கல்விக்கு தடையாக இருந்த சாதி.. 12ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருவண்ணாமலையில்..

திருவண்ணாமலையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை எடப்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 குடும்பங்களைச் சேர்ந்த 80 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் பன்றிகளை வளர்த்து அதனை விற்பனை செய்வதை, முதன்மையான தொழிலாகக் கொண்டு உள்ளனர்.இந்த நிலையில், இதே பகுதியில் சரோஜா என்பவர் வசித்து வருகிறார்.

இவரது மகள் ராஜேஸ்வரி. இவர் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 375 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். இதனையடுத்து, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் உயர் கல்விக்காக விண்ணப்பித்து உள்ளார்.

அப்போது, அனைத்து கல்லூரியிலும் சாதிச் சான்றிதழ் கேட்டு உள்ளனர். ஆனால், மாணவியிடம் சாதிச் சான்றிதழ் இல்லாததால், அவரால் உயர் கல்விக்குச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

இதனையடுத்து, மாணவி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், “பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் இல்லாததால் மாணவி மன உளைச்சலில் இருந்தார்.

பின்னர், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். 12ஆம் வகுப்பிற்கு மேல் எங்களது பிள்ளைகள் மேல் படிப்பைத் தொடர இயலாமல் இருந்து வருகின்றனர்.இது தொடர்பாக கிராம அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வரை பல முறை புகார் அளித்தும் நாங்கள் அளிக்கும் புகாருக்கு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இது எங்களுக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. பன்னியாண்டி என்ற சாதிச் சான்றிதழ் இல்லாததால் எங்கள் பிள்ளைகளின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. எங்களது குழந்தைகளின் எதிர்காலம் இதனால் பெரிதும் பாதிப்படைகிறது.

எனவே, இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

தற்கொலையைத் தவிர்த்திடுகதற்கொலையைத் தவிர்த்திடுகமேலும், தாங்கள் பன்றியை வைத்துதான் வாழ்வாதாரத்தை தேடி வருகிறோம் என்றும், அந்த பன்றிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு வந்து வைத்தாலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறோம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து இருந்தனர்.

சுவரேறி குதித்து காதலனைத் திருமணம் செய்த இளம்பெண்… சினிமாவை மிஞ்சிய காதல் கதை!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் சென்னித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராதிகா (21). பெற்றோருடன் வசித்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த அனீஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். பள்ளி பவருத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்தனர்.

ஆனால் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலேயேயும் எதிர்ப்பு கிளம்பியது. இதனிடையே அனீஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். ராதிகா கல்லூரியில் படித்துவந்தார்.

இதனிடையே அனீஷ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். இதனால் ராதிகாவின் பெற்றோர் அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டுச்சிறையில் வைத்தனர். அதோடு, வேறு மாப்பிள்ளை பார்த்து அவசர அவசரமாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவந்தனர்.

இதுதொடர்பாக காதலன் அனீஷிடம் ராதிகா பேசியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த 5 நாட்கள் ஆன நிலையில், வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் காதலியை மீட்க நண்பர்களுடன் திட்டம்போட்டார்.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் பாத்ரூம் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ராதிகா, சுவர் ஏறி குறித்து வீட்டைவிட்டு வெளியேறினார். அங்கு பைக்குகளில் தயாராக இருந்த அனீஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் தப்பினார்.

இருவரும் நண்பர்கள் ஆதரவுடன் கரவிளாகம் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர். இதனிடையே இரவில் மகள் வீட்டில் இருந்து தப்பியதை கண்டு போலீசில் புகாரளித்தனர். இதனைக் கேள்விப்பட்ட தம்பதியினர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தையில் திருமண கோலத்தில் தஞ்சமடைந்தனர்.

அப்போது, தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும் ராதிகா – அனீஷ் போலீசாரிடம் கூறினர். இது குறித்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒருவழியாக சேர்ந்து வாழ குடும்பத்தினர் சம்மதித்தனர். இதனால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோழியை பிரிய மனமில்லை.. திருமணம் செய்ய ஆணாக மாற ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் இளம்பெண் பூனம். இவரும், தோழியான பிரீத்தி என்ற இளம்பெண்ணும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இந்த நட்பு நெருக்கமாகி பிரிய மனமின்றி இளம்பெண்கள் இருவரும் காதலர்களாகினர்.

இதனிடையே, பிரீத்தியின் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. இளம்பெண்கள் காதலிப்பதால் பிரீத்தி திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளார். இதனால் திட்டம்போட்ட பெற்றோர், பிரீத்தியை லக்கிம்பூர் கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற சாமியாரிடம் அழைத்துச்சென்றனர்.

அங்கு, தனது மகளின் திருமணத்திற்கு பூனம் தடையாக இருப்பதாகவும், அவளை கொலை செய்தால் இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும் பிரீத்தியின் தாயார் ஊர்மிளா கூறியுள்ளார்.

