கீழ்த்தரமாக திட்டிய அதிகாரி : மனமுடைந்த இலங்கை அகதி மின்கம்பத்தில் ஏறி தற்கொலை!!(படங்கள்,காணொளி)

 
இந்தியாவின் மதுரை அருகே உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வருவாய்த்துறை அதிகாரி மிரட்டலால் அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. அங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அகதிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட வருவாய்த்துறை அதிகாரியொருவர் இன்று முகாமிற்கு சென்றுள்ளார்.

அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் இல்லாதது தெரியவந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ரவிச்சந்திரன் அங்கு வந்துள்ளார். தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அப்போது அவர் தெரிவித்தார்.

ஆனால், அதனை ஏற்காத அதிகாரி, வருகை பதிவேட்டில் குறிப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி, தற்கொலைக்கு முயன்றார்.

அப்போது மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்து ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அவர்களை தடுக்க வந்த பொலிஸார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறை அதிகாரிகள் ஈழ அகதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8

பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்

Kalabhavan-Mani

பிரபல நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ஜெமினி, மழை, வேல், ஆறு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் பொலிசாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணியளவில் கலாபவன் மணி உயிர் பிரிந்தது. இவரது மறைவு சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி : 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவு!!

Rape

வவுனியாவில் 10 வயது சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முயற்சியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவரை அழைத்து அயல்வீட்டு 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போது சிறுமி கதறிக் கொண்டு தப்பியோடியதை அடுத்து சிறுமியின் வீட்டுக்கு தகவல் தெரிந்தமையால் துஸ்பிரயோக முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிசில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபரான 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடந்த 3 வாரங்களில் இடம்பெறும் 5வது சம்பவம் இதுவாகும்..

1. உக்குளாங்குளத்தில் கடந்த மாதம் 16ம் திகதி ஹரிஷ்ணவி என்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

2. கனகராயன்குளத்தில் 5 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார்.

3. தரணிக்குளம் பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

4. புதுக்குளம் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததுடன் அதற்குக் காரணமான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

5. கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி மீது 42 வயது குடும்பஸ்தர் துஸ்பிரயோக முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளால் வவுனியா மக்கள் ஒருவித பதற்றத்துடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

வவுனியா உக்குளாங்குளம் சிறுமியின் மரணம் கொலையே : விபரம் இணைப்பு!!

வவுனியாவில் 11வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த 15வயது பாடசாலை மாணவி!!

வவுனியாவில் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி : 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவு!!

எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று தெரியுமா?

Fight

எப்போதுமே எதிரும், புதிருமாக இருப்பவை தான் விரைவாக ஈர்ப்புக் கொள்வார்கள். இந்த எதிரும், புதிரும் பட்டியலில் எப்போதுமே உச்சத்தில் இருப்பவர்கள் ஆண்களும், பெண்களும் தான்.

காதலில் அல்லது ஓர் பந்தத்தில் இணையும் முன்பு வரை ஒருவரை பற்றி இன்னொருவர் குற்றம் குறைக் கூறிக் கொண்டேதான் இருப்பார்கள். பெண்களிடம் இதெல்லாம் பிடிக்காது என ஆண்களும், ஆண்களிடம் இதெல்லாம் பிடிக்காது என பெண்களும் காலம், காலமாக கூறிவருகிறார்கள்.

ஆனால், இதுவரை இருவரில் யாருமே அவர்களிடம் இவையெல்லாம் எங்களுக்கு பிடிக்கும் என பெரியளவில் கூறியதில்லை. ஒருவேளை கெத்துக்கு குறைச்சல் வந்துவிடும் போல.
இதன் தொடர்ச்சியாக தான், ஆண்களில் சில வகை ஆண்களை தங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என 10 வகைகளை பட்டியலிட்டுள்ளனர்.

இதில் நீங்களும் ஒருவரா என்று பார்த்துக் கொள்ளுங்கள்..

கெஞ்சும் நபர்

சில ஆண்கள் எதற்கெடுத்தாலும் கெஞ்சுவார்கள். வெளியே போகலாம் ப்ளீஸ் என் கூட வா, இன்று நாங்கள் டின்னர் எங்கயாவது போலாம் ப்ளீஸ் என எதற்கெடுத்தாலும் ப்ளீஸ் சேர்த்துக் கொண்டு திரியும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லை.

நான் தான் சரி

எது செய்தாலும், கூறினாலும் நான் செய்தது தான் சரி, நீ செய்தது தவறு தான் என்று ஒருதலைப்பட்சமாக பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

வெற்றியில் மிதப்பவர்

பெண்களுக்கு வெற்றியாளர்களை பிடிக்கும். ஆனால், எப்போது பார்த்தாலும் அந்த வெற்றியின் மிதப்புலேயே உலா வரும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பது இல்லையாம்.

