லண்டனில் மார்பில் சுடப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சிறுமி : தன்னை சுட்டவர்களிடம் கூற விரும்பும் விடயம்!!

லண்டனில்..

சிறுவயதில் துப்பாக்கியால் சுடப்பட்டு சக்கர நாற்காலியில் வாழும் நிலைக்கு ஆளான இலங்கைத் தமிழ் இளம்பெண் ஒருவர், தன்னை சுட்டவர்களுக்கு கூற, தன்னிடம் ஒரு விடயம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள, தன் உறவினரின் மளிகைக்கடையில் விளையாடிக்கொண்டிருந்த துஷா கமலேஸ்வரன் என்னும் அந்த ஐந்து வயது இலங்கைத் தமிழ்ச் சிறுமிக்கு, அன்று தன் வாழ்வே மாறப்போகிறது என்பது தெரியாது.

அந்த கடைக்குள் நுழைந்த போதைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர், தங்கள் எதிராளி ஒருவரை துப்பாக்கியால் சுட, அந்த நபர் தப்பிக்கொள்ள, துப்பாக்கிக் குண்டு விளையாடிக்கொண்டிருந்த துஷாவின் மார்பைத் துளைத்துக்கொண்டு சென்று அவளது முதுகெலும்பைத் தாக்கியது.

இரத்த வெள்ளத்தில் சாய்ந்த துஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளது முதுகெலும்பில் குண்டு தாக்கியதால், அவளால் நடக்கமுடியாது என்னும் துயரச் செய்தியை அவளது பெற்றோரான சசி மற்றும் ஷர்மிளா தம்பதியருக்குத் தெரிவித்தார்கள் மருத்துவர்கள்.

தற்போது 18 வயதாகிறது துஷாவுக்கு. நடனத்தில் விருப்பம் கொண்ட துஷாவின் நடனக் கனவுகளை அந்த போதைக் கும்பல் கலைத்துவிட்டதால், அவளால் இனி நடனமாட முடியாது.

துஷாவின் இன்னொரு விருப்பம், மருத்துவராவது. தன்னைக் காப்பாற்றிய மருத்துவர்களைப் போல, தானும் ஒரு மருத்துவராக விரும்புகிறார் துஷா. தன்னை சுட்டவர்களை சந்தித்து அவர்களிடம் சில விடயங்களைக் கூறவேண்டும் என விரும்புகிறார் துஷா.

அவர்களுடைய கண்களை நேருக்கு நேராக பார்க்கவேண்டும், சிறையிலிருந்தபோது அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள், தாங்கள் செய்த குற்றத்தின் விளைவுகளை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்பதை தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

சில விடயங்களுக்காக அவர்களை நான் மன்னிக்கிறேன், ஆனால், சில விடயங்களுக்காக அவர்களை என்னால் மன்னிக்கமுடியாது என்கிறார் துஷா. அவர்கள் என் பிள்ளைப்பிராயத்தின் சில பகுதிகளைத் திருடிவிட்டார்கள்.

அவர்கள், நான் என்ன சாதித்துள்ளேன் என்பதைப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் துஷா, நான் கேம்பிரிட்ஜ் பல்கலையில் மருத்துவம் படிக்கிறேன், நான் என் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என நான் பார்க்க விரும்புகிறேன் என்கிறார். ஒரு மருத்துவராகி, எனக்குக் கிடைத்த அக்கறையை, கவனிப்பை, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு, நான் கொடுப்பேன், அதுதான் என் கனவு என்கிறார் துஷா!

வவுனியா வீரபும் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுப்பு!!

வவுனியா செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள்,மற்றும் வைரவர்,முருகன்,அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (04.10.2023) புதன்கிழமை காலை ஆலயத்திற்கு பூஜைக்காக சென்ற ஆலயத்தின் குருக்கள் சிலைக்கள் சேதமாக்கப்பட்டமையை அவதானித்த உடன் ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவித்திருந்தார்.

பின் நிர்வாகத்தினரால் செட்டிக்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்ஸில் தஞ்சமடைந்த இலங்கை மாணவியை வெளியேற உத்தரவு!!

பிரான்ஸில்..

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்சில் தஞ்சமடைந்த ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ என்ற இலங்கை மாணவியை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ (Onel-Shenaya) கூறுகையில், இலங்கையில் தாம் எதிர்கொண்ட அச்சுறுத்தலை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸ்சிற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமான கல்வித் திட்டத்திற்கு மாறுவதற்கு முன்பாக பிரென்ஞ் மொழி பேசாத மாணவர்களின் வகுப்பில் இணைந்து மொழி கற்கைகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

