கணவன் மனைவி ஒரே இடத்தில் வேலை செய்தால் பிரச்சனை வருமா?

163959-546

பொருளாதார பிரச்சனையினாலும், விலைவாசி உயர்வினாலும் தற்போதைய சூழலில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

IT  என்ற இரண்டெழுத்து, இந்த பிரச்சனைக்கு லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தீர்வளித்தது. கை நிறைய சம்பளம் சந்தோஷமான வாழக்கை என்று அவர்களை மகிழ வைத்தது. ஆனால், IT. மட்டுமல்லாது எந்த ஒரு அலுவலகமாக இருந்தாலும் கணவனும், மனைவியும் ஒரே இடத்தில் வேலை செய்தால் ஒரு சில பிரச்சனைகள் கண்டிப்பாக எழும்.

சம்பளம், பதவி உயர்வு, மரியாதை என்று பல வில்லன்கள் இதற்கு காரணமாக இருப்பார்கள். இது போக சக ஊழியர்களின் பார்வை என பல பிரச்சனைகள் எழுகின்றன. இது போக ஒரு சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன.

* வேலை செய்யும் இடத்தில் திடீரென மனைவிக்கு பதவி உயர்வு அல்லது மதிப்பு கூடும்படியான ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால் கணவன்மார்கள் கொஞ்சம் வருத்தம் அடைய தான் செய்வார்கள்.

* தம்பதியினர் மத்தியில் இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை, மனைவியை விட கணவன் தான் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது.

* அழகான மனைவிகள் கொண்டுள்ள ஒவ்வொரு கணவனுக்கு அன்றாடம் ஏற்படும் பயம் தான் இது. அதிலும், ஒரே இடத்தில வேலை செய்தால் கண்காணிப்பதே ஒரு வேலையாகிவிடும்.

* ஓர் உறவில் விரிசல் ஏற்படுகிறது என்றால் அதற்கு 90% காரணமாக இருப்பது இந்த சந்தேக பிரச்சனை தான். அலுவலகத்தில் யாரவது ஓர் ஆணுடன் கொஞ்சம் அதிகமாக பேசினால் கூட கணவன்மார்களால் தாங்கிக் கொள்ள முடியாது. உடனே சந்தேகத்தில் மூழ்கிவிடுவார்கள்

* ஒரே முகத்தை வீட்டிலும், அலுவலகத்திலும் என 24 மணி நேரமும் ஓயாமல் பார்க்க முடியாது அல்லவா.

* ஒரே இடத்தில் வேலை செய்வதனால் ஏற்படும் ஓர் முக்கியமான நன்மை என்னவெனில் பெட்ரோல் செலவு அதிகமாக குறையும். மற்றும் பிக்கப், ட்ரோப் என்ற அலைச்சல்கள் இருக்காது.

* ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர் என்றால் தினந்தோறும் காலை கொஞ்சம் கடுகு வெடிப்பது போல தான் இருக்கும். கணவன் ஒரு நேரத்தில் கிளம்ப வேண்டும், மனைவி ஒரு நேரத்தில் கிளம்ப வேண்டும், இதற்கு நடுவில் குழந்தைகள். ஆனால், இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்தால் இந்த பிரச்சனையே இருக்காது.

* ஆண்கள் எப்போதுமே ஒருவேளையாவது மனைவியின் சமையலில் இருந்து தப்பித்து மதியம் உணவகத்தில் சாப்பிடலாம் என்று இருப்பார்கள். ஆனால், மனைவியும் ஒரே இடத்தில வேலை செய்யும் போது இருவரும் ஒன்றாக தான் சாப்பிட வேண்டும். அதனால், மனுஷன் தப்பிக்க முடியாது.

 

உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்ட இடத்தில் ஆடம்பர ரெயில் நிலையம்!!

h

அமெரிக்காவின் நியூயோர்க் இரட்டை கோபுரம் என அழைக்கப்பட்ட வர்த்தக மையம் கடந்த 2001–ம் ஆண்டு செப்டம்பர் 9–ந் திகதி விமானம் மூலம் மோதி அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது அதன் அருகே இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே வர்த்தக மைய கட்டிடம் இருந்த இடத்தில் ஆடம்பரமான மிக மதிப்புமிக்க ரெயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

107 மீட்டர் நீளம் மற்றும் 35 மீட்டர் அகலத்தில் இந்த ரெயில் நிலையம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி மிகவும் எளிமையாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரெயில் பாதை நியூயார்க்கின் சுரங்கப் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பாதை நியூஜெர்சியையும் இணைக்கிறது.