இதற்காக முன்பணமாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார். இதில் புதிய திருப்பமாக பிரீத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பூனம், தான் ஆணாக மாற அதே சாமியாரை அணுகியுள்ளார்.

இந்த சூழலில் சாமியார் ராம்நிவாஸ், இளம்பெண்கள் பிரீத்தி, பூனம் ஆகியோரை தனியாக வரவழைத்து பின்னர் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். பூனத்தை மந்திரம் செய்து ஆணாக மாற்றுவேன் என்று ராம்நிவாஸ் உறுதியளித்து உள்ளார்.

ஆனால் இதற்காக பூனம் மட்டும் காட்டுப்பகுதிக்கு இன்னொரு நாள் தனியாக வரவேண்டும், அப்போது மந்திரம் செய்து மாற்றிவிடுவதாக கூறினார். இதனை நம்பி காட்டிற்கு சென்ற பூனத்தை, சாமியார் கொலை செய்து உடலை முட்புதரில் வீசினார்.

இந்த நிலையில் பூனம் காணவில்லை என்ற புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரீத்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சாமியார் விவகாரம் தெரியவந்ததால், காட்டுப்பகுதிக்கு சென்று தேடினர்.

அங்கு உடலை மீட்ட போலீசார் கொலை செய்த சாமியார் ராம்நிவாஸ், பிரீத்தி மற்றும் அவரது தாய் ஊர்மிளா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் ராம்நிவாஸ், பிரீத்தி கைது செய்யப்பட்ட நிலையில், ஊர்மிளா தலைமறைவானார்.

இரண்டு குழந்தைகளை மாடியில் இருந்து வீசிவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

தெலங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியில் கணேஷ் (30) – சவுந்தர்யா (27) தம்பதி வசித்து வந்தனர். கணேஷ் முடிதிருத்தும் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்த தம்பதியின் பிள்ளைகள் நித்யா, நிதர்ஸ் பள்ளியில் படித்து வந்தனர்.

கணேஷ் – சவுந்தர்யாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அண்மைக்காலமாக கணேஷ் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சவுந்தர்யா தனது பிள்ளைகளுடன் தமது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், நேற்று தாயார் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் உச்சி சென்ற சவுந்தர்யா தனது இரு பிள்ளைகளையும் அங்கிருந்து தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர் தானும் மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் மூன்று பேரும் உடல் சிதறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனை பார்த்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த சென்ற போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சவுந்தர்யா மற்றும் அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சவுந்தர்யாவின் கணவர் கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் வீடொன்றின் முன் ஒட்டப்பட்ட விசித்திரமான அறிவித்தல்!!

யாழில்..

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது.

அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்” என எழுதப்பட்டுள்ளது.

இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

யாழில் பேருந்து – வான் மோதி கோர விபத்து : 9 பேருக்கு நேர்ந்த கதி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கொடிகாமம் ஏ9 வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (26.06.2023) மதியம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இருந்து வந்த தனியார் பேருந்து, கிளிநொச்சியில் இருந்து வந்த வான் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையிலே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த அனைவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா செட்டிக்குளத்தில் வீதியினை முழுமையாக ஆக்கிரமித்து நெல் உலர வைப்பு : போக்குவரத்து முற்றாக பாதிப்பு!!

வவுனியா நெளுக்குளம் நேரியகுளம் பிரதான வீதியிலிருந்து சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் – உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் காபைட் வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது.

காலபோக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் வருடா வருடம் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கின்றமை வழமை இருப்பினும்,

வீதியின் ஒரு பகுதியில் நெல்லை உலர வைப்பதுடன் மறு பகுதியினை போக்குவரத்து ஏற்றவகையில் விடுகின்றமையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

எனினும் சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் – உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் காபைட் வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதுமையுடன் மக்கள் மாற்று வீதியூடாக செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இவ்விடயத்தில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் கவனம் செலுத்தி மக்களின் போக்குவரத்திற்கு இடையுறு இல்லாத வகையில் பாதையில் நெல்லை உலர வைக்க பணிக்குமாறும் அல்லது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

வவுனியாவில் கனடா பிரதமர், கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிப்பு!!

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிங்க தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06.2023) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம், ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா,

படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும்,

இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் நடைபெற்றிருந்தது.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன. இப் போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா தோணிக்கல் கிராமத்தில் உதவித்திட்டத்தில் முறைக்கேடு.. மக்கள் போராட்டம்!!

வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24.06.2023) மதியம் 3.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் , முதியோர்கள்,

விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சனசமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன.

இதனை கேட்கச் சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியயமான கோரிக்கைகளையும் சேவிமடுப்பதில்லை.

மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை குறைவாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்க தமது தீர்வினை பெற்றுத்தருமாறு தெரிவித்தனர்.

மறுபிறவி எடுத்த சிறுவன் அம்மாவை மகள் எனவும், பாட்டியை மனைவி என அழைக்கும் ஆச்சர்யம்!!