நான் ரொம்ப பிஸி

பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆண்கள், தங்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று விரும்புவர்கள். இதற்கு நேர் மாறாக எப்போது பார்த்தாலும் நான் பிஸி என்று காட்டிக் கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

ஆணாதிக்கம்

பெண்களை தரக்குறைவாகவும் பேசும், ஆண்கள் தான் வலிமையனாவர்கள். தங்களால் தான் எதுவும் செய்ய முடியும் என்று நெஞ்சை நிமிர்த்தும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

பொறாமை

பொறாமை குணம் உள்ள ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம். சொந்தம் கொண்டாடும் நபர் தனக்கு மட்டும் தான் உன் மீது உரிமை இருக்கிறது. வேறு யாரும் உன்னுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று கூறும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. சில சமயங்களில் அதிகமான காதல் கூட உறவில் விரிசல் ஏற்பட காரணமாகிவிடுகிறது.

நாடோடி

எதிர்கால திட்டங்கள் இன்றி நாடோடி போல ஊர் சுற்றுவதை விரும்பும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லையாம்.

தற்பெருமை

நான் எல்லாம் அப்படி, நாங்க வந்து நின்னா பூமி அதிரும், கடல் கொப்பளிக்கும் என தன்னை பற்றி தானே பெருமையாக பேசிக்கொள்ளும் நபர்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை.

மன்னித்துக்கொள்ளுங்கள்

ஏதாவது ஒன்றை முந்திக் கொண்டு செய்துவிட்டு, பிறகு அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு திரியும் முந்திரிக்கொட்டை ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை.

மகளிர் தின ஸ்பெஷல் : பெண்கள் மட்டுமே இயக்கும் விமானம்!!

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் ஊழியர்களை மட்டுமே வைத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ வரை விமானத்தை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து அன்றயை தினம் பெண்களை மட்டுமே வைத்து 20 விமானங்களை உள்நாட்டில் இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

தற்போது பெண்களை மேலும் கௌரவிக்கும் வகையில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே உள்ள குழு ஒன்றை வைத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவுக்கு விமானத்தை இயக்கவுள்ளது.

இந்த விமானம் மார்ச் 6ஆம் திகதியான இன்று இயக்கப்படவுள்ளது.
கேப்டென் சம்தா பாஜ்பாய் தலைமையில் 14 பேர் கொண்ட பெண்கள் குழு இந்த விமானத்தை இயக்கவுள்ளது.

இதன் மூலம் பெண்கள் மட்டுமே இயக்கும் நீண்ட தூர விமான பயணம் இது என்ற சாதனையை ஏர் இந்தியா படைக்கவுள்ளது.

11 12

உலகின் மிக மோசமான விலங்கு பூங்கா : உறைந்த நிலையில் மிருகங்கள்!!

 
பசியினால் உயிரிழந்த மிருகங்களால் உலகின் மிக மோசாமான விலங்கு பூங்காவாக மாறி இருப்பதாய் ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனுஸ் விலங்கு பூங்காதான் தற்போது உலகின் மிக மோசமான பூங்காவாக காட்சி தருகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த பூங்காவை ஆயிரக்கணக்கான டொலர் முதலீடு செய்து பெரும் ஆர்வத்துடனும் திறந்துள்ளார் முகமது Awaida என்பவர்.

ஆனால் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கிய பின்னர் இந்த பூங்காவில் இருந்து பல மிருகங்கள் உயிரிழந்தன. இஸ்ரேல் படையினரின் தொடர் ரொக்கெட் தாக்குதல்களால் முகமது தமது பூங்காவில் வரமுடியாமல் போனது.

இதனால் கடுமையான பட்டிணியை அனுபவித்த மிருகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் உயிர் விட்டுள்ளது.

காசா பகுதியில் அமைந்துள்ள 5 பூங்காக்களில் கான் யூனுசும் ஒன்று. விலங்கு பூங்காக்களுக்காக பரிந்து பேசும் அரசு துறை கூட இல்லை.
இதுபோன்ற காரணங்களால் கான் யூனுஸ் பூங்கா ஆதரவின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்குள்ள மிருகங்கள் அனைத்தும் உறைந்த நிலையில் உள்ளன.

பசியால் உயிரிழந்த கொடிய மிருகங்கள் எல்லாம் ஆண்டுகள் பல கடந்த பின்னர் சிதிலமடைந்தும் உறைந்தும் காணப்படுகிறது.

தற்போது சிதிலமடைந்து காணப்படும் அந்த மிருகங்களை கெடாது பாதுகாக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார் முகமது.

1 2 3 4 5

பிரபல நடிகை அஞ்சலி தேர்தலில் போட்டி?

anjali_with_salwar_in_balupu_movie-1920x1200

தமிழகமே தற்போது தேர்தலை எதிர்நோக்கி தான் காத்திருக்கின்றது. இந்த தேர்தலில் எந்த நடிகர், நடிகைகள் எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறார் என்பதிலேயே பலரின் கவனம் இருக்கின்றது.

இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலியும் தேர்தல் களத்தில் குதிக்கவுள்ளாராம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் சட்டமன்ற தேர்தல் இல்லை. மாப்பிள்ளை சிங்கம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விமலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவாராம்.

ஏற்கனவே இவர் அப்பாடக்கர் படத்தில் ஜெயம் ரவிக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விமலுடன் மோதி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தங்கத்தேர் இழுத்த பிரசன்னா-சினேகா- :குவிந்த ரசிகர்கள்!!

Sneha

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் பிரசன்னா-சினேகா. இவர்கள் சமீபத்தில் பழனியின் நடைப்பெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்றனர்.

இதை தொடர்ந்து பழனி மழைக்கு சென்று தங்கத்தேர் இழுத்து முருகனை வழிப்பட்டு வந்தனர்.மேலும், தங்கள் குழந்தை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்துள்ளனர். இவர்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட அங்கு சில நேரம் பதட்டமானது.

என்னால் முடியவில்லை : பிரித்தானிய வைத்தியசாலையில் இருந்து வித்தியாவின் நெகிழவைக்கும் நிமிடங்கள்!!

Vidya

தனக்கான உறுப்பு தானம் செய்யும் கொடையாளர் விரைவில் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் வித்தியா அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

24 வயதான வித்யா இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒருசில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரின் உயிரை காப்பாற்ற ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்கள் அவசரமாக தேவைப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் கொடையாளர்களை எதிர்பார்த்திருக்கும், வித்யா மிகவும் நம்பிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கார்டிஃப் பல்கலைக்கழக மாணவியான வித்தியா அல்போன்ஸுக்கு, அவரது மரபணுக்களுடன் ஒத்துப் போகக் கூடிய குருத்தணுக்கள் அவசரமாக தேவைப்படுவதாக கூறும் மருத்துவர்கள் அதற்காக உலகளவில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பொருந்தக்கூடிய குருத்தணுவை அளிக்கும் கொடையாளியை பெறுவது, மிகக் கடினமாக உள்ளது எனக் கூறும் மருத்துவர்கள் தெரிவித்துளள்னர்.

இவரது உயிரைக் காப்பாற்றக்கூடிய கொடையாளிகள் அவரை தொடர்பு கொண்டு உதவ முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில், வித்யாவின் ஒவ்வொரு மணித்துளிகளும் நகர்ந்து செல்கின்றன.

வித்யாவுக்கு மருத்துவ உதவி செய்ய விரும்புவோரை அடையாளம் காணும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கு லண்டனில் நடைபெறவுள்ளது.

தானம் செய்ய விரும்புவோர் St Anselm’s Catholic Church, The Green, Southall, UB2 4BE என்ற முகவரில் அமைந்துள்ள நிலையத்தில் நடைபெறும் பரிசோதனையில் பங்கேற்க முடியும். இன்று காலை 10.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை பரிசோதனை நடைபெறும்.

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 17 பேர் காலி பொலிசாரால் கைது!!

Aus

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

17 இலங்கையர்கள் இவ்வாறு கைதாகியுள்ளதாக, கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வௌியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வறட்சியான காலநிலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்!!

Hot

நாட்டில் தற்போது காணப்படும் வறட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பருவபெயர்ச்சி காலநிலை நிலவுவதால் இதன்போது மாலை நேரங்களில் நாட்டில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக காலநிலை மத்திய நிலையத்தின் அதிகாரி மலித் பிரனாந்து தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், நுவரெலிய மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலையாக 22 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியாவில் டிப்பருடன் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

Accident

இன்று(06.03.2016) காலை வவனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பருடன் மோதுண்டதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று காலை கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் நேரியகுளம் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த டிப்பர் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியதில் சம்பவ இடத்திலே சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

index NEWS (1) NEWS (2) NEWS (3) NEWS (4) NEWS (5) NEWS (6)

தேர்தலில் போட்டியிடுகிறார் காயத்ரி ரகுராம்!!

Gayathiri

பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இது மட்டுமின்றி இவர் பிரபல நடன அமைப்பாளரும் கூட.

இவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மனு கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்’ என கூறியுள்ளார். இச்செய்தி கொலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆசியக் கிண்ணம் யாருக்கு : இந்திய வங்கதேசம் அணிகள் இன்று பலப்பரீட்சை!!

Final

ஆசியக்கிண்ண T20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் தொடர் வெற்றிகளால் டோனி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணியில் வலுவான துடுப்பாட்ட வரிசை உள்ளது.

