வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக் கூட்டம் இடை நிறுத்தப்பட்டது!!

Pirajaikal

நேற்று இடம்பெறவிருந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுக் கூட்டம் தலைவர் வரவின்மையால் இடை நிறுத்தப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான பிரஜைகள் குழுக் கூட்டம் உப தலைவர் தலைமையில் இடம்பெற்றது. ஒரு வாரத்திற்கு முன்னரே இன்று பிற்பகல் பிரஜைகள் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது

எனினும் காலை தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் வன்னி இன் விருந்தினர் விடுதியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஸ்பிரேமச்சந்திரன், மற்றும் வவுனியா மாவட்ட பிரதி நிதிகளுடன் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலுக்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கலந்து கொண்டார்.

பிற்பகல் இடம்பெற்ற வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் கூட்டத்திற்கு தலைவர் திரு. கி.தேவராஜன் கலந்து கொள்ளாததையிட்டு அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இடம்பெற்ற கூட்டம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்படவில்லை.

இக் கூட்டம் இடம்பெறுவது தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்னரே எனக்கு தகவல் தரப்பட்டதாகவும் தனது ஆலோசனை பெறப்படாமல் இக் கூட்டத்தினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இக் கூட்டத்தை தனிநபர் ஒருவரே ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்த அவரிடம், இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டது தொடர்பாக கேட்டபோது அது சாதாரன கலந்துரையாடல் அத்துடன் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்ச்சி இடை நிறுத்தம்!!

Gamini

வவுனியாவில் நேற்று காலை தெற்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயற்பட்டு மகிழ்வோம் உடலியக்க விளையாட்டு செயற்பாட்டு நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னர் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணியளவில் வவுனியா காமினி மகாவித்தியால மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அங்கு வந்த பாடசாலை மாணவர்களை தரம் பிரித்து ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் இரு மாணவர்களுக்கு மைதானத்திலிருந்த சாரயப் போத்தலின் துண்டு காலில் காயத்தினை எற்படுத்தியதையடுத்து செயற்பட்டு மகிழ்வோம் உடலியக்க செயற்பாட்டு நிகழ்வினை வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பிரதி நிதிகள் மாணவர்களின் நன்மை கருதியும் மைதானம் பொருத்தம் இன்மை, துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, மைதானம் புனரமைப்பு செய்யப்படவில்லை, சாரயப்போத்தலின் துண்டுகள், பியர் ரின்கள் என்பன மைதானத்தில் காணப்பட்டதையடுத்தும் இரு மாணவர்களுக்கு உடைந்த சாரயப் போத்தலின் துண்டினால் காயம் ஏற்பட்டதையடுத்து இடம்பெற இருந்த நிகழ்வினை இடைநிறுத்திச் சென்றனர்.

தரம் 5 மாணவர்களை உள்ளடக்கிய உடலியக்க செயற்பாட்டு நிகழ்வில் ஒரு பாடசாலையிலிருந்து 10 மாணவர்கள் கலந்து கொண்டதுடன் 30 பாடசாலைகளிலிருந்து சுமார் 300 மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் சிங்கள மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக எற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இடை நிறுத்தப்பட்ட நிகழ்வினை இன்னுமொரு தினத்தில் நடாத்துவதாக அங்கு வந்த பிரதி நிதிகள் தெரிவித்தள்ளனர். காயமடைந்த இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகை உலுக்­கிய சிறுவனின் மரணத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை!!

Boy

உலகை உலுக்­கிய சிரி­யாவைச் சேர்ந்த சிறுவன் அய்­லானின் மர­ணத்­திற்கு கார­ண­மான இரு­வ­ருக்கு 4 ஆண்­டுகள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம், துருக்­கி­யி­லி­ருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு சென்று கொண்­டி­ருந்த அக­திகள் படகு ஏஜியன் கடல் பகு­தியில் விபத்­துக்­குள்­ளா­னது.

இந்த விபத்­தின்­போது, அய்லான் குர்தி மற்றும் அந்தச் சிறு­வனின் சகோ­தரன், தாய் உள்­ளிட்ட 5 பேர் உயி­ரி­ழந்­தனர்.

