எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞனின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பாதையில் நடக்கச் செய்த சம்பவம் ஒன்று ஆர்ஐன்டீனாவில் பதிவாகியுள்ளது.
வீட்டில் இருந்த சிறுமி ஒருவரை இளைஞன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளான். இதனையடுத்து பிரதேச மக்கள் இளைஞனை பிடித்து நிர்வாணமாக்கி நையப்புடைத்துள்ளனர்.
சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தை பிரதேசவாசி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புகைப்பட பிரதியிடல் (பிறிண்டிங்) இயந்திரம் இன்று ஒஸ்ரியா நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.சிவஜீவன் அவர்களால் வவுனியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
வவுனியா அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் கோலகலமாக அறிமுகம் செய்யப்பட்ட இவ்வியந்திரத்தில் மரப்பலகை உட்பட, புகைப்பட அல்பங்கள் வரைக்கும் ஏழு வர்ணங்களில் பிரதியிட (பிறிண்ட்) செய்ய முடியும் என்பதுடன் இத்தொழில் நுட்பத்தில் பிரதியிடப்படும் புகைப்படங்கள் 200 வருடங்களுக்கு மேல் பாவிக்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக எச்.பி நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஆர்.அப்பாதுரை கலந்துகொண்டிருந்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும், 2 T20 போட்டியிலும் விளையாட ரியூடர், சஞ்சீவன் ஆகிய இருவரும் மலேசியா பயணமாகின்றனர்.
யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்காக விளையாடிய ரியூடர் மற்றும் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரிக்காக விளையாடிய சஞ்ஜீவன் ஆகியோர் கடந்த காலங்களில் சிங்கப்பூர் சென்ற யுனிற்றி அணியில் விளையாட தெரிவு செய்யப்பட்டனர்.
இதனால் முன்னணி கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் கவனத்திற்கு வந்தனர். இவர்கள் உண்மையில் திறன் வாய்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன் என வட பிராந்திய பயிற்றுவிப்பாளர் ரவீந்திர புஷ்பகுமார தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாம் சிங்கப்பூர் சென்றபோது விக்கெட் காப்பாளராக றிஷாந் ரியூடர் இருந்தபோது முரளி பந்து வீசினார். முரளியின் தூஸ்றாக்களை அவர் இலகுவாக பிடித்த விதத்தினை முரளியும் சங்கக்காரவும் பாராட்டினர் என அவர் குறிப்பிட்டார்.
எப்போதுமே சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை தனது படைப்புக்களின் மூலம் கூறிவருகின்றார் புவிகரன். அந்த வகையில் இப் படைப்பும் நல்லதோரு தகவலை வழங்கும் என்பது இக் குறும்படத்தின் பெயரை பார்க்கும்போதே தெரிகின்றது.
புவிகரனின் இயக்கத்திலும் ராகவா விஜையின் கதையிலும் சன்சைன் டி ஷர்சியின் இசையிலும் துஷ்யந்தன், அகாஷ், நிரோஜினி, புவிகரன் ஆகியோரின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள இக் குறும்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. போஸ்டரை பிறேம் வடிவமைத்துள்ளார்.
வவுனியா மண்ணில் இருந்து வெளியாகும் இப்படைப்புக்கும் வெற்றிபெற வவுனியா நெற் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வவுனியா பெரியகோமரசன்குளத்தில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் வருடாவருடம் தவக்காலத்தில் வெள்ளி தோறும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வருடமும் நேற்று (04.03.2016) வெளிக்கிழமை ஆராதனைகள் நடைபெற்றன. இதில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றார்.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் மாணவ முதவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (04.03.2016) பாடசாலையின் அதிபர் திருமதி கமலேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ம.தியாகராஜா இருவரினாலும் பாடசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அனைத்து விஷேட பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் மானியமானது இந்த ஆண்டு 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலிஸ் நிர்வாகத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன ஊடாக இந்தத் தீர்மானமானது அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்ப்ட்டுள்ளதாக அந்த தகவல்கள் கேசரியிடம் சுட்டிக்காட்டின.
2016 ஆம் அண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமையவே இந்த எரிபொருள் மானியமானது 15 வீததால் குறைக்கப்ப்ட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் உள்ள சுமார் 43 பிரிவுகளில் கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் அத்தியட்சர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்களின் கவனத்திற்கு இந்த எரிபொருள் மானிய குறைப்பு பட்டியல் அனுப்பட்டுள்ளது.
