அநுராதபுர பல்கலைக்கழக தமிழ் மாணவன் திடீரென உயிரிழப்பு: கதறியழும் தாய்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பைச் சேர்ந்த அநுராதபுரம் – ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (27.078.2023) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு அநுராதபுரம் – மிகிந்தலை பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவிய போது, சம்பவத்தில் மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்சன் (21 வயது) என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் அவர் அநுராதபுரம் – ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் பயின்று வருபவர் எனவும் குறிப்பிட்டனர். குறித்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்த மாணவனின் தாயார் தெரிவிக்கையில், நண்பர்களுடன் நீராடச் சென்றபோதே மகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்னுடைய மகன் புலமைப்பரிசில் மூலம் பல்கலைக்கழகம் சென்றார்.அவர் கால்பந்து விளையாட்டிலும் இம்முறை தெரிவானார்.

மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரியின் கல்வி பயின்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். படிப்பே குறிக்கோளாகக் கொண்டு இருந்த எனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்று நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்துள்ளார்.

வவுனியா இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரின் சகோதரன் மீது தாக்குதல் : அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்து வவுனியா வைத்திசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீதே நேற்று (26.08) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வசித்து வரும் தவசிகுளம் பகுதியில் வைத்து இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தில் பிரதான சந்தேக நபரின் சகோதரரான 37 வயதுடைய நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

ஹட்டனில்..

ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் சறுக்கி மைல் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (26.08.2023) மாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனும் யுவதியும் படுகாயமடைந்து டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனி சொந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு!!

கொழும்பில்..

முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வீடு வாங்கியவர்கள் மற்றும் அதிசொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அந்தத் தீர்மானத்திற்கமைய, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் டபிள்யூ.என்.ஏ.விஜேசூரிய அண்மையில் வீட்டு வளாக நிர்வாக நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு வரி வருமானம் மிகவும் முக்கியமானதாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனால் பிரதான நகரங்களில் வீடுகளை வாங்கி தற்போது அந்த வீடுகளில் வசிக்கும் அனைத்து நபர்களின் விவரங்களையும் வழங்குமாறு உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் எழுத்துமூல உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 123(1) பிரிவின் கீழ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க இந்த எழுத்துமூலக் கோரிக்கையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அவதானம் : பிரமிட் திட்டம் தொடர்பில் மற்றுமொரு எச்சரிக்கை!!

பிரமிட்..

பிரமிட் திட்டங்கள் ஒரு வியாபாரம் அல்ல, இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், இது குற்றம் என்பதால் பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பிரமிட் திட்டங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய வங்கி ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பில் 15 வயது சிறுமி வன்புணர்வு : 18 வயது இளைஞன் கைது!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 15வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்திய 18 வயதுடைய இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் நேற்று (26.08.2023) இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 வயதுடைய இளைஞன் குறித்த சிறுமிடன், காதல் உறவில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து இளைஞன் கைது செய்யபட்டதுடன் பாதிப்புக்குள்ளான சிறுமி பொலிஸாரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் வாழைச்சேனை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபட்டதையடுத்து எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தந்தையே இரு குழந்தைகளை தலையணையால் அழுத்தி கொலை செய்த கொடூரம்!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி சரிதா. இருவருக்கும் 10 ஆண்டுகளுக்குமுன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பெர்லின் சஞ்சு, கேசவ் என 2 மகன்கள்.இதில் மூத்தவன் 4ம் வகுப்பும், இளையவன் 1வது வகுப்பும் படித்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு அதிகரித்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், ஆகஸ்ட் 22ம்தேதி மனைவி சரிதாவை செங்கல்பட்டில் மாமியார் வீட்டில் விட்டு விட்டு வந்துள்ளார். பின்னர் பள்ளிக்கு சென்றிருந்த இரு மகன்களையும் காலை 11 மணிக்கு வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அவர்கள் இருவரையும் தலையணையை நெஞ்சில் வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். உயிரற்ற உடல்களை தூக்கில் மாட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார்.