மேற்­படி விபத்து தொடர்­பாக பொத்ரும் நகர நீதி­மன்­றத்தில் நடை­பெற்று வந்த வழக்கில், படகுப் பய­ணத்­துக்கு ஏற்­பாடு செய்­த­தற்­காக முவாஃப்கா அலாபஷ் மற்றும் ஏஸம் அல்ஃப்ராத் ஆகிய இரு­வ­ருக்கு ஆள் கடத்தல் வணி­கத்தில் ஈடு­பட்­ட­மைக்­காக கடந்த வெள்ளிக்­கி­ழ­மை­யன்று 4 ஆண்­டுகள் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

துருக்­கியின் பொத்ரும் நகரில் கரை­யொ­துங்­கிய அய்­லானின் படம், ஊட­கங்­களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வறட்சியான காலநிலை : குடிநீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தமாறு வேண்டுகோள்!!

Water

நீரேந்தும் பகுதிகளில் வறட்சியுடனான காலநிலை நிலவுவதால் நீர் விநியோகம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் நீர் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பௌசர் மூலம் எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சில நகர் புறங்களிலும் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நகர்புறங்களில் உள்ளவர்கள் கடைகளில் நீரை கொள்வனவு செய்து உபயோகப்படுத்துவதாகவும் அன்சார் மேலும் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ் சாப்பிட்ட குடும்பமே வைத்தியசாலையில் : 10 வயது மகன் உயிரிழப்பு!!

food-poisioning

உணவு விசமானதால் தாய், தந்தை மற்றும் மூன்று பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 வயதுடைய ஒரு பிள்ளை உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிகமயில் இடம்பெற்றுள்ளது.

வெலிகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடந்த 2ம் திகதி அவர்கள் ரோல்ஸ் சாப்பிட்டிருப்பதுடன், அதன் பின்னர் வயிற்றோட்டம், மயக்கம் போன்றன ஏற்பட்டிருப்பதாக மாத்தறை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

பல தனியார் வைத்திய நிலையங்களில் அவர்கள் மருத்துவம் செய்துள்ளதுடன், வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள தந்தை (37), தாய் (32) 13 மற்றும் 07 வயதுடைய இரண்டு மகன்களும் தற்போது மாத்தறை வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

அத்துடன் அவர்கள் குடிப்பதற்கு பயன்படுத்தும் கிணற்று நீர் விஷமாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

செய்யாறு தனிச் சிறப்பு முகாமுக்கு பூட்டு : இலங்கை தமிழர்கள் திருச்சிக்கு மாற்றம்!!

Closed

இந்தியாவின் செய்யாறு தனி சிறப்பு முகாமில் இருந்த, நான்கு இலங்கைத் தமிழர்கள், திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, செய்யாறு சிறப்பு முகாம் மூடப்பட்டது.

செய்யாறு பொலிஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கிளைச் சிறைச்சாலை, வருவாய்த் துறை சார்பில் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டு, கடந்த, 2014 ஜூன், 6ம் திகதி முதல் செயல்பட்டு வந்தது. இதில், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழையும் வெளிநாட்டினர், போலி பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்திருப்பவர்கள், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள், சிறை வைக்கப்பட்டு வந்தனர்.

இந்த முகாம் தொடங்கப்பட்டபோது, ஆறு நைஜீரியர்கள், மூன்று பங்களாதேஷத்தினர், 24 இலங்கைத் தமிழர்கள் என, மொத்தம், 33 பேர் இங்கு அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களில், 29 பேர் விசாரணை முடிந்து, கடந்தாண்டு விடுவிக்கப்பட்டனர் என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.

மீதமிருந்த ஜெயரதன் (29), ஆனந்தரூபன் (45), குமரகுரு (39), தயாபரராஜ் (31), ஆகிய, நான்கு இலங்கை தமிழர்கள் மட்டும், இங்கு அடைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்களது தண்டனை காலம் முடிவடைந்தும் விடுவிக்காததால், இவர்கள், நான்கு பேரும், தங்களை விடுவிக்கக் கோரி, அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களின் பாதுகாப்புப் பணிக்காக, 80க்கும் மேற்பட்ட பொலிசார் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் நான்கு பேரையும், நேற்று முன்தினம் மாலை, பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் திருச்சி முகாமுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, கடந்த, 2 ஆண்டுகளாக தனி சிறப்பு முகமாக செயல்பட்டு வந்த செய்யாறு கிளைச் சிறைச்சாலை, நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டது.

வவுனியாவில் அகில இலங்கை சைவமகா சபையின் சைவதமிழ் இளைஞர் மாநாடு!!

