அனுராதபுரம் – கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மாணவியின் இடது கை மற்றும் இடது காலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவியை குத்த பயன்படுத்த கத்தியுடன் குறித்த மாணவன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது பொலிஸார் அவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், காயமடைந்த மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் காரணம் தெரியவரும் எனவும் ரணஜயபுர பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய மாணவி கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னதாக, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண் ஒருவர் உயிரிழந்ததற்காக இதே மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியையாகப் பணியாற்றிய இனேஷா என்ற பெண் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பித்தப்பைக் கற்களை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சைக்காக கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு விசேட வைத்தியர் ஹசஞ்சய குணவர்தன தலைமையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மூன்று மாதங்களின் பின்னர், பெண் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் ஐந்தாவது பிரிவிற்கு மாற்றப்பட்டு, பின்னர் ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு, அவர் கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டியிருந்தது, குழாய் உதவியுடன் உணவு மற்றும் பானங்கள் அவருக்கு வழங்கப்பட்டது. வைத்தியசாலையின் அறிவிப்பின் அடிப்படையில் குறித்த பெண் சத்திரசிகிச்சைக்காக வட கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சத்திரசிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய அவர் சுவாசக் கோளாறு காரணமாக ராகம போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
அறுவைசிகிச்சை செய்த அறுவை சிகிச்சை நிபுணரின் அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். ஜாஎல, தெலத்துர பிரதேசத்தில் வசிக்கும் யுவதியொருவர் தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 25ம் திகதி உயிரிழந்திருந்தது.
திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த குழந்தை, கடந்த 22 ஆம் திகதி காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் 6 மணித்தியால சத்திரசிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ஆம் திகதி குழந்தை உயிரிழந்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
எவ்வாறாயினும், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு போதனா சிறுவர் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அறுவைசிகிச்சைக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மயக்க மருந்து காரணமாக குழந்தை இறந்ததாக சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியா ஒன்றினால் மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (20.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நோய் அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய மழையுடனான காலநிலையில் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் இந்த மண் காய்ச்சல் நோய் பரவி வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீர் போன்றவற்றின் ஊடாக இந்த பக்டீரியாக்கள் உள்நுழைவதாக வைத்தியர் எச்சரித்துள்ளனர்.
மொனராகல, இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இந்த இரண்டு மாணவர்களும் நெருங்கிய நண்பிகள் என தெரிவிக்கப்பட்டது.
பவீஷா பாடசாலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கடந்த 15ம் திகதி ஆஷானியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அஷானியின் தந்தை கொழும்பில் பணிபுரிகிறார், அவர் பாட்டி வீட்டில் வாழ்ந்து வருகின்றார். சிறு வயதிலேயே அம்மா அவரை கைவிட்டு சென்றுள்ளார் என தெரிவந்துள்ளது.
இந்த வீட்டில் பாட்டியால் பராமரித்து வரும் அஷானி, கடந்த 15ஆம் திகதி காலை மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு பவீஷாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் இவ்வாறு சென்ற சிறுமிகள் திரும்பி வராததையடுத்து பவீஷாவின் பெற்றோரும் அஷானியின் பாட்டியும் இங்கினியாகல பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து அது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நாளும் அதற்கு மறுநாளும் தங்கள் நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தியதாகவும் தாங்கள் கொழும்பில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதற்கமைய, சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார் அழைத்து விசாரித்துள்ளனர்.
இந்த மாணவிகள் காணாமல் போனமை தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவர்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழ் அகதியொருவர் இந்தோனோசியாவில் நோயினால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தங்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியில் அடக்கம் செய்ய அங்கு வாழும் இந்தியர்கள் மறுத்துள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைந்து மெடான் நகரின் பெலாவான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் ஏதிலியான அசோக்குமார் லலிதா நோயுற்று தகுந்த சிகிற்சையின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
இந்தோனேசியாவில் இந்தியப் பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்.
எனினும் உயிரிழந்த இலங்கைப்பெண்ணின் உடலை அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள இலங்கை தமிழ் உறவுகளஉறவுகள் அணுகிய போது தகனம் செய்ய முடியாது என அவர்கள் மறுத்துவிட்தாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மனைவியின் உடலோடு தவித்த கணவருக்கு அங்குவாழும் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் மனித நேயத்தோடு தங்களது மயானத்தில் உடலைத் தகனம் செய்வதற்கு அனுமதி வழகியதை அடுத்து இலங்கைப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
சொந்த நாட்டைவிட்டு வெளியேறி பிறிதொரு நாட்டில் அடைக்கலம் புகுந்த இரு பிள்ளைகளின் தாயான இளம்இலங்கை தமிழ் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (21.06.2023) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீடு தீப்பற்றி எரிவதாக அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினையடுத்து வீட்டிக்குள் நுழைந்தனர். இதன் போது வீட்டின் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையுடன் தடவியல் பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஆயுதம் காட்டி மிரட்டி ரூ.8 கோடி கொள்ளையிட்டு தப்பிய தம்பதியை பொலிசார் பழச்சாறு பந்தல் வைத்து சிக்க வைத்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணம் லுதியானாவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 8 கோடி ரூபாய் கொள்ளையிட்டவர்கள் மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங். ஜூன் 10ம் திகதி ஆயுதம் ஏந்திய குழு ஒன்றை ஏற்பாடு செய்து இவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் இருந்து கொள்ளையிட்டுள்ளனர்.
