கொழும்பில் வேலை செய்யும் தனது கணவனை காண சென்று காணாமல் போன மனைவி மற்றும் குழந்தை இன்றுவரை கிடைக்கவில்லை என குறித்த கணவன் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 27ஆம் திகதி கொழும்பில் தொழில் செய்யும் தன் கணவனை சந்திப்பதற்காக மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தன் குழந்தையுடன் பேருந்தில் அதிகவேக சாலை ஊடாக கடவத்தை வரை வந்துள்ளார்.
அதுவரை தன் கணவரோடு தொடர்பில் இருந்த மனைவியின் தொலைபேசி கடவத்தை வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தி கணவன் தங்கியிருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறியதோடு தொடர்புகள் நிறுத்தப்படுகிறது.
இதனையடுத்து, குழந்தையும், தாயும் 28ஆம் திகதி வரை கணவன் தங்கியிருந்த இடத்திற்கு வருகை தராததையடுத்து தொடர்ந்து அவர்களை தேடத் தொடங்கிய நிலையில் இன்று வரை (30-12-2024) குழந்தையோ, தாயோ கிடைக்கப்பெறவில்லை என இது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கணவன் வெளிநாட்டிலிருக்கும்போது குறித்த பெண்ணுக்கு பிற நபரொருவருடன் ஏற்பட்ட தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறும் வருகின்றன.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று(30) மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,
தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் மிக பிரபலமாக இருந்தவர் நடிகை சித்ரா. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடந்த பரப்பிடிப்பின் போது தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனிடையே, சித்ராவின் தந்தை காமராஜ் என்பவர், அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளராக இருந்து கடந்த 2019-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். தற்போது, சென்னை திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை சித்ராவின் தந்தை வீட்டிற்கு உறவினர்கள் வந்து கதவை தட்டியுள்ளனர். ஆனால், அவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துள்ளனர். அப்போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் காமராஜ் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
பின்னர், சம்பவத்தை அறிந்த திருவான்மியூர் காவல்துறையினர் காமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகள் இறந்த விரக்தியில் காமராஜ் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் பல வகை வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக சிறுவர் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை என்பதாலும் சுற்றுலா மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் அதிகளவில் ஈடுபடுவதாலும் பிள்ளைகள் வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாவதே இதற்குக் காரணம் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி நோய், வயிற்றுப்போக்கு, கடுமையான குளிர், உடலில் சிவப்பு புள்ளிகள், காய்ச்சல் மற்றும் நீண்ட கால இருமல் ஆகியவை வைரஸால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் அறிகுறிகளாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆனால் இந்த நோய் ஒரு வைரஸ் என்பதால், நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட அளவுகளில் மட்டுமே பராசிட்டமோல் கொடுப்பதும் ஓய்வு எடுப்பதும் மிகவும் அவசியமானது என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
சில சிறுவர்களுக்கு நோய் குணமான பிறகு தலைவலி அல்லது இருமல் வரக்கூடும் என்பதால், பெற்றோர்கள் தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளர்.
எந்த வகையிலும் இந்த வைரஸ் நிலைமைகள் உள்ள பிள்ளைகள் குளிப்பதற்கு அச்சப்படத் தேவையில்லை. வெதுவெதுப்பான நீரை உடலில் ஊற்றினால் காய்ச்சல் குறையும் என்பது மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா – டன்சினன் பகுதியில் 25 வயதிற்குட்பட்ட இளைஞரொருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(30.12) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞனின், தந்தை மற்றும் தம்பியால் இவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு பிரச்சினை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாகி கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்தவரின் தந்தை மற்றும் அவருடைய தம்பி ஆகிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச ஊழியர்களுக்கான பண்டிகைக்கால கொடுப்பனவினை அதிகரிக்குமாறு அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
10,000 ரூபாவாக வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கோரிக்கையை விடுத்துள்ளார்.
சமகால வாழ்க்கை செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணம் போதுமானதாக இல்லை எனவும் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என, அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
இதேவேளை, இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. அத்துடன், அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது.