12771550_1721889351430721_531653491611791250_o-700x389

அகில இலங்கை சைவ மகா சபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு ஒன்றினை வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில் பங்குனி 06,07 ஆந் திகதிகளில் நடாத்த உள்ளது.

இம் மாநாடானது அகில இலங்கை சைவ மகா சபை தலைவர் சிவத்திரு.சி.சோதிமூர்த்தி தலைமையில் இடம்பெற உள்ளது.பிரதம விருந்தினராக கௌரவ மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும்,கிழக்கு இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சிவத்திரு.சீ,யோகேஸ்வரன் கலந்து கொள்கிறார். சிறப்பு விருந்தினர்களாக அரச அதிபர்-யாழ்ப்பாணம் திருமிகு.நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமிகு.இ.இரவீந்திரன், பணிப்பாளர்-இந்துக் கலாச்சார திணைக்களம் திருமிகு உமா மகேஸ்வரன் என்பவர்களும் கௌரவ விருந்தினர்களாக தலைவர்-மானிடம் அறக்கட்டளை திருமிகு.இ.செல்வநாயகம், அமைப்பாளர்-சர்வதேச இந்து இளைஞர் சங்கம் திருமிகு நா.குமரகுருபரன், ஓய்வுநிலை மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர் திருமிகு.சி.பத்மநாதன் என்பவர்களும் பங்கு கொண்டு சிறப்பிக்கின்றனர்.

நல்லை திருஞான சம்பந்த ஆதினம் தவத்திரு ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுடன் இடம் பெறுவது சிறப்பானதாகும். அத்துடன் மேலும் பல குருமுதல்வர்;களின் அருளாசியுடன் இம் மாநாடு இடம் பெறவுள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக சைவ மகா சபையின் வவுனியா மாவட்ட சிவதொண்டர் அமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆன்மீக நடை பவணி வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர் திருக்கோவிலில் இருந்து கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் (சிவன்) திருக்கோவில் வரை இடம்பெறும்.

இம் மாநாட்டில் யாழ்ப்பாணம், வன்னி, மலையகம், கிழக்கு பிராந்தியங்களின் இணைப்பாளர்கள் செயற்றிட்டங்கள் தொடர்பான அறிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பான ஆய்வுகளும் இடம்பெறும். மாநாட்டின் நிறைவுடன் வவுனியா கோவிற்குளம் சிவன் ஆலயத்திலிருந்து ஊர்திகள் சகிதம் திருக்கேதிச்சரத்திற்கு மகா சிவராத்திரி ஆன்மீக பயணமும் இடம்பெறும்.

வவுனியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த 15வயது பாடசாலை மாணவி!!

Baby

வவுனியா புதுக்குளம் பகுதியில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த பாடசாலை மாணவி நேற்று வவுனியா பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்றினை பிரசவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

குறித்த பாடசாலை மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் காதலிப்பதாக கூறி கடந்த ஆண்டிலிருந்து மாணவியை பின்தொடர்ந்து வந்துள்ளார். மாணவியும் இளைஞனின் வார்த்தைக்கு இடம் கொடுத்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு குறித்த இளைஞனை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனந்த்ராஜ் இறந்து விட்டார் : அதிர்ச்சி செய்தி!!

Anatharaj

பாட்ஷா முதல் சமீபத்தில் வெளியான நானும் ரவுடி தான் வரை நடிப்பால் கலக்கியவர் ஆனந்த்ராஜ். நேற்று சமூக வலைத்தளங்கள் வட்ஸ்அப் என தீயாக ஒரு செய்தி பரவியது.

இதில் ஆனந்த்ராஜ் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக ஒரு செய்தி பரவ, திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்தது.பின் ஆனந்த் ராஜே ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு ‘யார் இப்படியெல்லாம் செய்திகளை பரப்புகிறார்கள், நான் நன்றாக இருக்கிறேன், நீங்களே பாருங்கள்’ என பேட்டியளித்தார்.

உடல்நலம் சரியில்லாத போது மனைவி கணவரிடம் எதிர்பார்ப்பவை!!

