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

 

பொறாமையின் உச்சக்கட்டம்: மொடலாக இருந்த தங்கையை 140 முறை கத்தியால் குத்தி கொன்ற அக்கா!!

russia_model_002

ரஷ்யாவில் மொடலாக இருக்கும் தனது தங்கயை அவரது சகோதரி 140 முறைய கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் பிரபல மொடலான Stefania Dubrovina(17) இளம் வயதிலேயே, பிரபலமான இவர் மீது இவரது சகோதரரியான Elizaveta- க்கு பொறாமை ஏற்பட்டுள்ளது.எலிசவேட – தனது தங்கையின் பேஷன் ஸ்டைலை கடைபிடிக்கிறார் என்று சமீபத்தில் பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதற்கிடையில், Stefania தங்கியிருக்கும் குடியிருப்பிற்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு சென்ற Elizaveta, ஒரு ஆணுடன் சேர்ந்து தனது தங்கையை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.கண்ணை தோண்டி எடுத்தும், காதினை அறுத்தும் என 140 முறை உடல் பாகங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இவரது உடலினை கைப்பற்றியுள்ள பொலிசார் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.ஆனால், இந்த கொலைக்கும் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று Elizaveta கூறியுள்ளார்.

இதற்கிடையில், showman Stas Baretsky என்ற இசையமைப்பாளர் இதுகுறித்து கூறுகையில், Stefania இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவளுடன் நான் தொடர்பு கொண்டேன், அப்போது அவள் அழுதான், நான் என்ன நடந்தது என்று கேட்டேன், அதற்கு அவள் ஒன்றுமில்லை என்று கூறினாள்.

என்னாள் அவள் சூழ்நிலையை புரிந்துகொள்ளமுடிந்தது, ஏனெனில், அவள் ஆபாச படம் நடிப்பது, நிர்வாணமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது என போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார், அவளது மரணத்திற்கு இதுவே ஒரு காரணமாகும்.அவளுடைய சகோதரிக்கும், இந்த மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது எனக்கூறியுள்ளார்.

 

சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை கைது!!

1856824454Son

தனது 9 வயதுடைய மகனின் கழுத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையை, தலவாக்கலை பொலிஸார் நேற்று (02) மாலை கைதுசெய்துள்ளனர். தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சொற்பேச்சை கேட்காததாலும் குழப்பங்கள் செய்ததாலும் சிறுவனை, நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களின் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம்!!

Medical

வவுனியாவில் இயங்கும் அனைத்து உணவகங்களில் பணியாளர்களாக கடமையாற்றும் ஊழியர்கள், அனைவரும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உணவு கையாளும் நிலையங்களின் ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தமது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு சான்றிதழ்களை பெற்ற பின்னரே உணவு கையாளும் நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்படவேணடும் என்றும், அதற்கு உணவு நிலையங்களின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 11வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!!

Abuse

வவுனியா சாஸ்திரிகூளாங்குளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை 11வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு சந்தேக நபர்கள் அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் நேற்று வவுனியா பொலிசாரால் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டபோது 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் குறைகேள் நடமாடும் சேவை!!

 
வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கான மக்கள் குறைகேள் நடமாடும் சேவை மார்ச் மாதம் பதினாறாம் திகதி (16.03.2016) நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண சபையும், வவனியா மாவட்ட செயலகம் மற்றும் செட்டிகுளம் பிரதேச சபை ஆகியன இணைந்து நடாத்தவுள்ள இந்த நடமாடும் சேவையில் மாகாண, மத்திய அரசின் கீழுள்ள திணைக்களங்களின் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் செட்டிகுளம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று (02.03.2016) நடைபெற்றது.

இதில் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் சண்முகப்பிரியன், பிரதேச செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நடமாடும் சேவைக்கு வருகைதரும் பொதுமக்களின் நலன்கருதி இலவச போக்குவரத்து சேவைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ACLG meeting 1 ACLG meeting 2 ACLG meeting 3

வவுனியாவில் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிகள் – வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சந்திப்பு!!

