அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் லொறிச் சாரதியை கைது செய்துள்ளதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் தம்பிலுவில் பிரதான வீதி வீ.சி. வீதிக்கு அருகில் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறிச் சாரதியை கைது செய்ததுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர்.
சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023)ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.
குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.
இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த (23.09.2023) அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து.கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஜீலந்தியா கண்டமானது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.
இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், முன்னதாக பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.புதிய கண்டம் மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதனுடன் சேர்த்து உலகில் மொத்தம் 8 கண்டங்கள இருப்பதாக புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அந்தவகையில் உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் உள்ள நிலையில், விரைவில் இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் பணிபுரியும் பெண்கள் மிகக் குறைந்த மட்டத்திலேயே சோதனைக்கு செல்வதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் இந்த நிலைமை மோசமாகியுள்ளதாகவும் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளில் 26 பேர் மார்பகப் புற்றுநோயாளிகளாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி, அரை நிர்வாணத்துடன் வீடு வீடாக உதவி கேட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தின் பட்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ரத்தப்போக்குடன் வீடு வீடாக சென்று உதவி கேட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி, அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் மயக்கம் தெளிந்த பின்னர் அரை நிர்வாணத்துடனே அவர் சாலையில் உதவி கோருவது அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
தெருவில் அரை நிர்வாணத்துடன் நடந்த அவர் ஆசிரமம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு மதகுரு ஒருவர் சிறுமியின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரது உடலை துணியால் மறைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்தபோது அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாயிருந்தது தெரியவந்ததுள்ளது.இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சிறுமி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குற்றவாளிகளை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த தனது தோழி சிங்கபூருக்கு சுற்றுலா சென்ற வேளையில் கணவனால் படுகொலை செய்யப்பட்டதாக அவரது தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.குறித்த இலங்கை பெண் பலருக்கு தோழியாகவும், எப்போதும் அன்பான வார்த்தைகளையும் புன்னகையையும் கொண்டவர் என தோழியால் அன்புடன் நினைவுகூரப்பட்டார்.
எலிசபெத் கேம்பர் என்பவர் தனது வகுப்புத் தோழியான செவ்வந்தி மதுகா என்ற கொல்லப்பட்ட இலங்கை பெண்ணின் மரணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள லா ட்ரோப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் வகுப்பு தோழிகளாகும்.
கடந்த 9 ஆம் திகதி Holiday Inn Express Singapore Katong இல் இலங்கை பெண் அவரது கணவர் ஈஷான் என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.செவ்வந்தி சிங்கப்பூரில் விடுமுறையில் இருந்தபோது, இந்த சோகம் நடந்ததாக மெல்பேர்னில் அமைந்துள்ள அவரது பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்து இருந்த பின்னர் தனது கணவருடன் விடுமுறையில் செல்வதில் செவ்வந்தி மிகவும் உற்சாகமாக இருந்ததாக தோழி குறிப்பிட்டார்.32 வயதான இவர், அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்த நிலையில், அவரது கணவர் இலங்கையில் பணிபுரிந்து வந்ததாக கேம்பர் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று (28) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வழிபாடு செய்துள்ளனர்.
அந்தவகையில்வல்லிபுர ஆழ்வாரிடம் வரம் வேண்டி பெண்ணொருவர் இருபதிற்கும் மேற்பட்ட கற்பூர சட்டிகளை கையில் ஏந்தியும் தலையில் சுமந்தவாறும் வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அப் படங்கள் தற்போது சமூகவலைத்தளஙங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மீட்டியாகொட கஹவ கொடகம ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் லொறியில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய திருமணமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் “சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்தில் பாடல் ஒன்றை ஈழத் தமிழர் பூவன் மதீசன்.” எழுதியுள்ளார்.