2d0eab78-0471-4ede-9d59-db05072a42b1_S_secvpf

பெண்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், ஆண்கள் விழுந்து விழுந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை . குறைந்தபட்சம் சில வீட்டு வேலைகள், தங்கள் மீது அக்கறை அரவணைப்பு காட்டினாலே போதும் என்று தான் எதிர்பார்கிறார்கள்.மனதளவிலான அரவணைப்பு ஓர் பெண்ணுக்கு மிகவும் அவசியம். மாத்திரை, மருந்துகளை விட நோய்வாய்ப்பட்டு இருப்பவருக்கு உறுதுணையாக இருக்க கூடிய ஓர் நபர் தான் தேவை. இந்த அரவணைப்பு மனதளவில் பெரும் பலத்தை கொடுத்து விரைவாக மீண்டுவர உதவும்.

அவர்களது உடல் ரீதியாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களால் வேலைகள் செய்ய முடியாத போது உடனிருந்து உதவ வேண்டும். பெண்கள் பெரும்பாலும் அனைத்து உதவிகளும் செய்வார்கள், ஆனால், ஆண்கள் அவ்வாறு செய்வது இல்லை. அவர்களை கழிவறைக்கு கூட்டி செல்வதில் இருந்து, குளிக்க வைத்து , உடை மாற்றுவது வரை உறுதுணையாக இருந்து உதவி அக்கறையாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால், பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், வீட்டு வேலைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். மீண்டும் உடல்நலம் சரியாகி வந்து பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருக்கும்.

உணவு சார்ந்து பெண்கள் தான் ஆண்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர்களே அதை மறந்துவிடுவார்கள். எனவே, அந்த தருணத்தில் ஆண்கள் தான் நாம் அதை அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். கண்டிப்பாக சரியாக உணவருந்த மாட்டார்கள், நீங்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்தி உணவருந்த கூற வேண்டும்.

பெரும்பாலும் அனைவரின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள், அவர்களுக்கு ஏதேனும் என்றால், மருத்துவம் எல்லாம் தேவை இல்லை அதுவாக சரியாகிவிடும் என்று கூறிவிடுவார்கள். எனவே, சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள கூற வேண்டும்.

 

உள்ளாடையை துவைக்காததால் அலுவலக உதவியாளருக்கு குறிப்பாணை அனுப்பிய நீதிபதி!!

court

தனது உள்ளாடையை சரியாக துவைக்காததால் தனது அலுவலக உதவியாளருக்கு ஈரோட்டில் உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதி குறிப்பாணை அனுப்பிய சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.இதேவேளை, அலுவலக உதவியாளரை சொந்த வேலைகளை செய்ய சொல்வது தவறு என்ற நிலையில், ஆடைகளை துவைக்க வைத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

சத்தியமங்கலத்திலுள்ள சார்பு நீதிமன்ற நீதிபதி, கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வசந்தி என்ற தனது அலுவலக உதவியாளருக்கு குறிப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளார்.அந்த குறிப்பாணையில், வசந்தி நீதிபதி வீட்டில் துவைக்க போடும் துணிகளை சரிவர துவைப்பதில்லை என்றும் குறிப்பாக உள்ளே அணியும் துணிகளை அருவருப்படைந்து தூக்கி வீசி எறிந்து விடுவதாகவும் மேலும் அதிகாரி மற்றும் துணைவியார் இது பற்றி கேட்டதற்கு எதிர்த்துப் பேசியதாகவும் உம்மீது ஏன் ஒழங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணையை வசந்தி கையொப்பமிட்டு பெற்று கொண்டுள்ளார். தற்போது இந்த குறிப்பாணை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.இந்நிலையில், வசந்தி அந்த குறிப்பாணைக்கு பதிலளித்துள்ள கடிதமும் தற்போது வெளியாகியுள்ளது.அதில், நான் இனிமேல் வரும் காலங்களில் இம்மாதிரியான புகார்கள் வராமல் நடந்து கொள்வேன் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என வசந்தி விளக்கமளித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிபதிகள் தங்கள் அலுவலக உதவியாளர்களை இதுபோன்ற சொந்தப்பணிகளுக்கு பயன்படுத்துவதும், அவர்கள் அதனை ஒழுங்காக செய்யாத போது குறிப்பாணை அளிப்பது, அவர்களை தொழிலில் இருந்து இடைநிறுத்துவது போன்ற செயல்கள் பல காலமாக இடம்பெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

பிறந்த 10 நாளில் முட்டையிட்ட கோழி குஞ்சு!!!

chick

தமிழ்நாட்டில் கோழிக் குஞ்சு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தின் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், சுமார் 10 வருடங்களாக கறிக் கோழி விற்பனை செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் இருந்து சுமார் 6ஆயிரம் கோழி குஞ்சுகளை வாங்கி வந்துள்ளார். இதில் ஒரு கோழிக் குஞ்சு முட்டையிட்டுள்ளது.இந்த கோழிக் குஞ்சு பிறந்து 10 நாட்கள் தான் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. வழக்கமான கோழி முட்டையானது 60 கிராம் எடையில் இருக்குமாம். ஆனால் இந்த முட்டையானது, 6.5 கிராம் தான் இருக்கின்றதாம்.

