தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் நந்தினி. தனது மகள் காதலித்ததை அறிந்த குமார், அவசர, அவசரமாக மகளின் காதலை பிரித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், மகளின் கணவருக்கு எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில், நந்தினி தன் காதலரை மணந்துகொண்டதாக தெரிகிறது. மகளின் இந்த செயலால் கோபமடைந்த தந்தை மகேஷ் தனது மகள் நந்தினிக்கு, இறந்துவிட்டார் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரில் ஒட்டினார்.
அது மட்டுமல்லாமல் அவர் தனது மகள் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமமான வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சைவள்ளி.
இவர் புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடை கேண்டினில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ்; கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார்.பச்சைவள்ளி – அருள்தாஸ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் கமலேஷ், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கமலேஷ் நேற்று மதியம் தனது தாயின் புடவையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது தம்பி ரிஸ்வான் அதிர்ச்சியில் கூச்சலிட பச்சைவள்ளியின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்தனர்.தொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கமலேஷை அனைவரும் மீட்டு சோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இது தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கமலேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கமலேஷ் வீட்டில் இருக்கும் நேரங்களில் ப்ரீ பையர் எனும் ஆன்லைன் விளையாட்டை செல்போஃனில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி நேற்றும் காலை நேரத்தில் கேம் விளையாட செல்போனை ரீசார்ஜ் செய்வதற்காக தனது தாய் பச்சைவள்ளியிடம் பணம் கேட்டபோது அவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும்போது ரீசார்ஜ் செய்து தருவதாக கூறியுள்ளார்.
விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்த அவர் காலை முதலே கேம் விலையாட முடியவில்லை என அக்கம்பக்கத்தில் உள்ள அவரது நண்பர்களிடம் வேதனை தெரிவித்திருந்த நிலையில், மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
சினிமாவில் இருப்பவர்கள் எல்லோரும் வசதியானவர்கள், கவலையில்லாதவர்கள் அவர்களுக்கென்ன கஷ்டம் இருக்கப்போகிறது என்று பல எண்ணங்கள் பொது மக்களிடம் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.
ஆனால் அவர்களும் நம்மைப்போன்ற வலி நிறைந்த வாழ்க்கையோடு வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படித் தான் விஜய் அன்டனி வாழ்க்கையிலும் பல இழப்புகள் இருக்கிறது.
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். சின்னத்திரையில் ஆரம்பித்து சுக்கிரன் திரைப்படம் மூலம் வளர ஆரம்பித்தார்.
அவர் ஒரு இசையமைப்பாளராகவதற்கு முன்பு தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர், இயக்குனர் என்று பல வேலைகள் செய்திருக்கிறார். விஜய் அன்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். நடிப்பில் பிஸியாக இருந்த விஜய் அன்டனி தற்போது அவரது நடிப்பில் “ரத்தம்” திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இன்று அதிகாலை விஜய் அன்டனியின் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர் மன அழுத்தம் காரணமாக தன் துப்பாட்டாவைக் கொண்டு மின்விசிறியில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், உயிரிழந்த மீரா கடுமையான அழுத்தத்தை அனுபவித்து வந்ததாகவும் அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. விஜய் அன்டனியின் மகள் உயிரிழந்த தகவல் அறிந்து திரைப்பிரபலங்கள் அனைவரும் நேரில் செற்று அஞ்சலியும் ஆறுதலும் தெரவித்து வருகிறார்கள்.
விஜய் அன்டனியின் வாழ்க்கையில் பல சோகங்கள் பல கஷ்டங்கள் என்பன நிரம்பியிருக்கிறது. இன்று விஜய் அன்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டது போல தான் சிறு பிள்ளையாக இருக்கும் போது தன் தந்தையும் இப்படியொரு தவறான முடிவை எடுத்துக் கொண்டது பற்றி முன்னதாக நிகழ்ச்சியொன்றில் கூறியிருக்கிறார்.
அதில், வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு கஷ்டமோ, துன்பமோ வரலாம் ஆனால் அதற்காக தற்கொலை மட்டும் செய்துக் கொள்ளக் கூடாது. அதிலும் தான் வாங்காத ஒரு கடனுக்காக யாரும் தற்கொலை செய்துக் கொள்ளக் கூடாது.
பொறுப்பில்லாமல் யாரைப் பற்றி யோசிக்காமல் என் தந்தை தற்கொலை செய்துக் கொண்டார். தந்தை இறக்கும் போது எனக்கு 7வயது. தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் தற்கொலை செய்துக் கொண்டார்.
தந்தை இறந்த பிறகு என்னுடைய அம்மா எங்கள் இருவரையும் வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டார். அந்த வலியை நான் அதிகம் அனுபவித்திருக்கிறேன்.