 
வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளால் முன்னெடுக்கப்படும் மக்கள் நலன்சார் செயற்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று வவுனியா பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் பணிமனையில் நேற்று (02.03.2016) நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர்..

மக்கள் நலன்சார் திட்டங்களை திட்டமிடும்போது மாவட்டத்தின் நீண்டகால நோக்கை அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டுமென தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினருமான டாக்டர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், மா.தியாகராசா, எம்.பி.நடராசா, ஜயதிலக மற்றும் தர்மபால செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்றங்களினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இவ்வாறான கூட்டங்கள் எதிர்காலத்தில் மாதமொருமுறை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர், நகரசபை, வவுனியா வடக்கு பிரதேச சபை,வெங்கல செட்டிகுள பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைகளின் செயலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்னைநாள் பிரதேச சபைகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ACLG meeting 1 ACLG meeting 2 ACLG meeting 3

சகல செய்தி இணையத்தளங்களும் பதிவு செய்துகொள்வது அவசியம்!!

Mi

இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக வெகுசன ஊடக அமைச்சில் பதிவுசெய்துகொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சின் கீழ் பதிவு செய்துக்கொள்வதன் மூலம், அனைத்து செய்தி வலைத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கிகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், மார்ச் 31ம் திகதிக்கு பின்னர், பதிவுசெய்யப்படாத இணையதளங்கள் சட்டத்துக்கு முரணானவையாக கருதப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாவில் வந்து வர்த்தகம் செய்த இந்தியர் பெருந்தொகைப் பணத்துடன் கைது!!

Arrest1

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பெருந்தொகைப்பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் வைத்து குறித்த இந்தியப் பிரஜை ஆயத்த ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த நபர் கைது செய்யப்படும்போது சுமார் இரண்டரை லட்சம் ரூபா பணம் வைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றத்தின் பேரில் இன்று அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மாயமான மலேசியாவின் MH370 விமானத்தின் பாகங்கள் ஆபிரிக்காவில் கண்டுபிடிப்பு!!

 
மலேசியாவின் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH370 விமானத்தின் பாகங்கள் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.

அதன் பின்னர், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது என்றும் அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் உயிரிந்துவிட்டதாக மலேசிய பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அதன் பின்னர், அதன் பாகங்களை தேடும் பணி இன்றுவரை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், ஆபிரிக்காவின் Mozambique என்ற கடற்கரை பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பாகங்களை ஆராய்ச்சிக்காக மலேசியாவிற்கு அனுப்பி வைத்துள்ள அமெரிக்க அதிகாரிகள், இதுவரை விபத்துக்குள்ளான விமானங்களில் MH370 விமானத்தின் பாகங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படாத நிலையில், இவை மலேசிய விமானத்தின் பாகங்கள் தான் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

1 2 3 4 5 6

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மார்டின் குரோவ் மரணம்!!

Martin Crow

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மார்டின் குரோவ் தனது 53 ஆவது வயதில் காலமானார்.

அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த மார்டின் குரோவ் இன்று அதிகாலை அவரது பிறந்த ஊரான ஒக்லாந்தில் மரணமானார்.

நியூசிலாந்து அணிக்காக விளையாடிய மார்டின் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,444 ஓட்டங்களையும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,704 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

பந்து வீச்சில் 77 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 14 விக்கெட்டுகளையும் 143 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மார்டின் குரோவ் 16 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளதுடன் 1991 ஆம் ஆண்டு வெலிங்டனில் இலங்கை அணிக்கு எதிராக 299 ஓட்டங்களைப் பெற்றமையே அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் வழக்கில் ஏழ்வரையும் விடுவிக்க முடிவு : மத்திய அரசின் கருத்துக் கோரி கடிதம்!!

Rajiv

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய மத்திய அரசின் கருத்தைக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த 2014-ஆம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து அவர்களையும், இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் சிறையிலிருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது.

