இலங்கையில் தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானங்கள் : சாதனை படைத்த மொரட்டுவ பல்கலைக்கழகம்!!

 
மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று இலங்கையிலும் நான்கு வகையான ஆளில்லா இலகு விமானங்களை தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இலங்கையின் இயற்கைப் பேரிடர்களின் போது வானிலை பற்றிய துல்லியமான தகவல்கள் மற்றும் விவசாய பயிர்ச்செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுகளுக்கு இவற்றைப் பயன்படுத்தும் வகையில் குறித்த இலகுரக விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1 2

வவுனியா நெளுக்குளம் பகுதியில் தீயினால் அழிவடைந்த வீட்டை பார்வையிட்ட பா.உ. கே.கே.மஸ்தான்!!

 
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (04.03.2016) காலை 10.30 மணியளவில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. நெளுக்குளம்- கூமாங்குளம் வீதியில் அமைந்துள்ள குறித்த வீடு சமையல் அறையிலிருந்த நெருப்பு அதிக காற்று காரணமாக பரவியாதால் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.

இத் தீயினால் ஆடைகள், சமையலறைப் பொருட்கள், வீட்டு உடைமைகள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
.
இச் சம்பவத்தை அறிந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வன்னி அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் குறித்த வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு, முதற்கட்ட உதவியைச்செய்ததுடன் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி பணித்துள்ளார்.

1 2 3 4

வவுனியா நெளுக்குளம் பகுதியில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசம்!!

 
வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (04.03.2016) காலை 10.30 மணியளவில் வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.  நெளுக்குளம்- கூமாங்குளம் வீதியில் அமைந்துள்ள குறித்த வீடு சமையல் அறையிலிருந்த நெருப்பு அதிக காற்று காரணமாக பரவியாதால் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளது.

தீப்பிடித்த சமயம் வீட்டின் உரிமையாளர் அருகிலுள்ள கடைக்குச் சென்றுள்ளார். அயலவர்களின் முயற்சியுடன் தீயை அணைக்க முயன்றபோதும் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

ஆடைகள், சமையலறைப் பொருட்கள், வீட்டு உடைமைகள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் 7ஆயிரம் ரூபாய் பணமாக வீட்டிற்குள் இருந்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக பண்டாரிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  DSC02118 DSC02121 DSC02122 DSC02123 DSC02126 DSC02127

வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்!!

 
அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் விசேட செயலணி இன்று (04.03.2016) உருவாக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண சிறுவர் பாதுகாப்பு, நன்னடத்தை அமைச்சர் ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இச் செயலணி உருவாக்கப்பட்டது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்தமைக்குரிய காரணங்கள், அதனைத் தடுக்க மேற்கொள்ளக் கூடிய பொறிமுறைகள், மற்றும் துஸ்பிரயோகத்திற்குள்ளானவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகள், கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி மாவட்டமட்ட செயலணி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பில் அரச அதிபரின் கீழ் ஒரு செயலணி செயற்பட்டமையால் அதனை இதன்போது மீள்புனரமைப்பு செய்து வலுவுள்ள செயலணியாக மாற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், துறைசார் திணைக்களங்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

DSC07596 DSC07597 DSC07598 DSC07600 DSC07601 DSC07602 DSC07603 DSC07605 DSC07606 DSC07607 DSC07609 DSC07612 DSC07615

இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு அப்பா!!? விநோதனமான வழக்கு!!

497232-ryan-and-owen-christopherson

அமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தைகள் இருப்பது மூன்று வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த T.M என்பவர் தன்னை பிரிந்து சென்ற காதலர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

T.M-க்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்தது. அதன் பிறகு இவரின் காதலர் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தற்போது இவரின் காதலரிடம் இருந்து இவரின் குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் வேண்டுமெனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக இரட்டைக் குழந்தைகளுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் இருகுழந்தைகளுக்கும் வேறுவேறு தந்தை என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னர், தான் தனது காதலருடன் உடலுறவு கொண்ட மறுவாரம் வேறொருவருடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார் T.M.
இதனால், அவரின் காதலருக்கு ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் வாரம் ரூ.2,000 ஜீவனாம்சம் கொடுத்தால் போதுமானது என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது போன்று தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் ஒரு பெண் இருவேறு ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புகள் இருக்கின்றது என்றும். இது 10லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

 

வவுனியா புதிய வேலர்சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டி!!

