உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!!
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள்...
வவுனியா சூடுவெந்தபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
வவுனியா சூடுவெந்தபிலவு கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை தாருங்கள் என கோரி இன்று (06.03) சூடுவெந்தபிலவு பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
மீள்குடியேறிய தமக்கு 371 வீடுகள் வழங்க பட்டியலிடப்பட்டபோதிலும் பிரதேச செயலாளரினால்...
கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம்!!(படங்கள், காணொளி)
இலங்கையில் காணாமல்போன உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காணாமல் போன உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...
வவுனியாவில் ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய கட்சி!!
ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று நேற்று உருவாக்கப்பட்டுள்ளது.
ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக்கட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் அங்குரார்ப்பண...
நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர்...
போட் சிட்டி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!
சீனாவால் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு போட் சிட்டி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை கருத்தில் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி வௌிவிவகார...
வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!!
வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று(04.03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயல் ஒன்றில் வேலை செய்துவிட்டு மண்வெட்டியுடன் வீடு நோக்கி சென்றவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார்....
வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது!!
வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை தங்கநகைகளை கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவம் நேற்று(03.03) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கநகை கொள்ளை...
வவுனியாவில் 16 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை!!(படங்கள்)
வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா (16) கடந்த 27.02.2015 அன்று காடையர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
சரணிகாவின் குடும்பத்தினரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...
வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!!(படங்கள்)
வவுனியா மகாறம்பைக்குளம் பிஸ்சி ஒழுங்கையில் இன்று (04.03) புதன்கிழமை காலை துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஆணொருவரின் சடலம் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதாக...
வவுனியா மாணிக்கம் பண்ணையில் பாரதி முன் பள்ளி திறந்து வைப்பு!!
வர்த்தக ,வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதினின் நிதி உதவியுடன் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) படிவம் 02 இல் நிர்மாணிக்க பட்ட பாரதி முன்பள்ளி 02.03.2015 அன்று திறந்து வைக்க பட்டது
பிரதம விருந்தினராக...
மத்தள ராஜபக்ச விமானநிலையம் இன்று முதல் இரவில் மூடப்படுகின்றது!!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மத்தள சர்வதேச விமான நிலையம் இரவில் மூடப்படவுள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அரசாங்கத்துக்கு...
6வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி!!
கொழும்பு - கிரான்ட்பாஸ் தொடர்மாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து விழுந்து 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (03.03) இரவு 11.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்...
முகப்புத்தகத்தில் வரும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள் : ஓர் எச்சரிக்கைச் செய்தி!!
ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி...
ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன் : குமார் சங்கக்கார உறுதி!!
வாழ்க்கையில் தற்போதும் எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வரப்போவதாக வெளியான செய்தியை நிராகரித்துள்ள சங்கக்கார, இது அடிப்படையற்றதும் பொறுப்பற்றதுமான...
தென்னாபிரிக்க அணி 201 ஓட்டங்களால் அபார வெற்றி!!
உலக கிண்ண போட்டிகளில் இன்று நடைபெற்ற 24வது ஆட்டத்தில் தென்னாபிரிக்காவும், அயர்லாந்து அணிகளும் மோதிக்கொண்டன.
கென்பராவில் இன்று நடைபெற்ற பி பிரிவு லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி தலைவர் துடுப்பாட்டத்தை...
