அதே ஆத்திரத்தில் மாமியார் வீட்டிற்கு சென்று கட்டையால் மாமியாரை தாக்கியுள்ளார். அதன் பிறகு போலீசில் சரணடைந்துள்ளார். பணிமுடிந்து வீட்டிற்கு வந்த சுரேஷின் தந்தை பழனி, தாய் இருவரும் 2 பேரன்களும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுரேஷிடம் கேட்கப்பட்ட போது” நாங்கள் இருவருமே பிரிந்த பிறகு பிள்ளைகள் சிரமப்படக் கூடாது” எனக் கூறியுள்ளார். கணவன் மனைவி பிரச்சனையில் பிள்ளைகளை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

6 வயது மகளை கொலை செய்து தந்தை விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை அயனாவரம் பூசனம்தெருவில் வசித்து வருபவர் கீதா கிருஷ்ணன்.இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மைப் பணி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது 6 வயது மகள் மானசா, அயனாவரத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

ஆகஸ்ட் 23ம் தேதி புதன்கிழமை இரவு கீதா கிருஷ்ணன் தூக்கிட்ட நிலையில் கண்டறியப்பட்டார். வீட்டிற்குள் மானஸா இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் ” கீதா கிருஷ்ணன் ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் அதை சமாளிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவரது மனைவி கல்பனாவுக்கும், கீதாகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 2020-ல் அவர்கள் கோட்டூர்புரத்தில் வசித்தபோது, கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள கீதாகிருஷ்ணன் திட்டமிட்டார்.

தனதுமூத்த மகள் குணாலினியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார் . மனைவி கல்பனா, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், திடீரென மனம் மாறிய கீதா கிருஷ்ணன் இளைய மகள் மானஸாவுடன் தலைமறைவாகி விட்டார். தனிப்படை அமைத்து போலீஸார் அவரை சுற்றி வளைத்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த கீதா கிருஷ்ணன், இளைய மகள் மானஸாவுடன் அயனாவரத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானார்.

இப்போது இளைய மகள் மானஸாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக் கழிவறையில் மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துக்குட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேவிட்ராஜ். இவருடைய மனைவி ஜெனிபர். அவருடைய மகள் ஜோஸ்லின் ஜெனியா. இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூர் செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வருகிறார்.

ஜோஸ்லின் ஜெனியா என்ற மாணவி ஆகஸ்ட் 5 ம் தேதி பள்ளிக்கு சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற போது கழிப்பறையின் கூரையில் இருந்து ஒரு வயர் ஒன்று அறுந்து தொங்கியது. இதிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோஸ்லின் ஜெனியா படுகாயம் அடைந்தார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு முழங்கை எலும்பு மற்றும் தோள்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டு கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகும் சரியாக காது கேட்கவில்லை. ஜோஸ்லின் ஜெனியாவின் பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சென்று காண்பித்தனர்.

இதில் அவரது காதுகள் பாதிக்கப்பட்டு விட்டதால், 90 சதவீத காது கேட்கும் திறன் இழந்து விட்டதாக கூறியுள்ளனர். சிறுமி ஜோஸ்லின் ஜெனியா அரசு பள்ளியின் அஜாக்கிரதை காரணமாக மின்சாரம் தாக்கி அடிபட்டுள்ளார்.

இந்நிலையில், அரசோ, பள்ளி நிர்வாகமோ உதவ முன்வரவில்லை எனவும், தனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் தாய் ஜெனிபர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெனிபர் “திருப்பூர் செரங்காட்டில் வசிக்கும் நான் கூலித்தொழில் செய்து வருகிறேன். மகள் ஜோஸ்லின் ஜெனியா மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், 20 நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இச்சம்பவத்தில் பள்ளி நிர்வாகம் அஜாக்கிரதையாக இருந்து விட்டு, எனது மகளை குறை சொல்கிறார்கள். எனது மகள் ஜோஸ்லின் ஜெனியாவுக்கு முழங்கை, தோள்பட்டை எலும்பு, கழுத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

காதுகள் 90 சதவீதம் கேட்கும் திறனை இழந்து விட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லை. தமிழக அரசு எனது மகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணவன் வேண்டாம்.. பழைய காதலனுடன் சென்ற பெண் எடுத்த விபரீத முடிவு!!

கூடுவாஞ்சேரியில்..

கூடுவாஞ்சேரி அருகே கணவனை விட்டு பிரிந்து காதலனுடன் வசித்து வந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவர் பொத்தேரி அடுத்த தைலாவரம் பகுதியில் கேபிள் ஆப்ரேட்டர் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், இவரது நிறுவனத்தில் வேலை செய்த தமிழ்வாணன் என்பவரும் மூத்த மகளான பவித்ராவும், (24) காதல் வயப்பட்ட நிலையில், கோவிந்தராஜ் சென்ணை வண்ணாரப்பேட்டையை சார்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 வயது மகள் உள்ளார்.