நாடன இயக்குநரும், நடிகருமான ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘“ஜிகர்தாண்டா double x” படத்தில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய காட்சி இருப்பதாகவும் அதனை அருமையாக இயக்குனர் கையாண்டிருப்பதாகவும் தெரிவித்த சந்தோஷ் நாராயணன், அதற்கேற்றது போல யாழ்ப்பாணத் தமிழில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த பாடலையே நம் நாட்டு பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகங்களைக் கொண்ட கலைஞர் பூவன் மதீசன் எழுதியுள்ளதாக குறிப்பிட்டார்.அத்துடன் மதீசனுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்த தகவலை முகநூலில் பாபுகி முத்துலிங்கம் (Babugi Muthulingam) என்பவர் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தில் வசித்து வருபவர் மாரி. இவர் கட்டிடத் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரேணுகா. இவர் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் செப்டம்பர் 23ம் தேதி அதே கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சொல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கல் என பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனையடுத்து பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் ரேணுகா கடைசியாக அதே ஊரைச் சேர்ந்த பாரதி நகர் நீலமேகம் என்பவரின் மகன் யோகேஸ்வரனிடம் போனில் பேசியுள்ளார். இந்த எண்ணை வைத்து யோகேஸ்வரனிடம் விசாரானி செய்தனர். அவருடைய முன்னுக்கு பின்னான பதிலில் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. யோகேஸ்வரன் ரேணுகாவை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். யோகேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்பவர். இவரும், ரேணுகாவும் 6 மாதங்களாக காதலித்து வந்தனர். நேற்று முன்தினம் சென்னாவரம் கிராமத்தில் இருவரும் தனிமையில் சந்தித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரத்தில் யோகேஸ்வரன் ரேணுகா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவினால் அவரது கழுத்தை இறுக்கினார். ரேணுகா உயிரிழந்ததும் அதிர்ச்சியடைந்து ரேணுகாவின் பிணத்தை அங்குள்ள முட்புதரிலேயே வீசிவிட்டு தப்பிஓடிவந்ததை ஒப்புக் கொண்டார்.
இதன் பேரில் இரவு முட்புதரில் இருந்த ரேணுகா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவி கழுத்தை நெரித்து காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம், புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக உறவினர்கள் மற்றும் சக மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கண்ணையா மற்றும் மாரிக்கண்ணு. இதில், கன்னையா என்பவர் நெடுஞ்சாலைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு, மணிமுத்து மற்றும் மாதேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும், மகர ஜோதி என்ற ஒரு மகளும் உள்ளனர்.இதில், மாதேஸ்வரன் என்ற மகன் மச்சுவாடி அருகே உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதிக முடி மற்றும் தாடியை வைத்து மாதேஸ்வரன் தொடர்ந்து பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
அதே போல, நேற்று காலை முடி சரியாக வெட்டிவிட்டு வராத மாணவர்களை பள்ளிக்கு வெளியில் நிற்க வைத்து, முடி வெட்டிவிட்டு வருமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், இரண்டு மாணவர்கள் மட்டுமே திரும்ப வந்துள்ளனர். மாதேஸ்வரன் பள்ளிக்கு திரும்பி வரவில்லை.இதனையடுத்து, பள்ளிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலிருந்த பொலிசார் விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு, ஆசிரியர்களின் அலட்சியம் தான் காரணம் என மருத்துவமனையின் முன்பு, மாணவரின் உறவினர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால், அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருமணமாகி இரு ஆண்டுகளில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆண்டலாம் பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கொத்தனார் பணி செய்து வரும் இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த சந்தியா (22) என்பவரைக் காதலித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து, சந்தியாவின் பெற்றோர் கடம்பங்குடிக்கு சென்று விட்டனர். காதல் திருமணம் செய்த தம்பதியருக்கு தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளன. இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகின்றது.