 
வவுனியா வடக்கு புதிய வேலர்சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல திறனாய்வுப் போட்டியும் பாடசாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் திரு.மு.ஜெயசீலன் தலைமையில் நேற்று (03.03.2016) நடைபெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, கெளரவ விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.தா.அமிர்தலிங்கம் (ஒமந்தைக்கோட்டம்), உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.S.ராஜேஸ்வரன் மற்றும் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், அயல்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

IMG_0549 IMG_0550 IMG_0551 IMG_0552 IMG_0554 IMG_0555 IMG_0556 IMG_0557 IMG_0558 IMG_0559 IMG_0560 IMG_0561 IMG_0568 IMG_0569 IMG_0570 IMG_0575 IMG_0577 IMG_0583 IMG_0585 IMG_0589 IMG_0594 IMG_0604 IMG_0609 IMG_0619 IMG_0621 IMG_0627 IMG_0637 IMG_0640

வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!

FB_IMG_1456949647562-1

வவுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டு கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு உமாமகேஸ்வரன் வீதியில் உள்ள ரொக்கட் விளையாட்டு கழகத்தின் அலுவலகத்தில் (கோவில்குளம் இந்து கல்லூரிக்கு அருகாமையில்) 3 மணிக்கு ஆரம்பமாகும்.

இதன் போது கடந்த கால நிகழ்வுகள், கூட்டறிக்கைகள், கணக்கு அறிக்கைகள் என்பன வெளியிடப்படவுள்ளன.

எனவே இந்நிகழ்விற்கு முன்னாள் ரொக்கட் விளையாட்டு கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இவ்விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டங்கள் நீண்ட காலமாக நடைபெறவில்லை. இதேவேளை வவுனியா மண்ணில் பிரபல்யமாக விளங்கிய ரொக்கட் விளையாட்டு கழகத்தினை மறுசீரமைப்பு செய்ய சகலரும் முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

முடிந்தால் எங்கள் இணையத்தளத்தை முடக்கிப் பாருங்கள் : சவால் விடுக்கும் அமெரிக்கா!!

Hacker

முடிந்தால் எங்கள் இணையத்தளத்தை முடக்கிப் பாருங்கள் என்று ஹெக்கர்களுக்கு அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்ட்டகன் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான இணையத்தளத்திற்குள் கணனி ஹெக்கர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இணையப் பாதுகாப்பில் பல நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில மாதங்களில் செயல்படவுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த புதிய இணையத்தளங்களில் உள்ள தகவல்களுக்குள் வேறு யாரும் ஊடுருவி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் இணையத்தளங்களை கண்காணிக்கும் பணியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் இணையத்தளங்களை முடக்க பல்வேறு நாட்டவர்களும் முயற்சிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிபடத்தக்கது.

தொடர் தோல்விகளால் துவண்டு விடமாட்டோம் : உலகக் கிண்ணப் போட்டிகளில் அசத்துவோம் : மலிங்க!!

Malinga

இலங்கை அணியின் தொடர் தோல்விகள் அணியின் செயல்பாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று T20 அணித்தலைவர் மலிங்க கூறியுள்ளார்.

இலங்கை T20 அணியின் தலைவர் மலிங்க காயத்தால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். இருப்பினும் ஆசியக்கிண்ண தொடரில் எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் அதன் பின்னர் நடந்த இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அந்த 2 போட்டிகளிலுமே தோல்வியடைந்த இலங்கை தொடரை விட்டு வெளியேறியது.

இது பற்றி இலங்கை T20 அணியின் தலைவர் மலிங்க கூறுகையில், இலங்கை அணியில் அனுபவமற்ற வீரர்கள் இருக்கின்றனர். இது போன்ற பெரிய போட்டிகளுக்கு அனுபவம் என்பது முக்கியமானது.
ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த T20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் 2500 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு!!

Cancer

இலங்கையில் வருடமொன்றிற்கு சுமார் 2,500 பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிப்புக்குள்ளாவதாகவும் இதில் 500 இற்கும் அதிக பெண்கள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்று நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் அதனை குணப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்!!

