வவுனியாவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் மாயம் : தவிக்கும் மனைவி!!

வவுனியாவில் திருமணமாகி ஒரே மாதத்தில் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா வேப்பங்குளம் மெதடிஸ்ட் தேவாலய வீதியில் தற்காலிகமாக வசித்து வந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில் கணவனை கடந்த 12 ஆம் திகதி முதல் காணவில்லை என மனைவியால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு திருமணம் செய்து ஒரு மாதகாலமான நிலையில் குறித்த இளம் குடும்பத்தினர் தற்காலிகமாக மேற்குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 12 ஆம் திகதி மனைவியை அவரது பணித்தளத்தில் இறக்கிவிட்டு தான் தனது பணிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வரவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.

25 வயதுடைய வில்வராசா ரக்சன் என்பவரே காணாமல் போனவராவார் குறித்த நபரை அடையாளம் காண்பவர்கள் 0741822912 குறித்த தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு மனைவி உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இளம் குடும்பஸ்தர் காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கணவர் இறந்த சோகம்… மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்த பரிதாபம்!!

பவானியில் தனியார் விடுதியில் 3 வயது மகளை கொன்றுவிட்டு பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சோந்தவ் சசிதரன்.

இவரது மனைவி கோகிலவாணி (25). இவர்களது மகள் இதாஜிகா (3). சசிதரன் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கோகிலவாணி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், குழந்தையை பராமரிக்காமல், வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த கோகிலவாணியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கோகிலவாணி சனிக்கிழமை இரவு இதாஜிகாவுடன் வீட்டை விட்டு வெளியேறி பவானி கூடுதுறை அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இரண்டு நாட்களாகியும் அறை திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். அப்போது, அங்கு துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கோகிலவாணி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும்,

இதாஜிகா படுக்கையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த கோகிலவாணி, மகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி : மனம் நொந்து வெளியிட்ட காணொளி!!

புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடை ஒன்றில் கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்க போய் , அது விலை அதிகம் என மறுத்த வெளிநாட்டவர் ஒருவரை கடைக்காரர் அவமானப்படுத்தி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்னிலையில் ப்[ஆதிக்கப்பட்ட வெளிநாட்டவர் மனமுடைந்து தனக்க்கு நேர்ந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

Emeka Iwueze என்ற அமெரிக்கர், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடைக்கு விஜயம் செய்த போது, இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அநாகரீகமாக துரத்திய கடைக்காரர்

சம்பந்தப்பட்ட கடைக்காரர், மோசமாக திட்டி விரட்டும் வெளிநாட்டவரை , அந்த இடத்தை விட்டு துரத்தும் காட்சியை அநேகர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில் , Street Food கடைக்காரர் Get Out என அநாகரீகமாக துரத்தும் சாட்சிகளை பார்த்த போது , அது அநேக இலங்கையரை வெட்கப்படவைத்தது .

நாட்டினை சுற்றுலாத்துறையின் மூலம் மீள திட்டமிடும் ஒரு நாட்டில், வியாபாரியின் இந்த செயல் இலங்கை சுற்றுலா துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

கடைக்காரர் அநாகரிகாமாக நடத்துகொண்டது மட்டுமல்லாது வெளிநாட்டவரை திட்டி விரட்டியதால் திகைத்து போன அவர் தனது மோசமான அனுபவத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடைக்காரரின் செயல் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் விசனம் கொள்ள வைத்துள்ளது.

மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த!!

தென்னிலங்கையில் மனிதநேயம் கொண்டவரான முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரின் இழப்பு செய்தி நாட்டிலுள்ள மூவின மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரதியமைச்சராக செயற்படும் அரசியல்வாதி என்ற நிலையை கடந்து தானும் சாதாரண மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரின் வாழ்க்கை நடைமுறைகள் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், தனது மரணத்திற்கு ஏற்கனவே தயாராக இருந்ததாக பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

மரணிக்க சில வாரங்களுக்கு முன்னர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது மரணம் நிகழ்ந்தால் அதற்கான பெரிய செலவுகள் எதனையும் செய்யக் கூடாது என தனது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தன்னை அடக்கம் செய்ய பயன்படுத்தும் பிரேத பெட்டிக்கு கூட சிறிய தொகையை செலுத்திவிட்டு அந்த பணத்தில் வீட்டிற்கு வரும் சிறுவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பொருட்களை பெற்றுக் கொடுக்குமாறு கூறியுள்ளேன்.

மக்கள் கூட்டம்

மேலும் எனது மரணத்திற்கு மக்கள் கூட்டமாக வருவார்களா என தெரியவில்லை. அதிகாரத்தில் இருந்தால் மாத்திரமே மக்கள் ஒருவரை தேடி வருவார்கள்.