நான் அமைதியா இருக்கேன், அதிகம் பேசமாட்டேன், அழுத்தமா இருக்கேன், சில விஷயங்கள் கவனிக்கிறேன் என்றால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். வாழ்க்கை எவ்வளவு வலி நிறைந்தது என்று எனக்கு தெரியும் என அதில் பேசியிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (17) மருதானை சரத் பொன்சேகா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த 6 வயது சிறுமியின் சடலம் கொட்டாஞ்சேனை இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.சரத் பொன்சேகா மாவத்தையில் கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆனால் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் காயமடைந்துள்ளதுடன், எதிர்பாராதவிதமாக அவரது 6 வயது மகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.சிறுமி உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்திஒல் அபிமானி தெருவந்திகா என்ற 6 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்கு பின், சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று (18) நள்ளிரவு கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டில் சடலம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் எவரையும் பொலிஸாரால் இதுவரை கைது செய்ய முடியவில்லை.
யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ர்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான வைசாலி எனும் சிறுமியே இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகத்தினர் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.இதன்போது சக மாணவர்கள் இன்முகத்துடன் மாணவி வைசாலிக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்ற சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
காச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி மருத்துவமனையில் ஏற்பட்ட தவறினால் இடது கை மணிக்கட்டுடன் மாணவியின் கை அகற்றப்பட்ட நிலையில் அந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்கம, கிரிமெடிய தகன மேடைக்கு பின்னால் உள்ள கலப்பு பகுதியில் 27 வயதான இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை பெணிவத்தை கட்டுதம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறிய நிலையில் நேற்று (18) மாலை அவரது சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குவைத்தில் நீண்டகாலமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 31 இலங்கையர்கள் இன்று (19) செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் தற்காலிக விமான அனுமதியின் கீழ் அவர்கள் நாட்டுக்கு அழைத்துரப்பட்டுள்ளனர்.
குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இவ்வாறு நாட்டுக்கு வந்தவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் இவ்வாறு வந்துள்ளனர். இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி குவைத்திலிருந்து 33 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
குவைத்தில் வீட்டு வேலைக்காக சென்று விசா இல்லாமல் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் கநத இரு வாரங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் நாடு திரும்புவதற்காக மேலும் 2000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் எனவும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
மத்துகம பிரதேசத்தில் பெண்ணொருவர் பாலியல் நடவடிக்கைக்காக இன்னுமொரு பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட சம்பவத்தால் வன்முறை ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் மீது அசிட் வீசி தாக்கிய இருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம பின்னகொட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் பாலியல் நடவடிக்கை்காக இன்னுமொரு பெண்ணை பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய, இருவரது கணவர்கள் மற்றும் பெண் ஒருவரின் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரைத் தவிர்த்து வரும் சந்தேகநபர்கள் இருவரும் மாமா, மருமகன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அசிட் வீச்சுக்கு இலக்கான மத்துகம பின்னகொட ஹேமலோக மாவத்தையைச் சேர்ந்த நபர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கண்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வு கூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.மத்துகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்த தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகில இலங்கை பாடசாலை ரீதியிலான பளு தூக்கல் போட்டி கடந்த 16,17,18 ஆகிய தினங்களில் பொலன்னறுவை ராஜகிரிய வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகளான T.Kosiya (under 17) 45 kg எடை பிரிவில் 95kg எடை தூக்கி முதல் இடத்தையும், A.Kavijeliny (under 17) 81kg எடை பிரிவில் 78kg எடை தூக்கி இரண்டாம் இடத்தையும், R.Tharaniya (under 20) 87kg+ எடை பிரிவில் 97kg எடை தூக்கி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், வவுனியா பெரிய கோமரசங்குள மகா வித்தியாலயம் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற போட்டியில் மாணவிகள் பங்கு பற்றி பி.மேரி அசெம்ரா (under 20) 55kg எடை பிரிவில் 77kg எடை தூக்கி மூன்றாம் இடத்தையும் பா.கிசாளனி (under 20)49kg எடை பிரிவில் 65kg எடை தூக்கி ஆறாவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டியில் பங்கு பற்றிய மாணவிகள் ஞா. ஜீவன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் பயிற்சி பெற்று இறம்பைக்குளம் மகாவித்தியாலய பொறுப்பாசிரியராக திருமதி J.D.ரெஜினோல்ட் பெரேரா மற்றும் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி ஆகியோரின் பங்களிப்புடனும் பெரிய கோமரசன்குளம் பொறுப்பாசிரியராக திருமதி கி.அம்பிகா மற்றும் பாடசாலை அதிபர் S. வரதராஜா ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் போட்டியில் பங்குபற்றி வெற்றியினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா (16) சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12-ம் வகுப்பு படித்து வந்த மீரா மன அழுத்தத்தின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வந்துள்ளார்.
