விற்பனையாகாத லாட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரரான வியாபாரி!!

கேரளாவில்..

கேரளாவில் விற்பனையாகாத லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ருபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் ஏஜென்ட் ஒருவர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். வாரத்தின் 7 நாட்களும் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் கேரள அரசு அனைத்து நாட்களும் குலுக்கல் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்த வாராந்திர லாட்டரிகளுக்கு முதல் பரிசாக 70 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பரிதொகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது.

இதில் சுமார் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. கேரள லாட்டரி விற்பனை வரலாற்றில் இதுவே அதிகம் என கூறப்படுகிறது. இதுவரை ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டுதான் 25 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அதோலி பகுதியை சேர்ந்தவர் என்கே காங்காதரன். இவர் 33 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் கண்டக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அதோலி பகுதியில் ஸ்டேஷ்னரி கடை நடத்தி வரும் கங்காதரன் லாட்டரி ஏஜென்ட்டாகவும் உள்ளார். இந்நிலையில் விற்பனையாகாத டிக்கெட்டுகளை ஒப்படைக்க வங்கிக்கு சென்றபோதுதான் கங்காதரன் கொடுத்த டிக்கெட்டுகளில் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது தெரியவந்துள்ளது.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார் கங்காதரன். கடந்த 4 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்துவரும் காங்காதரனுக்கு இப்படி பரிசு கிடைப்பது இதுவே முதல் ஆகும். விற்பனையாகாத லாட்டரி டிக்கெட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார் கங்காதரன்.

தோழியுடன் சுற்றுலா சென்ற மாணவி : ஓராண்டு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!!

துபாயில்..

6 மணி நேரம் மட்டுமே துபாயில் இருந்திருக்க வேண்டிய எலிசபெத் பல மாதங்களாக இங்குத் தங்கியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பொலன்கொ டி லாஸ் சாண்டோஸ் (21).

இவர், அங்குள்ள லேமேன் கல்லூரியில் படித்து வருகிறார். தனது தோழியுடன் இஸ்தான்புல் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற எலிசபெத், சுற்றுலா முடிந்து நியூயார்க் திரும்புகையில், ஜூலை 14-ம் தேதி, இஸ்தான்புல்லிலிருந்து துபாய் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பாதுகாப்பு பரிசோதனையின்போது, இதற்கு முன்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்ததால் எலிசபெத் தன் இடுப்பில் ஒரு ‘பெல்ட்’ அணிந்திருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அந்த பெல்ட்டை, அங்கிருந்த பெண் ஊழியர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்று கழற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் சற்று கடுமையாக நடந்து கொண்டதாகவும், தழும்புகள் இன்னும் குணமடையாததால் எலிசபெத்துக்கு அது மேலும் வலியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதனால், மீண்டும் அதை அணிவதற்கு உதவி கேட்டபோது அங்கிருந்தவர்கள் கேலி செய்ததால், அவர்களிடம் எலிசபெத் கடுமையாக நடந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரை ஓர் அறையில் அடைத்துவைத்து, அரேபிய மொழியில் எழுதிய ஆவணம் ஒன்றில் கையெழுத்திட எலிசபெத்தைக் கட்டாயப்படுத்தியதாக அவரது தோழி தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில், எலிசபெத் பயணிப்பதற்கு தடைவிதித்த துபாய் அரசு, அவர்மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்வரை, அவர் துபாயிலிருந்து வெளியேற முடியாது எனத் தெரிவித்திருக்கிறது.

பயணத்தடை காரணமாக துபாயில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிக்கித்தவித்த பின்னர், அண்மையில் எலிசபெத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, 2,700 டாலர் அபராதம் செலுத்திவிட்டு, துபாயிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

ஆனால், துபாய் வழக்கறிஞர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இதனால் எலிசபெத்துக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எலிசபெத்திற்கு உதவி செய்யும் மனித உரிமை ஆர்வலரான ராதா ஸ்டிர்லிங், பத்திரிகையிடம் பேசியபோது, “6 மணி நேரம் மட்டுமே துபாயில் இருந்திருக்க வேண்டிய எலிசபெத், பல மாதங்களாக இங்குத் தங்கியிருக்கிறார்.