அதனால் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம். நால்வர் இணைந்து என்னை தூக்கி சென்று புதைத்தால் போதும் என சிறிய மகனிடம் கூறிவிட்டேன்.

எனது பெரிய மகன் எனக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். நான் அவருக்கும் தொல்லை கொடுத்தததில்லை. சொத்துக்கள், வாகனங்கள் மீது எனக்கு எவ்வித ஆசையும் இல்லை.

பதவியில் இருந்த காலத்திலும் கிராமங்கள் முழுவதும் நடந்தே செல்வதனை பழக்கமாக கொண்டுள்ளேன். மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து வீடுகள், சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை. மக்களின் அன்பை மட்டுமே சம்பாதித்துள்ளேன்.

நான் எனக்கான தேவைகளை தனியாக தேடிக் கொண்ட ஒருவன் . நான் யாருக்கும் சுமையாக இருந்ததில்லை. செல்லும் இடம் எல்லாம் மக்கள் என்னை சூழ்ந்துக் கொள்வார்கள்.

நான் சுயமாக வாழ்ந்த மனிதன் என்று நான் இல்லாத போது வரலாற்றில் இருப்பேன் என நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாசாவில் கடமையாற்றும் இலங்கை இளம் விஞ்ஞானி மரணம்!!

அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வரும் புத்தளத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி ரொஸ்மின் மஹ்ரூப் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இன்று திடீர் சுகயீன மடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது,

புத்தளம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவரான ரொஸ்மின் மஹ்ரூப் வானியல்யியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் NASA வில் கடமையாற்ரிய இலங்கை இளம் விஞ்ஞானியின் மரணம் பெரும் தியரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் இலங்கை இளைஞன் படைத்த சாதனை!!

மலேசியா Batu Pahat நகரில் மலேசியா வாழ் இலங்கையர்களின் புது வருட விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. குறித்த மரதன் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார்.

சிப்ரான் நப்லி சாஹிரா கல்லூரி பழைய மாணவரும், பாடசாலைக் காலத்தில் 4 தடவை மரதன் போட்டியில் முதலிடம் மற்றும் நெடுந்தூர ஓட்ட சம்பியனாகவும் திகழ்ந்துள்ளார்.

மேலும் இவர் புத்தளம் BigBang சமூக அமைப்பின் அணியின் தலைவராகவும், மலேசியாவில் தொழில் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினருடன் கடலில் நீராடச் சென்ற மாணவன் கடலில் மூழ்கி மரணம்!!

களுத்துறை – அளுத்கம, மொரகல்ல கடற்கரையில் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பெந்தோட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை நீராடச் சென்ற போது காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலமே நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய மொஹமட் சமீன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சாதாரணதர பரீட்சைக்குத் தோற்ற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிலருடன் பெந்தோட்டை உல்லாச விடுதிக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் நேற்றையதினம் கரை ஒதுங்கியுள்ளது.

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை வழிமறித்து குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டி நகை , மோட்டார் சைக்கிள் கொள்ளை!!

வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தாயை மிரட்டி நகைகளை பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இன்று (17.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில்,

இன்று (17.04) அதிகாலை மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் பயணித்த சமயத்தில் வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் : ஒருவர் காயம்!!

வவுனியா பொதுவைத்தியசாலையின் காவலாளிகள் மீது இளைஞர்குழு ஒன்று நேற்றயதினம் (16.04.2024) இரவு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்… நேற்றயதினம் இரவு 11 மணியளவில் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக இளைஞர்கள் குழு ஒன்று வருகைதந்துள்ளது.

இதன்போது கடமையில் இருந்த காவலாளிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்ப்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறியுள்ளது.

சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான காவலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அடுத்த வாரம் திருமணம்… காதலியைக் கத்தியால் குத்தி கொன்று, உடலை எரித்த காதலன் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும் தெரிய வந்துள்ளது.

திரிதாலா பட்டித்தர கங்கநாத் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரிவியா (30). இவர் வழக்கம் போல காலையில் வேலைக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திரிதாலா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பிரிவியாவைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே திருமணமான நிலையில், பிரிவியா தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், விவாகரத்துக்கு பிறகு சந்தோஷுடன் நெருங்கி பழகி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரிவியாவை சந்தோஷ் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால், சந்தோஷுடன் உல்லாசம் அனுபவித்து, தொடர்ந்து பழகி வந்த பிரிவியா, சந்தோஷைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அதன் பின்னர், சந்தோஷுடன் பழகுவதையும் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிரிவியாவுக்கு வேறொரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இம்மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், இருவருக்குமிடையே இருந்த இந்த முன்விரோதம் தான் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைப் பார்த்து வரும் பிரிவியாவின் உடல் வயலை ஒட்டிய சாலையில் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றிலும் இருந்த புற்கள் எரிந்து காணப்பட்டது.