நேற்று இரவு தனது அறையில் வழக்கம் போல் உறங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் அவரது தந்தை விஜய் ஆண்டனி அவரது மகளின் அறைக்கு சென்றபோது ஃபேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து வீட்டில் பணிபுரியும் பணியாளர்கள் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் வீட்டிலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
தேனாம்பேட்டை போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மீரா மன அழுத்தத்தில் இருந்து வந்ததும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறு இன்று (18.09) உத்தரவு பிறத்துள்ளது.
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியால் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் வவுனியாவை வந்தடைந்தது.
குறித்த ஊர்திப் பவனி வவுனியாவில் இடம்பெற்றால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், இன நல்லுறவு சீர்குலையும் என இருவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த முறைப்பாட்டுக்கு அமைய இவ் ஊர்திப் பவனிக்கு பொலிசார் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரியிருந்தனர்.
அதனை கவனத்தில் எடுத்த மன்று, இறந்தவர்களை நினைவு கூரும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி, பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்ததுடன், இன முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் . இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியில் வசித்து வரும் ஆசிப் அர்ஷத் , அருண் 3 பேரும் தங்களுடைய நண்பரின் திருமணத்திற்காக நேற்று வெளியூருக்கு சென்றிருந்தனர்.
திருமணம் நிறைவடைந்ததும் 3 பேரும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.எர்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது, அங்கிருந்த சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை நேரில் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த விபத்தில் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் மற்றும் ஆசிப் அர்ஷத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அருணை, மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியில் தன் கணவர் சொன்னது ஊருக்கு அழைத்து செல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாதன் சாவ்.
இவர் தனது மனைவி பூனம் தேவி மற்றும் குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டையில் தங்கி கூலி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, பூனம் தேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் பூனம் தேவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பூனம் தனது சொந்த ஊரான ஜார்கண்டிற்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் 10 நாட்கள் கழித்து செல்லலாம் என மாதன் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பூனம் தேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் தன்னை சொந்த ஊருக்கு அழைத்து செல்லாததால் மனமுடைந்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் சாமலாப்பூர் உண்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஷோபா . இவரது கணவர் மஞ்சுநாத் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரே மகன். ஷோபா 2வது முறையாக கர்ப்பம் தரித்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மஞ்சுநாத், ஷோபாவிடம் அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி அடிக்கடி தகராறு செய்ய ஆரம்பித்தார். அவர் வரதட்சணை வாங்கி வர மறுத்து வந்துள்ளார்.
பிரசவத்திற்காக கடந்த மாதம் முதல் ஷோபா சாமலாப்பூரில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு வந்த மஞ்சுநாத், பெற்றோரிடம் வரதட்சணையாக பணம் வாங்கி வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளார்.
இதை ஷோபா மறுத்ததும் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி ஷோபாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் அலறி துடித்தார். உடனே அங்கிருந்து மஞ்சுநாத் தப்பி ஓடிவிட்டார்.
ஷோபாவின் பெற்றோர்கள் பதறித்துடித்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து மஞ்சுநாத்தை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை வாங்கி வர மறுத்த கர்ப்பிணியை காதல் கணவரே பிளேடால் கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் குண்டலுபேட்டை தாலுகா பொம்மனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தனஞ்ஜெயா. இவரது மனைவி மேகா . இவர்களுக்கு 3 மற்றும் 6 வயதில் 2 பெண்குழந்தைகள். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது மேகாவின் தந்தை மகேஷ், தனஞ்ஜெயா குடும்பத்துக்கு நகை-பணம் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது. சில ஆண்டுகள் பிரச்சனையில்லாமல் சென்ற வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு தகராறு வரத்தொடங்கியது.
மேகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தனஞ்ஜெயா அவரை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் தனஞ்ஜெயாவின் தாய் நிர்மலம்மா, தந்தை மல்லிகார்ஜுனாவும் கூட தொடர்ந்து திட்டி தீர்த்தனர். இதனால் மேகா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார். அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 14ம் தேதி மனதை கல்லாக்கி கொண்டு 2 மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேகா மற்றும் 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கொடுமையால் மேகா தனது மகள்களை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் மேகாவின் தந்தை வரதட்சணை கேட்டு தராததால் மகளையும், பேத்திகளையும் அவரது மருமகன் தனஞ்ஜெயா மற்றும் அவரது குடும்பத்தினர் கொன்று தூக்கில் உடலை தொங்கவிட்டதாக புகார் அளித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மேகாவின் கணவர் தனஞ்ஜெயா, மாமியார் நிர்மலம்மா, மாமனார் மல்லிகார்ஜுனா 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து சம்பவம் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் ஏ – 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.