இதனால் வழக்கறிஞர்களுக்காகவும், தனது இதர செலவிற்காகவும் 50,000 டாலர் வரை பணத்தை இழந்துள்ளார்” எனக் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை, “அமெரிக்கக் குடிமகள் ஒருவர் துபாயில் பிரச்னையில் சிக்கியுள்ளதாகத் தகவல் அறிந்தோம்.

அமெரிக்காவிலுள்ள வக்கீல்கள், சட்ட பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்களிடம் இதற்காக ஆதரவைத் திரட்டி வருகிறோம். மேலும், துபாயில் நடக்கக்கூடிய மோசடிகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பான எச்சரிக்கைகளை மக்களிடம் எடுத்துரைத்துக்கொண்டும் வருகிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

திடீரென குறுக்கே வந்த மாடு.. வாகனத்தை திருப்பிய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!!

காஞ்சிபுரத்தில்..

தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், மாடு குறுக்கே வந்ததில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணியரசன் (33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சென்னையில் ஒன்லைனில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்த மணியரசன், குடும்பத்துடன் பனப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் சாலையில் மணியரசன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.

அப்போது திடீரென குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. இதனால் பதறிய மணியரசன் வாகனத்தை வலது புறமாக திரும்பியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக லொறி ஒன்றின் மீது அவரது வாகனம் மோதியது.

இதனால் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த நிலையில் மணியரசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், மணியரசன் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லொறி ஓட்டுநர் ராஜா (43) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள் : அடையாளம் காண முடியாமல் குழம்பும் ஆசிரியர்கள்!!

கர்நாடகாவில்..

இந்திய மாநிலம், கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் 5 இரட்டையர்கள் படிப்பதால், அடையாளம் காண முடியாமல் ஆசிரியர்கள் குழம்புகின்றனர்.

கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர்.

அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர். 2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கின்றனர்.

இந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டையர்களால், அவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது. இவர்களின், பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், தினமும் போராடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர். தற்போது, இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. அதிரவைக்கும் பிண்ணனி!!

ஆண்டியகவுண்டம்பட்டியில்..

ஆண்டியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), இவர் பொக்லைன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி (26). இவர்களுக்கு சரோனிகா (6), பிரித்விகா (3) ஆகிய 2 மகள்களும், லட்ஜித் (1) என்ற மகனும் இருந்தனர்.

சரவணன் சேலத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கமணியை அவரது மாமனார்-மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு பிரித்விகா, லட்ஜித் ஆகியோருடன் காணமல் போனார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்கமணி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் நேற்று காலை அவர்களது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பயன்பாடு இல்லாத ஒரு கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தேடினர்.

நீண்ட நேரம் தேடலுக்கு பிறகு தங்கமணி மற்றும் அவரது மகன் லட்ஜித் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பிறகு பிரித்விகாவின் உடல் சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனை தங்கமணி தனது உடலில் குழந்தைகளை துண்டால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேக பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்கமணிக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி
உள்ளது.

கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

குரோம்பேட்டையில்..

சென்னை அடுத்த கோவிலம்பாக்கதை சேர்ந்தவர் மோகனலஷ்மி(19). இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு உதவி மருத்துவம் அறிவியல் படித்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற மோகனலஷ்மி மதியம் வகுப்பறையில் கணினி வழி தொடுதிரையில் தனது பாடம் குறித்து சக மாணவர்களுக்கு விளக்கி கொண்டிருந்தார். அப்போது மோகனலட்சுமி வகுப்பறையில் சக மாணவர்கள் முன்பாக நெஞ்சுவலி என சுருண்டு விழுந்துள்ளார்.

அதன்பின் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுகாக அனுப்பியுள்ளார்.

முதற்கட்டமாக மாரடைப்பு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் கல்லூரி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழப்பு : தவிக்கும் பிள்ளைகள்!!

வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் இடன்று இடம்பெற்ற நிலையில் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று செவ்வாய்க்கிழமை (10.10.2023) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அப்போது மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குருக்கள் புதுக்குளத்தை சேர்ந்த 44வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான விஜயரத்தினம் ஜெயந்தினி என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது இவருடன் பயணித்த உயிரிழந்தவரின் மகனான 22வயதுடைய சிஙறோஜன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் ஏற்பட்ட இரு வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு விபத்துமே கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் கோர விபத்து : இரு விசேட அதிரடிப்படையினர் பலி : 6 பேர் படுகாயம்!!