இந்த ரெயில் நிலையம் கட்ட தொடக்கத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது 3.85 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.விலை மதிப்பு மிக்க இந்த ரெயில் நிலைய கட்டிடத்தை ஸ்பெயின் –சுவிட்சர்லாந்தின் சாண்டியாசோ கலாட்ராவாவின் ஆக்குலஸ் நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

 

வேலைக்கார பணிப்பெண் மொடலான கதை! சுவாரசிய சம்பவம்!!

kamala_model_002

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மொடலாக தெரிவு செய்துள்ளார். டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பார்த்துள்ளார்.

இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மொடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மொடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார்.

வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மொடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார்.நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மொடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.

தான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மொடலிங்கிற்கு தயாரானார்.இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம்.அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.முதலில் கமெராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.

எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மொடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது.இந்த மொடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மொடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

கமலாவின் மொடல் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால், அவரை பற்றிய தகவலும் பலரையும் சென்றடைந்துள்ளது.

 

பேஸ்புக் மூலமாக கரடிகளையும், குரங்குகளையும் கடத்தும் குழு சிக்கியது!!

fb

பேஸ்புக் மூலமாக அரிய வகை, கரடிகள், குரங்குகளை விற்று வருவது அதிகரித்து வருவதாக மலேசியாவைச் சேர்ந்த டிராபிக் என்ற அமைப்பு கூறியுள்ளது. உலக வன விலங்குகள் தினமான இன்று இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் டிராபிக் அமைப்பு வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்கள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன.

இப்போது அரிய வகை விலங்குகளையும் இதன் மூலமாக விற்கும் செயல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலேசியாவில் இந்த செயல் அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மலேசியாவைச் சேர்ந்த 14 பேஸ்புக் குரூப்களைக் கண்காணித்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த குரூப்கள் மூலமாக 300க்கும் மேற்பட்ட அரியவகை விலங்குகள் விற்கப்பட்டுள்ளன. சூரியக் கரடி, ஜிப்பான் வகை குரங்குகள், ஓட்டர்கள், பின்டுராங், கரடி பூனை உள்ளிட்டவை இதில் அடக்கம். இந்த 14 பேஸ்புக் குரூப்களும் தற்போது மூடப்பட்டு விட்டன. ஆனால் அதில் கிட்டத்தட்ட 68,000 உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் தற்போது தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். இந்த குரூப்களில் உள்ளவர்களை முடக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 93 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

1 (10)

பண்டாரவளை – பூணாகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒவ்வாமை காரணமாக வாந்தி, மயக்கம் போன்றவற்றால் நேற்று 93 மாணவர்கள் பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய குறித்த பாடசாலை மாணவர்களுக்கு நேற்று காலை உணவுக்குப் பின்னர் விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தரம் 8,9,10 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கே அயன் மாத்திரைகள் உள்ளிட்ட விற்றமின்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து நேற்று பிற்பகல் சுகயீனமுற்ற நிலையில் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பண்டாரவளைப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விற்றமின் மாத்திரைகளின் மாதிரிகளை, வைத்திய ஆய்வுபிரிவிற்கும் அனுப்பியுள்ளனர்.

இம்மாத்திரைகள் 2018ம் ஆண்டுவரை பாவிக்கலாமென்றும் கால எல்லை குறிப்பிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது பற்றி வித்தியாலய அதிபர் ரெ.மோகனிடம் வினவிய போது, ‘’உணவு உண்ட பின்னரே, இம்மாத்திரைகளை விழுங்க வேண்டும். ஆனால், மாணவ மாணவிகள் உணவு உண்ணாமலேயே மாத்திரைகளை விழுங்குவதும் நோய்வாய்ப்படுவதற்கு ஒரு காரணமாகும்’’ என்று கூறினார்.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

கை, கால்கள் கட்டப்பட்டு நிலையில் இளம் பிக்கு பற்றைக்காட்டிலிருந்து மீட்பு!!