இதனை அறிந்த கிராம மக்களும் கிராமத்தை சுற்றியுள்ள மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து அதிசயமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருபுறம் வழக்கம் போல நம் ஆட்கள் அங்கயும் பாலியல் பலாத்காரமா என்று சமூக தலங்களில் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

 

“பாட்டி” என கலாய்த்த ரசிகர்! வருத்தப்படாத ஐஸ்வர்யா ராய்!!

1 (48)

அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு பிறகு வெகு காலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்த ஐஸ்வர்யா ராய், இப்போது மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தன்னுடைய சினிமா வாழ்கையில் இரண்டாம் அத்தியாயத்தில் இருக்கும் அவர், நடிக்கும் படங்களை மிக கவனமாகவே தேர்ந்தெடுத்து வருகிறார்.

சென்ற வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த Jazbaa பெரிய வரவேற்பை பெறாத நிலையில், சரப்ஜித் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு வயதான தோற்றத்தில் நடிகிறாராம்.சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் இந்திய கேட் பகுதியில் படபிடிப்பு நடத்தியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராயை பார்க்க பெரிய கூட்டமே கூடியது.அந்த கூட்டத்தில் ரசிகர் ஒருவர் “Yeh Aishwarya budhiya ke get-up mein kyun hai” என கத்தியுள்ளார். வயதான கதாபாத்திரத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியுள்ளதை நினைத்து மொத்த படக்குழுவினரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

 

என் வாழ்நாள் முழுவதும் நான் அவருக்கு கடமை பட்டுள்ளேன்- தனுஷ் உருக்கம்

dhanushkolavrrihhgfhghjddd

தனுஷ் தற்போது கொடி படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்தார்.

இதில் என் வாழ்நாள் முழுவதும் இவருக்கு கடமை பட்டுள்ளேன் என தன் அண்ணன் செல்வராகவனை குறிப்பிட்டுள்ளார்.மேலும், செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தன் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

 

எனது மணமகளை பார்ப்பேன்: 46 வருடங்களாக விடாமல் தேர்வு எழுதும் 77 வயது பிரமச்சாரி!! (வீடியோ இணைப்பு)

77year_exam_002

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் திருமணம் என 77 வயது முதியவர் கடந்த 46 வருடங்களாக விடாப்பிடியாக தேர்வு எழுதி வருகிறார்.ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்த ஷிவ் சரண் யாதவ் (77) என்ற முதியவர், 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.

இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார்.10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார், ஆனால் இது வரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு இந்த கணக்குபாடம் தான் மிக சவாலாக அமைந்து வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன்.ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என நம்புகிறேன்.இந்த முறை நான் எனது மணகமளை பார்ப்பேன், நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என 77 வயது பிரமச்சாரி கூறி உள்ளார்.

 

சொந்த மகளை பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பிணி சிறுமிக்கு பிரம்படி கொடுத்த பஞ்சாயத்து!!

1 (27)

மகாராஷ்டிராவில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கும், சிறுமிக்கும் பஞ்சாயத்தார் பிரம்படி கொடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பன்வாட் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் 13 வயதாகும் தனது மகளை கடந்த 4 மாதமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்நிலையில், இதனை அறிந்த கிராமத்தினர் அவருக்கு பிரம்படி தண்டனையும், அபராதமும் விதித்துள்ளனர்.மேலும், அவரால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகி, கர்ப்பிணியாக உள்ள பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் பிரம்படி தண்டனை வழங்கியுள்ளனர்.

அந்த இரண்டு பேரையும் கயிற்றால் கட்டி கிராமத்தினர் முன்பு அவர்கள் பிரம்படி கொடுத்துள்ளனர்.கர்ப்பிணி என்றும் பாராமல் ஒரு சிறுமியை செய்யாத தவறுக்காக வதைத்த சம்பவம் மனித நேய ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது பொலிசார் அக்கிராமத்தில் இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.