வவுனியா வெளிக்குளம் பகுதியில் நேற்று (09.10.2023) இரவு 9.30 மணியளவில் ஏற்பட் விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

நேற்று 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில்,

ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

   

வவுனியா மத்திய தபால் நிலையத்தில் இரத்தான நிகழ்வு : பலர் பங்கேற்பு!!

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

அந்த வகையில் வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள மத்திய தபால் நிலையத்தில் 149வது உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு மாபெரும் இரத்தான நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் தபால் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

அதிவேகமாக வந்த பைக் மோதி மாணவி பலி.. வேகமாக ஓட்டிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி மாணவி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கேரளாவின் மூவட்டுப்புழா பகுதியில் கடந்த சூலை மாதம் சாலையை கடந்த கல்லூரி மாணவர்கள் மீது அதிவேகமாக வந்த பைக் ஒன்று மோதியது. இதில் நமீதா எனும் 20 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் அனுஸ்ரே ராஜ் (20) காயமடைந்தார்.

பைக்கை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய அன்சன் ராய் என்பவர் அப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட அன்சன் ராய் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

அத்துடன் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்து பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாகவே அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டிய உறவினர்கள்… எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மானாமதி கண்டிகை பகுதியில் வசித்து வருபவர் ராஜ். இவருடைய மகன் 25 வயது ஹரிஷ். இவர் ஒரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த பாலையூரில் வசித்து வரும் ஆர்த்தியும் பணிபுரிந்து வந்தார்.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் உறவினர்களுக்கு தெரிந்ததால் ஆர்த்திக்கு உடனடியாக திருமண ஏற்பாடு செய்தனர்.

இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய ஆர்த்தி, அச்சரப்பாக்கத்தில் அக்டோபர் 1ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி ஹரிஷை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு மானாமதி கணவர் வீட்டில் தங்கியிருந்தார். ஆர்த்தியை தேடிக் கொண்டிருந்த உறவினர்கள் ஹரிஷ் வீட்டுக்கு உருட்டுக்கட்டைகளுடன் சென்று மிரட்டல் விடுத்தனர்.

பயந்துபோன ஹரிஷ் – ஆர்த்தி தம்பதியினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவும் அளித்துள்ளனர்.

ஆர்த்தி அளித்துள்ள மனுவில், ‘எனது குடும்பத்தினர் பணபலம், படைபலத்தால் எனது கணவர் குடும்பத்தை மிரட்டி வருகிறார்கள். அவர்களிடமிருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என ஆர்த்தி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!!

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தங்க சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று திங்கட்கிழமை (09) கொழும்பு செட்டியார் தெருவில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன்,

அதன் புதிய விலை 155,400 அதிகரித்துள்ளது. அதேவேளை தங்கத்தின் விலை கடந்த புதன்கிழமை ரூபா 152,200 ஆக காணப்பட்டது.  அந்தவகையில் கடந்த வாரம்,

புதன்கிழமை வரையில் 164,500, ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கத்தின் விலை தற்போது 168,000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழில் 16 வயது மாணவன் எடுத்த தவறான முடிவு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2023) இடம்பெற்றுள்ளதுயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.இந்நிலையில் மாணவனுக்கும் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நித்திரைக்கு சென்றனர்.

அதன்பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பெற்றோர், மகனை தேடியவேளை மகனை காணவில்லை.பின்பு வீட்டின் பின்புறம் இருந்த மரம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயமா பிறேம்குமார் மேற்கொண்டார்.

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

காலநிலை..

மழையுடன் கூடிய காலநிலை தற்போது நிலவுவதால், மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த அறிவிப்பு இன்று (09.10.2023) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்களுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலையில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

திருகோணமலையில்..

திருகோணமலையில் உள்ள தோப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்றைய தினம் (08-10-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த சம்பவத்தில் தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிலுறுதீன் அம்ஹர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் வைத்து மின்குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகின்றது.

உயிரிழந்த சிறுவன் ஜனாஸா தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வரும் 20ம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்!!

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.

தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.