அதேபோல் பந்துவீச்சிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால் இன்றைப் போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் காணப்படலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஆசிஷ் நெஹ்ரா, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா இறுதிப்போட்டிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை விராட் கோலி மிகவும் நிலையாக விளையாடி வருகிறார். ரோஹித் சர்மா, தவான், ரெய்னா போன்ற அதிரடி வீரர்கள் நல்ல நிலையில் உள்ளார். மேலும், யுவராஜ்சிங் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலமாகும்.

ஆசியக்கிண்ண ஒருநாள் போட்டியில் 5 முறை சம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்தியா முதன்முறையாக நடைபெறும் T20 ஆட்டத்திலும் கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

அதே சமயம் தற்போது உள்ள நிலைமையில் வங்கதேச அணியை இந்தியா குறைத்து எடைபோடாது. சமீப காலமாக வங்கதேச அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

அதிலும் சொந்த மண்ணில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தானை இந்த தொடரில் வென்று இருந்தது.

மேலும், அந்த அணிக்கு எதிராக இந்திய அணி கடந்த காலங்களில் வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரில் தோற்று இருந்தது. அதனால் இந்திய அணிக்கு கண்டிப்பாக வங்கதேசம் நெருக்கடி கொடுக்கும்.

வங்கதேச அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலம். அந்த அணியில் துடுப்பாட்டத்தில் சபீர் ரகுமான் சிறப்பாக உள்ளார். அவர் இலங்கைக்கு எதிராக 80 ஓட்டங்கள் எடுத்து முத்திரை பதித்தார்.

இதுதவிர முஸ்பிகுர் ரகீம், சகீப்–அல்–ஹசன், மகமதுல்லா, அணித்தலைவர் மொர்டசா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் இன்று உச்சகட்ட மோதலில் ஈடுபடும் என்பதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டோனியின் தலையை வெட்டி எடுத்துச் செல்லும் வங்கதேச வீரர்!!

Dhoni

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதவுள்ளன. இதனையொட்டி வங்கதேச ரசிகர்கள் மிக மோசமாக விமர்சனங்கள் செய்து வருகின்றன.

இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் தலையை வங்கதேச வீரர் தஸ்கின் அகமட் வெட்டி எடுத்துச் செல்வது போன்ற புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இறுதிப் போட்டியில் நுழைந்ததை கொண்டாடுவதற்காக வங்கதேச ரசிகர் ஒருவர் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக பாகிஸ்தானை தோற்கடித்து வங்கதேசம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்ததை கொண்டாடும் விதமாக பாகிஸ்தானை கிண்டலடித்து புகைப்படங்களை வெளியிட்டனர்.

வங்கதேச ரசிகர்கள் இவ்வாறு மோசமாக நடந்து கொள்வது புதிதல்ல, இதற்கு முன்பாக கடந்தாண்டு இந்தியா வங்கதேசத்திடம் தோற்ற போது “Mustafizur cutter” என்ற பெயரில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

D1

வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நவீன முயற்சி!!

 
வவுனியா வீரபுரம் மணிவாசர் மகாவித்தியாலயத்தின் நேர முகாமைத்துவத்தை சிறப்பாகக் பேணுவதற்கு கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கை (Automatic School Bell System) உருவாக்கியுள்ளார்கள்.

கிராமப்புறப் பாடசாலை என்றால் தண்டவாள இரும்புத் தூணில் மணி அடித்து நேர ஒழுங்கை பேணும் நிலையை மாற்றி கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கையை உருவாக்கி புத்தாக்கமும், புரட்சியுமான ஒரு முற்போக்கான செயலை வவுனியா வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த ஒலி சமிக்கையானது பாடசாலை ஆரம்பம் முதல் பாடசாலை நிறைவு வரை நிகழும் பாடவேளை ஒழுங்குகளையும், ஏனைய விடயங்களையும் கணனி மயப்படுத்தப்பட்ட தன்னியக்க ஒலி சமிக்கை முலம் மூன்று மொழிகளிலும் கூறப்படுகிறது. விசேட செயற்பாடு, ஒன்று கூடலின் போது பாடசாலை நிர்வாகம் விரும்பிய வண்ணம் இதனை மாற்றி அமைக்க கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீனத்துவ முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் திரு.க.நித்தியானந்தம் அவ் தொழில்நுட்பத்தை வடிவமைத்த ஆசிரியர் திரு சி.செந்தூரன் அவர்களின் தொழில்நுட்ப ஆற்றலும் ஆர்வமும் இணைந்து நிற்கின்றன.

இச் செயற்பாட்டிற்கு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு நினைவு கூறப்படவேண்டிய ஒன்றாகும். மேலும் இவ்வாறான எம்வர்களின் கண்டுபிடிப்புக்கள் பாராட்டப்பட வேண்டியதும் வெளிக்கொண்டுவருவதும் அவசியமாகும்.

photo1 photo2