உத்தரபிரதேசத்தில்..

திரைப்படங்களில் மறுபிறவி கதைகளை சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் கூட நிஜத்தில் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை வேலையப் பார் என்போம். ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள்.

சில உண்மையும் கூட என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரில் வசித்து வரும் மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழந்தார்.

அப்போது அவருடைய மகள் ரஞ்சனா கர்ப்பமாக இருந்தார். மனோஜ் மிஸ்ரா இறந்து 20 நாட்களுக்குப் பிறகு ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆர்யன் தனது 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என கூறிவந்தார். விளையாட்டாக சிறுபையன் கூறுகிறான் என நினைத்து விட்டுவிட்டனர். கடைசியாக மைன்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.

அவரது தாய் பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்குமாறு கூறியுள்ளார். கோபமடைந்த சிறுவன் அவர் என் மனைவி, என் பாட்டி அல்ல எனக் கூறினார். அம்மாவை மகள் என்றும், அண்ணனை மகன் என்றும் அழைத்தார்.

அவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என அறிமுகப்படுத்திக் கொண்டார். தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறுகிறான். அக்கம்பக்கத்தினர் அவனை தாத்தா பற்றி நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.

சிறுவன் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளிக்கிறான். குறிப்பாக தனது தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து ஆர்யன் கூறியது தான் ஹைலைட்.

காதலை நிராகரித்ததால் ஆத்திரம்.. திருமணமான யுவதிக்கு நேர்ந்த துயரம்!!

திருகோணமலையில்..

காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை திருகோணமலை- குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காதல் தோல்வியால் வீட்டை எரித்து தற்கொலை செய்து கொண்ட யுவதி.!!

காலியில்..

காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயாருடன் வசித்து வந்த 22 வயதுடைய ரி.ஜே.மாளவிகா என்ற யுவதி தாயார் வீட்டுக்குள் இருந்த வேளை வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.

வீட்டுக்குள் சிக்கிய தாயார் காயங்கள் எதுவுமின்றி வெளியில் தப்பியோடி வந்து அயலவர்களின் உதவியைக் கோரியுள்ளார். அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதிலும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

தீ அணைக்கப்பட்ட பின்னர் அயலவர்களின் உதவியுடன் காணாமல்போன மகளைத் தாயார் தேடியுள்ளார். அவ்வேளை வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாளவிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மனநோயால் குறித்த யுவதி பாதிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. குறித்த யுவது கடந்த நான்கு மாதங்களாக அந்த நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்திருந்தார் என்று அவரின் தாயார் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின்னரே யுவதியின் மரணம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடன் தொல்லையால் உயிரை மாய்த்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கனடாவில் இலங்கையருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்!!

கனடாவில்..

கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அதிஷ்டமாக பெற்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அவர் பரிசாக வென்றெடுத்துள்ளார்.

ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜாக்பொட் பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார்.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.

அதிஷ்டத்தில் பெற்ற பணத்தை ஒரு தொகை பணத்தை மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மிகுதியில் கார் ஒன்றை கொள்வனவு செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலை மாணவிகளுக்கு பேருந்துகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

கொழும்பில்..

கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலைக்கு செல்லும் மாணவிகளிடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நடத்துனர்களால், மாதாந்த பருவச் சீட்டிற்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் தகவல் கசிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மட்டக்குளியிலிருந்து கல்கிஸ்சை வரை இயங்கும் 155 இலக்க பேருந்து கோவிட் தொற்றுக்கு முன்னதாக அதிகளவு பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பயன்படுத்துவதாக இருந்தது.

இந்த நிலையில் திடீரென குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு ஓரிரு பேருந்துகளே இயங்குகின்றன.

எனினும் இந்த பேருந்துகள் இன்மை காரணமாக பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு கள ஆய்வொன்றை செய்திருந்தது.

இதன்போது பல விடங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை தருவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.

இலங்கையில் 1000 ரூபாவாகும் டொலரின் பெறுமதி.. மதிப்பீட்டில் வெளிவந்துள்ள விடயம்!!

இலங்கையில்..

தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி 1385 ரூபாவாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது.

அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13205 டொலர்களாக இருக்க வேண்டும்.

ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த நிலையில் கரையொதுங்கிய 1500 கிலோ கடல்வாழ் உயிரினம்!!

மன்னாரில்..

மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடற்பசு ஒன்று நேற்று (22) கரையொதுங்கியுள்ளது. இராமநாதபுரம் – பாம்பனுக்கு அருகில் உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள தோனித்துறை கடற்கரையில் இந்த கடற்பசு கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக இராமேஸ்வரம் வனவள திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய இந்த கடற்பசு சுமார் 8 வயது மதிக்கத்தக்கது என்பதுடன், 1500 கிலோகிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என இராமேஸ்வர வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

பரிசோதனையின் பின்னர் கடற்பசுவை கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.