தொடர்ந்து உத்தரகாண்ட் அருகாமையில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை சென்றுள்ளனர். மட்டுமின்றி, குறித்த தம்பதி நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளதும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் இவர்களை தீவிரமாக தேடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் பயண திட்டத்தை மாற்றியுள்ளது. இதனையடுத்தே சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுள்ளனர்.
பொலிசாருக்கு இந்த தகவல் தெரிந்தும், அந்த தம்பதியை அடையாளம் காண்பது சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், பக்தர்களுக்கான பழச்சாறு பந்தல் ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு பொலிசார் வந்துள்ளனர்.
பொலிசாரின் திட்டம் இதுவென அறியாத அந்த தம்பதி, குறித்த பந்தலில் இருந்து பழச்சாறு வாங்கியதுடன், முகத்தை மறைத்திருந்த திரையை விலக்கி, அருந்தியுள்ளனர்.
மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங் அது என்பதை உறுதி செய்த பொலிசார், குருத்வாராவில் அவர்களின் வழிபாடுகள் முடியும் மட்டும் காத்திருந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து வாகனத்தில் வெளியேறிய தம்பதியை விரட்டிச் சென்று பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 21 லட்சம் ரொக்கம் அவர்களிடம் இருந்து அப்போதே கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் இதுவரை சுமார் 6 கோடி அளவுக்கு மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 9 பேர்களை மொத்தமாக கைது செய்துள்ளதாகவும் பஞ்சாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சாதி, கவுரவம் எனக் கூறி, பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (வயது 18).
இவரும் பக்கத்து கிராமத்தை சேந்த ராதேஷியாம் தோமருக்கும் (வயது 21) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவ்ர்கள் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே சிறிது நாட்களாக ராதேஷியாம் காணாமல் போயுள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால் அவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது போலிஸார் நடத்திய விசாரணையில் ராதேஷியாம் காதலித்த ஷிவானியும் காணாமல் போனது தெரியவந்தது.
தொடர்ந்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள் மற்றும் அவர் காதலித்த ராதேஷியாமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
மேலும், அவர்களின் உடலை கனமான கற்களை கட்டி, சம்பல் ஆற்றில் போட்டுவிட்ட கொடூர செயலையும் பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலிஸார் அவர்கள் சொன்ன இடத்தில் இளம் ஜோடிகளின் சடலத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.
சாம்பல் ஆற்றில் ஏராளமான முதலைகள் இருக்கும் நிலையில், இளம் ஜோடிகளின் சடலத்தை அவைகள் தின்றிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. சாதி, கவுரவம் எனக் கூறி, பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் ஜெயப்பிரகாஷ் (30) – ராதா (28) என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் – ராதா தம்பதி மகிழ்ச்சியுடன்தான் தங்கள் இல்லறவாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் ராதாவுக்கு வயிற்றுவலி இருந்துவந்ததாகவும், அடிக்கடி வலிப்பதாக அவர் கூறி வந்துள்ளார். இதற்கு அவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு சென்றும் தீர்வுகிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் விவசாயத்துக்கு பயன்படுத்த வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் ராதா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ராதா உயிரிழந்து விட்டார். இது குறித்து ராதாவின் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது சாந்தன் (14). அதேபோல், ராஜா என்பவரது மகன் நவீன் (14). நண்பர்களான சிறுவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.
இதில் சிறுவன் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றியுள்ளார். அப்போது, நண்பன் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி நோக்கி பைக்கில் திரும்பினர்.
அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக பைக் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சிறுவன் காயத்துடன் போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சாலை விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு பைக் ஓட்டக்கூடுத்தது பெற்றோர் தப்பு என்றும், அதேநேரம் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
சேலத்தில், அரசு பேருந்து மோதியதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், அரசு பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், கன்னங்குறிச்சி ஆறுமுகம் அய்யர் தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி நடராஜ். இவரது மகன் கவேஷ். அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கவேஷ் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய கவேஷ், சிறிது நேரம் கழித்து தனது தாயாரிடம், ஜாமெண்ட்ரி பாக்ஸைப் பள்ளியிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன்… அதைப் போய் எடுத்து வந்து விடுகிறேன் என கூறி பள்ளிக்கு சென்றிருக்கிறார்.