Angkor-temples-Buddhist-monk-with-headphones-12109

இளம் பௌத்த பிக்கு (வயது – 23) ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் அம்பலாங்கொடை ரன்தொம்பே பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றின் அருகிலிருந்த பற்றைக் காடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை அம்பலாங்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்ட இவர், உடனடியாக பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட சமயம் அவர் பேசமுடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப சிகிச்சையின் பின் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுத்த அவர், நேற்றுமுன்தினம் இரவு தான் தங்கியிருந்த அக்குரஸ்ஸ, சலகொட போதிராஜாராம விகாரைக்குள் ஆயுதபாணிகளாகப் புகுந்த ஐவர் தன்னைக் கடத்தி வாகனமொன்றில் ஏற்றியதாகவும், அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் சென்றபின் தன்னை இறக்கி கை, கால்களைக் கட்டியதுடன், வாயில் துணியை அடைத்து பற்றைக்காட்டில் போட்டுவிட்டுச் சென்றதாகவும், அவர்கள் போவதற்கு முன் தான் தேவையில்லாத விடயங்களில் மூக்கை நுழைத்தால் கொலை செய்யப்படுவேன் என மிரட்டி விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை, ரன்தொம்பே பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீட்டுக்குப் பக்கத்தில் இந்தப் பிக்கு கிடந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ்நிலையத்துக்குத் தெரிவித்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இவர் மீட்கப்பட்டார்.

இவரைக் கடத்தியவர்கள் பற்றிய எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அம்பலாங்கொடை தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.மஹிந்த தெரிவித்தார்.

 

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – 31 வயது குடும்பஸ்தர் கைது!!

arrest

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான 31 வயதுடைய குடும்பஸ்தரை இன்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அயல் வீட்டில் வசிக்கும் குறித்த சிறுமியை சந்தேகநபர் ஆசைவார்த்தை காட்டி கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி பிறிதொரு இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை (03) மாலை 03.00 மணியளவில் குறித்த நபர் சிறுமியுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியின் தாயார் சந்தேகம் கொண்டு வினவியுள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த விடயத்தை தெரிவித்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி குறித்த நபரை கைதுசெய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

களனி கங்கையில் கழிவுகளை கொட்டியதற்காக 250,000 ரூபா தண்டம்!!

1 (9)

களனி கங்கையில் கழிவுகளை கொட்டியது சம்பந்தமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் குற்றவாளியாக இணங்காணப்பட்ட பாதணி தயாரிப்பு நிறுவனத்திடம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் குறித்த நிறுவனம் 250,000 ரூபா தண்டம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு : உணவக உரிமையாளருக்கு பிடியாணை!!

DSC02066

வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களாக பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது உணவகங்கள், வெதுப்பகங்கள் உட்பட சுகாதார சீர்கேடான இடங்களை இனங்கண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கையில் கடந்த இரண்டு தினங்களில் மேலும் ஒரு வவுனியா நகரிலுள்ள வெதுப்பகத்திற்கு எதிராக நீதிமன்றத்தினால் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன் தற்காலிகமாக வெதுப்பகத்தினை மூடி திருத்தவேலைகளை மேற்கொண்ட பின்னர் பொது சுகாதார பரிசோதகர்களினால் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வெதுப்பகத்தினை திறக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இரண்டு உணவகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின் போது ரூபா 10 ஆயிரம் தண்டப்பணமாக நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உணவக உரிமையாளர் ஒருவருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் உரிமையாளர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கததால் உணவக உரிமையாளருக்கு பிடியாணை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமது இந்நடவடிக்கை வவுனியாவில் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

DSC02057 DSC02060 DSC02061 DSC02065 DSC02066

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)

 
வவுனியாவில் இன்று (04.03.2016) காலை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து குட்செட் வீதியினூடாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியினைக் கடக்க முற்பட்ட முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த முதியவர் (பேரம்பலம் சிவலிங்கம், வயது 80) வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மோட்டார் வண்டியில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC07583 DSC07584 DSC07585 DSC07586 DSC07587 DSC07588 DSC07589 DSC07590 DSC07591 DSC07592 DSC07595

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை அதிபர் M.S.றம்சின் தலைமையில் இன்று (03.03.2016) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களின் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுத்தீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் K.மஸ்தான்அவர்களும் கெளரவ விருந்தினர்களாக வடமாகண சபை உறுப்பினர்களான V.ஜயதிலக, தர்மபால,ம.தியாகராசா,M.P.நடராஜ், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் இணைப்புச் செயலாளர் முத்து முகம்மட், அமைச்சரின் நகர இணைப்பாளர் பாரி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

-சைபுதீன் எம் முகம்மட்-

12784447_557127281113269_2128238078_n 12782000_557151271110870_526590500_n12822157_557135757779088_443780791_n 12787982_557135771112420_82800861_n 12784467_557135794445751_1692143615_n 12822189_557135804445750_1975791883_n 12784625_557135821112415_749775691_n 12781996_557135851112412_1043068053_n

வவுனியா கல்வாரிக்கான பாதயாத்திரை மன்னாரில் இருந்து ஆரம்பம்!!