தான் ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் போர்டேக்ஸ் நகரில் வசித்ததுடன், கல்வியிலும் சிறப்பாக செயற்பட்ட ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவிற்கு (Onel-Shenaya) கல்வியை தொடரும் வகையில் நிரந்தர குடியுரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேணாமை மற்றும் ஒருங்கிணையாமை போன்ற காரணங்களை முன்வைத்து மாகாணத்தை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ்- ஜிரோண்டே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவிற்கு (Onel-Shenaya) தமது ஆதரவை வெளியிட்டுள்ள ஆசிரிய ஊழியர்கள், அவர் வெளியேற்றப்படுவதற்கான காரணம் குறித்து தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ, விடாமுயற்சியுள்ள மாணவி எனவும் ஒரு சில ஆண்டுகளிலேயே மிகவும் ஈர்க்க கூடிய வகையில் பிரென்ஞ் மொழியை பயின்று, திறமையை வெளிப்படுத்தியதாகவும் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ (Onel-Shenaya), பிரான்ஸ்சிலேயே தங்குவதற்கான உரிமையை நிலைநாட்டும் வகையில் இணை வழியான மனுவின் ஊடான ஆதரவு கோரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையெழுத்துக்களை பெற்றுள்ள நிலையில், சட்டத்தரணியின் உதவியுடன் தம்மை வெளியேற்றும் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதையும் ஜிரோண்டே மாகாண நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதேசமயம் , ஜிரோண்டே நிர்வாகம் ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோவின் நிலைமையை மீளாய்வு செய்யவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி ஆறு மாதக் கர்ப்பிணி : இளம் கணவரின் விபரீத முடிவு : யாழில் நடந்த சோக சம்பவம்!!

துன்னாலையில்..

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இரண்டு பிள்கைளின் தந்தை விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரம் இடம்பெற்றுள்ளது.

மனைவி தற்போது ஆறு மாதக்கர்ப்பிணி ஆவார். இவர்களுக்கு முதல் பெண் குழந்தை உள்ளதுஇச் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் ஜெனீஸ்குமார் வயது 24 விபரீத முடிவால் குறித்த குடும்பத்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியா புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி!!

வவுனியா புதுக்குளத்தில் இன்று (03.10.2023) மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய குறித்த சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்ற சென்றபோதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வி.டினோஜன் 9 வயது மற்றும் 7 வயது மாணவியும் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் வி. டினோஜன் என்ற மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் மரணமடைந்தார்.

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட விபத்தா அல்லது அதே திசையில் வந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்ட விபத்தா என ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி!!

மட்டக்களபபில்..

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தொடருந்துடன் முச்சக்கரவண்டியொன்று மோதிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பாதுகாப்புக் கடவை இன்மையால் இடம்பெறும் விபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி தொடருந்து நிலையத்தை நோக்கி சென்ற தொடருந்தில் இன்று பிற்பகல் 12.15 மணியளவில் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் மிச்நகர் பகுதியில் தொடருந்து கடவை வீதியை முச்சக்கரவண்டி கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரஹமான் றமீஸ் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மோற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அப்பிரதேச மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும், இதற்கான சரியான நடவடிக்கையை அரசாங்கமும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் சந்தி தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றுள்ளது.

மிச்நகர் சந்தியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.சம்பவத்தில் 38 வயதுடைய அப்துல் றகுமான் ரமீஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 7 வருடம் தவமிருந்து பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

யாழில்..

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட பால் சுரக்கவில்லை என மன விரக்தியில் 20 நாள் குழந்தையின் தாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த க. கிருஷ்ணபவானி (வயது 40) என்பவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் குழந்தை பாக்கியமற்ற நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது.

அந்நிலையில் குழந்தைக்கு பால் ஊட்ட தாய்ப்பால் போதிய அளவு சுரக்காத நிலையில் கடுமையான மன அழுத்தில் காணப்பட்ட அவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை குளியல் அறையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்என தெரியவருகின்றது

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் : நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

தங்கம்..

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் பதிவாகியுள்ளது.

அதன்படி இன்று (03.10.2023) கொழும்பு செட்டியார்தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,000 ரூபாவாக குறைந்துள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 165,500 ரூபாவாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த வாரம் செவ்வாய்கிழமை கொழும்பு செட்டியார்தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 156,800 ரூபாவாக பதிவாகியிருந்தது.

இதனிடையே கடந்த செவ்வாய்கிழமை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,500 ரூபாவாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சை தோல்வியால் அசிட் குடித்த மாணவி.. ஓராண்டு போராட்டத்தின் பின் உயிரிழந்த சோகம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து மாணவிகள் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். எத்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் மன அழுத்தத்தில் விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.

இதனால் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களின் சிரமங்களை யோசிப்பதே கிடையாது. நீட் தேர்வில் மதிப்பெண் குறைவால் ஓராண்டு போராடி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வேலஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் மணிவேல் மகள் ஜெயசுதா . இவருக்கு வயது 18. இவர் 2022ல் நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றார்.

இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. செப்டம்பர் 8ம் தேதி ஜெயசுதா கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

6 மாதத்திற்கு முன்பு சென்னை அரசு பொது மருத்துவமனையில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயசுதா உயிரிழந்தார்.