சிறுவர் காப்பகமொன்றிலிருந்து ஹபராதுவ கல்லூரியொன்றுக்கு வரும் தாய், தந்தையற்ற அநாதைச் சிறுவனொருவன் அக்கல்லூரி அதிபரின் கடும் தாக்குதலுக்குள்ளாகி நேற்று களுகல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லூரி ஆசிரியை ஒருவரின் கைப்பையிலிருந்த 170 ரூபா பணத்தைத் திருடியதாக தரம் 5இல் கல்வி கற்கும் இந்த மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே அதிபர் அவரை பிரம்பால் விளாசியிருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.காயப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் சேர்க்க எவரும் முன்வரவில்லை.
விடயத்தைக் கேள்விப்பட்ட சிறுவர் காப்பகத்தின் கட்டுப்பாட்டாளரான பெண்மணியும் பாடசாலைக்கு வந்து சிறுவனை பார்வையிட்டபோதும் அவரும் சிறுவனை வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லவில்லை.பாடசாலை முடிந்ததும் சிறுவர் காப்பகத்துக்குச் சென்ற சிறுவன் இரவு உணவையும் உண்ணாமல் படுத்துவிட்டார்.
இந்த அவலநிலையை யாரோ ஒருவர் ஹபாராதுவ பொலிஸாருக்குத் தெரிவித்ததையடுத்து சிறுவர் காப்பகத்துக்கு இரவு 10 மணியளவில் சென்ற பொலிஸார் சிறுவனை உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்குமாறு காப்பகக் காப்பாள பெண்மணிக்கு உத்தரவிட்டபின் சிறுவன் களுகல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.
இந்தக் காப்பகத்திலுள்ள எல்லா சிறுவர்களும் பெற்றோரை இழந்தவர்கள் அல்லது அவர்களால் கைவிடப்பட்டவர்கள் எனவும்,இவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்தக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்கள் எனவும், அவர்கள் அனைவருமே இந்தக் கல்லூரியிலேயே கல்வி கற்கிறார்கள் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.ஹபாராதுவ பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
வவுனியா – வேப்பங்குளம் விவசாயிகள் தமது நெல்லினை கொள்வனவு செய்யுமாறு கோரியதால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் வேப்பங்குளம் நெற்களஞ்சியசாலையில் இன்று (05.03.2016) இடம்பெற்றுள்ளது.
பெரும்போக நெற்செய்கை கொள்வனவு நடவடிக்கைகள் தற்போது வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. அதில் முதல்கட்டமாக ஓமந்தை, வேப்பங்குளம்,நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள களஞ்சியசாலைகளில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் முறையான அறிவித்தல் வழங்காமல் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும், தாம் அலைக்கழிக்கப்படுவதாகவும் தெரிவித்தே விவசாயிகள் குழப்பத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கையில்,
தாம் காட்டு யானை, பன்றி போன்ற விலங்குகள் மற்றும் இயற்கை மாற்றங்கள் என்பவற்றிடம் இருந்து பாதுகாத்தே இந்த நெல்லை உற்பத்தி செய்துள்ளோம்.
அதனை அரசாங்கம் அறிவித்த நியாய விலையில் விற்பனை செய்வதற்காக வேப்பங்குளம் பகுதியில் உள்ள நெற்களஞ்சியசாலைக்கு கொண்டு வரும்போது அதனை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
தம்மிடம் களஞ்சியப்படுத்த போதாது எனக் கூறி குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் கொள்வனவு செய்கிறார்கள். இதனால் தாம் நெல் மூட்டைகளுடன் தினமும் வந்து அலைக்கழிகின்றோம்.
உற்பத்தி செய்வதை விட கொண்டு வந்து கொண்டு போகின்ற செலவே எமக்கு அதிகமாக இருக்கின்றதாகவும் எனவே எமது நெல்லையும் கொள்வனவு செய்யுமாறு கோரி நெற்களஞ்சியசாலை முன் அமைர்ந்து குழப்பத்தில் ஈடுபட்டனர். சுமார் 100 விவசாயகள் இந்தக் குழப்பதில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விவசாய அமைச்சின் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி எஸ்.ஈஸ்வரன் அவர்களிடம் கேட்டபோது,
கடந்த வருடம் சிறுபோகம், பெரும் போகம் என்பவற்றில் கொள்வனவு செய்யப்பட்ட 6,725 மெற்றிக் தொன் நெல் தற்போதும் களஞ்சியசாலைகளில் உள்ளது. இதனால் இருக்கின்ற களஞ்சியசாலைகளின் இடத்திற்கு ஏற்ப தற்போது கொள்வனவு இடம்பெறுவதுடன், புதிய சில களஞ்சியசாலைகளையும் தயார்ப்படுத்தியுள்ளோம்.
அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள களஞ்சியசாலைகளிலும் தரமான நெல் கொள்வனவு செய்யப்படும். வவுனியா மாவட்டத்தில் 3,000 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளோம். விவசாயிகள் இடவசதியை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாணவர்களை வரிசையில் செல்லுமாறு எச்சரித்த ஆசிரியர் ஒருவர், மாணவன் ஒருவரின் கல் தாக்குதலில் காயமடைந்து சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில் கல்லால் தாக்கிய மாணவன் அதே பாடசாலையில் தரம் 12இல் கல்வி பயிலும் 17 வயது மாணவன் எனவும், அவர் வரிசையை விட்டு விலகி நடந்ததால் ஆசிரியர் எச்சரித்ததாகவும் அதனால் கோபமடைந்தவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து ஆசிரியர் மீது எறிந்தார் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை மேற்கொண்ட மாணவனின் தாய் அதே பிரதேசத்திலுள்ள வேறொரு பாடசாலையில் அதிபராக பணிபுரிபவர் எனவும் தெரியவந்துள்ளது.
படித்தவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பொறுப்பு நாட்டை விட்டுச் செல்வதன்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றுபடுவதே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.தனிப்பட்ட நன்மைகள் போன்றே நாட்டின் தேசிய நலன்களையும் கருத்திற்கொண்டு செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கொழும்பு தும்முல்ல ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மாளிகையில் இன்று நடைபெற்ற அரச சேவை பொறியியலாளர்கள் சங்கத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.
இலவசக் கல்வியைப் பெற்றுக்கொண்டு சுதந்திரமாக நாட்டை விட்டு செல்வதற்கு படித்த இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி உலகில் அபிவிருத்தியை நோக்கி பயணித்த எந்தவொரு நாட்டிலும் அவ்வாறில்லை என்று கூறினார். சம்பளப் பிரச்சினைகள் பொறியியல் துறையினருக்கு மாத்திரமல்லாமல் அனைத்து துறைகளிலும் காணப்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.56 வயதான குறித்த பெண்ணிடம் இருந்து 3 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை கல்கிஸ்ஸ பெலக்கடே என்ற இடத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவரையும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இந்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் சவுதி அரேபியன் ஏர்வேஸ் விமானம் ஒன்று தரையிறங்குகையில் விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். துணை விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் உள்ள பிஷா நகரில் இருந்து சவுதி அரேபியன் ஏர்வேஸ் நிறுவன விமானம் 220 பயணிகளுடன் ரியாத் நகருக்கு கிளம்பியது.
விமானத்தை விமானி வாலித் பின் முகமது அல் முகமது ரியாத் நகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். வாலித் மயங்கிவிட்டார் என்று நினைத்த துணை விமானி ராமி காசி பாதாபரா விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கினார்.
இது குறித்து சவுதியா ஏர்வேஸ் எனப்படும் சவுதி அரேபியன் ஏர்வேஸ் நிறுவனம் கூறுகையில், விமானி மாரடைப்பால் மரணம் அடைந்தும் பயணிகள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு முத்தையன்கட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழும்பில் வேலை செய்துவிட்டு விடுமுறைக்கு வீடு சென்றபோது, புகையிரதத்தில் வைத்து அவருடைய பணப்பை கொள்ளையர்களினால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தினால் அவருடைய வாகன அனுமதிப் பத்திரம் அடையாள அட்டை வங்கிஅட்டை சிறு தொகைப்பணம் என்பன திருட்டுபோய்யுள்ள நிலையில்,
குறித்த இளைஞனின் வங்கி அட்டையை பயன்படுத்தி 42000 ருபாய் பெறுமதியான பொருட்களை திருடர்கள் கொள்வனவு செய்துள்ளதாக இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான முறைப்பாட்டை நேற்றுமுன்தினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளாதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்துக்களில் 917 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரை இடம்பெற்ற விபத்துக்களிலே அதிகளவானோர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 2442 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் இவ்வாறான விபத்துக்களை தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத்தில் கடைசி லீக் போட்டியில் உமர் அக்மல் மற்றும் சப்ராஸ் அஹமட்டின் அதிரடி ஆட்டத்தினால் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.
ஆசியக் கிண்ணத்திலிருந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் நேற்று நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.