சூடுவெந்தபுலவு மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு ..!

319


வவுனியா மாவட்டத்தில் சூடுவெந்தபுலவு  மகா வித்தியாலயம் மற்றும் சிற்பிக்குளம் தாருல் உலுாம் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிற்கான இரு மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனினால் நேற்றுமுன்தினம்  நாட்டி வைக்கப்பட்டது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இதற்கான நிதியினை பெற்றுக் கொடுத்திருந்தார்,வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹதீன்,அமைச்சரின்வவுனியா மாவட்ட இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி,வலயக் கல்வி பணிப்பாளர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கருத்துரைக்கையில்-

வன்னி மாவட்டத்தில் கற்ற சமூகத்தினை உருவாக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பணி இம்மாவட்ட மாணவ சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷமாகும்.இனம்,மதம் என்பவைகள் கடந்து ஆற்றப்படும் பணிக்கு சகலரும் முழுமையான ஒத்துழைப்புக்களை நல்க வேண்டும்.மாணவர்களின் இலட்சியம் கல்வியிலேயே குறிக்கோளாக இருக்க வேண்டும்.பெற்றோர்கள் ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஒத்தாசைாயக இருக்க வேண்டுமே அன்றி,உபத்திரோகமாக இருக்க கூடாது.கற்கின்ற வேண்டும் என்ற ஆசையும்,வேட்கையுமே மாணவர்களின் கண் முன் தோன்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.


vavuniya