அருகில் பிரிவியாவின் ஸ்கூட்டரும் கண்டெடுக்கப்பட்டது. பிரிவியா கத்தியால் பலமாக குத்தி கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து கொலைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இறந்தவரை அடையாளம் கண்டதில், கொலையை செய்தது சந்தோஷ் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பிரிவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிடிக்காத திருமணம்… தாலியை கழற்றி வைத்து விட்டு புதுமணப்பெண் காதலனுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடகாவில் வசித்து வரும் 28 வயது கூலித்தொழிலாளி அப்பண்ணா. அதே பகுதியில் வசித்து வரும் லலிதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். தங்களின் காதல் குறித்த பயத்தில் வீட்டில் சொல்லவே இல்லை. இந்நிலையில் லலிதாவுக்கு, ஏப்ரல் 4ம் தேதி அவரது பெற்றோர் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகும் லலிதாவும், அப்பண்ணாவும் வழக்கம் போல் பேசி வந்தனர். தங்களால் ஒன்று சேர முடியவில்லையே என மனவருத்தத்தில் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு தாலியைக் கழற்றி வைத்துவிட்டு, கணவர் வீட்டில் இருந்து லலிதா வெளியேறினார். காதலனிடம் ‘உன்னை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை. நாம் இருவரும் திருமணம் செய்தாலும், பெற்றோர் வாழ விட மாட்டார்கள்’ என அப்பண்ணாவிடம் லலிதா கூறியுள்ளார். ‘ஒன்றாக வாழ முடியவில்லை என்றாலும், ஒன்றாக சாவோம்’ என இருவரும் முடிவு செய்தனர்.

வீட்டிற்கு சென்ற அப்பண்ணா, இரண்டு கயிறை எடுத்து வந்தார். இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் லலிதாவும், அப்பண்ணாவும் கிராமத்தை விட்டே வெளியேறினர்.

கிராமத்தின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு மரத்தில் ஒரே கயிற்றால் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் அப்பண்ணாவும், லலிதாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததாகவும், இது குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

200 கோடி சொத்தை தானம் செய்து துறவியான தம்பதியினர் : ஏன் தெரியுமா?

தங்களுடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி தம்பதியினர் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்திய மாநிலமான குஜராத், ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி (Bhavesh Bhai Bhandari). இவர், சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களிலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரும், இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.

இவர்களின், 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022 -ம் ஆண்டு துறவறத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது பாவேஷ் பண்டாரியும், அவரது மனைவியும் துறவறத்தை ஏற்கின்றனர் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டு, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து சென்று, யாசகம் பெற்று மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

இவர்கள் தங்களிடத்தில் இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் பெறுவதற்கு ஒருகிண்ணம், பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டுமே வைத்திருப்பார்கள். இதைத்தவிர வேறு பொருட்கள் வைத்திருப்பதற்கு அனுமதியில்லை.

வரும் ஏப்ரல் 22-ம் திகதி தம்பதியினர் உறுதிமொழியை ஏற்ற பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். தற்போது, இந்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் உயிரிழந்த யாழ் நபர்!!

முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் , நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கடும் சுகயீனமுற்று முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பரமகுரு ஜெகன் (வயது 44) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், குடும்பஸ்தரின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி தம்பதி பலி : காப்பாற்றச் சென்றவரும் பலியான சோகம்!!

விக்டோரியா (Victoria) நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விக்டோரியா (Victoria) நீர்த்தேக்கத்தில் நேற்று (15.4.2024) பிற்பகல் இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முன் வந்த 30 வயதுடைய பிரதேசவாசி ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தில் இறங்கிய பெண் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவளைக் காப்பாற்ற கணவனும் நீர்த்தேக்கத்தில் இறங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், வெள்ளத்தில் சிக்கி இருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை காப்பாற்ற பிரதேசவாசி ஒருவரும் நீரில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்களைக் காப்பாற்றச் சென்ற கணவன் மற்றும் பிரதேசவாசியின் சடலம் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் (Victoria Reservoir) மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்திற்கு திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் காதலி மற்றும் காதலியின் தாயையும் வெட்டிய பின் காதலன் தற்கொலை!!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.

பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35 வயதான குணதிலகம் பிரணவன் எனும் இளைஞன் அதே பகுதியினை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் வீட்டாரிடயை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டு வளவினுள் புகுந்து மலசலகூடத்தினுள் ஒழித்திருந்த இளைஞன் 4 மணியளவில் வீட்டில் உறங்கிய நிலையில் இருந்த காதலியையும் காதலியின் தாயாரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த நிலையில் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இளைஞனும் பனிப்புலம் பகுதியில் உள்ள வளவொன்றினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை இளவாலை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி இலங்கையில்!!

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

MD 2 Super Sweet pineapple வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி இருந்தாலும், அந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிடும் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதோடு , குறித்த அன்னாசி வகையை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.