இதற்கிடையே, நேற்று (செப் 23) அதிகாலை சந்தியா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் உடனடியாக அவரை கும்பகோணம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்ததாகவும், அங்கு அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சந்தியா உடலை வீட்டிற்குக் கொண்டு வந்த பிறகு, சந்தியாவின் பெற்றோருக்குச் சந்தியா நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்து விட்டதாகத் தகவல் தந்ததாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடம்பங்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு சென்ற நிலையில், சந்தியாவின் பெற்றோர்களிடம் ஆண்டலாம் பேட்டை பகுதி மக்கள், சந்தியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், சந்தியாவின் புகுந்த வீட்டினரோ, சந்தியாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சந்தியாவின் உயிரிழப்பை ஏற்க முடியாத அவரது பெற்றோர்கள், சந்தியா தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளதாகக் கூறி திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் ஆண்டலாம் பேட்டையிலிருந்த சந்தியாவின் உடலைக் கைப்பற்றி, சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி இரு ஆண்டுகளில் ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் ஆண்டலாம் பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி. இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார். நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார். இதனைதொடர்ந்து நாகலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் நிதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
மேலும் நாகலட்சுமியை விட்டு விலக ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி நிதீஸ் வீட்டிற்கு சென்று திருமணம் செய்ய கேட்டுள்ளார். அவரின் பெற்றோரிடமும் கேட்டுள்ளார். ஆனால் நிதீஸ் பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து நாகலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையை அடுத்து நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார். அவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் வசித்து வருபவர் எம்.கே.ராஜ்குமார். இவர் விவசாயத்தொழில் புரிந்து வருகிறார். இவர் நடப்பாண்டில் சுமார் 15 ஏக்கர் அளவிலான விளைநிலத்தில் குறுவை சாகுபடி செய்திருந்தார்.
ஆனால் கர்நாடகத்திலிருந்து இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் நீர்வரத்து சரியாக இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. அதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் 6000 கன அடியாக குறைக்கப்பட்ட நிலையில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகத் தொடங்கின.
பல ஆயிரம் ஏக்கரில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் குருவை சாகுபடி நாசமாகியுள்ளது. விவசாயி ராஜ்குமாரின் குருவைப் பயிரும் முற்றிலுமாக கருகிவிட்டது.
இன்று காலை வழக்கம்போல் வயலுக்கு சென்ற அவர், காய்ந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்து சம்பா சாகுபடிக்கான நேரடி நெல் விதைப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்.
அந்த சமயத்தில் சோகம் தாங்காமல் திடீரென நெஞ்சுவலி வந்து வயலிலேயே மயங்கி விழுந்தார். அவரை சக விவசாயிகள் மீட்டு திருக்குவளையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாகுபடி பொய்த்துப் போனதால் விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாவட்டம், காஞ்சிபுரத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற புதுமாப்பிள்ளை உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை முருகாத்தம்மன் பேட்டையில் வசித்து வரும் சங்கர் என்பவரின் மகன் மணிகண்டன் (21).
இவரின் நண்பர், திருவள்ளுவரைச் சேர்ந்த கார்த்திக் (26). இவர்கள் இருவரும், பனையூர் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்கள். அங்கு, வேலையை முடித்துவிட்டு ஒரே வாகனத்தின் ஒன்றாக வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக் மற்றும் மணிகண்டனும் நேற்று இருச்சக்கர வாகனத்தில் படைப்பை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பனையூர் அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களுடைய இருசக்கர வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த லொறியின் மீது மோதியது.
அப்போது, இவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்த பின்பு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், விபத்தில் உயிரிழந்த கார்த்திக்குக்கு கடந்த 3 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. மேலும், விபத்தில் உயிரிழந்த மணிகண்டனின் பெற்றோர் கடுமையான சோகத்திலும், அவரது கண்களை தானம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கைபெண் லாஸ்லியா தற்போது படவாய்ப்புக்கள் இல்லாமல் அல்லாடி வருகின்றார்.கமல் ஹாசன் தொகுந்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தை தாண்டியும் வெகு பிரபலம்.
இதில் இலங்கையை சேர்தவர்களும் கலந்துகொண்டிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களிடையே பிரபல்யமும் ஆனார்கள்.அந்தவகையில் இலங்கையர்களான லாஸ்லியா, தர்சன், ஜனனி ஆகியோர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தனர்.
அவர்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்கையில், பலரின் மனதை கவர்தவராகவே லாஸ்லியா இருந்தார்.வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஓரிரண்டு படங்களிலும் நடித்திருந்தார்.
எனினும் பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை கொண்டாடிய ரசிகர்கள் அவரது சினிமாவை கொண்டாடவில்லை. இந்நிலையில் தற்போது படவாய்ப்பில்லாது இருக்கும் லாஸ்லியா, கவர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டுவரும் நிலையில் நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.