மேலும், மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல பகுதிகளின் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்று (31.12.2024) முதல் அடுத்த சில நாட்களில், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-35 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
புத்தளம் மாம்புரி பகுதியில் மின்சாரம் தாக்கியதில், 3 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் (29.12) ஞாயிற்றுக்கிழமை, கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்கு ஆயத்தங்கள் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களே , மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் புத்தளம் சோல்ட்டன் பகுதியைச் சேர்ந்த இருவரும் , மதீனா நகரைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி, எஹலியகொட பிரதேசத்தில் மாமியாரை கொலை செய்த மருமகன் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
திருமண நிச்சயதார்த்தத்தின் போது தாய் வீட்டை சீதனமாக வழங்குவதாக மாமனார் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
வாக்குறுதி அளித்த மாமனார் இறந்ததையடுத்து, அவர்களுடன் வாழ்ந்த மாமியார், வீட்டை மருமகனுக்கு எழுதிவைக்காத கோபத்தில் இந்த கொலையை செய்துள்ளதாக எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஹலியகொட, புலகாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியையான கேஷானி சந்திம ஜயலத், மருமகனின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை இடம்பெற்று 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இங்கிரிய பிரதேசத்தில் சந்தேகநபர் உயிரை மாய்த்துள்ளார். சந்திமால் கெதுங்க என்ற 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
சந்தேக நபர் கடந்த 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது மாமியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபரின் சடலம் கடந்த 28ஆம் திகதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பிற்கு சொகுசு வாகனத்தில் கேரளா கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேராவில் தேக்கங்காடு பகுதியில் புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த வாகனத்தை மறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த வாகனத்தில் 6 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெகனார் வாகனத்தையும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் (30) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கஞ்சாவையும், வாகனத்தையும் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளனர்.
ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கொடகவெல,பலங்கொட,ராகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் காயமடைந்து
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், டிக் ஓயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவொன்று நேற்று (29) அன்று சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்று திங்கட்கிழமை (30) அன்று திரும்பி கொடகலவெலை நோக்கி வந்து கொண்டிருந்த போது நல்லத்தண்ணி – மஸ்கெலியா பிரதான வீதி பிரவுன் தோட்ட பகுதியில் வைத்து இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஜீப் வண்டியில் ஏழு பேர் பயணித்ததுள்ளதாகவும் அதில் இருந்த குழந்தையொன்று மற்றும் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீப் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலி நாட்டில் இருந்து வந்த யாழ் நபர், வவுனியாவில் சகோதரி வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர் திடீர் சுகயீனம் காரணமாக உயிர்ழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்டவர் என்பதுடன் இத்தாலி நாட்டில் நீண்டகாலமாக தொழில் புரிந்து வந்துள்ளார் .
இந்நிலையில் நாடுதிரும்பிய நபர் , வவுனியாவில் சகோதரியுடன் வாழ்ந்து வந்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ் திருநெல்வேலியை சொந்த இடமாக கொண்ட 52 வயதான நபரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்நிலையில் சடலம் உடற்கூற்று சோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் அழகு நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
இதையடுத்து நேற்று காலை ஊழியர்கள் கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த பொருட்கள் மற்றும் லேப்டாப் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அழகு நிலைய மேலாளர் ஜெயகுரு, அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, மாடியில் ‘குறட்டை’ சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் மாடிக்கு சென்று பார்த்தபோது குடிபோதையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஒருவரை கண்டனர். இதையடுத்து போலீசார் அவரை எழுப்பி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் ஆந்திராவை சேர்ந்த கிஷோர் (24) என்பது தெரியவந்தது. நள்ளிரவில் பியூட்டி பார்லரின் பூட்டை உடைக்க முயன்றதும், எதுவும் கிடைக்காததால் குடிபோதையில் மாடியில் தூங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வேறு ஏதேனும் கடைகளில் திருடிச் சென்றாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.