Kalvari

வருடா வருடம் மன்னார் மறைமாவட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த வவுனியா கோவரசங்குளம் கல்வாரிக்கான பாதயாத்திரை இம்முறை பொது நிலையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பாதயாத்திரை நேற்று புதன்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது

கத்தோலிக்கர்கள் வருடந்தோறும் அனுசரித்து வரும் தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் வவுனியாவில் உள்ள கோமரசன்குளம் கல்வாரிக்கு பாதயாத்திரை செல்வது வழமை. மன்னார் மறைமாவட்டம் இன்றி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலந்து கொள்வார்கள்.

கடந்த காலங்களில் குறித்த பாதயாத்திரையினை மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை பொது நிலையினரினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை மன்னாரில் இருந்து ஆரம்பமான குறித்த பாதயாத்திரையில் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலயம், வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் ஆகியவற்றில் தங்கி நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை வவுனியா கோமரசன்குளம் கல்வாரியை நோக்கி சென்றடைவார்கள்.

அங்கு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் திருச்சிலுவைப் பாதை மற்றும் திருப்பலியிலும் கலந்து கொள்வார்கள்.

வவுனியா கோமரசன்குளம் கல்வாரிக்குச் செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மருத்துவ வசதிகள், குடிநீர், உணவு வசதிகள் போன்றவை ஏற்பாட்டுக் குழுவினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பாவற்குளம் வாரிக்குட்டியூர் கலைமகள் வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா பாவற்குளம் படிவம் 6 வாரிக்குட்டியூர் கலைமகள் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி இன்று (03.03.2016) பாடசாலையின் அதிபர் திரு கந்தையா ஸ்ரீகந்தவேள் தலைமயில் இடம்பெற்றது

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.M.P நடராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக வெண்கல செட்டிகுளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ச.ஜேசுதாசன் மற்றும் வாரிக்குட்டியூர் சமுர்த்தி வங்கி முகாமயாளர், கிராம அவிபிருத்திச் சங்கத்தினர், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

-கீதன்-

12804068_1209251825771206_1149206528_n12825443_1209251855771203_364264039_n12784560_1209251905771198_1721518603_n 12784738_1209251915771197_1779327303_n12788125_1209251875771201_1663097583_n12804190_1209251815771207_1560755526_n12782481_1209252369104485_1617504132_n 12784284_1209251969104525_91429655_n 12784522_1209251955771193_2106148178_n    12788149_1209252029104519_967009604_n 12788198_1209252452437810_880244626_n  12782118_1209252089104513_510699402_n 12821976_1209252529104469_1642061301_n 12822129_1209252442437811_1373981086_n 12822130_1209252109104511_275700537_n 12822134_1209251942437861_922102850_n 12822249_1209252149104507_983182924_n 12825216_1209252069104515_1637799671_n  12825560_1209252105771178_1589380698_n

வன்னியுடன் தமிழகம் கலாசார கலப்பு : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்!!

 
கடந்த 02.03.2016 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பொன்விழா மண்டபத்தில் வன்னிக்குறோஸ் கலாசாரப் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா தலைமையில் கலைஞர்களுக்கான விசேட ஒன்றுகூடலும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான திரு.சண்முகராசா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

முன்னதாக விருந்தினர்களை பாரம்பரிய இன்னியம், குதிரையாட்டம், காவடி, கரகம், குடமூதுதல் போன்ற இசை நிகழ்வுடன் வரவேற்று செல்லப்பட்டனர். வரவேற்புரையில் வன்னி குறோஸ் கலாசார பேரவையின் செயலாளர் சி.வேதவனம் நிகழ்த்த வரவேற்பு நடனத்தினை கற்சிலைமடு பாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து கருத்துரைகள், சிறப்புரைகள் இடம்பெற்றன. கருத்துரைகள் வன்னி குறோஸ் கலாசாரப் பேரவையின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ச.ரூபன், தென்னிந்திய திரைப்பட நடிகரும் இயக்குனருமான தி;ரு.சண்முகராசா, வன்னி குரோஸ் கலாச்சாரப் பேரவையின் சர்வதேச இணைப்பாளர் திரு.தவசீலன் (லண்டன்), வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கலாசாரப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தனது உரையில்..