Sandimal

ஆசிய தொடரின் கிரிக்கெட் போட்டி தொடரின் பத்தாவது போட்டியில் இன்றைய தினம் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவரராக செயற்படவுள்ளார் .

லசித் மலிங்க மற்றும் அன்ஜெலோ மத்திவ்ஸ் இருவரும் காயங்களினால் இப்போட்டியில் விளையாடவில்லை.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரின் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொள்ளும். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளுடன் சமமான நிலையிலுள்ளன.

ஆசியா கிண்ண இறுதிப்போட்டி எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறும்.

பட்டப்பகலில் 15 இலட்சம் ரூபா கொள்ளை!!

kollllai

ஜாஎல பிரதேசத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து கட்டுப்பணம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பணத்தை எடுத்துச் சென்றவரிடம் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் பணத்தொகையை எடுத்துக் கொண்டு வாகனத்தில் ஏற முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கூரிய ஆயுதங்களால் பண உரிமையாளரை தாக்கிவிட்டு பணப்பையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது காயமடைந்த அவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வித்தியா படுகொலை : சுவிஸ்குமார் உட்பட்ட ஆறு பேரும் கொலைக் குற்றவாளிகள்!!

Hummer

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமார் உட்பட ஆறு பேரினை கொலைக் குற்றவாளிகள் என குறித்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.

இன்று காலை மேற்படி வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ரியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே புலனாய்வு துறை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

குறித்த கொலைக்கு சுவிஸ்குமார் திட்டமிட்டார் எனவும், இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்களான தவக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் வித்தியா பாடசாலை செல்லும் போது வழிமறித்தனர் எனவும், ஆறாம் சந்தேக நபரான பிரதேச சபையில் பணியாற்றிய துசாந்தன் என்பவரும் ஐந்தாம் சந்தேகநபரும் வித்தியாவை வன்புணர்வு செய்தனர் எனவும் தெரிவித்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான குற்றப்புலனாய்வு பொலிஸாரின் விசாரணை அறிக்கைகள், இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவை எதுவும் இன்று சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த எட்டு மாத காலமாக நடைபெற்று வருகின்றது.

அந்த வழக்கு தொடர்பான சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என 12 அறிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கைகளும் கடந்த எட்டு மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதியன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது விசாரணை அறிக்கைகளை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏம்.எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு கடுந்தொனியில் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

அதேவேளை, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளை பிரிவு பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா மன்றில் வாசித்தார்.

‘மாணவி வித்தியாவை வழக்கின் ஆறாவது சந்தேகநபரான துசாந்தன் ஒருதலையாக காதலித்ததார். அதனை வித்தியா ஏற்காத காரணத்தால் ஐந்தாவது சந்தேக நபரான சந்திரகாசனுடன் சேர்ந்து கடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கு 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

தங்களுக்கு உதவியாக ஏற்கனவே, களவு வழக்கொன்றில் வித்தியாவின் தயார் சாட்சி சொல்லி பாதிக்கப்பட்ட இரண்டு பேரையும் துணைக்கு வைத்துக் கொண்டனர். அவர்களே, இவ்வழக்கின் 2ஆவது, 3ஆவது சந்தேக நபர்கள். அவர்கள் வித்தியா பாடசாலை செல்லும் போது, அவரை வழிமறித்துக் கடத்தினர்.

துசாந்தன், சந்திரகாசன் ஆகியோர் வித்தியாவை பாலியல் வல்லுறவு செய்து பின்னர் கொலை செய்தனர். இச்சம்பவங்களை நேற்று கைது செய்யப்பட்ட 11ஆவது சந்தேக நபர் நேரில் பார்த்திருக்கின்றார்.

குறித்த நபர், கொலை இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து புங்குடுதீவுக்கு கஞ்சா கொண்டு சென்றிருக்கின்றார்.

அங்கு தொடர்ந்து மூன்று தினங்கள் மதுவிருந்துடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை, சுவிஸ் குமார் ஏற்பாடு செய்திருக்கின்றார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலாவது, 4ஆவது, 7ஆவது, 8ஆவது சந்தேக நபர்கள் கொலையைத் தெரிந்தும் அதனை மறைத்தமை மற்றும் தடயங்களை அழிக்க உதவியமை போன்ற குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்.

