யாழில் விடுதிகள் முற்றுகையிடப்படுவது வரவேற்கத்தக்க விடயம் : யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி!!

யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். யாழ்.அரியாலை ஆனந்தன் கடையில் அமைந்துள்ள விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில்...

இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த நபர் கைது!!

இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்த நபரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்துல் அசாக் மொஹமட் ரிமாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

வற்றாப்பளை ஆலயத்தில் திருட்டு : மூலஸ்தான கதவைத் தீயிட்டு கொளுத்தி திறக்க முயற்சி!!

வற்றாப்பளையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை இரவு கூரையை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் மூலஸ்தானக் கதவை திறக்க முடியாததால் அதனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள். அதன் பின்னரும் கதவைத் திறக்கமுடியாததால் மண்டபத்திலிருந்த உண்டியலை உடைத்ததுடன்...

சவுதியில் இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வீட்டு உரிமையாளரால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இத்தற்கொலை இடம்பெற்றுள்ளதாக சவுதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ரியாத் நகரில் பணிபுரியும்...

நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் : சபாநாயகர்!!

நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நிலையியற் கட்டளைகளில் சிறு மாற்றங்களைச் செய்து நாடாளுமன்ற விவாதங்களை மீள ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நேரடி ஒளிபரப்பு தொடர்பில்...

சிவப்பு நிறத்தில் காய்க்கும் புதுமையான கத்தரிக்காய்!!(படங்கள்)

டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் ஜே.எஸ்.ஞானராஜ் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் கத்தரிக்காய் காய்த்துள்ளது. வீட்டு உபயோகத்திற்காக கத்தரிக்காய் விதையை விதைத்து முளைத்த செடியில் சுமார் இரண்டு வருடகாலமாக சிவப்பு நிறத்திலேயே கத்தரிக்காய் காய்க்கின்றது. குறித்த கத்தரிக்காய்...

பிரித்தானியாவில் பெண்ணொருவர் கொலை தொடர்பாக இலங்கையர் கைது!!

பிரித்தானியரொருவரை கொலைச்செய்தமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. கோபிநாத் வெல்லச்சாமி என்பவர் மயூரதி என்ற பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவருடைய கொலை பொலிஸாரின் ஆடையில்...

கிளிநொச்சியிலிருந்து பளையை வந்தடைந்தது யாழ் தேவி!!(படங்கள்)

கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்...

தண்ணீரில் பணம் : கிழக்கில் துண்டு பிரசுரம் விநியோகம்!!

அவுஸ்திரேலியா அரசாங்கம் விடுக்கும் செய்தி என்ற பெயரில் ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க வேண்டாம் என்ற வசனங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிழக்குக் கரையோரங்களில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்கும்...

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை!!

தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு வந்தபோது அநுராதபுரம் விசேட மேல்...

வெளிநாட்டு பெண்ணிடம் கொள்ளையிட்ட 18 வயது இளைஞன் கைது!!

புறக்கோட்டை பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவரிடம் கொள்ளையிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடமிருந்து 21 000 ரூபா இலங்கை பணம், வெளிநாட்டு கடனட்டை, கையடக்க தொலைபேசி, சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை இவ்...

தலைமன்னாரில் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

தலைமன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முச்சக்கரவணடி ஒன்றை சோதனையிட்டப்போது போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாலை பகுதியியை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு...

இந்திய விசா மோசடி : புதிய இணையத்தளம் அறிமுகம், ஏமாறவேண்டாம் என தூதுவராலயம் அறிவிப்பு!!

இந்திய விசா வழங்குதல் தொடர்பாக சில போலி இணையங்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு போலி இணையங்களுக்கு விசா கட்டணங்களைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இலங்கை...

இலங்கைக்கு அனுப்புமாறு கோரி திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை!!(படங்கள்)

இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்து திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை இருக்கின்றார். திருச்சி சிறப்பு முகாமில் உமா ரமணன் என்பவர் கடந்த 1ம் திகதி தொடக்கம் தன்னை குடும்பத்துடன் இலங்கைக்கு அனுப்புமாறு...

ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி!!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்!!(படங்கள்)

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். திருமுறிகண்டி, வசந்த நகர் பகுதியிலுள்ள பழைய இரும்புப் பெருட்களை சேகரித்து விற்பனை செய்யும் வீடொன்றில் இந்த...