கடந்த கால யுத்தத்தினால் எமது உயிர்கள் பறிக்கப்பட்டன, உடமைகள் அழிக்கப்பட்டன. அதில் கலைஞர்களும் உள்ளடங்குவர் ஆனால் எமது கல்வி, கலாச்சார பண்பாடு எமது கலைஞர்களின் மன உறுதி யாராலும் பறிக்கவோ, மறைக்கவோ முடியாது. பல ஆயிரம் கலைஞர்கள் இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டனர், கலைஞர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன, யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் தேசியத் தலைவரால் கலை கலாச்சாரம் கட்டிக்காக்கப்பட்டு தமிழர்களின் கலை, கலாச்சாரம் மேலோங்கி நின்றன.

இன்று எஞ்சியுள்ள ஒருதொகை கலைஞர்களை ஊக்குவித்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே தமிழக கலைஞர், குணச்சித்திர நடிகரும், கலைஞரும் இலக்கிய கலாநிதியுமான சண்முகராசா அவர்களை நாம் வரவேற்கிறோம். இவர் பல திரைப்படங்களை நடித்தவர் குறிப்பாக விருமாண்டி படத்தில் காவல்துறை பாத்திரமேற்று முதல் படமாக நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியாகிய பூலோகம் படத்திலும் நடித்த ஒரு நடிகர். இன்று எமது கலைஞர்களோடு தமிழகத்தின் கலைஞர்கள் கலந்து கொள்வதால் எமது கலாச்சாரத்தின் தமிழகத்தின் கலப்பு ஏற்பட்டுள்ளது. எமது கல்வி, கலை, கலாச்சார பண்பாடு பொருளாதார மேம்பாட்டில் வளர வேண்டியவர்களாக இருக்கின்றோம் என தெரிவித்தார். இந்நிகழ்வில் அண்ணாவிமார்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் என 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

குழந்தைகளின் குறட்டையினால் இத்தனை ஆபத்துக்கள் இருக்கின்றதா?

sleepingchild_lg

குறட்டை என்பது பொதுவாக நம்மை சுற்றியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்ற விடயம் மட்டுமே பலருக்கு தெரியும்.ஆனால் இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகின்றனது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அதிலும் குழந்தைகள் குறட்டை செய்தால் பிரதானமாக அவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிப்படைகின்றது என சுவீடனின் Gothenburg பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.11 வயதுக்குட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அவர்கள் வாரத்திற்கு அதிகமான அளவில் குறட்டை விடுகின்றனர்.

இது தவிர தொடர்ச்சியாக குறட்டை செய்யும் குழந்தைகள் பகலில் களைப்படைந்தவர்கள் போல இருப்பதாகவும், அவதானிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், படுக்கையில் சிறுநீர் கழிப்பவர்களாகவும், வளர்ச்சியில் மந்த நிலை உடையவர்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

சைக்கிள் சலவை இயந்திரம்: புதிய கண்டுபிடிப்பு!!

cycle_machine_002

துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். சைக்கிள் ஓட்டுவது என்பது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது, உடலின் இரத்த ஓட்டங்கள் சீரான முறையில் நடப்பதற்கு சைக்கிள் உடற்பயிற்சியினை அன்றாடம் மேற்கொள்வது நல்லது.இந்நிலையில், சீனாவின் Dalian தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் வடிமைத்துள்ள சலவை இயந்திரம் சைக்கிள் வடிவில் உள்ளது.

இதில், சைக்கிளின் அடிப்புறத்தின் அடைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் அழுக்கு துணிகளை அடைத்துவைத்துக்கொண்டு, சைக்கிளின் பெடலை வேகமாக அழுத்தும்போது, உள்ளே உள்ள துணிகள் சுழலுகையில் அதில் உள்ள அழுக்கு நீங்கும்.இது உடலுக்கு ஒரு வித உடற்பற்சி மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மின்சாரத்தினை சேமிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.