ஒரு வருடமாக உயிரை காக்க போராடி உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

7ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடிக்கும் பெற்றோர்.!!

சென்னையில்..

இந்த காலத்து பள்ளிப் பிள்ளைகள் எதற்கெடுத்தாலும் மன அழுத்தம் என்கின்றனர். ஓடியாடி விளையாடினாலே எல்லா அழுத்தங்களும் சரியாகி விடும். பள்ளி முடிந்து வீட்டில் கையில் மொபைல் போன்களுடன் இருப்பதால் உடல் உழைப்பு என்பதே கிடையாது .

இதனால் உடல் சோர்வு அடைந்துவிடுகிறது. இயலாமையால் மன அழுத்தம் வந்துவிடுகிறது. இதனை எதிர்கொள்ள தெரியாமல் பள்ளிப்பிள்ளைகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் வசித்து வருபவர் மூர்த்தி . இவர், வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தீப்திகா . இவர், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தீப்திகா அருகில் உள்ள தோழியின் வீட்டுக்கு படிக்க சென்றுவிட்டார். இரவு 7 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த தீப்திகா, திடீரென வீட்டில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளையாட சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த தீப்திகாவின் அண்ணன் ரித்தீஸ் , தங்கை தீப்திகாவை தேடினார். பின்னர் பூட்டி இருந்த அறை கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தீப்திகா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், தற்கொலை செய்த மாணவி தீப்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் விடுதி உரிமையாளர் பரிதாபமாக பலி!!

யாழில்..

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 35 வயதான பரமநாதன் யோதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

திருகோணமலையில்..

திருகோணமலையில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றையதினம் (01-09-2023) காலை 11.30 மணியில் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான சுந்தரலிங்கம் சுந்தரவதனன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்காலினுள் விழுந்ததால் குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த 3 பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் அருகில் இருந்த நபர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகத்தில் வந்த முச்சக்கரவண்டி : கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் பயணித்த கர்ப்பிணிப் பெண் மீது மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய தாதி ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.பணி நிமித்தமாக வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த போதே மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த அவந்தி கருணாரத்ன என்ற பெண் 5 மாத கர்ப்பிணியான இவர் விபத்துக்குள்ளானார்.

அவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் உள் இரத்தப்போக்கு காரணமாக ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி அதிக குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தலை மற்றும் கால்கள் இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்!!

முல்லேரியாவில்..

முல்லேரியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரான அச் சந்தேக நபர் தனது சட்டத்தரணிகளுடன் சபுகஸ்கந்த பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் நபரும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான 48 வயதுடைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை வெட்டுவதற்கு சந்தேகநபர் பிரதான சந்தேக நபருக்கு உதவியதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போது ​​பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேகநபர்களிடம் சப்புகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.51 வயதான பிரதீபா என்ற பெண் கடந்த 27 ஆம் திகதி காலை முதல் காணவில்லை என அவரது மகள் முல்லேரியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழு ஒன்று சிசிரிவி கமெராவை பரிசோதித்த போது அப் பெண் அங்கொடையில் இருந்து கடுவெலைக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் சென்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடுவெல நகரில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதி ஒருவருடன் அவர் வருவது சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதன் பின் அப் பெண் உணவை வாங்கிக் கொண்டு சுமார் 10 நிமிடம் உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.KI 3030 என்ற சாம்பல் நிற காரில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப் பெண் அன்றிலிருந்தே காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அக் கார் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் போது அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது.அப் பெண் இவருடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பணம் காரணமாக இருவருக்கும் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது சியாம்பலாப்பே பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது ​​ஒரு அறைக்குள் நீண்ட முடி மற்றும் இரத்தக் கறைகள், வீட்டின் வெளி பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடைகளின் பாகங்கள் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் களனி கங்கை கரையில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் சடலம் நீண்டகாலமாக காணாமல் போயிருந்த 51 வயதுடைய பிரதீபாவின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக இலங்கையில் உயிரைவிட்ட இளம் கணவன்!!

மொரகொல்லவில்..

தலாத்துஓய – மொரகொல்ல பிரதேசத்தில் காணாமல் போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 30 வயதான இளைஞனின் சடலம் தனியார் காணியில் உள்ள முள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேசவாசிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தொழில் இல்லாத ருவன் சந்தகுமார என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞனுக்கு திருமணமாகியுள்ள நிலையில் மனைவி வெளிநாட்டில் பணிக்காக சென்றுள்ளார்.

மனைவி இல்லாமல் மனவேதனையில் இருந்த அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.பிரேதப் பரிசோதனை கண்டி பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியானது அறிவிப்பு!!

இன்று (01.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் 92 லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல் 95 ஒக்ரெய்ன் லீட்டருக்கு 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ டீசல் லீட்டருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் லீட்டருக்கு 62 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 321 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 242 ரூபாவாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.