கடற்படையினர் தான் இந்தக் கொலையைப் புரிந்தனர் என்பதைக் காட்டுவதற்காக கொலையை கொடூரமாக புரிந்தது போன்று அரலி பற்றைக்குள் வித்தியாவின் சடலத்தை கொன்று சென்று கை, கால்களை இழுத்துக் கட்டியுள்ளனர். என நிசாந்த சில்வா குறிப்பிட்டார்.

இன்றைய தினம் எந்தவொரு விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாததை அடுத்து, சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இக்கொலை வழக்குடன் சம்பந்தப்படாத நபர்களை விடுதலை செய்யுமாறு மன்றில் கோரினார்.

ஆனால், இதற்கு வித்தியா சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளான ஜே.வி.ரஞ்சித் குமார், சுகாஷ் ஆகியோர், விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட எந்தவொரு தடயப்பொருள் தொடர்பான அறிக்கைகளும் மன்றில் சமர்பிக்கப்படவில்லை. எனவே, சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது என்ற வாதத்தை முன்வைத்தனர்.

இன்றைய வழக்கின் முடிவில், ஊர்காவற்துறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால், மாணவி வித்தியாவின் படுகொலை சகித்துக்கொள்ள முடியாத துன்பகரமான செயல். கடவுளின் கிருபையுடன் மாணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய விடயங்கள் மேலும் சிலருக்கு தெரியும் என குற்றப்புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எனவே, இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் 077 3291500 மற்றும் 077 8503002 ஆகிய இலக்கங்களுக்கு அறியத்தரவும் எனக்கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வழக்குடன் சம்பந்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-அத தெரன-

அவர் படங்கள் நிறைய பார்க்க வேண்டும்- பிரபல நடிகர் குறித்து ரித்திகா சிங்!!

411273-saala

இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இதுக்குறித்து இவர் ‘விஜய் சேதுபதி குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.

அவருடன் நடிப்பது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.அவருடன் நடிப்பதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டு தான் படப்பிடிப்பிற்கு வருவேன்’ என கூறியுள்ளார்.

 

அம்மாவின் கனவை நிறைவேற்ற முடியாத ஏக்கத்தில் கீர்த்தி சுரேஷ்

Keerthi-Suresh-11-KEERTHY SURESH LATEST PHOTOS-CS (26)

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு தொடக்கத்திலேயே ஜோடியாகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் மருத்துவராக நடிக்கின்றாராம்.

இதை அறிந்த கீர்த்தியின் அம்மா மேனகா, ‘என் மகளை மருத்துவராக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.ஆனால், அதற்குள் நடிக்க வந்து விட்டார்’ என வருத்தத்துடன் கூறினாராம். இதனால், அம்மாவின் கனவை நிறைவேற்ற முடியாத ஏக்கத்தில் உள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

 

முதல் குழந்தை லீப் வருடத்தில் பிறந்த நிலையில் 2–வது குழந்தையையும் லீப் வருடத்தில் பெற்ற பெண்!!

1 (2)

அமெரிக்காவில் உள்ள மிஜிகானை சேர்ந்த தம்பதி ஜாட் – மிலிசா. இவர்களுக்கு ஏற்கனவே எலியானா அடயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த 2012–ம் ஆண்டு லீப் வருட நாளான பிப்ரவரி 29–ந் திகதி பிறந்தது.இந்த நிலையில் மிலிசா மீண்டும் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த 28–ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு 29–ந் திகதி அதிகாலை 3.06 மணிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் லீப் வருட தினத்தில் பிறந்துள்ளது.

இத்தனைக்கும் 10 நாட்களுக்கு முன்பே மிலிசாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் நாள் குறித்து இருந்தனர். ஆனால், தாமதமாக பிரசவ வலி ஏற்பட்டு லீப் நாளில் குழந்தை பிறந்துள்ளது.தங்களது 2 குழந்தைகளையுமே லீப் நாளில் பெற்றிருப்பதால் இந்த தம்பதிகள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். இரு தொடர்பாக மிலிசா கூறும் போது, அடுத்தடுத்து 2 குழந்தைகளையுமே லீப் நாளில் பெற்றெடுத்திருப்பதால் எனக்கு லொட்டெரியில் பெரிய தொகை பரிசாக விழுந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று கூறினார்.