டெல்லி பொலிஸ் சட்டப் பிரிவின்படி, புலன் விசாரணைக்காக இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், குற்ற விசாரணை சட்டத்தின் (சிஆர்.பி.சி.) 432-ஆம் பிரிவான தண்டனைக் குறைப்பை அமல்படுத்த மாநில அரசு முன்வரலாம். அப்படி முன் வரும்போது, குற்ற விசாரணை சட்டத்தின் 435-ஆம் பிரிவின்படி, மத்திய அரசை அந்த மாநில அரசு கலந்து பேச வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது. அதுதொடர்பான கருத்தை மத்திய அரசு 3 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 19ம் திகதியன்று தமிழக அரசு கடிதம் எழுதியது.

தண்டனைக் குறைப்பு தொடர்பான கருத்தைத் தெரிவிப்பதற்குப் பதிலாக அப்போதிருந்த மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

ஆனால் அந்த வழக்கில் உள்ள சட்ட அடிப்படையிலான கேள்விகளில் இருந்த முக்கியத்துவத்தைக் கருதி, வழக்கை கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு 3 நீதிபதிகளும் அனுப்பி வைத்தனர்.

அந்த வழக்கில் எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு, மீண்டும் வழக்கை 3 நீதிபதிகளின் அமர்வுக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதியன்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்காகப் பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் 24 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து விட்டதாகக் கூறி, அதனால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளனர். இதில் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த 7 பேரின் மனுக்களைப் பரிசீலித்து, அவர்கள் அனைவருமே 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டதால், தண்டனையைக் குறைத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த சூழ்நிலையில், குற்ற விசாரணைச் சட்டத்தின் 435-ஆம் பிரிவின்படி, தமிழக அரசின் முடிவு தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு எழுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், 435-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனை என்ற வார்த்தை, தெரியப்படுத்துதல் என்பதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் அனுமதியைப் பெறுதல் என்ற அர்த்தத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதை மறுசீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கான மாநில அரசின் உரிமையை விட்டுத் தரவில்லை என்பதை இதன் மூலம் கூறிக் கொள்கிறோம் என்று தனது கடிதத்தில் கே. ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2016

1

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் வவுனேஸ்வரம் என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசியா மகா சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்க படவுள்ளது .07.03.2016  திங்கட்கிழமை காலை 6.00 மணிமுதல் ஆரம்பமாகும் பூசை அபிசேகங்கள்  மறுநாள் காலை வரை  நான்கு கால  பூசைகளும்  அதிகாலை 5.30 மணிக்கு  வசந்த மண்டப பூசையும் தீர்த்தோற்சவமும்  இடம்பெறும் .

மேற்படி சிவராத்திரி  நிகழ்வின் ஆலயத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற இம்முறையும் ஒழுங்கு சசெய்யப்படுள்ளது. சிவராத்திரி விரதமிருக்கும் அடியார்கள்  பாற்குடம்  எடுக்கும் அடியார்கள்  நேர காலத்துடன் அலுவலகத்தில் உங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் .

சிவராத்திரி தினத்தன்று காலை ஒன்பது மணிமுதல் சமய தீட்சை வழங்கும் நிகழ்வும் இடம்பெறும் .

அடியார்களின் வசதி கருதி ஆலயத்தினால்  இரவு 6.00 மணிமுதல் அடுத்த நாள் காலை  6.00 மணி முதல் விசேட போக்குவரத்து  வசதிகளும் ஒழுங்கு செய்யபட்டுள்ளது .

3 11

111

ஊடக அமைச்சர் வடக்கு ஊடகவியலாளர்கள் விரைவில் சந்திப்பு!!

Gayantha-Karunathilake

வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க எதிர்வரும் 26ஆம் திகதியன்று அங்கு செல்லவுள்ளார்.

இந்த மூன்று நாள் விஜயத்தின் போது கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் ஊடக பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தநிலையில் போர் காலத்தில் கொல்லப்பட்ட மூன்று ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பேசி மாகாண ஊடகவியலாளர்களுக்கென்று 25 ஊடக கிராமங்களை நிர்மாணிக்கவுள்ளதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.