இந்நிலையில் பவித்ரா மற்றும் தமிழ்வாணன் ஆகிய இருவரும் சென்போனில் பேசிக்கொண்டு பழைய காதலை தொடர்ந்த நிலையில் பவித்ரா மற்றும் அவரது கணவர் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு, பவித்ரா தனது கணவர் புருசோத்தமனை விட்டு குழந்தையுடன் பிரிந்து தனது பழைய காதலன் தமிழ்வாணனுடன் பொத்தேரி அடுத்த தைலாவரம் பகுதியிலுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பவித்ராவின் உடலை கைப்பற்றிய கூடுவாஞ்சேரி போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவி மீது கோபம்.. 2 மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி அருகே மனைவி மீது உள்ள கோபத்தால் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து தந்தை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சுரேஷ் (35).

செங்கல்பட்டு மாவட்டம் கெங்கதேவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரிதா (31). 10 ஆண்டுகளுக்குமுன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பெர்லின் சஞ்சு(9), கேசவ்(6) என 2 மகன்கள். பெர்லின் 4ஆம் வகுப்பும், கேசவ் 1ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரிதா தனது கணவர் மற்றும் மகன்களை பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் கங்கதேவன்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பெர்லின் சஞ்சு மற்றும் கேசவை சுரேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றார். இந்நிலையில் சுரேஷின் தந்தை வீட்டிற்கு சென்று பார்தபோது பேரன்கள் இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கொடுத்தத் தகவலின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் சுரேசை தேடி வந்தனர்.

இதில் கங்கதேவன்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த சுரேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சுரேஷ் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் மனைவி எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதன் காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது. இதனால் நான் விரக்தி நிலைக்கு சென்றேன்.

என் மனைவி என்னிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். இதில் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் நான் சென்றுவிட்டால், குழந்தைகள் அனாதை ஆகிவிடுவார்கள் என கருதினேன். எனவே முதலில் அவர்களை முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொன்றுவிட்டேன்.

பின்னர் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமான மனைவி கொல்ல திட்டமிடேன். அதன்படி நான் எனது மாமியார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றேன்.

அப்போது என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்” என்று கூறியுள்ளார். மனைவி மீது உள்ள கோபத்தால் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி அருகே கணவனை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு சந்தோஷ் (வயது19) என்ற மகனும், துர்கா (14) என்ற மகளும் உள்ளனர்.

சந்தோஷ் கூலி வேலைக்கு சென்று வருகிறார். தீபிகா படித்து வருகிறார். இதனிடையே, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சந்தோஷ் வேலைக்காக வெளியே சென்று விட்டார். அப்போது கணவன்-மனைவி இருவ ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஜெயந்தி மனஉளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மகன், மகள் தூங்க சென்று விட்டனர். அதன் பின்னர் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ஜெயந்தி கயிற்றை எடுத்து ரங்கசாமியின் கழுத்தில் போட்டு இறுக்கினார்.

இதில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை அறையில் வைத்து அதன் மீது துணிகளை போட்டு ஜெயந்தி மூடி மறைத்து வைத்தார். நேற்று காலை எழுந்த மகள் தீபா, அப்பா எங்கே? என கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அருகேயுள்ள பாட்டி சுசீலாவின் வீட்டுக்கு சென்று தெரிவித்துள்ளார்.

உடனே ரங்கசாமியின் வீட்டுக்கு வந்த சுசீலா, பேத்தியுடன் சேர்ந்து மகனை தேடியுள்ளார். அப்போது அறையில், ரங்கசாமி சடலம் துணிகளை கொண்டு மூடப்பட்டு கிடந்ததை கண்டு அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஜெயந்தி அப்பகுதியில் இருந்த 45 அடி ஆழ கிணற்றில் குதித்தார். அக்கம்பக்கத்தினர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் நீரில் மூழ்கி ஜெயந்தி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து துர்கா காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரங்கசாமி, அவரது மனைவி ஜெயந்தி ஆகிய 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்–பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

கேள்வியால் துளைத்த உறவினர்கள்.. தம்பதியர் எடுத்த விபரீத முடிவு!!

மதுரையில்..

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் மனமுடைந்த மதுரையைச் சேர்ந்த தம்பதியர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று அங்கேயே தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரை: திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மதுரையைச் சேர்ந்த தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நடைபெறும் பாதி பிரச்சினைகளுக்கு அக்கம்பக்கத்தினரும், நாகரீகமே தெரியாத சில உறவினர்களும்தான் காரணம். ஒரு இளைஞனுக்கோ, இளம்பெண்ணுக்கோ திருமணம் சிறிது தள்ளிச் சென்றாலே போதும்.. உடனே கிளம்பி வந்து விடுவார்கள் மக்கள்.