பள்ளி வகுப்பறைக்கு சென்று ஜாமெண்ட்ரி பாக்ஸை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு திரும்பி வருகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவன் கவேஷ் மீது மோதியது. இதில் மூளை சிதறி மாணவன் கவேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை கமிஷனர் லாவண்யா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் இறந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அரசு பேருந்து மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்கள், பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த மாணவனின் பெற்றோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் விபத்து எப்படி ஏற்பட்டது என கேட்டு அறிந்தார். பேருந்தின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் சேடபாளையம் கெங்கநாயக்கன்குப்பத்தில் வசித்து வருபவர் 25 வயது விமல்ராஜ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வரும் ரவீனாவை ஜூன் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. நேற்று தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பணிக்கு செல்ல வேண்டாம் வீட்டில் இருக்க சொல்லி உறவினர்கள் கூறினர். ஆனால் பணிக்கு சென்று சீக்கிரம் திரும்புகிறேன் எனக் கூறி வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் அவர், திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டிதெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி, செல்போன் இணையதள சேவைக்கான கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது மேலே சென்ற மின்கம்பியில் அவரது கை உரசிவிட்டது. இதில், மின்சாரம் தாக்கி விமல்ராஜ் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்குடியிருப்பு வாசிகள் உடனடியாக விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே விமல்ராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளை இறந்தது உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
தாலி பிரித்து கோர்ப்பதற்காக காத்திருந்த அவரது மனைவி கணவனின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்கள் அனைவரின் நெஞ்சையும் கரைய வைத்தது. இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் விமல்ராஜ் உயிரிழந்தது குறித்து அறிந்த அவருடைய உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து காவல்நிலையத்தின் முன் திரண்டனர்
பணியின் போது விபத்தில் இறந்த விமல்ராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அதே நிறுவனத்தில் வேலை வழங்கிட வேண்டும். உடனடியாக இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.
இல்லையெனில் விமல்ராஜ் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினர். காவல்துறையினர் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.
உறவினர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கினர். இதனை ஏற்றுக்கொண்ட விமல்ராஜின் உறவினர்கள் முற்றுகை முயற்சியை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விருந்துநகர் மாவட்டத்தில் கணவரிறந்த துக்கம் தாங்காமல், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் இனி என்னாகும் என்கிற மன அழுத்தத்தில், 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரையடுத்துள்ள கோட்டையூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக உடம்பில் உப்புச்சத்து அதிகம் இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த ஒரு மாத காலமாக கடுமையாக் அவதிப்பட்டு வந்த நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். கணவன் உயிரிழந்ததும் மனைவி பாண்டீஸ்வரி, மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார். எப்படி 3 குழந்தைகளை வளர்ப்பது .
செலவுக்கு என்ன செய்வது , வருமானம் எதுவும் இல்லாத நிலையில் 3 குழந்தைகளுடன் ஈஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மனைவி பாண்டிஸ்வரி, மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, மகன் விக்னேஸ்வரன் ஆகிய 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை சாமியின் மனைவி மேரி டெய்சி (72) தம்பதி வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான இவரது கணவர், முதல் மகன் உயிரிழந்து விட்டனர். இவர்களின் 2வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
எனவே மூதாட்டி மேரி டெய்சி வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு, 2வது தளத்தில் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரி டெய்சி உயிருக்கு போராடிய நிலைலயில் கிடந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மூதாட்டி மேரி டெய்சியின் மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் ரபெக்கா ரோஸ்லின் நிஷாவைப் பிடித்து விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அவர் தான் தனது மாமியாரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலமானது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படையினராக செயல்பட்ட நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், மூதாட்டி மேரி டெய்சியின் உயிரிழந்த மூத்த மகன் அந்தோணி சேவியரை 2வது திருமணம் செய்தவர் ரபெக்கா ரோஸ்லின் நிஷா. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டுள்ளார்.
அவர் பிரித்து தரவில்லை. மற்றொருவரை திருமணம் செய்யும் முயற்சியையும் மாமியார் தடுத்து விட்டதாக கூறி அவரைக் கொலைச் செய்ய திட்டம் போட்டதாக ரபெக்கா ரோஸ்லின் நிஷா வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக கூலிபடைக்கு ரூ.15 லட்சம் தருவதாக கூறி அவர்கள் மூலம் மேரி டெய்சியை கொலைச் செய்ய முயற்சி செய்தனர்.
எனது மாமியாருக்கு பலரிடம் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருப்பதால், கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்ததாகவும் ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பெண் ஒருவர் மணமேடையில் மாப்பிள்ளையை காரி துப்பி காலால் எட்டி உதைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமண நிகழ்வு என்பது மகிழ்ச்சியான தருணம் மட்டுமின்றி காலத்திற்கும் நீங்காத நினைவுகளாகவே இருக்கும். தற்போது திருமண நிகழ்வில் நண்பர்களின் அட்டகாசம், நடனம் என களைகட்டுகின்றது.
ஆனால் சில திருமணங்கள் முந்தைய காலத்தில் இருந்த சடங்குகளின் படி நடைபெற்று வருகின்றது. இங்கு திருமண நிகழ்வில் மணப்பெண் மணமகனுக்கு இனிப்பு ஊட்டுகின்றார்.
பதிலுக்கு மணமகன் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டுகையில் அவர் வாங்க மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் மணப்பெண்ணின் முகத்திலேயே பூசி விடுகின்றார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மணப்பெண் மணமகளை காரி துப்பியதோடு, காலால் எட்டி உதைத்து கலேபரமாக்கியுள்ளார்.
Muh me Rasgulla daala to ladki ko itna gussa aa gaya, just imagine ke 😮😲 चलो छोड़ो 🫣🤭🤐 pic.twitter.com/YQigrLyYMt
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) June 14, 2023