“ஏன் உனக்கு திருமணம் தள்ளிப் போயிட்டே இருக்கு”.. “ஜாதகத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கா”.. பையனுக்கு ஏதாவது குறை இருக்கும் போல” என வெறும் வாய்க்கு அவல் கிடைத்ததை போல பேசி பேசியே சம்பந்தப்பட்டவர்களை பதட்டம் அடைய செய்து விடுவார்கள்.

திருமணம் தானே பிரச்சினை.. சரி திருமணமும் செய்தாகிவிட்டது என்றாலும் அவர்கள் விட மாட்டார்கள். திருமணமாகி 3 மாதத்திலேயே வீட்ல விசேஷம் இருக்கா என கேட்டு நச்சரிக்க தொடங்கி விடுவார்கள்.

இவர்கள் கொடுக்கும் அழுத்தம்தான், சம்பந்தப்பட்டவர்களை ஏதோ குறை உள்ள மனிதர்கள் போல மாற்றிவிடும். இதுவே சில விபரீதத்திற்கும் காரணமாகி விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் மதுரையில் நடந்திருக்கிறது. மதுரை மாவட்டம் தல்லாகுளத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – சித்ரா புஷ்பம் தம்பதியர்.

இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் பேசும் பேச்சுகள் இந்த தம்பதியரை மிகவும் காயப்படுத்தியுள்ளது. மேலும், விசேஷ வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவர்களும் பல மருத்துவமனைகளுக்கும், கோயில்களுக்கும் ஏறி இறங்கியுள்ளனர். ஆனால், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த தம்பதியர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கொடைக்கானலுக்கு நேற்று முன்தினம் அவர்கள் சென்றுள்ளனர்.

அங்கு பல இடங்களை அவர்கள் சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் ஒரு அறை எடுத்து தங்கிய அவர்கள், அன்றைக்கு இரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வகுப்பறையிலேயே 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!!

ராஜஸ்தானில்..

இந்திய மாநிலம் ராஜஸ்தானில், 10ஆம் வகுப்பு மாணவன் வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கொட்புட்லி – பிஹ்ரோர் மாவட்டத்தச் சேர்ந்த பள்ளி மாணவர் சச்சின்.

இவர் பிரஹ்புரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், ஆசிரியர் திட்டியதால் சச்சின் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் யாரும் இல்லாத சமயம் சச்சின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர். மாணவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், விவேக் மற்றும் ராஜ்குமார் ஆகிய ஆசிரியர்கள் இருவர் சச்சினுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஆசிரியர்கள் சச்சினை சாதி ரீதியில் தொல்லை கொடுத்தாக தெரிகிறது.

சச்சினை தேர்வில் தோல்வியடைய வைத்து வாழ்வை சீரழித்து விடுவதாக அவர்கள் மிரட்டியதுடன், தாக்கியும் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மாணவனை ஆசிரியர்கள் கொலை செய்துவிட்டதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை முழுவதும் இருளில் மூழ்கும் அபாயம்!!

இலங்கை..

தற்போதைய வறட்சியான காலநிலை தொடருமானால் இன்னும் நான்கு வாரங்களுக்கு மாத்திரமே நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 15 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது அனல் மின் உற்பத்தி காரணமாக மின்வெட்டு இல்லாமல் மின்சாரம் வழங்க முடியும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

பிரமிட் திட்டங்களை நம்பி ஏமாறவேண்டாம் : இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!!

பிரமிட் திட்ம்..

பிரமிட் திட்டங்களால் அவற்றின் சட்டபூர்வத்தன்மையை நிரூபிக்கும் நோக்கில் வெளியிடப்படும் கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இணையவழித்தளங்கள் ஊடாக செயற்படும் சில பிரமிட் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.‘‘இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது.

இத்திட்டம் உரிய வரிகளை அரசுக்குச் செலுத்துகின்றது, நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட வருமான வரியை இலங்கை மத்திய வங்கிக்குச் செலுத்தவேண்டும்.

அன்றேல் அவர்களது நிதியங்கள் மத்திய வங்கியினால் முடக்கப்படும், இத்திட்டம் இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது’ என்பன போன்ற விடயங்களே தமது திட்டத்தை நியாயப்படுத்துவதற்காக சில பிரமிட் திட்ட ஏற்பாட்டாளர்களால் கூறப்படுவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.’’

இவ்வாறான கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இக்கூற்றுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.எனவே இத்தகைய திட்டங்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்படுமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும் இத்திட்டங்களில் முதலீடு செய்வதனூடாக பொதுமக்கள் பணத்தை இழக்கக்கூடும் என்பதனால், இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் அளிக்கப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் விபரங்களை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திலும், வெளிநாட்டுச்செலாவணித் திணைக்களத்தின் வலைத்தளத்திலும் பார்வையிட முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.